மீண்டும் மீண்டும்
"இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்டவிரோதம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது."
தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பின்படி 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வந்தது.
ரோஸ்டர் முறையில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த முறையை ரத்து செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.
இந்த நிலையில் அதற்கு மாற்றாக 2016 தமிழக அரசு தமிழக அரசு பணியாளர்கள் பணி விதிகள் சட்டத்தை கொண்டு வந்து.
Tamilnadu government servants(conditions of service) act 2016. மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு பணி மூப்பு வழங்கி வந்தது.
தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ஈரோடு பெருந்துறை சேர்ந்த அரசு ஊழியர் ராஜா உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் அரசின் இந்த உத்தரவு சட்டவிரோதமான உத்தரவு எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என கோறியிருந்தனர்.
வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டீக்காரமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று அளித்த தீர்ப்பில், இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்குவது சட்டவிரோதம் எனவும், இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் மூன்று பிரிவுகள் அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் விரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி மூப்பு வழங்க வகை செய்யும் (Tamilnadu government servants(conditions of service) act 2016’ல் உள்ள 3 சட்ட பிரிவுகள் 1, 40, 70 முன்றும் ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.
இருப்பினும் பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர்.
மகராஷ்டிரா அரசியலில்
மீண்டும் மீண்டும் திருப்பம் .
சிவசேனா தலைமையில், காங்கிரஸ் - தேசியவாத காங்., கட்சிகள் கூட்டணி சேர்ந்து, ஆட்சி அமைக்க திட்டமிட்டு உள்ளன.
ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை இன்று சந்திக்கவும், அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், ஒப்பந்தப்படி பாஜக நடந்து கொள்ளாததால் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது, முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பாஜக முன்பு கூறியபடி தங்களுக்கு ஒதுக்கும்படி, சிவசேனா கேட்டது .
முடியவே முடியாது என்று கூறி ஆட்சி அமைக்கும் முடிவை, பா.ஜ., கைவிட்டது.
அடுத்ததாக, ஆட்சி அமைக்கும்படி, சிவசேனாவுக்கு, ஆளுநர் அழைப்பு
விடுத்தும், அவர்களால், காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சி
எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதங்களை உடனே பெற முடியவில்லை.ஆளுநர் ஒருநாள் அவகாசம் தரமறுத்துவிட்டர்
இதைத்தொடர்ந்து, சரத்
பவாரின் தேசியவாத காங்., கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் அவர்களுக்கு கொடுத்த அவகாசம் முடியும் முன்னரே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை, காங்., தேசியவாத காங்., சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

பல சுற்று பேச்சுக்குப் பின், இவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, ஆதரவு தருவதாக, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகள் உறுதி அளித்துள்ளன.
இது குறித்து, தேசிய வாத காங்., தலைவர் சரத் பவார்
" சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
இந்த ஆட்சி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடரும்; நிலையான ஆட்சியாக இருக்கும். மஹாராஷ்டிரா சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரவாய்ப்பில்லை.
கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், என்னென்ன திட்டங்களை செயல்படுத்த
வேண்டும், ஒவ்வொரு கட்சியின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்தும்,
குறைந்த பட்ச செயல் திட்டம் உருவாக்கப்படும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை
வடிவமைப்பது குறித்து, மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் பேச்சு
நடத்திஉள்ளனர்.
என்று கூறினார்.
அவரை, கடந்த சில ஆண்டுகளாகவே, எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர் ஜோதிடர் என்பது, இப்போது தான் தெரியும். 'நான் மீண்டும் பதவிக்கு வருவேன்' என, அடிக்கடி அவர் கூறுகிறார்.
இனி, அப்படி அவர் கூற முடியாது.
ஹிந்துத்வா கொள்கை உடைய சிவசேனாவுடன் சேர்ந்து, நாங்கள் ஆட்சி அமைக்கவுள்ளதாக சிலர் கூறுகின்றனர். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. மஹாராஷ்டிராவில் அமையும் புதிய அரசு, மதச் சார்பற்ற அரசாகவே இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சியின் பிரதிநிதிகள், இன்று, மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
அப்போது, மூன்று கட்சிகளும் இணைந்து, ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளன. அதற்காக, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதங்களையும், கவர்னரிடம் கொடுக்க, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று, ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுப்பாரா அல்லது மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி தொடருமா என்பது, இன்று தெரிய வரும்.

தேசியவாத காங்., செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது: முதல்வர் பதவியால் ஏற்பட்ட சர்ச்சையால் தான், பா.ஜ., கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது. எனவே, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார். அதில், எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை.
மக்களின் விருப்பமும் அது தான். மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. புதிய அரசில், காங்கிரசும் பங்கு பெறும் என நம்புகிறேன்; அப்போது தான், நிலையான அரசு அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
"சிவசேனா தலைமையில், விரைவில் புதிய அரசு அமையும். அந்த அரசு, அடுத்த, 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதற்கான குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மக்களின் விருப்பத்துக்கும், நலனுக்கும் முக்கியத்துவம் அளித்து, குறைந்தபட்ச செயல் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. என கூறினார்.
காங். 'குறைந்தபட்ச செயல் திட்டத்தில், விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களும் உள்ளன'
ஏற்கனவே கோட்சேயால் கொலை செய்யப்பட்ட காந்தியை மீண்டும் மீண்டும் கொல்கிறார்கள்.
காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவரது தகவல் அடங்கிய இரண்டு பக்க குறிப்பேடு வழங்கப்பட்டுள்ளது, ’நமது பாபுஜி: ஒரு பார்வை’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட அந்த குறிப்பேட்டில் உள்ள தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டதால் தான் காந்தி இறந்தார் என்று வரலாறு கூறும் நிலையில், காந்தி ஒரு விபத்தில் இறந்தார் என்று அந்த குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா இல்லத்தில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தற்செயலாக நடந்த சம்பவத்தால் இறந்து போனதாகவும் விபத்து என்பது போலவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒடிசாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தவறை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள், இவ்விவகாரத்தில் அம்மாநில முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மகாத்மா காந்தியின் மரணம் ஒரு விபத்து என்று கூறி உண்மைகளைச் சிதைக்க மாநில அரசு முயன்றதாகக் கூறி, முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஒடிசா மாநில முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான நரசிங்க மிஸ்ரா
"இந்த குறிப்பேட்டைத் திரும்ப பெறுவதுடன், முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். காந்தியை வெறுப்பவர்களை மகிழ்விக்கும் வகையில் பாடத்திட்டத்தில் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின்னர் தேசிய அளவில், நாதுராம் கோட்சேவை ஒரு ஹீரோவாக சித்தரிக்க முயற்சிகள் நடந்துள்ளன, அவரது சிலைகளை நிறுவி வழிபடுவது என்பது வெட்கக்கேடான விஷயம்.அதற்கு மாநிலக்கட்சிகள் தங்கள் ஊழலை மறைக்க துணை போவது கேவலமானது ”
என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த தவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கோட்சேயால் கொலை செய்யப்பட்ட காந்தியை மீண்டும் வித,விதமாக கொல்கிறார்கள்.
இந்நாளில்,
முன்னால் .
இந்திய தேசிய பத்திரிக்கை தினம்
உலக சகிப்புத் தன்மை தினம்
முதல் முறையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது(1896)
யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1945)
இந்தியாவில் 'பிரஸ்
கவுன்சில் ஆப் இந்தியா' அமைப்பு 1966, நவம்பர் 16ல் நிறுவப்பட்டது.
அது முதல் ஆண்டுதோறும் நவம்பர் 16ல் தேசிய பத்திரிகை தினம்
கடைபிடிக்கப்படுகிறது.
பத்திரிகைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பது, அதன்
செயல்பாடுகளை கண்காணித்தல், தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல் போன்றவை
'பிரஸ் கவுன்சிலின்' முக்கிய பணி.
ஜனநாயகத்தின் நான்காவது துாணாக
கருதப்படும் பத்திரிகைகளின் பணி மிகவும் முக்கியமானது.
செய்திகளை
பாரபட்சமின்றி வழங்குவது, தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு
சரியான பாதையை வகுத்துக் கொடுப்பது என பல பொறுப்புகள் பத்திரிகைக்கு உண்டு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------தற்கொலையல்ல
"சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை கொண்டது போல தெரியவில்லை என்றும் அவரது மரணத்திற்கு ஒரு பேராசிரியர்தான் காரணம் என்றும் அவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றம்சாட்டியுள்ளார்."
தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் லத்தீப் தனது மகளின் இறப்பில் சந்தேகங்கள் உள்ளன என்றார்.
'பாத்திமா தற்கொலை செய்துகொள்ள கயிறு எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை.
பாத்திமா இறக்கும் நேரத்திற்கு முன் எங்கு சென்றார் என்பதை காட்டும் சிசிடிவி காட்சிகளை எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள்.
என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்பித்துள்ளேன்.
தமிழக அரசு மற்றும் காவல்துறை இயக்குனர் மீது நம்பிகை உள்ளது.
என் மகளுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்,'' என்று தெரிவித்தார்.
''என் மகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதால் பிற மாணவர்கள் யாரும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக விவரங்களை வெளியிட்டுள்ளேன்.
என் மகள் ஏற்கனவே தாயிடம் பேசும்போது ஒரு பேராசிரியரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
என் மகளுக்கு நீதி வேண்டும்,'' என்றார் லத்தீப்.
மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என டிஜிபி உறுதியளித்துள்ளார் என்று லத்தீப் தெரிவித்தார்.
மேலும் பாத்திமாவின் செல்போன் காவல் துறையினரிடம் இருப்பதால், அதனை பெற்றோர் முன்னிலையில் திறக்கவேண்டும் என்றும் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மௌனம் காத்த ஐஐடி நிர்வாகம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸில் மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்துவந்த மாணவி பாத்திமா லத்தீப், நவம்பர் 9ம்தேதி உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்திற்கு மதரீதியான பாரபட்சம் காரணமாக இருக்கக்கூடும் என மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
பலரும் பாத்திமாவுக்கு அவர் பயின்ற துறையில் உள்ள பேராசிரியர்கள் மத ரீதியான பாரபட்சம் காட்டியதாக குற்றஞ்சாட்டி சமூகவலைத்தளங்களில் ''ஜஸ்டிஸ் பாஃர் பாத்திமா''(Justice for Fathima) என்ற பெயரில் பதிவுகள் எழுதிவருகின்றனர்.
வெள்ளிக்கிழமை அன்று ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணைக்கு எல்லா விதமான ஒத்துழைப்பு தரப்படுவதாகவும், நிர்வாகத்தை பற்றி சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துக்கள் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'எங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்தரமானவர்கள், நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். மாணவியின் இழப்புக்காக தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறோம்.
எங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனை உறுதிப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். விசாரணை முழுமையாக முடியும்வரை வதந்திகளை பரப்பவேண்டாம்,''என ஐஐடி நிர்வாகம் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில், மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்திக்க சென்னை வந்துள்ளார்.
மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் இதுபோன்ற தற்கொலைகள் நடைபெறக்கூடாது என பாத்திமாவின் பெற்றோர்கள் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று மு.க.ஸ்டாலினை பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:-
'சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள்
அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது!
அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை
தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க
சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே
பாத்திமாவின் மரணம் காட்டுகிறது!'
வேலை வாய்ப்புகள்
“Border Roads
Organisation”
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்

மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். ----------------------------------------------------------------------------------------------------------------------------
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல்
பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13
வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.
வயது: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி தேதி: 21.11.2019
விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.
வயது: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி தேதி: 21.11.2019
விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
இந்த விருது போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா ??