வெள்ளி, 15 நவம்பர், 2019

200 % உயர்வும்,4.62 %அதிகரிப்பும் .

ந்நாளில்,
முன்னால் .
பிரேசில் குடியரசு தினம்(1889)
 வெனின்சுலா ஐநாவில் இணைந்தது(1945)
முதல் மைக்ரோபுரோசசரான 4004 ஐ இன்டெல்  வெளியிட்டது(1971)

பாலஸ்தீன விடுதலை தினம்(1988)
இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது(2000)


1915- முதல் உலகப் போரின் போது அமைச்சர் பதவியிலிருந்து விலகி ராணுவத்தில் பணியாற்றச் சென்றார் வின்ஸ்டன் சர்ச்சில்!
ஃபர்ஸ்ட் லார்ட் ஆஃப் அட்மிரா லிட்டி(கடற்படைக்கான கேபினெட் அமைச்சர் என்று கொள்ளலாம்!) என்ற பதவியிலிருந்த சர்ச்சில், துருக்கியில் நடைபெற்றுக்கொண்டிருந்த கலிப்பொலி தாக்குதல்களில் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, லங்க்காஸ்ட்டரின் சான்சலர்(அதுவும் கேபினெட் அமைச்சர் பதவிதான்!) பதவிக்கு மாற்றப்பட்டார்.
அதன்பின் அக்டோபரில் அப்பதவியிலிருந்து சர்ச்சில் விலகினாலும், அது ஏற்கப்படாமல், இங்கிலாந்தின் ஆளுகையிலிருந்த கிழக்கு ஆஃப்ரிக்காவுக்குத் தலைமை ஆளுனராகப் பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதை சர்ச்சில் மறுத்துவிட, நவம்பர் 15இல் பதவி விலகல் ஏற்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த சர்ச்சில், ராணுவத்தில் சேர்ந்து, அடுத்த ஆண்டிலேயே லெஃப்ட்டினெண்ட் கர்னலாக உயர்ந்து, பெல்ஜியத்தில் நடைபெற்ற யுத்தங்களில் பங்கேற்றார்.
உண்மையில், பட்டப்படிப்பை முடித்தவுடன் 21 வயதில் ராணுவத்தில் சேர்ந்துவிட்ட சர்ச்சில், தாயின் செல்வாக்கைப் பயன்படுத்தி போர் நடக்கும் பகுதியில் பணியளிக்கச் செய்து, கியூபாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதலைப்போரை ஒடுக்க ஸ்பெயினுடன் சேர்ந்து போரிட்டிருந்தார்.

அதன்பின் சில ஆண்டுகள் இந்தியாவிலிருந்த சர்ச்சில், தனக்குக் கல்வி போதாது என்று முடிவெடுத்து, நிறைய நூல்களைப் படிக்கத்தொடங்கினார்.
தென்-ஆஃப்ரிக்காவில் பூர்(போயர்) போர்க்காலத்தில் அவர்களிடம் பிடிபட்டுப் போர்க்கைதியாகவும் சிறிது காலமிருந்து, தப்பி வந்தார் சர்ச்சில்! 1900இல் அரசியலுக்குவந்து, அந்த  ஆண்டிலேயே 25 வயதில் நாடாளுமன்ற  உறுப்பினராகவும், 30 வயதில் இணையமைச்சராகவும், 33 வயதில் கேபினெட் அமைச்சராகவும் ஆகிவிட்ட சர்ச்சில், 34 வயதில்தான் திருமணம்செய்துகொண்டார்!

முதல் உலகப்போர் முடிந்தபின் நடைபெற்ற தேர்தலில் ரயில்வேயை அரசுடைமையாக்குவது, ஏகபோக நிறு வனங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றைக்  குறிப்பிட்டுப் பிரச்சாரம் செய்த சர்ச்சில், போர், வான்படை ஆகியவற்றுக்கான கேபினெட் அமைச்சரானார்.
1900இல் கன்சர்வேட்டிவ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகி, 1904இல் லிபரல் கட்சியின் அமைச்சரான  சர்ச்சில் 1922 தேர்தலில் தோல்வியுற்று,  1924இல் சுயேச்சையாக வென்றபின் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து, நிதியமைச்சரானார்.
 1929 தோல்விக்குப்பின் இரண்டாண்டுகள் தீவிர  அரசியலி லிருந்தே ஒதுங்கியிருந்த சர்ச்சில், இரண்டாம்  உலகப்போர்க் காலத்தில் சிறப்பான பங்களிப்புக்குப்பின், 1940இல் இங்கிலாந்தின் பிரதமரானார்.

இருமுறை பிரதம ராக இருந்த சர்ச்சில், 1965இல் (90 வயதில்) இறப்பதற்கு ஓராண்டு முன்புவரை நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தவர் என்பதுடன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கவை!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

200 % உயர்வும்,4.62 %அதிகரிப்பும் .

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள்கூட இல்லாதவர் கௌதம் அதானி. ஆனால், தற்போது முகேஷ்அம்பானிக்கு அடுத்த இடத்தில், நாட்டின் இரண்டாவது பெரும் பணக்காரராக அதானி உருவெடுத்து இருக்கிறார்.

அவரது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.அந்த வகையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த ‘அதானி க்ரீன் எனர்ஜி’ (Adani Green Energy limited) என்ற மரபுசாரா எரிசக்தி நிறுவனம், கடந்த 9 மாதங்களில் மட்டும் 200 சதவிகித அளவிற்கு லாபமீட்டி, சக கார்ப்பரேட் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2018-19 நிதியாண்டின், ஜூலை - செப்டம்பர் காலாண்டில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிகர லாபம் மைனஸ் 187 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது 187 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது. ஆனால், 2019-20 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 102 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிஇருக்கிறது.

அதேபோல, முந்தைய 2018 - 19 நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வருவாய் 449 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இது தற்போது 2019-20 நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில் 53.5 சதவிகிதம் அதிகரித்து, 689 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் எபிட்டாவும் (Earnings before interest, tax, depreciation and amortisation - EBITDA) 94.4 சதவிகிதம் அதிகரித்து 382 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2018 - 19 நிதியாண்டின் இரண்டாவது காலாண் டில் 196 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.எபிட்டா தொகை மட்டுமல்ல, எபிட்டா மார்ஜினும் 55.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டில் எபிட்டா மார்ஜின் 43.8 சதவிகிதமாக மட்டுமே இருந்த நிலையில், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும், மின்சார தயாரிப்பினால் வரும் வருமானம் 3 சதவிகிதம் அதிகரித்து 462 கோடியைத் தொட்டுள்ளது.மேலும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், கடந்த ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாக, செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 970 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.
இந்த சாதகமான அம்சங்களால், ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவன பங்குகளின் விலையும் 99 ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 2019 பிப்ரவரியில் அதானிக்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 30 ரூபாய். ஆனால், இன்று அதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 99 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. சுமார் 9 மாத காலத்துக்குள், அதானிக்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின்பங்கு விலை 200 சதவிகிதம் விலைஅதிகரித்து இருக்கிறது.

அதே இந்தியாவில்தான்  இந்த செய்தியும்.உண்மையும் .
 இந்தியாவில், உணவு பொருட்கள் விலைஉயர்வினால் கடந்த அக்டோபர் மாத சில்லரைபணவீக்கம் 4.62 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இது ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்த4 சதவிகிதத்தை விட அதிகம் என்பதுடன்,கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கான மிகப் பெரிய சில்லரைப் பணவீக்க விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய புள்ளியியல் அலுவலகம், இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
 2018ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில்3.38 சதவிகிதமாகவும், 2019 செப்டம்பர் மாதத்தில் 3.99 சதவிகிதமாகவும் பணவீக்கம் இருந்தது. இதற்கு முன்னர் கடைசியாக 2018 ஜூன் மாதத்தில் சில்லரை விற்பனை விலைப் பணவீக்கம் 4.92 சதவிகிதமாக இருந்ததே அதிகபட்ச அளவாகும்.
இந்நிலையில், 2019 அக்டோபரில் சில்லரைப் பணவீக்க விகிதம் 4.62 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்களுக்கான விலை 7.89 சதவிகிதம் வரை உயர்ந்ததாலேயே சில்லரைவிற்பனை விலைப் பணவீக்கத்திலும் அதுதாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 5.11 சதவிகிதமாக மட்டுமே இருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதத்தில் காய்கறிகளின் விலை 21.10 சதவிகிதமும், பழங்களின் விலை4.08 சதவிதமும் உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இவற்றின் விலை முறையே 5.40 சதவிகிதம், 0.83 சதவிகிதம் என்ற அளவில் உயர்ந்திருந்தன.
அக்டோபரில் பருப்பு விலை 2.16 சதவிகிதமும், இறைச்சி விலை 9.75 சதவிகிதமும், முட்டை விலை 6.26 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.இந்தக் காலத்தில், எரிவாயு விலை மட்டுமே 2.20 சதவிகிதம் குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லரை விற்பனை விலைப் பணவீக்கத்தை 4 சதவிகிதத்துக்கு உள்ளேயே வைத்திருக்க மத்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
ஆனால் உணவுப் பொருட்கள் விலையேற்றம், அந்த இலக்கை உடைத்துள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 வேலை வாய்ப்புகள் 


 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13 வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது
: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி
: 21.11.2019

விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
 -------------------------------------------------------------------------------------------------------------------------------

முகநூல்

Krishna Kumar

முட்டாளாக இருப்பது ஒன்றும் தப்பில்லை. ஆனால், தான் முட்டாள் என்பதை ஊரறிய உலகறிய கூரை மீறி ஏறிச் சொல்லுபவனை என்னதான் சொல்லுவது? தெரியாத விஷயத்தை தெரிந்ததைப் போல பேசும்போது தன்னுடைய முட்டாள்தனத்தை ஒருவன் தானறியாமலேயே எல்லோருக்கும் காட்டி விடுகிறான். அப்படிப்பட்ட முட்டாளையே பின் தொடரும் வடிகட்டின முட்டாள்கள்தான் பரிதாபத்திலும் பரிதாபத்துக்குரியவர்கள்.
1. ஷா கமிஷன் ரிப்போர்ட் என்பது முழுமையானது அல்ல. பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில் நம்மிடம் எஞ்சியிருப்பது 900 பக்கங்கள் மட்டுமே. பிரச்சினைக்குரிய பக்கங்களை அப்போதைய காங்கிரஸ் அரசு அழித்துவிட்டது.
2. தமிழகத்தில் எமர்ஜென்ஸி கொடுமைகளை விசாரிக்க நீதிபதி இஸ்மாயில் தலைமையில் தனியாக கமிஷன் அமைக்கப்பட்டிருந்தது என்பதாலும் ஷா கமிஷன் அறிக்கையில் தமிழக எமர்ஜென்ஸி நிலவரம் குறித்து வெகு சில குறிப்புகள் மட்டுமே உள்ளன.
3. ஷா கமிஷன் ரிப்போர்ட்டில் தமிழகத்தில் நிறைய பேர் தகுந்த காரணமின்றி, வரைமுறையில்லாமல் (குறிப்பாக திமுக) கைது செய்யப்பட்டார்கள் என்கிற தகவல் இருக்கிறதே தவிர, தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் இல்லை.
4. சங்கி குழும வாட்ஸப் க்ரூப் ஒன்றில் வந்த ஃபார்வேர்ட் மெசேஜை வைத்துக் கொண்டு ‘மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை’ என்று அடிமுட்டாள் மதன் ரவிச்சந்திரன் கருதிக் கொண்டான். அவன் கருதிக் கொண்டது மட்டுமின்றி அதை ஒரு கண்டுப்பிடிப்பாக டிவி விவாதத்தில் முன்வைத்து தன்னுடைய அடிமுட்டாள்தனத்தை உலகுக்கே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டான்.
5. ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் இல்லை என்பதற்கு மதன் காட்டிய ஆதாரம், ஷா கமிஷன் அறிக்கைகூட அல்ல. அவசரத்துக்கு கூகிளில் தட்டி மிசா குறித்து EPW இதழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. இது secondary source. ஒரு பத்திரிகையாளன் குற்றச்சாட்டு வைக்கும்போது primary sourceதான் பயன்படுத்த வேண்டும் என்பது இதழியல் நடைமுறை. அதுகூட தெரியாத இந்த கூமூட்டையை ‘அரசியல் பிரிவு ஆசிரியர்’ ஆக்கியிருப்பவர்கள் மதனைவிட வடிகட்டிய முட்டாள்களாகதான் இருக்க வேண்டும்.
6. 1976, பிப்ரவரி 2 அன்று சென்னை அமெரிக்கத் தூதரகம் ‘situation of tamilnadu' என்கிற தலைப்பில் அமெரிக்க உள்துறைக்கு ஓர் அறிக்கை அனுப்பியிருக்கிறது. அதில் மிகத்தெளிவாகவே கைதானவர்களின் பட்டியலை இணைத்திருக்கிறது. (விக்கிலீக்ஸ் இணைப்பு : https://wikileaks.org/plusd/cables/1976MADRAS00190_b.html)
7. மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்ததற்கு ஆதாரம் வேண்டுமென்றால் சிறைத்துறையில் தகவல் அறிமை உரியும் சட்டத்தின் கீழ் கோரினால் போதும். சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு இந்த விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இருக்காது.

wikileaks.org
If you need help using Tor you can contact WikiLeaks for assistance in setting it up using our simple webchat available at: https://wikileaks.org/talk