எது உண்மை?

பாஜக வின் தற்போதைய கவலையாக இருக்கும்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட அனு மதி வழங்கி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சனியன்று தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகோராவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதி பதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சனிக்கிழமை யன்று தீர்ப்பு வழங்கியது.
 இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதி களும் ஒருமித்த தீர்ப்பை அளிப்பதாக தலைமை நீதிபதி கூறினார்.

அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதுவரை சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு இன்னும் மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை புதிதாக ஏற்படுத்த உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்திருக்கும் உச்சநீதி மன்றம், அதே நேரம் பாபர் மசூதி இடிக்கப் பட்டது சட்டவிரோதம் என்றும் சுட்டிக்காட்டி யுள்ளது.
 வக்ஃபு வாரியம் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்கு மாறும் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி யில் இருந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பரிவாரங்களால் இடிக்கப்பட்டது.
ராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்று வதாகக் கூறி, இந்துத்வா கரசேவகர்கள், பாபர் மசூதியை இடித்தனர். இதனால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கா னோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டம் அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்த னர்.
இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது.
அந்த தீா்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அர சியல் சாசன அமா்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்ப தற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் நியமித்தது.
அந்தக் குழுவின் சமரசப் பேச்சு வார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்பட வில்லை.
இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்ப டையில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி யது.
வழக்கில் மூன்று தரப்பினரின் அனைத்து வாதங்களையும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.
அதையடுத்து 40 நாட்கள் நடை பெற்ற விசாரணைக்கு அக்டோபா் 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அன்றைய தினம், உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழு, சமரசப் பேச்சு வார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவு களையும், தீா்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் 17-ஆம் தேதி யுடன் ஓய்வுபெறவிருப்பதையொட்டி அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமையன்று தீர்ப்ப ளித்துள்ளது.

இனி எதை வைத்து அரசியல் செய்யலாம் என்பதே பாஜக வின் தற்போதைய கவலையாக இருக்கும்.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------

 எது உண்மை?

கூடங்குளம் அணுமின்  நிலையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி இணையத் தாக்குதல் நடந்ததாகத் தகவல் வெளியானது.
இது  பொய்யான தகவல், வதந்தி என்றும் அணுமின் நிலையம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அடுத்த நாளே மற்றொரு அறிக்கை வெளியானது.
அந்த அறிக்கையில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த இணையத் தாக்குதல் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
எது உண்மை? 
 கூடங்குளத்தில் இணையத் தாக்குதல் நடந்ததா? 
இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஏதேனும் ஆபத்தா? 
இவ்வாறு பல கேள்விகள் நம்முன்னே எழுகிறது. 
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் 2009ஆம் ஆண்டு ஈரானிய நாட்டில் ஒரு இணையத் தாக்குதல் நடந்தது.
 ஈரான் அணுமின் நிலையத்தில் இந்த அணு தாக்குதல் நடந்தது. 
இதுவே ஒரு நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் இணைய தாக்குதலாக கருதப்படுகிறது.
இதனை ஃபிரெட் கப்லன் (Fred Kaplan) தான் எழுதிய டார்க் டெரிடொரி (Dark Territory) என்ற நூலில், இணையப் போரின் ரகசிய வரலாறு என்று குறிப்பிடுகிறார். 
நடான்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளை பாதிக்க அமெரிக்கர்கள் உருவாக்கிய இணைய வைரஸ் அசாதாரணமானது.
 கூடவே அதிநவீனமானதும். 
இது ஏற்படுத்திய பாதிப்புகள் ஈரானிய யுரேனியம் செறிவூட்டல் முயற்சியை சில ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளியது. இந்த சைபராட்டாக்கில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அதன் ஆரம்ப முயற்சி. கப்லான் விவரித்தபடி, 2006 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பாடுகள் தொடங்கியிருக்க வேண்டும். இதை விவரிக்க வேறு வழியில்லை.

ஒரு உண்மை என்னவென்றால், உலகம் இன்று அமைதியாக இருக்கிறது. 
ஆனால் உள்ளுக்குள் ஆபத்தான இணையப் போரில் ஈடுபட்டுள்ளது. 
இதில் ஒரு நாட்டை இயக்கும் முக்கியமான உள்கட்டமைப்பு கணிசமான ஆபத்தில் உள்ளது. மார்ச் 2018ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷியாவின் அரசு இணைய ஊடுருவல்கள் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டன. அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி, அணு, வணிக வசதிகள், நீர், விமான போக்குவரத்து, முக்கியமான உற்பத்தித் துறைகளை குறிவைத்து 2019 ஜூன் மாதம் இந்த இணையத் தாக்குதல் நடந்தது. இதனை ரஷ்யா நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.
 இதுதொடர்பாக புதினுக்கு எச்சரிக்கை விடுத்து ட்ரம்ப் பேசியிருந்தார்.
 2007ஆம் ஆண்டில் ஈரான் மீதான அமெரிக்க இணையத் தாக்குதல், சோனி பிக்சர்ஸ் மீதான வடகொரிய தாக்குதல், சவுதி அரம்கோ மற்றும் அமெரிக்க வங்கிகள் மீதான ஈரானிய சைபர் தாக்குதல்கள் என அனைத்திலும் அமெரிக்க தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. 
 இணைய அச்சுறுத்தல்களின் ஆபத்திலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க பல படிகள் தேவைப்படுகின்றன.
முக்கியமாக உள்கட்டமைப்பில் வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்நாட்டுமயமாக்கலுடன் (சுதேசி உற்பத்தி) செய்யப்பட வேண்டும். 

வெளிநாட்டு தகவல் நுட்ப பொருட்களை கையாளுவதற்கு முன்னர் விழிப்புணர்வு தேவை. 
ஏனெனில் கடந்தாண்டு வெளியான ஆய்வறிக்கை ஒன்று, வெளிநாட்டு மென்பொருட்கள், செயலிகள் உள்ளிட்டவை ஒருவரை கண்காணிக்க பயன்படுத்தப்படுகின்றன என்று கூறியிருந்தது.
 உலகம் முழுக்க இந்த அறிக்கை பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதன் தாக்கம் பெரிதளவு இல்லை.
 இந்த ஆபத்தை கருத்தில் கொண்டு, பல நாடுகள் முக்கியமான நெட்வொர்க்குகளில் (இணையதளம்) வெளிநாட்டு தயாரிப்புகளின் பயன்பாட்டை தடை செய்துள்ளன.
சீனாவைப் பொறுத்தமட்டில், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், ஆப்பிள் தயாரிப்புகள், சிஸ்கோ மற்றும் பாதுகாப்பு மென்பொருட்களை வாங்குவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. 
இந்தப் பட்டியலில் அந்நாட்டின் உள்நாட்டு பொருட்களும் உள்ளது. 
ஆக இந்தியர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
 இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., பயன்படுத்தும் மென்பொருள் மற்றும் வன்பொருளில் கூட 60 விழுக்காட்டுக்கும் அதிகமானவை ஹவாய் அல்லது இசட்இ, ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றன. 

2014ஆம் ஆண்டில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கை ஹேக்கிங் (முடக்கி) செய்ததாக ஹவாய் விசாரணையை எதிர்கொண்டது.
இந்திய தகவல் பாதுகாப்பு சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, இணையத் தாக்குதல்களால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
 இந்த அச்சுறுத்தல்கள் இந்தியா எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்னை. 
ஆக இந்தியா போன்ற நாடுகள், இணையப் போரிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கொள்கைகளையும் கட்டமைப்புகளையும் விரைந்து ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.
ஏகே 47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்கையில் கலாஷ்னிகோவ் பிறந்த தினம்(1919)


நேரடி கடலோர தொலைத்தொடர்பு அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1951)


சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் நிலவுக்கு லூனாகோட்  தானியங்கியை கொண்டு சென்றது(1970)


தமிழ்வாணன் இறந்த தினம்  (1977)

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் விற்பனைக்கு வந்தது(2001)


--------------------------------------------------------------------------------------------------------------------------------
 உளவாளார்கள் மீது என்ன நடவடிக்கை?
இஸ்ரேலி பெகாசஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான, உளவு மென்பொருள் மூலமாக, இந்தியாவில், வாட்சப் கணக்குகள் வைத்திருந்த சமூக ஆர் வலர்கள், இதழாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் களவாடப்பட்டிருக்கும் செய்தி சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதும், கண்டனத்திற்குரியது மாகும்.
 இவ்வாறு தனிநபர்களின் அந்தரங்கங்கள் களவாடப் ப்பட்டிருப்பது எப்படி என்பதை விளக்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும்.
இது தொடர்பாக எவ்விதமான விளக்கத்தையும் அரசாங்கம் அளித்திட முன் வராத அதே சமயத்தில், இத்தகைய களவாடல் நிகழ்வுக ளுக்கு அரசாங்கமும் உடந்தையாக இருந்திருக்கிறது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இவ்வாறு களவாடப்பட்ட செய்தி வெளிவந்தபோது, அரசாங்கமானது இது  தொடர்பாக வாட்சப் நிறுவனம் அரசாங்கத்தின் நிறுவனங்கள் எதற்கும்  எவ்விதமான தகவலும் தரவில்லை என்று கூறியிருந்தது.

எனினும் வாட்சப் நிறுவனம், உண்மையில், இந்தியாவில் சிலரது தரவுகள் களவாடப்படுவதாக உரிய ஆதாரங்களுடன் மத்திய அரசாங்கத்தை உஷார்ப்படுத்தி இருந்தது.

 மே மாதத்திலும் அதன் பின்னர் செப்டம்பரிலும் அது எச்சரித்தி ருந்தது. மத்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, வாட்சப் நிறுவனம் 2019 மே மாதத்தில் தாக்கல் செய்திருந்த குறிப்புகளையும், செப்டம்பரில் அரசாங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தையும்  இணைத்திருக்கிறது.
பின்னர், அரசாங்கம், தான் செப்டம்பரில் பெற்ற தகவலின்படி பெகாசஸ் உளவு நிறுவனம் 121 இந்தியர்க ளைக் குறிவைத்திருந்ததாகக் கூறியிருப்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது.
ஆனாலும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கூற்றின்படி அந்தக் கடிதம் ‘மிகவும் தெளிவற்று’ இருந்ததாம்.

வாட்சப் நிறுவனம் அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள விவரங்கள், அரசாங்கத்தையும் அதன் கொள் கைகளையும்  விமர்சிக்கின்ற நாட்டில் அனைவராலும் நன்கு  அறியப்பட்ட சமூக ஆர்வலர்கள், இதழாளர்கள் ஆவர்.
எனவேதான் அரசாங்கம்  இவை குறித்துத் தங்களுக்கு எது வுமே தெரியாது என்பது போன்று போலித்தனமான முறையில் நொண்டிச் சமாதானங்கள் கூறிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அரசாங்கம் கூறுவதிலிருந்தே, இஸ்ரேலின் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தங்கள் அர சாங்கத்தை விமர்சிப்பவர்களின் தகவல்களைக் களவாடி யதில் அரசாங்கமும் உடந்தையாக இருந்திருக்கிறது என்கிற சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

 பீமா-கொரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பலரது வாட்சப் தகவல்கள்தான்  களவாடப்பட்டிருக்கின்றன. இவர்களைத்தான் அரசின் உளவு ஸ்தாபனங்கள் வேட்டையாடிக் கொண்டிருக்கின் றன.
இவற்றிற்கிடையேயான தொடர்பு மிகவும் தெளி வானவையாகும்.
இஸ்ரேலி பெகாசஸ் உளவு நிறுவனம், தாங்கள் உளவு மென்பொருள் தொழில்நுட்பத்தை அரசாங்கங்கள் மற்றும் அதன் ஏஜன்சிகளுக்கு மட்டுமே அளித்து வருகிறோம் என்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  மேலும் இதன் விலை மிகவும் அதீதமான ஒன்று.
எனவே இதனைத் தனியார் நிறுவனம் எதுவும் வாங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
இத்தகு இழிந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு சட்ட விரோத மான முறையில் தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்களை அரசாங்க நிறுவனங்கள் களவாடியிருந்தால், அவ்வாறு களவாடிய நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தண்டிக் கப்பட வேண்டும்.
 இந்த நிகழ்வு, சாமானிய குடிமக்களின் உரிமைகள் மற்றும் அந்தரங்கங்களைப் பாதுகாத்திட ஓர் ஒருங்கிணைந்த தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை உயர்த்திப் பிடிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 பஞ்சமி நிலமீட்பு போராட்டம்.
பஞ்சமி நிலம் குறித்து 1994 காரணையில் நடைபெற்ற பஞ்சமி நிலமீட்பு போராட்டத்தை தொடர்ந்து முரசொலி நிலம் தொடர்பான செய்திகளால் பஞ்சமி நிலம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் பொதுத்தளத்தில் உருவாகியுள்ளது.

அதே நேரத்தில் அது எப்படி மற்றவர்களால் கைப்பற்றப்பட்டு, ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது போன்ற விவாதங்கள் நடந்து வருவது வரவேற்கத்தக்க ஒன்று.
பிரிட்டிஷ் ஆட்சியில் கலெக்டர்கள் (ICS)  மன்னர்கள் போல் தான் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான நிகழ்ச்சிகள் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.
அவர்கள் வைத்ததுதான் சட்டம், விதித்தது தான் வரி, கொடுத்தது தான் தண்டனை.
இதிலிருந்து விதிவிலக்காக செங்கற்பட்டு மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த ஜேம்ஸ் ஹென்றி ஏ.திரமென்ஹீர் தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றி கவலைப்பட்டவராக மட்டுமல்லாமல் அம்மக்களின் இழிநிலையைப் போக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு செயல்பட்டவராக விளங்குகிறார். செங்கற்பட்டு மாவட்ட பறையரின மக்களின் நிலை குறித்து அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மிக விரிவான அறிக்கை மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கு ஒப்பானதாகும். அக்கால தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலையை வாசிக்கும் ஒவ்வொருவரையும் கண்ணீர் சிந்த வைக்கும்.
கல்நெஞ்சத்தையும் கரைத்துவிடும்.
 இந்த அறிக்கையை 1891 அக்டோபர் 5ஆம் தேதி கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்.
இந்த அறிக்கை வருவாய்த்துறை அரசாணையாக (1010-1010 A) பிறகு வெளியிடப்பட்டது.
 திரமென்ஹீரின் எதிர்பார்ப்பு முழுமையடையவில்லை.

எப்படியிருப்பினும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுக்க வேண்டுமென்று எழுதிய முதல் பிரிட்டிஷ் அதிகாரி இவராகத்தான் இருப்பார்.
அப்படி 1892க்கும் 1933க்கும் இடையில் வழங்கப்பட்ட சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் அம்மக்களிடம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
 அந்த நிலம் பிற சாதியினரிடத்தில் கைமாறி உள்ளது.
பஞ்சமி நிலம் வழங்கப்பட்ட போதே முக்கியமாக இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 
1) 10 ஆண்டு காலத்திற்கு அந்த நிலத்தை விற்க முடியாது.
2) பத்தாண்டு கழித்து விற்பதாக இருந்தால் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவருக்குத்தான் விற்க முடியும்.
இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் அது சட்டப்படி செல்லாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளின் நோக்கம் என்ன?
 நிலம் பெற்ற அந்த தாழ்த்தப்பட்ட குடும்பம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது அதை அனுபவிக்க வேண்டுமென்பது. மற்றொன்று, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலம் அந்த சமுதாயத்திற்குள்ளாகவே மாற்றிக் கொள்வதன் மூலம் அச்சமூகம் முன்னேற  வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் இந்த நோக்கம் முழுமையாக குழிதோண்டி புதைக்கப்பட்டு அரசு மற்றும் வருவாய்த்துறையினரின் முழுமையான ஒத்துழைப்போடு ஆவணரீதியாக நிலம் மற்றவர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது.

மருத்துவர் ராமதாஸ் , முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கூறி அது குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையமும் இதை ஒரு புகாராக எடுத்துக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
 அந்த நிலம் குறித்த சர்வே எண் சம்பந்தப்பட்ட ‘ஏ’ பதிவேட்டை பார்த்தால் உண்மை தெரிந்துவிடப்போகிறது. அரசு நினைத்திருந்தால் இதை உடனடியாக வெளியிட்டிருக்க முடியும்.
ஆனால் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
 முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் சட்டப்படி அது மீட்கப்பட வேண்டுமென்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் இதை மட்டுமே பேசுவதும், இந்த ஒரு நிலத்திற்காக மட்டும் புகார் பதிவு செய்வதும் அரசியல் உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே ஜெயலலிதா ஆக்கிரமித்த இசையமைப்பாளர் கங்கை அமரன் பங்களா மற்றும் அதைச்சுற்றியுள்ள ஜெ ஆக்கிரமிப்பு இடங்கள் பஞ்சமி நிலம்தான் என்பதற்கு ஆதாரம் பல உண்டு.அதை வைத்து மார்க்சிஸட் கடசியினர் பெரிய போராட்டமே நடத்தினர்,வழக்கும் போட்டுள்ளனர்.
அதன்மீது ஆணையம்,அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.சுழியம் தான் .முரசொலி மீது மட்டும் ராமதாசுக்கு ஏன் ஆர்வம் ?-
பெரும்பகுதியான பஞ்சமி நிலம் மற்ற சாதியினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அதை முழுமையாக மீட்க வேண்டுமென்று பேசினால் அது தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீதுள்ள அக்கறையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் நடத்திக்கொண்டிருப்பது லாவணிக் கச்சேரி என்பதை தவிர பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டுமென்ற உண்மையான அக்கறையில்லை என்பது குழந்தைக்குக் கூடதெரியும்.

ஓரடி நிலத்திற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்துகின்றனர்.
நிலத்துக்கான மோதலில்  எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கின்றனர். உயிரை இழந்தாலும் அந்த குடும்பம் நிலத்தை இழக்கத் தயாராக இல்லை. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு வழங்கிய 12 லட்சம் ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக பறிக்கப்பட்டுவிட்டது. வாங்கியவர்கள் பணம் கொடுத்து தானே வாங்கி இருக்கிறார்கள். அது பஞ்சமி நிலம் என்று தெரியாமல் வாங்கிவிட்டார்கள் என்றெல்லாம் இந்த தவறு நியாயப்படுத்தப்படுகிறது. அதை திரும்பக் கேட்பது சரியல்ல என்று பலர் பேசுகின்றனர். திருடு போன நகை ஒருவரிடம் இருக்கிறது.
 காவல்துறை வந்து கேட்கும் போது இது திருட்டு நகை என்று எனக்கு தெரியாது. நான் பணம் கொடுத்துத்தான் வாங்கினேன். ஆகவே எனக்கு தான் சொந்தம் என்றால் விட்டுவிடுவார்களா?
நகையை இழந்தவர்கள் பாவம் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறான், எனவே எனது நகை போனால் பரவாயில்லை என்று புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வார்களா? மாறாக நகையை திருடியவன், வாங்கியவன் எல்லோரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு நகைக்கு உரிமையாளர்களிடம் நகை திரும்ப ஒப்படைக்கப்படுவது தானே சட்டப்படி நியாயம்.
மேலும் நீதிமன்ற தீர்ப்புகள், அரசு உத்தரவுகள் அனைத்தும் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவு மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
பஞ்சமி நிலம் தொடர்பான வருவாய் நிலை ஆணை எண் 15ம், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு  7.11.2008 அன்று வழங்கிய தீர்ப்பும் மிக முக்கியமானது. ஆனாலும், அந்த தீர்ப்புகளை, அரசு ஆணைகளை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் இதில் விருப்பமில்லாமலும், அக்கறையற்றும் இருக்கிற காரணத்தினால் எல்லாம் ஏட்டில் மட்டுமே இருக்கிறது.

பெரும்பாலான நிலங்கள் “நிலவுடமைப் பதிவு மேம்பாட்டு திட்டம்” (UDR) செய்யப்பட்ட போது ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் ஊராட்சி தலைவருக்கு 29 அதிகாரம் வழங்கியுள்ளது. அதில் 27ஆவது அதிகாரம் பஞ்சமி நிலமீட்பு என்பது ஆகும்.
ஆனால் இந்த அதிகாரம் பயன்படுத்தப்படவே இல்லை.  சட்டவிரோதமாக இந்த நிலத்தை வைத்திருப்பவர்களுக்கு பிரிட்டிஷ்காரன் கொடுத்ததை நாம் பறித்துக் கொண்டோமே என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.
தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நமது அரசால் தான் நிலம் கொடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் பிரிட்டிஷார் கொடுத்த பஞ்சமி நிலத்தையாவது மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசியல் உறுதி வேண்டும். அந்த உறுதி இதுவரை ஆட்சி புரிந்த யாரிடமும் இல்லாமல் போய்விட்டது.
சட்டம், நீதிமன்றம், அரசு உத்தரவுகள் எல்லாம் சாதகமாக இருந்தும் நிலம் மீட்கப்பட முடியவில்லை. நிலத்துக்கான போராட்டம் அவ்வளவு சுலபமானது அல்ல என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாகும். ---------------------------------------------------------------------------------------------------------------------------------

மனித முக அமைப்பைக் கொண்ட அபூர்வ மீன் பார்வையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.