எதிர்பார்த்ததுதான்.

 பாத்திமா தற்?கொலை

#justiceforfathimalatheef

ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் ஐஐடி பேராசிரியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகள்கொண்டு வந்துள்ளனர்.
மானுடவியல் முதுகலை படிப்பில் முதலாமாண்டு மாணவியான பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் விசாரணை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஆனால் மத்திய ,மாநில ஆட்சியாளர்கள் குற்றவாளிகளாக்க ஆதரவாக உள்ளதாக தெரிகிறது.

மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து கொள்ளும் அளவுக்கு தன் மகள் கோழையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.
மதரீதியான பாரபட்சத்தை ஒரு பேராசிரியர் தரப்பில் பாத்திமா எதிர்கொண்டார் என்றும் ஒவ்வொரு தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றாலும், தான் மோசமாக நடத்தப்படுவதாக முன்னர் சொல்லியிருக்கிறார் என்றார்.

 தன்னை தரக்குறைவாக நடத்திய பேராசிரியர் ஒருவரின் பெயரை அலைபேசியில் பாத்திமா எழுதிவைத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளதாக தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார். 

மானுடவியல் துறை தலைவர் உமாகாந்த்தாஸ் இடம் பாத்திமா குறித்துக் கேட்டபோது தனது துறையில் உள்ள பலரும் பாத்திமாவின் தற்கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை எனத் தெரிவித்தார். 
''பாத்திமா எல்லோரிடமும் நன்றாகப் பழகும் மாணவி. துடிப்பானவர்.


 வகுப்பில் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வார். அவருக்கு எல்லோரிடமும் நல்ல நட்பு இருந்தது. 
ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என எங்களுக்குத் தெரியவில்லை. 
மனஉளச்சல் ஏற்படும் அளவுக்கு ஏதாவது பிரச்சனை நடந்திருந்தால், முதலில் எங்கள் துறையில் புகார் கொடுத்திருக்கலாம். 

அதற்கான வழிமுறைகளை நாங்கள் பின்பற்றி நடவடிக்கை எடுத்துவருகிறோம். எங்களிடம் ஏன் எதையும் சொல்லவில்லை என அதிர்ச்சியாக உள்ளது,'' என்றார் உமாகாந்த்தாஸ்.  

கோட்டூர்புரம் துணை ஆணையர் சுதர்ஷனிடம் பாத்திமாவின் தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து கேட்டபோது, ''தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்துள்ளோம். உடற்கூறு பரிசோதனை செய்து பெற்றோரிடம் மாணவியின் உடலை ஒப்படைத்துள்ளோம். 

பாத்திமாவின் உடன் பயிலும் சகமாணவர்கள் மட்டுமின்றி அந்த துறையில் உள்ள பேராசிரியர்களும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம். 
மாணவியின் அலைபேசி எங்களிடம் உள்ளது. அவரது இறப்புக்கு முன்னர் பேசிய விவரங்கள், தகவல்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்,''என்றார். 

பாத்திமாவின் தந்தை தனது மகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது பற்றிக் கேட்டபோது, ''விசாரணையை முழுவதுமாக முடித்தால்தான் எங்களால் பதில் சொல்லமுடியும். பேராசிரியர்கள் பலர் பல அலுவல்களில் ஈடுபட்டுள்ளார்கள். 
அவர்களின் நேரத்தை பொறுத்து அவர்களிடம் விசாரணை நடைபெறும்,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் #justiceforfathimalatheef என்ற ஹாஷ்டேகும் டிரண்டாகி வருகிறது.
பலர் அவர் அலைப்பேசியிலிருந்தாக ஒரு செய்தியையும் பகிர்கின்றனர்.

அதில் அவர் தனது பெயர்தான் பிரச்சனைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 ஏற்கனவே சென்னை ஐஐடி யில் கணபதி ஸ்தோத்திரம் தான் காலையில் மாணவர்கள் பாட வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழந்துள்ளது.

இந்துத்துவா ஆக்கும் முயற்சியின் விளைவுகளில் ஒன்றாகத்தான் பாத்திமா தற்?கொலையும் இருக்கும்.

எதிர்பார்த்ததுதான்.

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறியது.

 இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.
அத்துடன் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

 எதிர்பார்த்ததுதான்.


தகுதி நீக்கம் செய்யப்பட கர்நாடக ச.ம.உ,க்கள் தகுதி நீக்கம் செய்தது சரி என்றது உச்ச நீதிமன்றம் சரி .ஆனால் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணைய விதிகளை மீறி தீர்ப்பு வழங்கியது எந்த விதத்தில் சரி.?
அப்படி தேர்தலில் நிற்கலாம் என்றால் அவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டியதே இல்லையே.
ஆனால் இதுவம் உச்ச நீதிமன்றத்திடம் எதிர்பார்த்துதான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால் .
கின்னஸ் சாதனை புத்தக நினைவு தினம்
உலக நீரிழிவு நோய் தினம்
இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்(1889)
குழந்தைகள் தினம்
டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1996)

 உண்மையான புதிய இந்தியாவை 

கட்டியமைத்தவர் 

"இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து உண்மையான புதிய இந்தியாவை 
கட்டியமைத்தவர்  ஜவஹர்லால் நேரு. 
 சோவியத் ரஷ்யாவின் ஐந்தாண்டுத் திட்டங்களை முன்மதிரியாகக் கொண்டதன் மூலம் அடிக்கடி புதிய இந்தியா பிறக்கிறது என்று வெறும் வாய் வீச்சின்றி உண்மையாகவே உருவாக்கியவர் நேரு."
அவர் பிரதமராக பதவி வகித்தபோது, நாள்தோறும் அவரது பணிகளை எப்படி அமைத்துக்கொண்டார் என்பதை பார்க்கிறபோது இந்தியாவைப் பற்றிய கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை காண முடியும்.

பேராற்றல் மிக்க இந்த மனிதர், தம்முடைய நாளை எப்படி செலவிட்டிருப்பார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
 நேரு பொறுப்பு மிகுந்த பல பதவிகளை வகித்தார். சுதந்திர இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்தார். அணுசக்தித்துறையின் தலைவர், திட்டக்குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்தார்.
 1951 முதல் 1954 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். குளிர்காலத்தில் காலை 6.30 மணிக்கு நேரு எழுந்து விடுவார். (கோடையில் அரைமணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவார்)
அடுத்த ஒரு மணி நேரம் பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும் செலவிடுவார்.

காலை 7.30 மணி வாக்கில் அந்த நாளின் கடினமான சவால்களைச் சந்திப்பதற்காக தயாராகிவிடுவார்.
தமது தனி அறையில், தினந்தோறும் வந்து குவியும் ஏராளமான கடிதங்களை முதலில் படிப்பார்.
ஒரு நாளைக்கு சராசரியாக 500 கடிதங்களும், பல தந்திகளும் அவருக்கு வந்துகொண்டிருந்தன. காலை உணவு எடுத்துக்கொள்ள அவருக்கு 15 நிமிடங்களுக்குமேல் ஆகாது.
உணவுக்காக காத்திருப்பது அவருக்கு ஏற்புடையதன்று. வழக்கமாக காலை உணவில் பழச்சாறு, தானிய உணவு, முட்டை, ரொட்டி, காபி ஆகிய மேற்கத்திய உணவு வகைகள் இருக்கும்.
அவர் மகள் இந்திரா அனேகமாக எப்போதும் அருகில் இருப்பார். இந்திராவின் இரண்டு மகன்களும் விடுமுறை காலங்களில் உடன் இருப்பார்கள்.

வசிக்கும் வீட்டில் இருந்து இறங்கி தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்திற்கு 8.15 மணி அளவில் நேரு வருவார். அங்கு அவரை சந்திக்க எப்போதும் மக்கள் காத்திருப்பார்கள்.
சில சமயங்களில் 15 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் அவர்களிடம் பேசி அனுப்பிவிடுவார்.
பிறகு, வளர்ப்பு பிராணிகளுடன் சிறிது நேரம் செலவிடுவார்.

பாராளுமன்ற அவை நடைபெறாத காலங்களில் நேரு வெளியுறவு அமைச்சக அலுவலக அறையில் நாள் முழுவதும் இருப்பார். 
காலை ஒன்பது மணி முதல் 1.30 மணி வரையிலும், மதிய உணவுக்கு பிறகு 2.45 மணி முதல் 6.30 அல்லது 7 மணி வரையிலும் இருப்பார்.
 இங்கு வெளிநாட்டு தூதுவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சி தொண்டர்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திப்பார். 
மலைபோல குவிந்திருக்கும் கோப்புகளைக் கருத்தூன்றி படிப்பார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்கவேண்டிய விஷயங்கள் பலவற்றை கவனிப்பார். 
 
இவற்றுடன் சந்திப்புகளும், எழுத்து பணிகளும் தொடரும். அரைமணி நேரத்திற்கு சந்திப்புகள் நடைபெறும். சந்திப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் சுருக்கெழுத்தாளர்கள் எழுதுவதற்கான விவரங்களைச் சொல்வார். 
இவர்கள் நேருவின் அருகிலேயே அவரது அழைப்புக்காக எப்போதும் காத்திருப்பார்கள். 
உண்மையில், இவைதான் தடைபடாத அவரது அலுவலக பணிகளாகும். மேலும், வந்திருப்பவர்கள் தம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நேரு குறிப்புகளை எடுத்துக்கொள்வார். 
சந்திப்புக்கு பிறகு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள இது உதவும்.
 
 பாராளுமன்ற கூட்டத்தொடர்களின்போது, பணி செய்யும் முறை இதுபோலத்தான் இருக்கும். ஆனால், தெற்கு வளாக செயலகத்தில் இருந்து பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு இடம் மாறிவிடும். கேள்வி நேரமாக இருந்தால் மதியம் வரை அவையில் இருப்பார். 
முக்கியமான விவாதங்களின்போது அவை முடியும் வரை அமர்ந்திருப்பார். 
நாளின் எஞ்சிய நேரத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபடி பணிகளை கவனிப்பார். கூட்டத்தொடர்களின் போது, நேரமின்மை காரணமாக அமைச்சரவை கூட்டம், கட்சியின் கூட்டுக்குழு கூட்டங்கள் போன்றவை காலை 11 மணிக்கு முன்பாகவோ, அவரது இல்லத்தில் மாலையிலோ நடத்தப்படும். மாலை 6.30 அல்லது 7 மணிக்கு வீடு திரும்பும்போது, அங்கு காத்திருப்பவர்களை இரவு 8.30 மணி வரை பார்க்க வேண்டியிருக்கும். சந்திப்புகளுக்கு இடையிடையே விடுபட்டுப்போன விவரங்களை எழுதுமாறு சுருக்கெழுத்தாளர்களைப் பணிப்பார்.

இரவு உணவு குடும்பத்தாருடன் இயல்பான முறையில் நடக்கும். அரிதான ஒரு சில சமயங்களில் தனிச் சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு அரசாங்க விருந்து நடைபெறும். நாள் முழுவதும் வேலைப்பளுவின் காரணமாக சந்திக்க இயலாதுபோன அமைச்சரவை சகாக்கள், தூதர்கள் ஆகியோர் வீட்டில் நடைபெறும் இரவு விருந்திற்கு அழைக்கப்படுவர். இதுபோன்ற சமயங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலாகவும் அவர் உடனிருப்பார். மாலையில் நடைபெறும் அரசாங்க விழாக்களில் இரவு 10.30 மணி வரை கலந்துகொள்ள நேரிடும். இதுபோன்ற நேரங்களில் வீட்டில் உள்ள அலுவலக அறைக்கு வந்து நள்ளிரவு வரையிலோ அதற்கு மேலுமோ பணிபுரிவார்.

நேரு உடனான உரையாடல்கள் அனைத்தும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சுருக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் பொறுமை இழந்து, “அன்புடையீர், உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருப்பதற்கு எனக்கு வாழ்நாள் போதாது” என்று சொல்லி விடுவார். ஏற்றுக்கொள்ள முடியாத எந்தவொரு கருத்துக்கும் அவரது முதல் எதிர்வினை சினம் கொண்டதாக இருக்கும். ஆனால், அதனை நீங்கள் தாங்கிக்கொண்டுவிட்டால், அமைதியாகி, நீங்கள் சொல்வதை கேட்பார்.

தமக்கு பிடிக்காத ஒன்று நடக்கும்போது, நேரு எளிதில் சினம் கொள்வார். படபடவென்று பொரிந்து தள்ளிய பிறகு, உடனடியாக அமைதியாகிவிடுவார். 
 வெளியுறவுத்துறை அலுவலகத்தில் தமது அறைக்கு செல்ல அவர் ஒருபோதும் மின்தூக்கியைப் பயன்படுத்தியதில்லை. 
ஒரே நேரத்தில் இரண்டு படிகளைத் தாவி ஏறிச் செல்வதுதான் அவரது வழக்கம். 
ஒரு நாள் காலையில் அவரோடு சேர்ந்து சென்றபோது, ‘ஒரே நேரத்தில் இரண்டு படிகளை ஏன் கடக்கவேண்டும்? 
ஒவ்வொன்றாக ஏறினால் போதாதா? 
என்று அவரது செயலாளர் கேட்டார். 
எரிச்சலடைந்தவராய் அவரை திரும்பிப்பார்த்து என்னை வயதானவன் என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று சொன்னார்.

தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் 17 ஆண்டுகாலம் உழைத்தார். ஒரு சில சமயங்களில் இரவு 11 மணிக்கு மேல் அவரது செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொள்வார். 
அவசரமான பிரச்சினைகள் பற்றி பேசவேண்டும் உடனே புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பார். 
அந்த நேரமும் அவரது வேலை நேரத்திற்குள் அடங்கும்.
 இத்தகைய கடுமையான உழைப்பின் மூலம் தான் இன்றைய நவீனஇந்தியாவிற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

- ஆ.கோபண்ணா
 
உலக நீரிழிவு நோய் தினம்
வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். 
நீரிழிவு நோயை குணப் படுத்துவதற்கு இன்சுலின் மருந்தை சார்லஜ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரவப் படுத்தும் விதமாக அவரது பிறந்த தினமான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவித்தது.

'நீரிழிவு பாதிப்பில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்திடுங்கள்' என்பது இந்தாண்டு மையக் கருத்து. உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
 இதனால் ஏற்படுவதே நீரிழிவு நோய்.
 இதில் இரண்டு வகைகள் உள்ளன. 'டைப் -1' என்பது இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது. 'டைப் - 2' என்பது இன்சுலின் சுரக்கும் ஆனால் முறையாக பயன்படுத்த முடியாது. 
இவ்வகைதான் நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90 சதவீதம் பேருக்கு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வாழ்நாள் முழுவதும் துரத்தும் இந்த நோய், குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. இவ்வகை குழந்தைகளுக்கு பெற்றோரின் கண்காணிப்பு அவசியம். 
 அவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோ, குறைவதோ கூட ஆபத்தில் முடியலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி, உடல் எடையை கட்டுப்படுத்துதல், தேவைப்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிப்பது மற்றும் மருத்துவர் ஆலோசனை ஆகியவற்றை பின்பற்றினால், நீரிழிவில் இருந்து பாதுகாக்கலாம்.
 உடல் எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இதன் அறிகுறிகள். 
துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும்.  
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Prakash JP
முகநூலில்
*பிஜேபி – அதிமுக – பாமக உள்ளிட்ட கட்சியினருக்கு வெட்கம் – மானம் – சூடு சுரணை இருந்தால்..*
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளியிடப்பட்டு விட்டன.
இனி, ஜெயலலிதா எப்படி இறந்தார், அதற்கு முன் எதற்கு சிறை சென்றார் என்பதை அதிமுகவினர் வெளியிட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களை ஈட்டியால் குத்திக் கொன்ற வழக்கு ஆவணங்களை வெளியிட வேண்டும்.
எடப்பாடியின் உறவினர்கள் ஊழல் ஒப்பந்த வழக்கில் கைதான ஆவணங்களை சிபிஐ, வருமான வரித்துறை வெளியிட வேண்டும்.
கொடநாடு கொலை – கொள்ளை வழக்குகளில் எடப்பாடியின் பங்கு குறித்த உண்மையை வெளியிட வேண்டும்.
டீக்கடையில் வாழ்க்கையை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய சொத்துமதிப்பு, உறவினர்களின் சொத்து மதிப்புகளை வெளியிட வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல், சொத்துக்குவிப்பு, கறுப்புப் பணம் குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும்.
அதேபோல், அன்புமணி ராமதாஸ் இந்தூர் CBI நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஊழல் வழக்கு ஆவணங்களை வெளியிட வேண்டும்.
ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான கொலை வழக்குகள், சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.
சீமான் மீதான பாலியல் வழக்கு விவரங்களை வெளியிட வேண்டும்.
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் & அவரால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு பராமரிப்பு செலவு வழங்குகிறாரா, சொத்து விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு பிஜேபியின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது எப்படி என்று சொல்ல வேண்டும்.
வானதி சீனிவாசன் ஓ.எம்.ஆரில் பல நிறுவனங்களை மிரட்டி சேர்த்த சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.
அவர்களுக்கு வெட்கம், மானம் இருக்குமானால் இந்த ஆவணங்களை வெளியிட்டு, மக்கள் மேடையில் விவாதிக்க தயாரா?
By Arun Jai

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?