திங்கள், 7 அக்டோபர், 2019

இணையத்தில் பொருட்கள் வாங்கும்போது.


இன்று வலைத்தள வியாபார நிறுவனங்கள (இ -– காமர்ஸ் தளங்கள்) சலுகைகளால் ஈர்க்கும் நிலையில், சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் அதிகரித்திருப்பதால் இணையதளக் கொள்முதலில் (ஆன்லைன் ஷாப்பிங்) பாதுகாப்பிலும், கவனம் செலுத்த வேண்டும்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ -– காமர்ஸ் நிறுவனங்கள், பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அளித்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.

கடந்த ஆண்டு, பண்டிகை காலத்தில், இ – -காமர்ஸ் தளங்களில், மொத்தம், 3 பில்லியன் டாலருக்கு பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு, 20 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவர் என எதிர்பார்ப்பதாகவும், ரெட்சீர் கன்சல்டிங் அறிக்கை தெரிவிக்கிறது.

தீபாவளியை மையமாக கொண்ட பண்டிகை காலத்தில், இ- – காமர்ஸ் நிறுவனங்கள், தீவிர ஆர்வம் காட்டும் நிலையில், சைபர் குற்றவாளிகளும் கைவரிசை காட்ட, இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முற்படுவதாக, வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இணைய வசதிபல்வேறு வங்கிகள் மற்றும் நிதிநுட்ப நிறுவனங்களுடனான கூட்டால், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு, இந்த காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சைபர் குற்றவாளிகள் வலைவிரிக்க காத்திருக்கின்றனர்.

இவைத்தவிர, ‘டிஜிட்டல் வாலெட்கள்’ பயன்பாடும் அதிகரிக்க இருப்பது, குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் மொபைல் போன்கள் மூலமாக ஷாப்பிங் செய்வதும், இடர்தன்மையை அதிகமாக்கியுள்ளது.
எனவே, ஆன்லைன் ஷாப்பிங்கை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதில், கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.


ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வசதியை நாடும் முன், இணைய வசதியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். வீட்டில், தனிப்பட்ட இணைய இணைப்பை பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் உள்ள, வை-பை மைங்களின் இணைய வசதியை, ஷாப்பிங் செய்ய பயன்படுத்தக்கூடாது. இங்கு, சைபர் குற்றவாளிகள் அதிகம் புழங்குகின்றனர்.
வீட்டில், இணையத்தை பயன்படுத்தும் போது கூட, அதில் அணுகும் இணையதளங்கள் எஸ்.எஸ்.எல்., போன்ற பாதுகாப்பான அம்சங்கள் கொண்டிருக்க வேண்டும்.


மொபைல் போன்களில் இருந்து ஷாப்பிங் செய்யும் போதும் இணைய வசதியை அணுகும் விதம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது, அது, எப்போதும் நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் இணைய வசதிகளை தேடி அடையாளம் காட்டும்.
செயலிகள் கவனம்இதை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள், தங்களது இணைப்பையும் அதில் தோன்றச் செய்து வலை விரிக்கலாம்.
எனவே, இல்லங்களில் உள்ள இணைய சாதனங்களின் எல்லையில் இருந்து விலகிச்செல்லும் போது, போனில், தானாக வை-பை இணைப்பை தேடும் வசதியை ஆப் செய்துவிடுவது நல்லது.
கூடுமானவரை C O D எனப்படும் கையில் காசு கொடுத்து பொருட்களைப்பெற்றுக்கொள்ளும் முறையை பயன்படுத்தினால்  கிரடிட் ,டெபிட் வில்லங்கங்கள் வராது .
ஆண்ட்ராய்டு போன்கள், பரவலாக பயன்படுத்தப்படுவதால், சைபர் குற்றவாளிகள், அவற்றை அதிகம் குறி வைக்கின்றனர். இந்த நோக்கத்தோடு, போலி செயலிகளும் உருவாக்கப்படுகின்றன.
புதிய செயலிகளை பயன்படுத்தும் போது, அவை அதிகாரபூர்வ செயலி தானா என்பதை, உறுதி செய்து கொள்வது அவசியம்.

அறிமுகம் இல்லாத இடங்களில் இருந்து மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் வரும் இணைப்புகளில் உள்ள செயலிகளை தவிர்க்கவும்.
அதே போல, அறிமுகமான இ- – காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவது நல்லது. கவர்ச்சிகரமான சலுகைகளுக்கு ஆசைப்பட்டு, தெரியாத தளங்களில் பொருட்களை வாங்கி ஆபத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

தெரியாத தளங்கள் எனில், அவை பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிப்பார்த்து நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளவும். பணம் செலுத்தும் வாய்ப்பையும் பரிசீலிக்கவும்.
வங்கி கணக்கில் இருந்து, நேரடியாக பணம் செலுத்தக்கோரும் தளங்களை தவிர்க்கவும்.
 டெபிட் கார்டை விட, கிரெடிட் கார்டை பயன்படுத்தவும்.
கிரெடிட் கார்டில் மோசடி தடுப்பு வசதிகள் பல உள்ளன.ஆனாலும் கிரெடிட் கார்டு உங்களை கடனாலியாக்கிவிடும் வாய்ப்புகள் அதிகம்.எனவே அதை பயன்படுத்துவதில் ஆதிக்க கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வளவு துன்பம் எதற்கு வலைதள நிறுவனங்களிடம் பொருட்களை வாங்குவதை விட உள்ளூர் வியாபாரிகளிடம் வாங்குவது பொருட்களின் தரத்தை நாமே சோதித்துவாங்குவதுடன் ஏமாறாமல் இருக்க முடியும்.பணப்புழக்கமும் நம்மூரில் பரவலாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.
ஜேம்ஸ் குக், நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
 ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)
ஜெர்மன்  குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
இஸ்ரேல் அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)

1958 - பாகிஸ்தானில் முதல் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்ந்தது. 
1956இல்தான் முதல் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி, குடியரசாக ஆகியிருந்த பாகிஸ்தானில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பின்மூலம் ஏற்பட்ட ராணுவ ஆட்சி, 1971வரை நீடித்தது.
இந்தியாவுடன் 1947இல் விடுதலையடைந்த பாகிஸ்தானில், 2008 வரையான 61 ஆண்டுகளில், 33 ஆண்டுகள் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. 1956வரை இங்கிலாந்தின் மேலாட்சியின்கீழான டொமினியன் நாடாகவே(இங்கிலாந்தின் அரசியே பாகிஸ்தானுக்கும் அரசி - கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இன்றும் இருப்பதைப்போன்று!) பாகிஸ்தான் தொடர்ந்தது உள்ளிட்ட செய்திகள் இத்தொடரில் 2018 ஆகஸ்ட் 14இல் இடம்பெற்றுள்ளன.
முழுமையான குடியரசாக மாற்றமடைவதற்குமுன்பே, அரசமைப்புச் சட்ட அவையையும், அப்போதைய தலைமை அமைச்சர் கவாஜா நஸீமுதீனையும், தலைமை ஆளுனர் குலாம் மொகம்மத் பதவி நீக்கம் செய்ததே பாகிஸ்தானின் முதல் ஆட்சிக் கவிழ்ப்பாகும்.
அதற்கும் ராணுவத் தளபதியே (அயூப்கான்) உதவினார்.

 குடியரசாக ஆனபின் முதல் குடியரசுத்தலைவரான இஸ்கந்தர் மிர்ஸாவே ராணுவத் தளபதியாக இருந்தவர்தான். ஆட்சிக்கவிழ்ப்புக்குப்பின் அவரையும் அகற்றி, ராணுவத் தளபதி அயூப் கான் தானே அதிபராகி, 1962இல் புதிய அரசமைப்புச் சட்டத்தின்மூலம் அதனை சட்டப்பூர்வமாக்கினார்.
1973இல் புதிய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ராணுவம் சாராத ஜுல்ஃபிகர் அலி புட்டோ பிரதமராக இருந்த நிலையில், ராணுவத் தளபதி ஜியா-வுல்-ஹக் ஆட்சியைக் கவிழ்க்க, 1988வரை ராணுவ ஆட்சி நடைபெற்றது. 1999இல் நவாஸ் ஷெரீஃபின் ஆட்சியை ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் கவிழ்த்தபின் 2008வரை ராணுவ ஆட்சி நடைபெற்றது.
 இவைதவிர தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளுடன், அரசியல் முடிவுகளில் ராணுவத்தின் தலையீடும் பாகிஸ்தானில் அதிகம். விடுதலைக்குப்பின் முப்படைக்கும் ஒரே தளபதி வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்ததால், முப்படைக்கும் தலைவர் குடியரசுத்தலைவரே.
ஆனால், பாகிஸ்தானில் படைகளின் கூட்டுக்குழு என்ற அமைப்பு முப்படைகளின் தலைமையாக இருக்கிறது. அமெரிக்காவில் முப்படையிலிருந்தும் சுழற்சி முறையில் இக்குழுவின் தலைவர் நியமிக்கப்படுகிறார்.
ஆனால், பாகிஸ்தானில் கடற்படை, விமானப்படைத் தளபதிகள் பதவியில் மூத்தவர்களாக இருந்தாலும்கூட, பெரும்பாலும் ராணுவத் தளபதியே இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவதால், ராணுவம் அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மற்ற இரு பிரிவுகளின் துணையுடன் மிக எளிதாக ஆட்சியைக் கவிழத்துவிட முடிகிறது.

 அதனால்தான் இந்தியாவிலும் முப்படைக்கும் ஒரே தளபதி என்று பிரதமர் மோடி விடுதலைதின உரையில் குறிப்பிட்டிருப்பது மிகவும் கவலையோடு கவனிக்கத்தக்கது.
                                                                                                                                   - அறிவுக்கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
quora தளத்தில் கேள்விக்கான பதில்.
பாஜக மீது மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?முதல்வர் திரு.பழனிச்சாமி என்கிற தமிழர் உங்களுக்கு துரோகியெனில் ஸ்டாலின் போன்ற தெலுங்கர்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என விரும்புகிறீர்களா?


இதில் தமிழர்,தெலுங்கர்,இந்திக்காரர் என்ற பேதம் இல்லை.சொல்லப்போனால் நாம் விடுதலையடைந்ததிலிருந்து இந்தி மாநிலங்களைசசேர்ந்தவர்கள்தான் இந்தியாவை ஆண்டு வருகிறார்கள்.அதனாலேயே இந்தி மட்டுமே இந்தியா எனது தவறாக எண்ணிக்கொண்டு திணிக்கிறார்கள்.
அதில் காங்கிரசை விட அதி தீவிரம் பாஜகதான்.அதை விட்டாள் கொடுமை செத்து வழக்கிழந்துபோன சம்ஸ்கிருதத்தை ஆயிரக்கணக்கான கொடிகளை பணம் ஒதுக்கி உயிர் கொடுக்க முயல்கிறார்கள்.இதன் பின் யார் சாணக்கியத்தனம் இருக்கிறது என்பது எளிதில் புரியும்.
உலகம் தினமும் புதுப்புது கண்டுபிடிப்புகளுடன் முன்னேறி க்கொண்டிருக்க  பாஜகவினரோ மாட்டு மூத்திரம் சகரோக நிவாரணி என்கிறார்கள்.
அதை உபயோகிக்க கூறுகிறார்கள்.
எல்லாம் அப்பாவி இந்தியர்களுக்கு மட்டும்தான். 
ஆனால் இவர்களோ தங்கள் வியாதிகளுக்கு அலோபதிக்கு ,அமெரிக்காவுக்கு சென்று நலம்பெறுகிறார்கள்.அப்படி கோமியம் பயன்படுத்தாத தலைகள் அருணஜெட்லீ,சுஷ்மா சுவராஜ்,கார்ப்பரேட் சாமி பாபா ராமதேவ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
தங்களை முன்னேற்றுவார்கள் என்று தொடர்ந்து இருமுறை ஆட்சிப்பொறுப்பை தந்த பாமர மக்களுக்கு பாஜக செய்த நன்மை ஒன்றினை சொல்லுங்களேன்.
தினசரி எல்லாப்பொருட்கள் விலைகள் ஏறக்காரணமான பெட்ரோல் ,டீசல் விலை ஏற்றம்,தனிநபர்,அரசு ஊழியர்கள் வருமான வரி வரம்பு உயரத்தாமல் கர்ப்பரேட்களுக்கு மட்டும் அடிக்கடி குறைக்கப்படும் வரிச்ச்சலுகை.
எதிர்த்து கேள்வி எழுப்புவர்களுக்கு சிறை.நேற்று கூட 49 பிரபலங்களுக்கு தேசத்துரோக வழக்குப்பதிவு.
அவர்கள் வடமாநிலங்களில் உள்ள பிற மட்ச்த்தினரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி தாக்குவதாவதி,கொலை செய்வதை தடுக்கத்தானே சொன்னார்கள்.அதுவும் மோடி பிரதமர் என்பதால் அவருக்கு கடிதம் எழுதினார்கள்.அது தேசத்துரோகமா?வெள்ளையன் காலத்தில் கூட இப்படி வாய்ப்பூட்டு சட்டம் இல்லை.
பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி எல்லாவற்றிலும் அவசரக்கோல நடவடிக்கையால் சீரழிகிறது இந்திய பொருளாதாரம்.
உலக நடுகல் வளர் முக நாடுகள்  பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இந்தியா.
இந்த ஆண்டோ அதைவிடக்கேவலம் பட்டினியுடன் படுக்கச்ச்செல்வோர் அதிகமாக உள்ளநாடுகளில் மூன்றாவது இடம்.இவைதான் மோடியின் பாஜக ஆட்சியின் சாதனை.
பாஜகவின் பொருளாதார நடவடிக்கைகளை அக்கட்சியைச் சேர்ந்தவர்களே குற்றம் சொல்கிறார்கள்.
மோடி ,அமித் ஷா எடுக்கும் எந்தநடவைடிக்கையும் மக்களுக்கு நன்மை தருவதாக இல்லை பயன் முழுக்க அம்பானி,அதானி,போன்ற கார்ப்பரேட் பணமுதலைகளுக்குத்தான்.
எடப்பாடி பழனிச்சாமி என்பதை விட பாஜகவின் எடுபிடி பழனிச்சாமி ,அதிமுக அரசு எனலாம்.
ஜெயலலிதா எதிர்த்த மின்திட்டம்,நீட் தேர்வு உணவுக்கொள்கை,புதியக்கல்விக்கொள்கை என அனைத்தையும் தங்கள் மீது ஊழல் வழக்கு பாய்ந்து விடக்கூடாது என்பதற்காக ஆதரித்து கையொப்பமிட்டு தமிழகத்தை தரங்கெட்டத்தனமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
பக்கத்துக்கு மாநிலங்கள் கேரளா,தெலுங்கானா,ஆந்திரா,கர்நாடகா போன்றவற்றில் அம்மாநிலமக்களுக்கு 90%வேலைவாய்ப்பைத்தர வேண்டும் என்றே அரசுப்பணியாளர் தேர்வு ஆணையங்கள் இருக்கையில் ,பன்னிர்செல்வம் மட்டும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை இல்லாதவாறு திருத்தம் கொண்டுவந்துள்ளனர்.அதற்கேற்றவாறு தற்போது குரூப் -2 வினாத்தாட்களிலும் மாற்றம் கொண்டுவந்துவிட்டார்கள்.முக்கியமான இரணடாம் தாளில் தமிழ் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.முதல்தாளில் திருக்குறள் பற்றி உள்ளதாக தற்பெருமை கொள்கிறார்கள்.
கஜா புயல் பாதிப்பில் மக்களை சந்திக்காமல் மாமியார் வீட்டில் பிரியாணி விருந்ததில் கலந்து கொண்டவர்தான் முதல்வர்.
துணை முதல்வருக்கோ தனது மகனை கடைந்தேற்றுவதுதான் முக்கிய ஒரே பணி.அதற்காக அவருடன் தர்மயுத்தம் செய்தவர்களைவிட நட்டாற்றில் விட்டவர்.10000 கோடிகள் எட்டுவழிக் சாலை ஒப்பந்தம் தனது சம்பந்தாருக்கு கிடைக்கும் என்பதால் சேலம் மக்களை,விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  துச்சமாக மதித்தவர் எடுபிடி பழனிச்சாமி.
இப்படி சொல்லிக்கொண்டே போனால் இடம் காணாது.தமிழ்நாட்டில் இருந்தால் உங்களுக்கு தெரியாததும் அல்ல.
மக்கள் நலனுக்கெதிரானவர்களை எப்படி வெறுக்காமல் இருப்பது.ஆட்சி செய்ப்பவன் தமிழனா,தெலுங்கானா,மலையாளியா என்பதல்ல முக்கியம் .மனிதனாக மனிதாபிமானம் உள்ளவனாக இருப்பதே முக்கியம். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
குஜராத்தில் குடிகாரர்கள் அதிகம்.
குஜராத் மாநிலத்தில் தான் அதிகளவு மதுபானம் நுகர்வோர் உள்ளனர் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்கெலாட் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
"நான் குஜராத்தில் ஒரு வருடம் இருந்துள்ளேன் . நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து மதுவுக்கு தடை உள்ளது. ஆனால் குஜராத்தில் அதிகபட்சமாக மதுபானம் நுகர்வோர் உள்ளனர். இதுதான் மகாத்மா காந்தியின் குஜராத்தின் நிலைமை.
ராஜஸ்தானில் மதுபானம் தடை செய்யப்படும் என்பது வதந்திதான். சட்டவிரோத மதுபானங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை மதுவுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது.நான் தனிப்பட்ட முறையில் மதுபானத்தை தடை செய்வதற்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் மதுவிலக்கு சட்டவிரோத மதுபானத்திற்கு வழிவகுக்கும். இந்த சூழ்நிலையில், அதை மாநிலத்தில் தடை செய்ய முடியாது. 1977 ஆம் ஆண்டில், தடை விதிக்கப்பட்டது, ஆனால் அது தோல்வியடைந்தது.ராஜஸ்தான்  அரசு இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, சில வகை புகையிலைகளுக்கு தடை விதித்துள்ளது."
என்று அவர் கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

தங்கப் பத்திரம்.

மத்­திய அரசு தற்போது வெளி­யி­டும் தங்க சேமிப்பு பத்­தி­ரத்­திற்கு, ஒரு கிராம், 3,788 ரூபாய் என, விலை நிர்­ண­யம் செய்­துள்­ளது.

மக்­களின் பண்­டிகை கால கொண்­டாட்ட மன­நி­லையை பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் வகை­யில், திங்­க­ளன்று அடுத்த தங்க சேமிப்பு பத்­தி­ரத்தை வெளி­யிட தீர்­மா­னித்­துள்­ளது.இந்த தங்க சேமிப்பு பத்­தி­ரம், நாளை முதல், 11ம் தேதி வரை, ஒரு கிரா­முக்கு, 3,788 ரூபாய் என்ற 

விலை­யில் வெளி­யி­டப்­பட உள்­ளது.

வலை­த­ளம் அல்­லது மின்­னணு முறை­யில் மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு, ஒரு
கிரா­முக்கு, 50 ரூபாய் தள்­ளு­படி வழங்­கப்­படும் என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் அறி­வித்­து
உள்­ளது. இத­னால், 'கிரெ­டிட், டெபிட்' கார்டு உள்­ளிட்ட மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­யில், தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களை வாங்­கு­வோ­ருக்கு, ஒரு கிராம், 3,738 ரூபாய்க்கு கிடைக்­கும்.

மத்­திய அரசு, தங்­கம் இறக்­கு­ம­தியை குறைக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஒன்­றாக, 2015, நவம்­ப­ரில், தங்க சேமிப்புபத்­திர திட்­டத்தை அறி­வித்­தது. இதில்,தங்­கத்தை, ஆவண வடி­வில்
சேமிக்­க­லாம். ஒரு கிராம் தங்­கம், ஒரு யூனிட் என்ற கணக்­கில் வழங்­கப்­படும். ஒரு­வர்,
ஏப்., – மார்ச் வரை­யி­லான ஒரு நிதி­யாண்­டில், குறைந்­த­பட்­சம், 1 கிராம் முதல், அதி­க­பட்­சம், 500 கிராம் வரை, தங்க சேமிப்பு பத்­தி­ரத்­தில் முத­லீடு செய்­ய­லாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------- 

 எதிர் திசைப்பயணம் .

ரயில்வே தனியார் மயம், பாரத் பெட்ரோலியம் தனியார்மயம் என இந்திய மக்கள் சற்றும்  எதிர்பாராத மிகப்பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் அதிவேகமாகவும் கண்மூடித்தனமாகவும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாதையில் மோடி அரசு செல்லத் துவங்கியிருக்கிறது.
இந்திய தேசத்தின் பொரு ளாதாரம் மிக வேகமாக தலைகுப்புறக் கவிழ்ந்து மண்ணை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதை தாங்கிப் பிடிக்கத் திராணியற்ற மோடி அரசு,  சற்றும் கவலைகொள்ளாமல் தனியார் கார்ப்பரேட் சேவகத்தில் கண்துஞ்சாமல் ஈடுபட்டிருக்கிறது.
பொருளாதார நெருக்கடி என்ற பிரச்சனை, பொருளாதார மந்தநிலை என்பதை நோக்கி லேசாக அல்ல, மிக வேகமாக நகர்ந்திருக்கிறது. இதை 2019 ஆகஸ்ட் மாதத்தின் ஒட்டுமொத்த  பொருளாதார நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுவ தாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
 அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் நடந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி காலத்தில் இருந்த சூழலைவிட மிக மோசமான சூழலை பிரதிபலிக்கிறது என்று இந்தியப் பொருளாதாரத்தின் மாதாந்திர நடவடிக்கைகளை ஆய்வுசெய்யும் ‘நோமுரா’ எனும் சந்தை ஆராய்ச்சி முகமை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இந்த நிலவரத்தின்படி கணக்கிடும்போது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5 சதவீதத்திற்கும் கீழாக வீழ்ச்சி அடையும்; இந்த நிதியாண்டு முடியும்போது 6 சதவீதத்தை எட்டுவது கூட கடினமாகும் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது.
ரயில் சரக்கு போக்குவரத்து, கார்கள் மற்றும்  இருசக்கர வாகனங்கள் விற்பனை, நடுத்தர மற்றும் கனகர வணிக வாகனங்கள் விற்பனை, எண்ணெய் அல்லாத மற்றும் தங்கம் அல்லாத பொருட்களின் இறக்குமதி - போன்றவைதான் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையை தீர்மானிக்கிற அடிப்படைக் காரணிகள் என்றும் இந்தக் காரணிகள் கடந்த இரண்டு மாத காலமாக மிகக் கடுமையாக அடிவாங்கியிருக்கின்றன என்றும் பிஸினஸ் ஸ்டாண்டர்டு இதழுக்கு பேட்டி அளித்துள்ள பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான சோனால் வர்மா கூறியிருக்கிறார்.

நன்றாக கவனியுங்கள், இந்தியப் பொருளா தாரம் மோடி ஆட்சியின்கீழ் அதலபாதாளத்தில் வீழ்ந்துவிட்டது என்று ஆதாரப்பூர்வமாக கூறிக் கொண்டிருப்பது  இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, முதலாளித்துவ பொரு ளாதார வல்லுநர்களும்தான்.
இதற்கு தீர்வு என்ன என்பதில் மோடி அரசைத் தவிர எல்லோருமே இப்போது ஒரே குரலை எழுப்புகிறார்கள்; உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோர் கைகளில் பணம் இல்லை; வாங்கும் சக்தி இல்லை என்பதுதான் அது. வாங்கும் சக்தியை உருவாக்க வேண்டுமானால் பொது முதலீடு உடனடியாக பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆனால் மோடி அரசு எதிர் திசையில் பயணிக்கிறது.

பொதுச் சொத்துக்களை முன்னிலும் வேகமாக அழிக்கிறது. இது தேசத்தின் அழிவாக மாறும். அதை தடுத்துநிறுத்துவதே தேசபக்தி.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------