ஒளிந்திருக்கும் மர்மம்

 வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு

செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 15 வரை தேர்தல் ஆணையம் நாடு தழுவிய வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை மேற்கொண்டது. 

தங்களுடைய வாக்கா ளர் அட்டைகள் செல்லாமல் போவதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தங்களுடைய ஆதார் விவரங்களை உள்ளூர் தேர்தல் ஆணைய பிரதி நிதிகளிடம் சமர்ப்பிப்பதன் மூலம், வாக்காளர் கள் தங்களுடைய வாக்காளர் அடையாளம் குறித்து சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஆதார் தவிர ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்கள் இந்த சரிபார்ப்புக்கு பயன் படுத்தக் கூடிய ஆவணங்களின் பட்டியலுக்குள் இடம் பெற்றிருந்தன.

ஆனாலும்   உள்ளூர் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் வாக்காளர் அடை யாள அட்டையை ஆதார் எண்களுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன என்றே தனிப்பட்ட வாக்காளர்களுக்கு தகவல்களைத் தந்தனர்.

“இந்த காலகட்டத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைத்து சரிபார்த்துக் கொள்ளத் தவறினால், உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை செல்லாததாகி விடும்” என்று வாக்குச்சாவடி அள விலான அலுவலர் (பி.எல்.ஓ) தந்த செய்தி கூறி யது.

எனக்கும் இதுபோன்ற செய்தி வந்து சேர்ந்தது. 2015 மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட இதே போன்றதொரு முயற்சியை அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைவிட வேண்டியிருந்த நிலை யில், வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைப்பதற்கு தேர்தல் ஆணை யம் ஏன் மும்முரம் காட்டியது?
 பொது விநியோக முறை, மண்ணெண்ணெய் மற்றும் எல்பிஜி, மானிய விலையில் ரேசன் போன்ற நலன்புரி சேவைகளைப் பெறுவதற்கு மட்டுமே ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்தி ருக்கிறது.

சரிபார்க்கிறோம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு செய்யப்பட்டு வரும் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி முற்றிலும் நேர்மையற்ற செயலாகவே இருக்கிறது.
2015 ஆம் ஆண்டில் செய்ததைப் போல, தேவையான சட்டப்பூர்வமான ஆணை எதுவும் இல்லாமலே, மீண்டும் தேர்தல் ஆணையம் அத்தகைய முயற்சியை செய்து பார்த்துள்ளது.
 இதுகுறித்து ஆகஸ்ட் 13 அன்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியதாக 2019 செப்டம்பர் 27 ஃப்ரண்ட் லைன் பத்திரிகையில் “ஆதார் குறித்த கவலை கள்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 “இந்த விவகாரம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துடன் தொடர்புடையது. ஏதே னும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால், நாடாளுமன்ற நடவடிக்கையின் அடிப்படையி லேயே அவை செய்யப்பட வேண்டியிருக்கும்.” என்று அப்போது ஃப்ரண்ட்லைனிடம் மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியி ருந்தார்.
 இந்த விவகாரத்தில் சட்ட அமைச்சகம் இன்னும் பதில் தரவில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

அப்படி இருக்கும் போது தேர்தல் ஆணை யம் ஏன் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையை நோக்கி முன்னேறுகிறது?
இதுபோன்ற   இணைக் கின்ற எந்தவொரு    செயல்முறைக்கும் தேர்தல் ஆணையம் இதுவரை முறையான அங்கீகாரம் தரவில்லை என்று 2015ஆம் ஆண்டில்  கைவிடப் பட்ட  இந்த செயல்முறைக்குப் பொறுப்பேற்றி ருந்த மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி கூறி யுள்ளார்.

 “வாக்குச்சாவடி அளவிலான அலு வலர்களிடமிருந்து  வெளியான தகவல் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி  வெளியான தல்ல” என்றும்  அந்த  அதிகாரி  கருத்து தெரி வித்திருக்கிறார். ஆயினும்கூட, இந்த வேலை இன்னும்  நடந்து கொண்டுதானிருக்கிறது.
 இது குறித்து அர சாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்பதையும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதையும்  உணராத, இது குறித்து சந்தேகம் கொள்ளாத கோடிக்கணக்கான வாக்காளர்கள்  தங்கள் தரவு களுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த செயல் பாட்டில்  வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது அரசாங்கத்தின்  நோக்கங்கள் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது.  இது 32 கோடி வாக்காளர்களின் தரவுகளை ஆதார் எண்களுடன் இணைத்த பிறகு திடீரென நிறுத்தப்பட்ட 2015ஆம் ஆண்டு முயற்சியை நமக்கு நினைவூட்டுகிறது.
 அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், தெலுங்கானாவில் 28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது என்ற தகவல், 2018ஆம் ஆண்டு அந்த மாநிலம் தேர்த லுக்குச் சென்றபோதுதான்  வெளிச்சத்துக்கு வந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தரப்பட்ட பதிலில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது உண்மை என்று ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இது போலியான / கள்ள வாக்காளர்களை களையெடுப்பதற்கான நடவடிக்கை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் குடிமக்களின் தரவுகள் மற்றும் அந்தரங்க உரிமை குறித்த பாதுகாப்பு கவலைக் குரியதாகி இருக்கிறது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தரவுகள் எந்த அள விற்கு பாதுகாப்பானவை என்பது குறித்து இது வரை இந்தியாவில் எந்த ஆய்வையும் ஒரு நிறு வனம் கூட செய்யவில்லை.
அரசாங்கத்துக்கோ அல்லது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கோ (யுஐடிஏஐ) இந்தத் தரவுகளின் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. தரவைச் சேகரிக்கின்ற வெளி நிறுவனத்தின் அதி காரத்தின் கீழ் மட்டுமே அவை இருக்கும்.
வாழ்க்கை மற்றும் சுதந்திரம் ஆகிய வற்றிற்கான உரிமையை உள்ளார்ந்து கொண்டி ருக்கும் அந்தரங்க உரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும் என்ற 2017 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, சமூக ஊடக கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான தொடர் முயற்சி உட்பட அனைத்து வகையான தரவுகளையும் ஆதார் உடன் இணைப்பதற்காக காட்டப்படுகின்ற இந்த அவசரம் மிக வினோதமானதாக இருக்கின்றது.

வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதார் உடன் இணைப்பது என்பது ஆபத்துகள் நிறைந்த செயலாகவே இருக்கின்றது.
2014-15ஆம் ஆண்டில் 8 கோடி போலியான அல்லது மோசடி யான ஆதார் எண்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் உரிமைச் சட்டம் மூலம் அறியப்பட்ட பதில்க ளில் இருந்து தெரிய வந்திருக்கின்றது.
தரவுக ளைத் திருத்துவதற்கான வலுவான சாத்தியம் இருப்பதையும் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகள் வெளிக் கொண்டு வந்திருக்கின்றன.
நாட்டின் தேர்தல் அமைப்பு முறையை வெளியில் இருந்து கையா ளுவதற்கான வாய்ப்பை இத்தகைய நடவடிக்கை கள் ஏற்படுத்திக் கொடுத்து விடக் கூடும்.
நன்றி: ப்ரண்ட்லைன் 
தமிழில்: முனைவர் தா.சந்திரகு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்
ஓமன் தேசிய தினம்
புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறக்கப்பட்டது(1626)
 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம்(1936)
அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைப்பேசி விற்பனைக்கு வந்தது(1963)
தென்னாப்பிரிக்காவில் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது(1993)


1760 - மறுகட்டுமானம் செய்யப்பட்ட கேஸ்ட்டலேனியா ‘கடன்காரர்கள் சிறை’க்கு, கைதிகள் வருகை தொடங்கியது. கேஸ்ட்டலேனியா என்பது, தற்போதைய மால்ட்டாவின் தலைநகரான வேலெட்டா நகரில் அரசவை, நீதிமன்றங்கள் செயல்பட்டுப் பின்னாளில் சிறையாக மாற்றப்பட்ட கேஸ்ட்டலேனியா அரண்மனை. சரி, கடன்காரர்கள் சிறை?
ஆம்!
 கடனைத் திருப்பித் தராதவர்களை அடைப்பதற்கென்றே சிறை!
 திருப்பித்தராத (அல்லது தரமுடியாத!) கடனுக்காகச் சிறைகள் என்பவை உலகின் பல நாடுகளிலும் நடைமுறையிலிருந்திருக்கின்றன.

இவை, கடன் தீரும்வரை உழைக்கவேண்டிய, அடைத்து வைக்கப்பட்ட உழைப்புக் கூடங்களாகவோ, கடனை ஏதோவொரு வகையில் திருப்பித்தரும்வரை அடைத்து வைக்குமிடங்களாகவோ இருந்திருக்கின்றன.
இவற்றில் அடைக்கப்படும்போது, கடனை மட்டுமின்றி, இவற்றில் அடைக்கப்பட்டிருக்கும் காலத்திற்கு, இச்சிறைகளைப் பராமரிக்கும் கட்டணங்களும் வசூலிக்கப்படும்.

கடனுக்கென்று சிறைகள் இன்றி, கடன் தீரும்வரை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வதும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்துள்ளது. இடைக்கால ஐரோப்பாவில், கடன்காரர்களான ஆண்கள், பெண்கள் அனைவரும்  ஒரே இடத்தில் அடைக்கப்படும் நடைமுறை இருந்துள்ளது.

இவ்வாறு அடைக்கப்படுபவர்கள் தொற்றுநோய்களால் இறப்பதும், பிற தொல்லைகளுக்கு ஆட்படுவதும்  வழக்கமாக இருந்துள்ளது.
இங்கிலாந்தில் ஜான் பைரோம் என்ற ஆங்கிலேயக் கவிஞரின் மகன் சாமுவேல் பைரோம், எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்சின் தந்தை ஆகியோர் இவ்வாறு கடன்காரர்கள் சிறையில் அடைபட்டிருந்திருக்கின்றனர். அதனால்தான் டிக்கென்ஸ் தன் லிட்டில் டோரிட் புதினத்தில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க விடுதலை சாசனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வில்சன், துணை நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே, கடன்காரர்கள் சிறையிலிருக்கும் நிலையும் ஏற்பட்டது.

அதனாலேயே அமெரிக்காவில் 1792இல் கடன்காரர்கள் சிறை நிவாரணம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்த இம்முறை 1833இல் கூட்டரசுச் சட்டத்தால் தடைசெய்யப்பட்டாலும், முழுமையாக ஒழியவில்லையென்பதால், 1978இன் திவால் நிவாரணச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் 1950இல் உருவான மனித உரிமைகள் ஒப்பந்தத்தில் இம்முறையைத் தடைசெய்வதுபற்றிக் குறிப்பிடப்பட்டாலும், சில நாடுகள் இன்றுவரை அதை ஏற்கவில்லை.
 இந்தியாவில் இதை நெறிமுறைப்படுத்த 1881இல் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட நெகோஷியபிள் இண்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டம் (இச்சட்டத்தின்படி ப்ராமிசரி நோட், காசோலை போன்றவை)  இன்றும் பெரிய மாற்றங்களின்றித் தொடர்கிறது.

கடன்காரர்கள் சிறைகள் என்பவை பெரும்பாலும் வழக்கொழிந்துபோனாலும், இவற்றைப்போன்ற சட்டங்களால், ஒப்பந்தத்தை மீறுதல் முதலான அடிப்படைகளில் கடனைத் திருப்பித்தராதவர்கள் உலகின் பலபகுதிகளிலும் இன்றளவும் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.
- அறிவுக்கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பா.ஜ.க.,வுக்கு ஆதரவு.
சொத்து மதிப்பு 185 கோடி ரூபாய் உயர்வு 
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் எம்.டி.பி நாகராஜ்.
 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக மாறி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதனாலேயே தகுதி நீக்கத்திற்கும் உள்ளானார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடைத்தேர்தலில் போட்டியிடவும் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,களின் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்காக ஹோஸ்கோதே தொகுதி பா.ஜ.க வேட்பாளராக நாகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாகராஜ் தேர்தல் ஆணையத்திடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில்,1200 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 அவரது சொத்து மதிப்பு, கடந்த 18 மாதத்தில் மட்டும் 185 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது.

அதேபோல், அவரது மனைவியின் சொத்து மதிப்பு 44.95 கோடி அதிகரித்துள்ளது.
 நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மொத்தம் 1201.50 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் - ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கான ஆதரவை அவர் வாபஸ் பெற்ற ஆகஸ்ட் மாதம் மட்டும் அவரது 53 வங்கிக் கணக்குளில் 48 கோடி ரூபாய் டெபாஸிட்டாக வந்துள்ளது. 

எம்.எல்.ஏ.,வாக இருந்த ஒருவர் தனது பதவியை இழந்தபோதும் கடந்த 18 மாதத்தில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 185 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்து இருப்பது பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
 இதன் மூலம் பா.ஜ.க.,வின் குதிரைபேரம் அம்பலமாகியுள்ளது என்றும், இதற்கான விசாரணையை நடத்தவேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

'உயிரி நெகிழி' 

 பயோ பிளாஸ்டிக்

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி அர்ச்சனா 17 இயற்கை பொருட்களால் 'உயிரி நெகிழி' என்ற பயோ பிளாஸ்டிக் பொருள் கண்டறிந்துள்ளார்.

கடந்த வாரம் கரூரில் நடந்த மாநில அளவிலான அறிவியல் போட்டியில் அர்ச்சனாவின் 'உயிரி நெகிழி' கண்டுபிடிப்பு முதலிடம் பிடித்ததுள்ளது.
நெகிழி(பிளாஸ்டிக்)பொருட்களால் சுற்றுசூழல் மாசு ஏற்படுவதால் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மத்திய மாநில அரசு தடை விதித்துள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மாணவிஅர்ச்சனா கண்டு பிடிப்பு முக்கியமநிது அவருக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். இந்த பயோ பிளாஸ்டிக்கை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படும் உயிரி நெகிழி தயாரிப்பதற்கான செலவு குறைவு தான்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்த உயிரி நெகிழியால் பைகள் தட்டு கப் உள்ளிட்டவை தயாரிக்கலாம். இயற்கையாக கிடைக்கும் சோள மாவு, வினிகர் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் உயிரி நெகிழி 28 நாளில் மக்கும் தன்மை உடையது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

  வேலை வாய்ப்புகள் 


 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13 வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது
: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி
: 21.11.2019

விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய எண்ணைக் கழகத்தில் (indian oil corporation) வேலை

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 'டெக்னீசியின் அப்ரென்டிஸ்' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.10.2019 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள் : 22.11.2019

விபரங்களுக்கு:www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------- 

‘நோமுரா’ எச்சரிக்கை!

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் படிப்படியாகச் சரிந்து வருகிறது.

குறிப்பாக சிறு-குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி இழுத்து மூடப்படும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதனால் கடந்த 2018-ம் ஆண்டு முதலே ஒவ்வொரு காலாண்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.


அதுமட்டுமின்றி, 2019-20ம் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மிக மோசமாக 5.6 சதவிகித வளர்ச்சியையே இந்தியா கொண்டிருக்கிறது.

இந்த நிலைமையில், சர்வதேச பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் தேங்கிக் கிடப்பதனால் ஒவ்வொரு மாதமும், இந்தியாவிற்கான ஜி.டி.பி குறித்து தங்களது கணிப்பை குறைத்து வருகின்றன.
முன்னதாக உலக வங்கி, ஐ.எம்.எப், பிட்ச் ரேட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களின் முந்தைய கணிப்பை குறைத்துக்கொண்ட நிலையில் தற்போது, ஜப்பானைச் சேர்ந்த ‘நோமுரா’ என்ற நிறுவனமும் இந்தியாவின் ஜி.டி.பி குறித்த மதிப்பீட்டை வெகுவாகக் குறைத்துள்ளது.
2019-20 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 5.7 சதவிகிதமாக இருக்கும் என்று இதற்கு முன்னர் ‘நோமுரா’ நிறுவனம் கூறியிருந்தது.
ஆனால் தற்போது, அதனை 4.9 சதவிகிதமாக குறைத்துள்ளது.
அதுமட்டுமின்றி நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவிகிதத்துக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என மோடி அரசு முடிவு எடுத்திருந்த நிலையில், இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை குறித்த தனது கணிப்பை 3.7 சதவிகிதமாக நோமுரா நிறுவனம் உயர்த்தியுள்ளது.

மேலும், கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் மோடி அரசின் முடிவால், அரசின் வரி வருவாய் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை குறையும் என்றும், இதனால் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம் என்று நோமுரா நிறுவனம் மத்திய அரசை எச்சரித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 
-------------------------------------------------------------------------------------------------------------------------
 ரவுடி சாமி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செவிலியர் லதா.
 இவர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மகனின் பிறந்த நாள் என்பதால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபடுவதற்காக சென்றார்.
கோயில் வளாகத்தில் உள்ள உள்ள விநாயகர் கோயிலுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூசை பொருள்களை தர்ஷிண் என்ற தீட்சிதரிடம் கொடுத்துள்ளார்.
பூசைப் பொருள்களை வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்று தேங்காயை மட்டும் உடைத்து விட்டு அர்சனைத் தட்டைக் கொடுத்துள்ளார் அந்த தீட்சிதர்.
மகனின் பிறந்தநாளுக்கு அர்சனை செய்யவந்தால், பெயரைக் கூட கேட்காமலும், கடவுளுக்கு மந்திரம் கூட சொல்லாமலும் ஏன் பூசை செய்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் லதா.
உடனே ஆத்திரமடைந்த தீட்சிதர் தர்ஷிண், ’ஏன் நீ வந்து உள்ளே பூசை செய்யேன் செய்யேன்’ என்று தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
 இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஒருகட்டத்தில் அநாகரிகமான வார்த்தையில் லதாவை தீட்டி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி விட்டுள்ளார் தீட்சிதர் தர்ஷிண்.
 இதில் கோயில் வளாகத்திலேயே லதா மயங்கி விழுந்துள்ளார்.

இதைபார்த்த அங்கிருந்த பக்தர்கள் லதாவுக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் தீட்சிதரை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தனது நகையை லதா பறிக்க வந்ததாலேயே கீழே தள்ளிவிட்டதாக தீட்சிதர் தர்ஷிண் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் அங்கிருந்த பக்தர்கள் சிலர் வீடியோவாக தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த லதாவை சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனை அனுமதித்தனர்.

 பின்னர் லதா மற்றும் சில பக்தர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நகர போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதில் வழக்குப் பதியப்பட்ட சம்பவம் தெரிந்து தீட்சிதர் தர்ஷிண் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் போலிஸார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர். தனது வேலையை முறையாகச் செய்யாமல் அலட்சியமாக நடந்துக்கொண்ட தீட்சிதரைக் கேள்விக் கேட்டதற்காக பெண்ணின் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவனை போன்றவர்கள்தான் கடவுள்களின் முகவர்களா?





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?