தலையாயப் பிரச்னை
தலையாயப் பிரச்னை -1
எங்களையா விசாரிப்பது?
'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், ஓய்வு பெற்ற அதிகாரிகள் நான்கு பேருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்து, முன்னாள் அதிகாரிகள், 71 பேர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.மும்பையை சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற அனுமதித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த, 2007ல், சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு இந்த அனுமதியை அளித்ததாக, அவர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை சார்பில் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் சிதம்பரம் மட்டும் குறி
வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது அதிகாரிகளாக பணியாற்றியவர்கள்
விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் புகார்
கூறப்பட்டது.
இதையடுத்து, நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை செயல்
அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார், சிறு, குறு தொழில் துறை அமைச்சகத்தின்
முன்னாள் செயலர் அனுப் புஜாரி, நிதி அமைச்சகத்தின் முன்னாள் இயக்குனர்
பிரபோத் சக்சேனா, பொருளாதார விவகாரத்துறையின் முன்னாள் உதவி செயலர்
ரவீந்திர பிரசாத் ஆகியோர், சி.பி.ஐ.,யால், விசாரிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அதிகாரிகள், 71 பேர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அதிகாரிகள், 71 பேர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அமைச்சரவை
முன்னாள் செயலர் சந்திரசேகர், வெளியுறவுத் துறை முன்னாள் செயலர்கள்
சிவசங்கர் மேனன், சுஜாதா சிங், பஞ்சாப், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.,
ஜூலியோ ரிபைரோ உள்ளிட்டோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"முன்னாள் அதிகாரிகள், குறுகிய அரசியல் நோக்கத்துக்காக குறிவைக்கப்படுவது,
சரியான நடைமுறை அல்ல. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், தற்போது பணியாற்றும்
நேர்மையான அதிகாரிகளிடையே பீதி ஏற்படும்.
இதுபோன்ற நடவடிக்கைகள், அவர்கள் மன உறுதியை குலைத்து விடும். நேர்மையான அதிகாரிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள், அவர்கள் மன உறுதியை குலைத்து விடும். நேர்மையான அதிகாரிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அன்றைய சூழ்நிலையில், அரசின் கொள்கை முடிவு என்னவாக இருந்ததோ, அதைத்
தான், இந்த நான்கு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
அரசின்
திட்டங்களை செயல்படுத்த, அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில்,
விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு உள்ளது.
எனவே, இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு, அதிகாரிகள் அதிக காலம் எடுத்துக் கொள்வது, ஆச்சரியமான விஷயம் அல்ல. அதிகாரிகள் ஏற்கனவே எடுத்த முடிவுகளை விசாரணைக்கு உட்படுத்தும்போது, அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். இல்லையெனில், நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள், துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.

ராஜபக்சேயுடன் சிவசங்கர மேனன் |
இந்த விஷயத்தில், நல்ல முடிவு
எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஏற்கனவே எடுத்த முடிவுகளை விசாரணைக்கு உட்படுத்தும்போது, அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
அதிகாரிகள் ஏற்கனவே எடுத்த முடிவுகளை விசாரணைக்கு உட்படுத்தும்போது, அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
இல்லையெனில், நேர்மையாக பணியாற்றும்
அதிகாரிகள், துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
இந்த விஷயத்தில், நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும்."
என்று எழுதியுள்ளனர்.
அப்போதுள்ள விதிகளுக்குட்பட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் விசாரணைக்கு ஏன் பயப்படவேண்டும்?
அமைச்சர்கள்,கட்சியினருக்கு ஆதரவாக ,ஊழலுக்கு உடந்தையாக செயல்பட்டு ஆதாயம் அடைவதால்தானே இப்படிப்பட்ட சூழல் உருவாக்குகிறது.
ப.சித்தமபுரம் சொன்னால் அதை செய்யவேண்டுமா என்ன?அரசு விதிகள்,நடைமுறைகளை சுட்டிக்காட்ட வேண்டாமா?மீறிச்செயல்படக் கூறினால் மறுக்கலாமே அதை யார் தடுத்தது.?
மேலும் இப்போது என்ன நடந்தது என்று தெரிந்த கொள்ளத்தானே அழைக்கிறார்கள் .சிறையில் அடைக்கவில்லையே.
சிவசங்கர் மேனன் இந்திய வெளியுறவத்துறை செயலராக இருந்த போது தமிழ்நாட்க்கும்,ஈழத்தமிழர்களுக்கு எத்தனை துரோகங்களைச்செய்தார்,இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ள இந்திய அரசை எப்படி தவறாக வழிநடத்தினார் என்பதை தமிழர்கள் மறக்கவில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தலையாயப் பிரச்னை -2
மூடிஸ் முடிவு?
பா.ஜ.க ஆட்சி
அமைந்ததிலிருந்து சிறு தொழிலதிபர்கள்,விவசாயிகள்,நடுத்தர மக்களை கசக்கி பிழியும் நடவடிக்கைகளை எடுத்தும்,பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச்
சலுகை, கார்ப்ரேட்க்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை நிறுவனங்களை,ரெயில்வேயை கார்ப்ரேட் வசம்
ஒப்படைப்பு என பல உதவிகளை பெரும் முனைப்புடன் செய்து வருகிறது.
மேலும் கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து பா.ஜ.க அறிவித்துள்ளது.
இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் பா.ஜ.க செயல்படுகிறது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் 2-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.பி.சி.எல்) உள்ளது. நாட்டில் நுகரப்படும் மொத்த பெட்ரோலிய பொருட்களில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 21 சதவிகித பங்கைக் கொண்டிருக்கிறது.
லாபத்திலும் இயங்கி வரும் இந்த மாபெரும் நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது, இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 53.29 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, கடந்த செப்டம்பர் 30 அன்று அதன் முதலீட்டாளர்கள் குழு மூலம் ஒப்புதல் பெற்று, 2020 மார்ச் 31-ம் தேதிக்குள் பங்குகளை விற்று முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலும் கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து பா.ஜ.க அறிவித்துள்ளது.
இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் பா.ஜ.க செயல்படுகிறது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் 2-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.பி.சி.எல்) உள்ளது. நாட்டில் நுகரப்படும் மொத்த பெட்ரோலிய பொருட்களில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 21 சதவிகித பங்கைக் கொண்டிருக்கிறது.
லாபத்திலும் இயங்கி வரும் இந்த மாபெரும் நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது, இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 53.29 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, கடந்த செப்டம்பர் 30 அன்று அதன் முதலீட்டாளர்கள் குழு மூலம் ஒப்புதல் பெற்று, 2020 மார்ச் 31-ம் தேதிக்குள் பங்குகளை விற்று முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில்,
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குவிற்பதன் மூலம்,
அந்த நிறுவனம் தனது மதிப்பீட்டை இழக்கும் என்று தரக் குறியீட்டு நிறுவனமான
‘மூடிஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ‘மூடிஸ்’ நிறுவனம் தெரித்திருப்பதாவது, “தற்போதைய நிலையில், பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ‘பிபிபி’(BBB) என்ற தரக் குறியீட்டைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அரசாங்கம் தனது முழு பங்குகளையும் ஒரு அரசு சாராத நிறுவனத்திற்கு விற்றால், நாங்கள் இனி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.பி.சி.எல்) நிறுவனத்தின் மதிப்பீட்டில் அரசாங்கத்தின் ஆதரவை சேர்க்க மாட்டோம்; இதன் விளைவாக நாங்கள் எந்த மாற்றங்களும் இல்லை என கருதி ‘Ba1’ என்று தரக்குறியீட்டை குறைப்போம்” என்று ‘மூடிஸ்’கூறியுள்ளது.
அதுமட்டுமன்றி, “ஒரு அரசானது இவ்வாறு தனது பங்குகளை விற்று, கடன் பத்திரத்தை மீட்க முயற்சிப்பதும், நாட்டை எதிர் மறையான கடனிலேயே தள்ளிவிடும்.
அரசாங்கம் தனக்குச் சொந்தமான பங்குகளை தனியாருக்கு விற்பது, சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் தரத்தைக் குறைக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது.

இந்நாளில்,
முன்னால்
ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
முதல் பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)
பிஜி குடியரசானது(1987)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தலையாயப் பிரச்னை -3
இளநரைக்கு "முடி"வுகட்ட வேண்டுமா?
சின்ன குழந்தைகள் முதல் டீன் ஏஜ் வயதினர் வரை அனைவரும் சந்திக்கும் இளநரைப் பிரச்சனைக்கு செயற்கை முறையில் அணுகாமல் இயற்கை முறையில் நிரந்தரமாக தீர்வு உண்டு. கூந்தல் பிரச்சனை இன்று அனைத்து வயதினருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கேற்ப கூந்தல் வைத்தியம் ஒன்றையும் விடாமல் செய்து பார்க்கிறார்கள் அனைத்து வயதினரும். குறிப்பாக டீன் ஏஜ் வயதினரிடம் இளநரை தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. கூந்தல் வளர்வதில் பிரச்சனை, கூந்தல் அடர்த்தியில் பிரச்சனை, கூந்தல் உதிர்வதில் பிரச்சனை, கூந்தல் பொலிவில் பிரச்சனை, கூந்தல் அழகில் பிரச்சனை, கூந்தல் வறண்டு போவதில் பிரச்சனை, கூந்தல் அழுக்கடைந்து பொடுகுகள் அதிகமாவது பிரச்சனை, இளநரை இத்தனையையும் கடந்து ஆரோக்கியமான கூந்தலைப் பெற முடியும்.
இப்போது ஐந்துவயது கூட நிரம்பாத குழந்தைக்கு சாதாரணமாக இளநரை தோன்றுகிறது. வயது பாலினம் பேதமில்லாமல் ஆண்குழந்தைகளும் இளநரை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
இந்த இளநரை யைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. தொடக்கத்திலேயே இதைக் கவனித்து உரிய பராமரிப்பு மேற் கொண்டால் இளநரையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
இளநரைக்கான தீர்வு இதுமட்டும்தான் என்று இதுவரையில் கண்டறியப்படவில்லை.
ஆனால் அப்படி அவை வரும் பட்சத்தில் அதைத் தடுக்க பல வழிமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள்.
உடம்பில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான அளவில் இருக்கும்பட்சத்தில் உடலில் எவ்விதமான நோய்களும் அண்டாது என்பது சித்தர்களின் வாக்கு. இம்மூன்றில் ஒன்றான பித்தம் அதிகரிக்கும் போது தலைமுடி நரைக்கத் துவங்கும்.
இதனோடு மரபு வழியிலும், உணவுப் பழக்கமும், உரிய பராமரிப்பின்மையும் கூட இளநரைக்கு காரணங்கள் என்று சொல்லலாம்.
கூந்தலை முதலில் சிக்கில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அவசர அவசரமாக தலை சீவாமல் கூந்தலை சிக்கில்லாமல் வைத்திருப்பது முக்கியம். வாரத்துக்கு இரண்டு நாள்கள் தலைக்கு குளிப்பதைக் கட்டாயமாக்கி கொண்டால் கூந்தலில் அழுக்கு படியாது.
கூந்தலின் வறட்சியைத் தடுத்துவிடும் என்பதால் தலைமுடி வளர்ச்சியும் உதிர்தலும் கட்டுப்படும்.வறண்ட கூந் தல் பொலிவிழக்கும் போது இளநரையின் வேகம் வீரியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய்க் குளியல்
வாரம் ஒருமுறை இல்லையென்றாலும் மாதம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக் கமாக்கி கொள்ள வேண்டும்.
நல்லெண்ணெய் குளியல் இல்லையென்றாலும் சுத்தமான தேங்காயெண் ணெயை இலேசாக சூடு செய்து தலையில் சூடு பறக்க தேய்த்தால் உஷ்ணம் குறையும்.
கூந்தலுக்கான ஊட் டம் கிடைக்கப்பெறுவதால் இளநரையின் தாக்கம் இருக்காது.
இரசாயன நிறமிடல் (டை)வேண்டாம்.
இளநரை எட்டிப்பார்க்க தொடங்கியதுமே முடிக்கு இராசயனம் கலந்த ஷாம்பு, சோப்பு (சிலர் பயன்படுத் துவார்கள்) ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சீயக்காயை நேரடியாக கடைகளில் வாங்கி சரிபாதியாக வெந்தயம் கலந்து செம்பருத்தி பூ செம்பருத்தி இலை, கறிவேப்பிலை, மருதாணி இலை ஆகியவற்றைக் காய வைத்து சேர்த்து அரைத்து சாதம் வடித்த கஞ்சியில் கரைத்து தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால் ஒரே மாதத் தில் இளநரையின் நிறம் மாறத்தொடங்கும். தவிர்க்க இயலாதவர்கள் கெமிக்கல் அதிகமில்லாத தரமான ஷாம்புவை அவசரத்துக்கு பயன்படுத்தலாம்.
ஒரு முறை சீயக்காய்ப் பொடியும் மறுமுறை ஷாம்புவும் என்று மாறி மாறி தேய்த்து குளிப்பதும் இளநரையை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்.
கண்டிப்பாக சீயக்காய் அல்லது தரமான ஷாம்பு என்பதில் உறுதியாக இருங்கள். இவையெல்லாம் எல்லோருமே கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவை.
இளநரையின் தாக்கம் அதிகம் இருப்பவர்கள் மேற் சொன்னவற்றுடன் சேர்த்து இதையும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஃப்ரெஷ்ஷான பீட்ரூட்டை தோல் சீவி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து அதன் சாறை பிழிந்து வைக்கவும். எண்ணெய் படியாத கூந்தலில் அடிப்பகுதியிலிருந்து வேர்ப்பகுதி நுனிப்பகுதிவரை சாறை நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கவும். வாரம் மூன்று முறை செய்துவந்தால் ஒரே மாதத்தில் இளநரை சிவந்து வருவதை பார்க்கலாம். நாளடைவில் இவை கருமையாக மாறத்தொடங்கும்.
காலையில் அலுவலகத்துக்கு செல்லும் போது கூட பீட்ரூட் சாறை கூந் தலின் மீது பூசி செல்லலாம். இவை பிசுக்கை உண்டாக்காது.
இயற்கை சாயம் எப்படி?
மருதாணி இலை,மஞ்சள் கரிசலாங்கண்ணி- தலா ஒரு கைப்பிடி அளவு, பெரிய நெல்லிக்காய் 4 (சிறு துண்டு களாக), கறிவேப்பிலை- இரண்டு கைப்பிடி அளவு, செம்பருத்தி பூ -2, செம்பருத்தி இலை 10, பசும்பால், கற்றாழை நுங்கு - 1 தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு- 1 டீஸ்பூன், வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன், சேர்த்து மைய அரைக்கவும். முன் தினம் இரவு இவற்றை சற்று இட்லி மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்து இரும்பு பாத்திரத்தில் வைத்து அவ்வப்போது கிளறி மூடி, வைத்திருந்து மறுநாள் காலை முடியின் வேர்க்கால்கள் முதல் நுனிவரை நன்றாக தடவி தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலசவேண்டும்.
நேரம் கிடைக்கும் போது வாரம் ஒரு முறை இப்படி செய்துவந்தால் இளநரை நிச்சயம் மறையும் என்பதோடு கூந்தலில் கருமை அதிகரிக்கும்.
வளர்ச்சி கூடும்.
இளநரை பிரச்சனை சிறிது சிறிதாக காணாமல் போகும்.
அதிகரிக்கும் இளநரையை உடனே போக்க மருதாணி கைகொடுக்கும்.
ஆனால் மிக மிக பக்குவமாக பயன் படுத்த வேண்டும். இல்லையென்றால் கூந்தலில் சிவப்பு குடிகொள்ளும். மருதாணியுடன் கறிவேப்பிலை சம மாக எடுத்து அரைத்து இளநரை உள்ள பகுதிகளில் மட்டும் மிக பொறுமையாக ( அடுத்தவரை வைத்து) முடியில் பரப்பி சரியாக பத்து நிமிடத்தில் கூந்தலை அலசி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நாளடைவில் இளநரையைத் தேடுவீர்கள்.
மேற்கண்ட குறிப்புகள் நிச்சயம் இளநரையிலிருந்து உங்களை விடுபட வைக்கும். இவை தவிர பொதுவாக உங் கள் கூந்தலைப் பராமரித்து இளநரையைத் தடுக்க...உணவில் இருக்கும் கறிவேப்பிலையை வீணடிக்க கூடாது. முடிந்தால் தினமும் பத்து கறிவேப்பிலைகளை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
இவை தவிர பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.கறிவேப்பிலை, நெல்லிக் காய், மருதாணியை ச் சம அளவு எடுத்து அரைத்து வடையாகத் தட்டி நிழலில் காய வைத்து, தேங்காய் எண் ணெயில் கலந்து தினமும் தேய்த்துவரலாம். இவை நாள்பட இளநரையைப் போக்கும்.
இளநரை வராமலும்
தடுக்கும்.
கூந்தலை கருமையாக வைத்திருக்கும்.
ஆரம்பம் முதலே சரியான
சிகிச்சை மேற்கொண்டால் இளநரையைத் தடுத்துவிடலாம். பக்கவிளைவில்லாத இயற்கை வைத்தியத்தியத்தை விட சிறந்த தீர்வு வேறெதுவும் இல்லை.ரசாயன நிறமிடல் (ஹேர்டை )அதிகமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும்.
கண்பார்வை குறைவு,சளி,ஒவ்வாமை,தலைவலி போனறவை கண்டிப்பாக உண்டாகும்.
சிலருக்கு தோல் நோய்கள் ,வெண்குட்டம் வரை உருவாகியுள்ளது.
இதுவும் ஒருவகைத் தீர்வுதானோ? |
---------------------------------------------------------------------------------------------------------------------------------