2.77 ஏக்கர் நிலம் யாருக்கு?

அயோத்தி வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது இன்று தெரியவரும். இந்த வழக்கு குறித்த தகவல்கள், வழக்கு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
1528: முகலாய மன்னர் பாபர் அயோத்தியில் மசூதி கட்டினார். இது ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

1853: அயோத்தியில் முதன்முதலில் பெரும் வன்முறை வெடித்தது.
 இந்த சம்பவத்தில் 75 பேர் பலியாகினர்.

1859: ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, உள்ளே முஸ்லிம்கள், வெளியே ஹிந்துக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது.
 இருபுறம் சுவர் எழுப்பி, மோதல் அப்போதைக்கு தவிர்க்கப்பட்டது.

1949: மசூதியில் ராமர் விக்ரகம் தென்பட்டதால், முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு, அரசு பூட்டுப் போட்டது.
 மேலும், ‘அயோத்தி சர்ச்சைக்குரிய இடம்’ என அறிவிக்கப்பட்டது.

1950: ‘அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது’ என, பைசாபாத் நீதிமன்றத்தில், கோபால் சிங் விஷாரத், வழக்கு தொடர்ந்தார்.
 இது சுதந்திரத்துக்குப் பின், அயோத்தி தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்ற முதல் வழக்கு.

1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் நீதிமன்றத்தில் நிர்மோகி அகாரா வழக்கு தொடுத்தார்.

1961: உ.பி.,யில் வக்பு சன்னி மத்திய வாரியம், பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

1986: பூட்டப்பட்ட மசூதியின் உள்ளே சென்று, ஹிந்துக்கள் வழிபடலாம் என, மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதால், முஸ்லிம்கள் போராட்டம் வெடித்தது.

1989: ‘சர்ச்சைக்குரிய இடம் முழுமையாக, கோவில் என அறிவிக்க வேண்டும்’ என்று, பக்தர்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. 
பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும், மூன்று நீதிபதிகள் உடைய அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்சுக்கு மாற்றப்பட்டன.

1991: சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம்; எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது’ என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிசம்பர் 6, 1992: மசூதி இடிக்கப்பட்டது. 
அதனால் ஏற்பட்ட கலவரத்தில், 3,293 பேர் பலியாகினர்.

மார்ச், 2002: குஜராத்தின் கோத்ராவில், அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணம் செய்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது.
 இதில், 58 பேர் பலியாகினர்.
 இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 2002: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணையை துவக்கியது.

ஆகஸ்ட் 2003: மசூதி இருந்த இடத்தில், கோவில் இருந்ததற்கான சான்று இருப்பதாக, தொல்லியல் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்தது.

செப்டம்பர் 2003: பாபர் மசூதி இடிப்பில், ஏழு ஹிந்து தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால், அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஜூலை, 2005: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில், வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
 தாக்குதல் நடத்தியவர்களில், ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஜூலை, 2009: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன், தன் அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பின் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை, இன்னும் வெளியிடப்படவில்லை.

செப்டம்பர் 2010: ‘சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், மூன்றில் ஒரு பகுதி, ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி, நிர்மோனி அகாரா அமைப்புக்கும், மூன்றாவது பகுதி, சன்னி வக்பு வாரியத்துக்கும் பிரிக்க வேண்டும். 
மூன்று மாதத்துக்கு பின் பணி தொடங்க வேண்டும்’ என, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மே 2011: அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 
அதைத் தொடர்ந்து, அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மூன்று தரப்பினர் உள்ளிட்ட, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

பிப்ரவரி 2016: வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சுப்ரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மார்ச் 21, 2017: ‘இப்பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஏற்படுத்தலாமா’ என உச்ச நீதிமன்றத்தின், அப்போதைய தலைமை நீதிபதி, கெஹர் யோசனை தெரிவித்தார்.
10.40 காலை 09.11.2019

பிப்ரவரி 8, 2018: வழக்கு தொடர்பான தனிநபர் மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

மார்ச் 14 2018: சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செப்டம்பர் 27 2018: ‘மசூதிகள் என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்ததில்லை’ என, 1994ல் அளித்த தீர்ப்பை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜனவரி 8, 2019: வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையில், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், என்.வி.ரமணா மற்றும் யு.யு.லலித் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

ஜனவரி 10: அமர்வில் இருந்து விலகுவதாக, நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்.

ஜனவரி 25: ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ.நஜீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமிக்கப்பட்டது.

மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு தலைமையில், மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

ஆகஸ்ட் 1: சமரச பேச்சுவார்த்தை நடத்திய, மத்தியஸ்தர் குழு, இறுதி அறிக்கையை, ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ஆகஸ்ட் 2: ‘மத்தியஸ்தர் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது’ என, உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஆகஸ்ட் 6: உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கை தினந்தோறும் விசாரிக்க துவங்கியது.

ஆகஸ்ட் 16: விசாரணை நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 8: அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு, நவம்பர் 9ம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


 ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்னையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகிறது.
அதற்கு முன்னால், இந்த தொடரின் முதல் பகுதியில் பகவான் ராம்லல்லா விரஜ்மான், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம் ஆகியோருக்கு இடையே சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகங்களாக பிரிக்க உத்தரவிட்ட 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறது.
அவ்வாறு தீர்ப்பளிக்கும்போது அலகாபாத் அமர்வு 30க்கும் மேற்பட்ட கேள்விகளை உள்ளடக்கிய எட்டு முக்கிய சிக்கல்களைக் கையாண்டது.
இரண்டாவது பகுதியில் இரு தரப்பினரும் இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன்பு அதே எட்டு சிக்கல்களை வாதிட்டனர்.

1989 ஆம் ஆண்டில் இந்து தரப்பினர், குறிப்பாக ராம் விரஜ்மான் உரிமை கோரியதில் காலக்கெடு இருந்ததா?

இந்து கட்சிகள்: பகவான் ராம்லல்லா விரஜ்மான் தரப்பில் உரிமை கோரி தாக்கல் செய்ததில் காலக்கெடு இல்லை என்பதை உயர் நீதிமன்றம் கண்டறிந்து ஆதரித்தது.
அப்போது, அவர்கள், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் தங்கள் கோரிக்கைகளை தாக்கல் செய்வதில் தாமதம் செய்ததாகவும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தாக்கல் செய்தால் உடைமையைப் பெற உரிமை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியது சரியானது என்றும் வாதிட்டனர்.

முஸ்லிம் கட்சிகள்: மையக் குவிமாடத்தின் கீழ் சிலைகள் காணப்பட்டபோது, உரிமை கோரி தாக்கல் செய்வதற்கு 12 ஆண்டு காலக்கெடு தொடங்கியது என்றும் உரிமை கோரி 1961 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது என்றும் வாதிட்டனர்.
உயர் நீதிமன்றம் கூறியது ஆறு ஆண்டுகள் அல்ல என்றும் முஸ்லிம் தரப்பு வாதிட்டனர்.
1950 ஆம் ஆண்டில் முதல் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது கால வரையறை பொருந்தும் என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்தது.

1885 இல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலப் பிரச்னை கேள்விக்கு தீர்வு காணுமா?
இந்து கட்சிகள்: அயோத்தியில் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் நிலத்தில் மசூதி கட்டப்பட்டதாக ஃபைசாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் 1886-இல் சிவில் வழக்கில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அவர் கோயில் கட்ட அனுமதி வழங்கவில்லை என்றாலும் இது நிலம் வைத்திருப்பது என்ற கேள்வியை தீர்க்கிறது.
 இந்த கண்டுபிடிப்பு தவறானது என்பதை முஸ்லிம் தரப்பினர் காட்ட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.

முஸ்லிம் கட்சிகள்: 1885 ஆம் ஆண்டு வழக்கு இந்த பிரச்சினையில் தீர்வு காணப்பட்ட சட்டமாக ஒப்புக் கொள்ள முடியாது என்று வாதிட்டனர். ஏனெனில் இது ஒரு பகுதியை மட்டுமே கையாண்டுள்ளது.
வெளி முற்றத்தில் உள்ள சபுத்ரா மற்றும் அடுத்தடுத்த உரிமை கோரல்கள் முழு சர்ச்சைக்குரிய இடத்தையும் உள்ளடக்கியது என்று அவர்கள் வாதிட்டனர்.

கட்டிடம் எப்போது யாரால் கட்டப்பட்டது? யார் நிலத்தை வைத்திருந்தனர்?
சர்ச்சைக்குரிய கட்டிடம் 1528 ஆம் ஆண்டில் பாபரால் கட்டப்பட்டது என்பதை இந்து தரப்பு ஏற்றுக்கொண்டது.
இருப்பினும் ஜென்மபூமி தெய்வீகமானது. அங்கே ஒரு சிலைகூட இல்லை என்றாலும் அது தெய்வம்தான். அதனால், நிலம் எப்போதும் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும் வளாகத்தில் உள்ள ஒரு மசூதி அதனுடைய தெய்வீகத் தன்மையை மாற்றாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

ஜென்மபூமியை சட்டப்பூர்வ இடமாக கருத முடியுமா என்பதை நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். அகாரா தன்னிடம் நிலத்தை வைத்திருப்பதாகக் கூறியதோடு அதற்கு ஷெபைட் உரிமைகள் இருப்பதாகவும், சிலையையும் அதன் சொத்தையும் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகள்: 1528 ஆம் ஆண்டு மசூதி கட்டப்பட்டது முதல் முஸ்லிம்கள் இப்பகுதியை வைத்திருந்தனர். 1989 வரை இந்துக்களால் இந்த நிலம் ஒருபோதும் உரிமை கோரப்படவில்லை.
 “நிலத்தை அவர்கள் வைதிருந்தார்களானால், 1934 ஆம் ஆண்டு கலவரத்தில் பாபர் மசூதியின் ஒரு குவிமாடம் ஏன் வீழ்த்தப்பட்டது? அவர்களுக்கு ஏற்கெனவே உரிமை இருந்திருந்தால் 1949 ஆம் ஆண்டு சிலைகளை நிறுவ ஏன் அத்துமீறப்பட்டது” என்று மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கேட்டார்.

ஒரு பண்டைய இந்து கோயிலின் இடத்தில் மசூதி கட்டப்பட்டதா?
இந்து கட்சிகள்: பாபர் மசூதி நிலத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே ஒரு பெரிய கட்டமைப்பு இருந்தது.
அது காலியான இடமோ அல்லது விவசாய நிலமோ அல்ல என்று இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சமர்ப்பித்த அறிக்கையை ஆதாரமாக அவர்கள் நம்பியுள்ளனர்.

முஸ்லிம் கட்சிகள்: இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் (ஏ.எஸ்.ஐ) அறிக்கைகள் சிறந்த நிபுணர்களின் கருத்துக்கள் என்று இந்த வழக்கை தீர்மானிக்க ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் வாதிட்டனர். தொடர்ச்சியான அறிக்கைகள் மற்றும் ஏ.எஸ்.ஐ. அதிகாரிகளால் தொல்பொருள்கள் பற்றி அளிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளையும் எடுத்துரைத்தனர்.
அதனால், நீதிமன்றம் அதை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று வாதிட்டனர்.
மேலும், இந்து தரப்பினரால் நம்பப்பட்ட நிலவியலையும் புத்தகங்களையும் சரிபார்க்கப்பட்ட வரலாற்றுக் நிகழ்வுகளாக கருத முடியாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

சிலைகள், வழிபாட்டுப் பொருட்கள் 1949 டிசம்பர் 22-23 இரவில் வைக்கப்பட்டதா அல்லது அவை ஏற்கெனவே இருந்ததா?
இந்து கட்சிகள்: 1949 ஆம் ஆண்டில் சிலைகள் மத்திய குவிமாடத்தின் கீழ் வைக்கப்பட்டதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதே நேரத்தில் அவை முன்பே இருந்தன என்று இந்து தரப்பு வாதிட்டது. வாதங்களின் போது, நீதிபதி பூஷண் 1935-க்கு முன்னரே சிலைகளும் கர்ப்ப கிரகமும் இருந்ததை குறிப்பிட்ட தனிநபர்களின் வாய்மொழி ஆதாரத்தைக் குறிப்பிட்டார்.

முஸ்லிம் கட்சிகள்: சிலைகளை மத்திய குவிமாடத்தின் கீழ் வைப்பது ஒரு திட்டமிட்ட மறைமுகமான தாக்குதல் மற்றும் அத்துமீறல் என்ற வாதத்தை அவர்கள் தொடர்ந்து வைத்தனர்.

வெளிப்புற முற்றத்தில் ராம் சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் சிலைகள் இருந்ததா?
இந்து கட்சிகள்: அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் மூன்று நீதிபதிகளும் 1855 க்கு முன்னர் ராம் சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் சிலைகள் இருந்ததாக ஒப்புக் கொண்டதால், இது உச்ச நீதிமன்றத்தின் முன் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல.

முஸ்லிம் கட்சிகள்: 1949 க்கு முன்னர் ராம் சபுத்ரா, இந்து தெய்வங்களின் சிலைகள் இருந்தன என்பதை முஸ்லிம் தரப்பு ஒப்புக்கொள்கிறது.
ஆனால், இந்துக்கள் அந்த இடத்தின் மீது உரிமை கொண்டிருக்கவில்லை என்றும் பிரார்த்தனை செய்ய மட்டுமே உரிமை உண்டு என்றும் அவர்கள் வாதிட்டனர்.

நிலம் யாரிடம் இருந்தது சொத்துப் பத்திரம் யார் வைத்திருந்தார்கள்?
இந்து கட்சிகள்: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மட்டுமல்லாமல், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் இந்து தரப்பு உரிமையை அறிவிக்க முயன்றனர்.
 தெய்வத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தெய்வத்திற்கு எதிர்மறையான உரிமைகோரல்களைத் தாக்கல் செய்வதிலிருந்து நிர்மோஹி அகாரா தானாகவே உரிமையைஇழந்துவிட்டது என்று வாதிட்டனர்.

முஸ்லிம் கட்சிகள்: உத்தரப்பிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம், 1989 ஆம் ஆண்டு ராம்லல்லா விரஜ்மான் தெய்வத்தின் சார்பாக 1989-இல் சிறப்பு உரிமையாளர்கள் உரிமை கோரப்படும் வரை, நிர்மோஹி அகாராவும் வஃப் வாரியமும்தான் அந்த இடத்தின் உண்மையான சட்டப்பூர்வ ஒரே உரிமையாளர்கள் என்று வாதிட்டது.
எப்படியாயினும், ஷெர்மிட் உரிமைகள் பத்திரத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் நிர்மோஹி அகாராவின் உரிமைப் பத்திரத்துக்கு எதிராக வஃப் வாரியம் வாதிட்டது.
மேலும், அகாராவுக்கு கடமைகளும் உரிமைகளும் இல்லை என்றும் வாரியம் வாதிட்டது. முஸ்லிம் தரப்பு அவர்கள் பிரச்னை செய்த பகுதிக்கு மட்டுமே உரிமை கோரியது.
 ஆனால், நிலம் கையகப்படுத்தப்படவில்லை. மேலும், அது ராம் சபுத்ராவின் வெளி முற்றத்தில் இந்துக்களை வழிபட அனுமதிக்கும் என்றும் கூறியது.
1992 டிசம்பர் 6 ஆம் தேதி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் அங்கே மசூதி இருந்ததால் அதை மீட்டெடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் வாதிட்டனர்.

பாபர் மசூதி முறையான மசூதியாக இருக்கிறதா?
இந்து கட்சிகள்: மசூதியின் தூண்களில் தேவநாகரி எழுத்தில் கல்வெட்டுகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஏ.எஸ்.ஐ அறிக்கைகளை மேற்கோள் காட்டிய இந்து தரப்பு, இஸ்லாத்தின் கொள்கைகளின்படி இந்த அமைப்பு சரியான மசூதி அல்ல என்று வாதிட்டனர்.
தொழுகை நடத்தப்படும் எல்லா இடத்தையும் மசூதியாக கருத முடியாது என்றும் அவர்கள் வாதிட்டனர். மசூதியில் தொழுகை நடத்தப்பட்டதாக முஸ்லிம் தரப்பினர் கூறியுள்ளனர்.

முஸ்லிம் கட்சிகள்: சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்ட நாளிலிருந்து அது ஒரு மசூதியாக உள்ளது என்று முஸ்லிம் தரப்பு கூறியது.
 1934 ஆம் ஆண்டு கலவரங்களுக்குப் பிறகும் நமாஸ் செய்யப்பட்டது என்றும் பாபர் மசூதி தொழுகைக்கு ஒரு இமாம் தலைமை தாங்கினார் என்றும் ஒரு முஸ்ஸின் அஸான் ஓதினார் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இருப்பினும், மசூதியை நிர்மாணிப்பதை இறையியலின் அடிப்படையில் கேள்வி கேட்க முடியாது.
ஆனால், வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கேள்வி கேட்கலாம் என்று முஸ்லிம் கட்சிகள் ஒப்புக்கொண்டன.
 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ந்நாளில்,

முன்னால் . 

அமெரிக்கா, ஹவாய் தீவின் பியர்ல் துறைமுக உரிமையைப் பெற்றது(1887)

கம்போடியா விடுதலை தினம்(1953)

நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது(1990)

டார்ம்ஸ்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1994)

 உத்தராஞ்சல், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(2000)


1906 - வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க குடியரசுத்தலைவரானார் தியோடார் ரூஸ்வெல்ட். அமெரிக்கா விடுதலைப்பெற்றதிலிருந்து 120 ஆண்டுகளுக்கு அதன் குடியரசுத்தலைவர் பதவியிலிருப்பவர்கள் வெளிநாட்டுப் பயணமே மேற்கொள்ளவில்லை.
18ஆவது குடியரசுத்தலைவராக(1869-77) இருந்த யுலிசிஸ் க்ராண்ட், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று சட்டமிருப்பதாகவே எண்ணிக்கொண்டிருந்தார் என்றொரு செய்தி உண்டு. உண்மையில், அமெரிக்கவர்களைப் பொருத்தவரை, தங்களது குடியரசுத்தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை செய்யக்கூடாத செயலாகவே கருதினர்.
இங்கிலாந்தின் அதிகாரத்திலிருந்து விடுபடுவதற்காகவே அமெரிக்கா உருவானது என்பதால்தான், மாநிலங்களின் கூட்டமைப்பு என்பதிலும், நாணயம், வெளியுறவு, பாதுகாப்பு போன்றவற்றைத் தவிர, மற்றவற்றில் இறையாண்மைகொண்ட நாடுகளுக்கிணையான அளவுக்கு மாநிலங்களுக்கு அதிகாரங்கள் உண்டு என்பதிலும்  இன்றுவரை அமெரிக்கர்கள் உறுதியாக உள்ளனர்.


 வெளிநாட்டுப் பயணங்களில், பிற நாடுகளின் (குறிப்பாக இங்கிலாந்து) அரசர்-அரசிகளை சந்திக்க நேரும்போது, தங்களுக்கும் கூடுதல் அதிகாரம் வேண்டுமென்று அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களும் எண்ணிவிடக்கூடும் என்பதே தொடக்ககால அச்சமாக இருந்தது.

பிற்காலத்தில், மற்றொரு நாட்டின் அரச குடும்பத்தினருக்குத் தங்கள் குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்துவது என்பது, அமெரிக்காவுக்கு மரியாதைக் குறைவு என்ற எண்ணமும் ஏற்பட்டது. உள்நாட்டில் பயணம் செய்யும்போது, அமெரிக்க மக்களைச் சந்திப்பது உள்ளிட்டவை குடியரசுத்தலைவரின் கடமைகள் என்றும், வெளிநாட்டுக்குச் செல்வது, கடமை தவறுவது என்றும்கூட எண்ணமிருந்தது.
 தியோடார் ரூஸ்வெல்ட்டின் இந்தப் பயணமும்கூட, அமெரிக்க அரசால் செய்யப்பட்டுக்கொண்டிருந்த பனாமா கால்வாய் தோண்டும் பணிகளை மேற்பார்வையிட என்ற வகையில் அவரது கடமையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்ககால வெளிநாட்டுப் பயணங்கள் நீராவிக் கப்பல்களில் மேற்கொள்ளப்பட்டதால், பயணத்தில் அதிக காலம் செலவிடப்பட்டதும், கடமை தவறுவதான பார்வைக்குக் காரணமாக இருந்தது.
இதனாலேயே, முதல் உலகப்போர்  முடிவில் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற உட்ரோ வில்சனின் இரண்டு மாத ஐரோப்பியப் பயணம் விமர்சனத்துக்குள்ளா கியது.
பயணத்திற்கு 9 நாட்களான இதே ஐரோப்பியப் பயணத்திற்கு, நாற்பதாண்டுகள் கழித்து ட்வைட் ஐசனோவருக்கு விமானத்தில் 9 மணிநேரமே ஆனதும், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரிக்கக் காரணமாக இருந்தது.
இரண்டாம்  உலகப்போருக்குப் பிந்தைய யால்ட்டா மாநாட்டில் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஸ்டாலினுடன் பேரம்பேச முடியாமல் விட்டுக்கொடுத்துவிட்டார் என்ற கருத்தால், உறவுமுறைப் பயணமாக இருக்கவேண்டுமே தவிர, விவாதிக்கும் பயணமாக இருக்கக்கூடாது என்ற நிலையும் நீண்டகாலம் பின்பற்றப்பட்டது.
ஆனால், உலகத்தை வழிநடத்தவேண்டியது தாங்கள்தான் என்ற எண்ணம் ஏற்பட்டபின், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்கள் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார்கள்.

-அறிவுக்கடல்
 எனக்கு ..காவி ..பூச முடியாது ---- " ரஜினி "

காவிக்கு ..எதுக்குய்யா ..காவி ..பூசணும்?

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலை வாய்ப்புகள் 

SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். ------------------------------------------------------------------------------------------------------------------------------------

கள்ளநோட்டுக்களின் சொர்க்கம் குஜராத் .
 இந்தியாவில் ரொக்கப் புழக்கத்தில் 86 சதவிகிதமாக இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை, பிரதமர் நரேந்திர  மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ஒரே இரவில் செல்லாமல் ஆக்கினார்.
கறுப்புப் பணம், கள்ளப்பணம், ஊழல், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிப்ப தற்குமே இந்த பணமதிப்பு நீக்கம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 50 நாட்கள்  மட்டும் எனக்கு அவகாசம் தாருங்கள்; அதற்குள் தான் சொன்னது நடக்காவிட்டால், பொதுமக்கள் என்னை தீயிட்டு கொளுத்த லாம் என்றும் சவால் விட்டார். ஆனால், அவர் சொன்ன எதுவுமே நடக்கவில்லை.
கறுப்புப்பணம் மீட்கப்படவில்லை.
ரொக்கப் புழக்கம் 2016-இல் இருந்ததை விட 2 மடங்கு அதிகரித்து விட்டது. ஊழல், தீவிர வாதம் எதுவும் குறையவில்லை.
 இதில்  முக்கியமானது கள்ளநோட்டுப் பிரச்சனை யாகும். 

ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் கள்ள நோட்டு அச்சிடுவதும் பிடிபடுவதும் முன்பை விட அதிகரித்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கியே கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் ஒப்புக் கொண்டது.

2017-18ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 892 என்ற எண்ணிக்கையிலேயே புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டன.
2018-19இல் இது 21 ஆயிரத்து 865 என்ற எண்ணிக்கைக்கு 121 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல, 2017-18 நிதியாண்டில், 17 ஆயிரத்து 929 என்ற அளவில் பிடிபட்ட 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களின் எண்ணிக்கை, தற்போது, 21 ஆயிரத்து 847 நோட்டுக்கள் என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது.
இது 2017-18ஆம் ஆண்டு பிடிபட்ட 2000 கள்ள நோட்டுகள் அளவைவிட 21.9 சதவிகிதம் அதிகம். பணமதிப்பு நீக்கத்திற்கு முந்தைய 2015-ஆம் ஆண்டில், ரூ. 15 கோடியே 48 லட்சம் அளவிற்கே கள்ளநோட்டுக்கள் பிடிபட்டிருந்த நிலையில், பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ. 28 கோடியே  10 லட்சம் அளவிற்கான கள்ள நோட்டுக்களும், 2018-ஆம் ஆண்டு ரூ. 17 கோடியே 75 லட்சம் அளவிற்கான கள்ள நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியே நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், மோடியின் சொந்த மாநிலம் என்பதுடன்- சுமார் 20 ஆண்டு களுக்கும் மேலாக பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலம் இன்று கள்ளநோட்டுக்களின் சொர்க்கமாக மாறியிருக்கிறது என்பதுதான்.
 இங்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யால் வேலைவாய்ப்பை இழந்த பலரும் கள்ள நோட்டு அச்சிடுவதில் இறங்கிவிட்டனர். வதோதராவில் கடந்த வாரம் அபிஷேக் சுர்வே, சுமித் நம்பியார் ஆகிய 2 இளை ஞர்கள், 500 ரூபாய் கள்ளநோட்டைக் கொண்டு, பொருட்களை வாங்க முயன்ற போது, போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் கைகாட்டியதன் அடிப்படையில், சூரத் நகரைச்  சேர்ந்த அபிஷேக் மங்குகியா, சஞ்சய் பார்மர், ஆசிஷ் சுரானி, குல்துர்ப் ராவல், விஷால் சுரானி உள்ளிட்டவர்களும் கைது செய்யப் பட்டு, அவர்களிடமிருந்து கள்ள நோட்டுக் களும், கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரங் களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு பிடிபட்ட அனைவரும் 22 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவார்.
 அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை யில்,
அனைவரும் சூரத்தின் பிரபல தொழி லான வைரம் பட்டைத் தீட்டும் தொழிற்சாலை களில் பணியாற்றி வந்ததும், மத்திய பாஜக அரசு அமல்படுத்திய பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யால், வேலைவாய்ப்பை இழந்து, பிழைப்பிற்காக கள்ளநோட்டு அச்சிடுவதில் இறங்கியதும் தெரியவந்தது.
கைதானவர்களில் சஞ்சய் மட்டுமே 10-ஆம் வகுப்பு முடித்தவர். மற்றவர்கள் எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள்.
வேறு தொழில் எதுவும் தெரியாத நிலையில், யூடியூப் வீடியோ மூலமாக கள்ளநோட்டு அச்சிடுவது எவ்வாறு என்பதை அறிந்து கொண்டு, அத்தொழிலில் இறங்கியுள்ளனர்.
இதே கதைதான் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கம்மத்திலும் கூட சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு கள்ளநோட்டுக்கள் பிடிபட்டதும், அவை அனைத்தும் 2000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு