நாச வேலை,நாகசாமிகள்

கீழடியை தமிழர் பெருமையாக ஏற்க்க மறுக்கும் ஆரிய நச்சு நாகசாமியின், முந்தைய தமிழ் விரோத நடவடிக்கைகள் ஒரு பார்வை..
தொல்லியல் துறையில் வேலை செய்தபோது, தமிழர் பெருமைகளை மூடிமறைக்கும் நாச வேலைகளைத்தான் இந்த நாகசாமி செய்து கொண்டிருந்தார்..

பிஜேபி மத்திய மோடி அரசால் “பத்ம பூசன்” விருதளிக்கப்பட்டுள்ள புள்ளியில் நிபுணர் இரா நாகசாமி, தன் The Mirror of Tamil and Sanskrit” என்னும் நூலில் முன்வைத்துள்ள முக்கியஎண்ணங்கள்.


1. தமிழ், தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை. சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிட மிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகிறது.

2. தொல்காப்பியம் இலக்கண நூலன்று; பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட ,நடனப் பாடல்களுக்கான கருத்தமைந்த தொகுப்பு அது.

3. சிலப்பதிகாரம் வரலாற்றுக் காபியமன்று; அது முழுவதும் புனைந்து கட்டப்பட்ட ஒரு புனை கதை இலக்கியம். அது முழுவதும் நாட்டியப் பாடல்களின் தொகுப்பு.

4. தமிழ் எழுத்துகள் பிராமி என்ற கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து வடிவமைக்கப்பட்டன.

5. தமிழர் 'பா'வும் பரத முனிவரின் ‘யமகம்’ என்ற மடக்கணியைக் கொண்டே வளர்ந்துள்ளன.

6. தமிழர்கள் வேதக் கடவுளர்களையே வணங்குகின்றனர்.

7. தமிழர்க்கெனத் தனி வாழ்வுநெறி இல்லை. வடமொழி, வேதநெறி மரபு வாழ்வையே பின்பற்றி வாழ்கின்றனர்.

8. தமிழரின் கலை , இசை, நடனம், இலக்கியம், எல்லாம் கடன் பெற்றவையே!

9. காலந்தோறும் தமிழ், சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிலிருந்தே கடன் பெற்று வளர்ந்துள்ளது.
அதிலிலுள்ள ஐந்நிலம் என்பது உண்மையான நிலப்பாகுபாடன்று. அது நாடகத்தின் சுவையை மிகுவிக்கப் போடும் பின்னணித்திரை போன்றது..
தமிழ் அகம் , புறம் பற்றிய பாடல்கள் அனைத்துமே நாட்டியமாடப் பின்னணியாகப் பாட எழுதப்பட்ட பாடல்களைப் போன்றனவே ஆகும். எதுவும் உண்மையான வாழ்வு நெறியினின்று கிளைத்தது அன்று.

10. பொதுவாக நாம் இன்று சிறப்புடன் போற்றும் தமிழ்சார்ந்த அனைத்துமே,கற்பனைகளே.
இவற்றை உண்மை என நம்பித் தமிழ் உயர்வு பற்றிப் புகழ்தல் எல்லாம் தவறு.


நன்றி:- மூதறிஞர் தமிழண்ணல் எழுதி, திரு இராமசாமி நினைவுப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பேராயம் வெளியிட்ட, "தொல்லியல் துறைஞர் இரா. நாகசாமியின், பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்" என்னும் நூலுக்கு, முனைவர் மு.பொன்னவைக்கோ எழுதிய அணிந்துரை.

இப்போது புரிகிறதா?
நாகசாமிக்கு அளிக்கப்பட்ட "பத்ம பூசன்" விருது, தமிழுக்கும், தமிழினத்துக்கும் எதிராக விதைக்கப்பட்ட, ஆரிய நச்சுக் கருத்துக்களுக்காக என்பது புரிகிறதா?

பத்மபூஷன் விருதை அளித்து, தமிழுக்கு மாபெரும் துரோகம் செய்த மத்திய பிஜேபி அரசு..

தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதம்தான் என்றும், இலக்கியம், இலக்கணம், அறம், அரசுச் சட்ட திட்டங்கள் என அனைத்தையும் சமஸ்கிருதத்திடமிருந்துதான் தமிழ் பெற்றது என்றும் தமிழை சிறுமைபடுத்தி, ஆரிய சமஸ்கிருதத்தை சார்த்து தான் தமிழ் உள்ளது என, "தமிழ் சமஸ்கிருதத்தின் கண்ணாடி (Mirror of Tamil and Sanskrit)" நூலில் எழுதிய இரா. நாகசாமி என்னும் ஆரிய சம்ஸ்கிருத, சங்கர மட ஆதரவாளருக்கு பத்மபூஷன் விருதை அளித்துள்ளது மத்திய பிஜேபி மோடி அரசு...

திருக்குறள் சமஸ்கிருத வேதங்களின் காப்பி, தமிழ் மொழி எழுத்து முறையைப் பிராமணர்களிடமிருந்து பெற்றது, தொல் காப்பியம், புறநானூறு, அகநானூறு சிலப்பதிகாரம் முதலியவை சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை, தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே இல்லை, அசோகர் காலத்தில் தமிழுக்கு எழுத்து வடிவம் இல்லை, செம்மொழிக்கான தகுதிகள் எவை எவை என்று வரையறுக்கப்பட்டுள்ளனவோ அவை யாவும் தமிழுக்கு இல்லை, பழங்குடிகளின் ஒரு கிளைமொழியாக (Dialect) இருந்த தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றுதான் செம்மொழியாக வளர்ந்தது... இப்படியெல்லாம் தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி தன்னுடைய Mirror of Tamil and Sanskrit நூலில் நாகசாமி எழுதியுள்ளார்.

இப்படியான தமிழ் மொழியின் எதிரிக்கு, இந்தியாவின் உயரிய பத்மபூஷன் விருதை அளித்து மகிழ்ந்துள்ளது மத்திய பிஜேபி மோடி அரசு...

பாஜகவின் அடித்தளமே வரலாற்றை திரிப்பதுதான்.
விடுதலைப்போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டும் ,போராட்டத்தில் கலந்து கொண்டு மாட்டினால் ஆங்கிலேயன் காலைல விழுந்து மன்னிப்புக்கேட்டு கடிதம் எழுதிக்கொடுத்து வந்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.,ஜனசங்க ,பாஜக,உண்மை வரலாறு.ஆனால் இந்து இந்திய தேசபக்திக்கே தாங்கள்தான் மொத்தக் கொள்முதல்காரர்கள் என்று அலைகிறார்கள்.காந்தி 150 ஆண்டுவிழா நடைபயணம் செல்லும் பாஜகவின் இன்றைய போட்டோஷாப் படம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
 நெகிழி ஒழிப்பு.
சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் முதலிடத்தில் நெகிழி எனும் பிளாஸ்டிக் உள்ளது.
பூமியில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகளாகத்தான் உள்ளன.
 பல ஆண்டுகள் ஆனாலும் இவை மக்குவதில்லை.
நிலப்பரப்பு மட்டுமல்லாமல், கடல்வளத்தையும் இவை பாதிக்க தொடங்கி விட்டது.
 உலகளவில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இதன் பயன்பாடு குறையவில்லை.
இந்நிலையில் பசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு. நெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி, 'தி ஓஷன் கிளீனப்' என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ., வாக இருக்கிறார்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கு 'நகரும் வளையம்' போன்ற தொழில்நுட்பத்தை உருவாக் கினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் உருவாக்கிய தொழில்நுட்பத்தை சோதனை ரீதியாக இயக்கி வந்தார். தற்போது இதில் வெற்றி கண்டுள்ளார்.
இவரது தொழில்நுட்பம் மூலம் முதல்கட்டமாக பல டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

இத்தொழில்நுட்பம் 'சி' வடிவில் ஒரு அரை வளையம் போல இருக்கும் இதன் நீளம் 2 ஆயிரம் அடி. பாராசூட் மூலம் இயக்கப்படுகிறது. பாராசூட் முன்னோக்கி செல்ல, இவ்வலை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டே வரும்.
வாரம் ஒருமுறை கப்பல் சென்று சேகரித்த குப்பைகளை ஏற்றிச்செல்லும். வளையத்தின் மத்தியில் கடல்வாழ் உயிரினங்கள் கடந்து செல்வற்கு பத்து அடி ஆழத்துக்கு துணி உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் டன் கணக்கிலான மீன் வலைகள் முதல், பெரிய மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்கட்ட வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
விதைக்கப்பட்டவன்.

"நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எரிவதே மேல்”                             

குவேராவின் குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோச லிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார்.
இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கி னார்.
சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர்.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டி களிலும் கலந்து கொண்டுள்ளார்.
 வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். பாவ்லோ, நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, விட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது. குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம்.
 இவற்றுள் மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா,காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது.
 செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள் புத்தர், அரிஸ்டாட்டில் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பெட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பன வும் அடங்கியிருந்தன.
 சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களா லும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் குறிப்புகள்
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சே குவேரா, அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுதும் பயணம் செய்தார்.
பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழு நோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்க ளைப் பயன்படுத்தி “மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார்.
இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளை யும் பெற்றது. பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை லத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று  சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வு களுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார்.
பயணத்தின் முடிவில், இவர், லத்தீன் அமெரிக்காவைத் தனித் தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியா கப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது.
அர்ஜெண்டினா வுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ பட்டம் பெற்றார்.

மீண்டும் பயணம்
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா, பெரு, ஈக்வடார், பனாமா, கோஸ்டாரிகா, நிகரகுவா, ஹேண்டூராஸ், எல் சால்வடார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார்.
அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான், நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.
 உண்மையான புரட்சி யாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாதமாலாவி லேயே தங்கிவிட முடிவு செய்தார்.

‘சே’ என்றால்...
குவாதமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்ற பெண் அறிமுகமானார். இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார்.
 இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார்.
அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்து வந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன.
 இக் காலத்தி லேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட அர்ஜெண்டினச் சொல்லாகும்.

கியூபாவில் புரட்சி
சில காலத்திற்குப் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண் டார்.
அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தி னைக் கைப்பற்றியது. அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.அக்காலகட்டத்தில் கொரில்லா போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியிருந்தார்.
1964 டிசம்பர் 11ஆம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றி னார். பின்னர், காங்கோ-கின்ஸாசா (தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடு களின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பி னை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பொலிவியாவில் சே 
சே, 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டு டன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார்.
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினது ராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். சிம்மசொப்பனமாக விளங்கிய சே, பொலிவிய ராணு வத்தால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ சால்மோன் என்பவரின் தலைமையில் அக்டோபர் 9, 1967 இல் கொல்லப்பட்டார்.
சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.

கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட இப்படி சொல்லித்தான் மரணத்தை வரவேற்றார் சே:
 

“நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னைச் சுடு”
 

‘சே’ என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம், போராட்டக் குணமுள்ள மனிதர்களின் அடையாளம்.

இன்று (அக்டோபர் 9) தோழர் சே குவேரா நினைவு நாள்

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

 தென்மேற்கு  போய் வடகிழக்கு ஆரம்பம்.
நான்கு மாதங்களாக பெய்த, தென்மேற்கு பருவமழை, நாளை (அக்., 10) முதல் குறையத் துவங்கும். வடகிழக்கு பருவமழை, இரண்டு வாரத்தில் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் முக்கிய பருவ மழையாக கருதப்படும், தென்மேற்கு பருவமழை, ஜூனில் துவங்கியது.
நான்கு மாதங்களாக நீடித்து, நல்ல மழை பொழிவை தந்தது.
 வட மாநிலங்களில், ஓராண்டுக்கு தேவையான தண்ணீரை தந்துள்ளது.
 நாளை (அக்., 10) முதல் இப்பருவ மழை முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு:
"வட மாநிலங்களில் இருந்து, பருவ காற்றின் வேகம் படிப்படியாக குறையும். ஒரு வாரத்துக்குள், தென் மாநிலங்களில், மேற்கில் இருந்து வீசும் காற்று குறைந்து விடும். இதையடுத்து, வரும், 20க்குள், வடகிழக்கு பருவ காற்று துவங்கும். இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகத்தில் பல பகுதிகளில், வெயிலுடன் கூடிய வறண்ட வானிலை காணப்படும்."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்
உலக அஞ்சல் தினம்
டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)
தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)

 உகாண்டா விடுதலை தினம்(1962)
 பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
48,000 பேர்கள் பணி  பறிப்பு.
தெலுங்கானா மாநில அரசு, அம்மாநிலப் போக்குவரத்து ஊழியர்களை நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப் பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோரியுள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தெலுங்கானாவில் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தைக் காப்பாற்றிட, மாநில அரசு உரியநடவடிக்கைகள் எடுக்க வேண்டும்என்று வலியுறுத்தி, மாநிலப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அக்டோபர் 5 ன்று தொடங்கிய வேலைநிறுத்தம் முழு வெற்றிகரமாக நடந்து வருகிறது.போக்குவரத்துக் கழகம் தற்சமயம் நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கு அரசு அளித்திடும் பல்வேறு மானியங்களும், நாளும் அதிகரித்திடும் டீசல் விலை உயர்வும், ஜிஎஸ்டி திணிக்கப்பட்டிருப்பதும் ஒருசில காரணிகளாகும். நிச்சயமாக போக்குவரத்து ஊழியர்கள் அல்ல. இவற்றைப்பற்றியெல்லாம் பரிசீலனை எதுவும் செய்திடாமல், மாநில அரசு, 48 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறது. மேலும் போக்குவரத்துக் கழகசங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கன்வீனர், வி. சீனிவாச ராவ்உட்பட இரண்டு கூட்டு கன்வீனர் களையும்,  தெலங்கானா மாநில சிஐடியுவின் நிர்வாகிகளையும் கைது செய்திருக்கிறது.  நட்டத்திற்கு ஊழியர்களே பொறுப்பு என்று கூறி முதல்வர், தனது எதேச்சாதிகார அணுகுமுறை யைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
 புதிய ஊழியர்களைத் நியமனம் செய்யப்போவதாகவும், அவ்வாறு புதிதாகச் சேர்கிறவர் கள் எந்தத் தொழிற்சங்கங்களிலும் சேரமாட்டோம் என்று எழுதித்தரவேண்டும் என்றும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு பலஅரசிடம் எழுப்பியிருந்த போதிலும், அவற்றுக்கு அரசு பலமுறை செவி சாய்க்க மறுத்ததன்காரணமாக, கூட்டு நடடிக் கைக் குழு செப்டம்பர் 6ஆம்தேதி வேலைநிறுத்த நோட்டீஸ்அளித்தது.
தெலங்கானா மாநிலஅரசின் அலட்சிய மனப்பான்மை யின் காரணமாகவே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்தது.இத்தகைய மாநில அரசின் தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத அணுகுமுறையை சிஐடியு கடுமையாகக் கண்டிக்கிறது.
என அறிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?