‘வழக்கம்போல’தலைமறைவு

தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்ந்து சர்ச்சைகளின், குற்றங்களின் மையமாக இருந்து வருகிறது.

சிதம்பரத்தைச் சேர்ந்த லதா என்பவர் தன்னு டைய மகனின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்திற்குள் உள்ள முக்குறுணி கணபதி கோவிலுக்கு அர்ச்சனை செய்ய சென்றுள்ளார்.
அங்கு அர்ச்சகராக பணிபுரியும் தர்ஷன் என்ற தீட்சிதர் முறையாக பூஜை செய்யாமல் பூஜை தட்டை லதாவிடம் கொடுத்துள்ளார்.
 ஏன் முறையாக அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்டதற்காக அவரை கன்னத்தில் அறைந்துள்ளார் தர்ஷன்.
அர்ச்சனை பண்ண சொன்னா அடிப்பான்.வெறும் கையெடுத்து கும்பிட்டுவிட்டு கிளம்புவோம் வா..

இதுகுறித்து கேட்டதற்கு அவமரியாதையாக பேசியதோடு வேண்டுமானால் நீயே கோவி லுக்குள் சென்று அர்ச்சனை  செய்து கொள்ள வேண்டியதுதானே என்றும் திட்டியுள்ளார்.

லதா அளித்த புகாரின் பேரில் தீட்சிதர் தர்ஷன் மீது மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்துள்ளனர்.
 ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
 ‘வழக்கம்போல’தலைமறை வாகிவிட்டார் தேடிக் கொண்டிருக்கிறரார்கள் .  தர்ஷன் திமிராகப் பேசுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பெண்ணை கோவிலில் வைத்து அடித்தது மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய செயினை அறுக்க முயன்றதாகவும், தீட்சிதர் பொய் பேசி யுள்ளார்.
சிதம்பரம் கோவிலில் தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்ப்பாடல்களை பாட முயன்ற பெரி யவர் ஆறுமுகசாமி பலமுறை தாக்கப்பட்டுள் ளார்.
அண்மையில் விதிகளுக்கு மாறாக சிதம்பரம் கோவிலை திருமண மண்டபமாக்கி தீட்சிதர்கள் வசூலில் ஈடுபட்ட தகவலும் வெளியானது.

சிதம்பரம் கோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறிக் கொண்டு தீட்சிதர் கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவில்லை.
 அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் முழுமை பெறாமலே உள்ளது.
 எந்தவொரு பணிக்கும் அவரது பிறப்பு மட்டுமே தகுதி என்று கூறுவது அரசியல் சாசனத்தையே அவமதிப்பது ஆகும்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதி யினரையும் அர்ச்சகராக மாற்றுவதில் என்ன  தடை?
 இன்னும் சொல்லப்போனால் பெண்களை யும், அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி.

இந்துக்களின் பாதுகாவலர் போல வேட மிடுகிற எச்.ராஜா, நாராயணன், ராகவன்,மாலன் போன்ற வர்கள் ஒரு இந்துக் கோவிலில் வழிபடச்சென்ற ஒரு இந்துப் பெண் தாக்கப்பட்டது குறித்து இது வரை வாய் திறக்காதது ஏன்?

அங்கு தான் இருக்கி றது சூட்சுமம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது முழு அர்த்தம் பெற வேண்டுமானால் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அனைத்து சாதியின ரையும் பெண்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
சிதம்பரம் கோவிலில் நடை பெறும் அத்துமீறல்கள் தடுக்கப்பட வேண்டும். அந்தக் கோவில் தீட்சிதர்களின் சொந்தசொத்து என்ற நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகமாகும் முக்கிய மசோதாக்கள்.
 17ஆவது மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரான மக்களவை குளிர் காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இதில், 35 மசோதாக்களை நிறைவேற்ற மோடி  அரசு திட்டமிட்டிருக்கிறது.

  • குடியுரிமை மசோதா 2019
  •  
சட்டவிரோத குடியேற்ற வரையறை
  • தனி நபர் தகவல் பாதுகாப்புச் சட்டம்
கார்ப்பரேட் நிறுவனங்கள் நுகர்வோர் தரவைக் கையாளுதல் மற்றும் செயல்படுத்துதல், கட்டுப்பாடுகள் மற்றும் அபராத விதிப்பு அறிமுகம்
  • மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் சட்டம்
  • எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை விதிப்பு மசோதா (தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம், பதுக்கல் மற்றும் விளம்பரம்)
  • தொழில் துறை உறவுகள் குறியீடு மசோதா 2019
  • வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா 2019
  • நிறுவனங்கள் இரண்டாம் மசோதா 2019
  • சிட்ஃபண்டு மசோதா 2019
  • இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய ஆணைய மசோதா 2019
  • வாடகைத் தாய் கட்டுப்பாட்டு மசோதா 2019
  • ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக மசோதா 2019

------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,  
முன்னால்.
உலக கழிப்பறை தினம்
உலக  ஆண்கள் தினம்

ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)





 
 ‘ஜே ஒப்பந்தம்’
1794 - அமெரிக்கா வுக்கும் இங்கி லாந்துக்குமிடையே ‘ஜே ஒப்பந்தம்’ கையெழுத்திடப் பட்டது.
 பிரெஞ்சுப் புரட்சியின் போது, பிரான்சுக்கும் பிற நாடு களுக்குமிடையே ஏற்பட்ட போர்களின் ஒரு பகுதியாக, 1793இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் போர் ஏற்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளிலிருந்த பிரான்சின் குடியேற்றங் களிலிருந்து சரக்குகளை ஏற்றிச்சென்ற சுமார் 250 அமெரிக்க வணிகக் கப்பல்களை இங்கிலாந்து கைப்பற்றிக்கொண்டது டன், இக்கப்பல்களிலிருந்த மாலுமிகளை இங்கிலாந்தின் போர்க்கப்பல்களில் வலுக்கட்டாயமாகப் பணியாற்றச் செய்தது.
ஏற்கெனவே, சரியாக வரையறுக்கப்படாத கனடா  எல்லைப்பகுதியில் ஃபர்ஸ்ட் நேஷன் என்ற பழங்குடியினருக்கு, இங்கிலாந்து ஆயுதங்கள் வழங்கி அமெரிக்காவுக்கு இடையூறு செய்துகொண்டிருந்ததால், இங்கிலாந்தின்மீது போர் தொடுக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால், இங்கிலாந்துடனான வணிகம் முக்கியம் என்று கருதிய அமெரிக்கக் குடியரசுத்தலைவர் வாஷிங்டன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ஜே-யை இங்கிலாந்துக்குப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்.
அவர் உருவாக்கிய நட்புறவு, வணிகம், கடற்பயணங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம், அவர் பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

 பல்வேறு சிக்கல்களில் அமெரிக்காவுக்குச் சாதகமான முடிவுகளை உருவாக்கிய இந்த ஒப்பந்தத்தின்மூலம், கைப்பற்றப்பட்ட 250 கப்பல்களுக்காக 1.16 கோடி டாலர்களை அமெரிக்கா பெற்றது.
 விடுதலைப்போருக்கு முந்தைய  கடன்களுக்காக இங்கிலாந்து 6 லட்சம் பவுண்டுகளைப்  பெற்றாலும், அமெரிக்காவின் பல பகுதிகளில் செய்திருந்த ஆக்கிரமிப்புகளிலிருந்து வெளியேறியதுடன், எல்லை களை வரையறுக்க இரண்டு கூட்டுக்குழுக்களும் உருவாக்கப்பட்டன.
(இவை கூடவேயில்லை என்பது தனிக்கதை!) அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒன்றை யொன்று  முதன்மை வணிக உறவு நாடாக அங்கீகரித்து, பல்வேறு சலுகைகளுடன் வணிகத்தை மேம்படுத்த ஒப்புக் கொண்டன. கைமாறாக, பிரான்சின்மீதான இங்கிலாந்தின் கடற்கொள்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
ஆனாலும், அமெரிக்க மாலுமிகளை வலுக்கட்டாயமாக இங்கிலாந்துக் கடற்படையில் பயன்படுத்துவதைத்  தடுப்பதற்கான உறுதிமொழிகளை ஜே-யால் பெறமுடிய வில்லை.
 இதுவே, 1812இல் இங்கிலாந்துடன் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதுடன், அந்தப் போரே, எல்லைப் பிரச்சனைகளுக்கும் முடிவுகட்டியது. அமெரிக்க விடுதலைப்போரில் துணைநின்று, அதற்காக இங்கிலாந்து டன் போரிலும் ஈடுபட்ட பிரான்சுடன் 1778இல் கூட்டணி ஒப்பந்தமே செய்யப்பட்டிருந்தபோதும், வணிகம்தான் முக்கியம் என்ற நிலையை அமெரிக்கா எடுத்தது கவனிக்கத் தக்கது.

விரிவிதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் போராடி, விடுதலையடைந்த அமெரிக்கா, விடுதலைக்குப் பின், போர்களைத் தவிர்த்தது, போர்களில் ஈடுபட்டது ஆகிய இரண்டுமே வணிகத்தின் (பொருளாதார) வளர்ச்சியை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டுதான்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 40% மாணவர்களின் குடும்ப வருமானம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கல்லூரி கட்டணம் அதிகரித்து அறிவிப்புகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம், கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பியது.
2017ம் ஆண்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த பல்கலைக்கழகத்தின் 40% மாணவர்களின் வீட்டு வருமானம் மாதத்திற்கு ரூ. 12 ஆயிரம் வரை மட்டுமே என்பது தெரியவந்துள்ளது.

 அதில் சிலர் விபரம் 
பிகாரின் சாசரம் பகுதியில் பிறந்த வளர்ந்த கம்ரான் தன்னுடைய பள்ளிப்படிப்பினை அரசு பள்ளியில் தான் படித்தார்.
 அவருடைய அப்பா பிங்கான் பாத்திரங்கள் விற்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மாத சம்பளம் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை. கம்ரானின் தம்பி அலிகார் பல்கலைக்கழகத்தில ஜெர்மன் மொழி கற்று வருகிறார்.
சாசரமில் கம்ரானின் தங்கை 9ம் வகுப்பு படித்து வருகிறார். மெரிட் மூலம் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற கம்ரானுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப்பாக ரூ. 2000 வழங்கி வருகிறது.
வீட்டில் இருந்தும் சில நேரங்களில் பணம் அனுப்பப்படுகிறது. “ஒரு 10 ரூபாய் இருந்தாலும் கூட இங்கு வாழ்ந்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் இதற்கு மேல் வீட்டில் இருந்து பணம் ஏதும் வாங்க இயலாது. கல்லூரி படிப்பை பாதியில் விடுவதை தவிர வேறு ஏதும் வழி தெரியவில்லை” என்று கூறுகிறார் கம்ரான்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மரில் இருந்து படிக்க வந்துள்ளார் ராகேஷ் குமார்.
அவருடைய அப்பா ஒரு விவசாயி. அவருடைய அப்பாவிடம் 30 பிகாக்கள் உள்ளன.
ஆனால் அதில் 5 முதல் 7 பிகாக்கள் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய இயலும். ஒரு வருடத்திற்கு ரூ. 40 ஆயிரம் மட்டுமே வருமானமாக வரும் என்று தெரிவிக்கிறார்.
 ராகேஷ் குமார் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போது, அவருடைய அண்ணன் குடும்ப சூழல் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேறினார். தற்போது சூரத்தில் இருக்கும் எஃகு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
என்னால் நிச்சயமாக இந்த கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள இயலாது. படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு தான் நான் செல்ல வேண்டும்.

உஸ்மான் அகமது உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
மாத கட்டணம் ரூ.100க்கும் குறைவாக வசூலிக்கப்பட்ட பொதுப்பள்ளியில் படித்து கல்வி கற்றவர். 5 வருடங்களுக்கு முன்பு அவருடைய தந்தை மாரடைப்பு நோயால் மரணமடைந்துவிட்டார். குதிரைக்கு லாடம் கட்டும் பணியை அவர் மேற்கொண்டிருந்தார்.
அவர் இறந்த பின்பு வீட்டின் வருமானம் கேள்விக்குறியானது. உஸ்மானின் அண்ணன்களில் ஒருவர் தையற்கலைஞராகவும், மற்றொருவர் மெக்கானிக்காவும் உள்ளார். உஸ்மானின் தம்பிகளில் ஒருவர் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
 மற்றொருவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். என்னுடைய அண்ணன் மாதத்திற்கு ரூ. 3 ஆயிரம் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்புகிறார். இந்த கல்விக்கட்டணம் மேலும் உயர்ந்தால் வீட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியேதும் இல்லை.

உ.பி.யின் சஹரான்பூரை சேர்ந்தவர்.
ஏ.எம்.யூவில் பட்டப்படிப்பை பெற்றார். அம்மாநிலத்தின் சிறுபான்மையினருக்கான உதவித்தொகை கிடைக்கப் பெறுவதால் கல்வி கட்டணத்தை சமாளித்து வருகிறேன்.
 கொஞ்சம் இருக்கும் மீதப்பணத்தில் மெஸ்க்கான கட்டணத்தையும் செலுத்துகின்றேன். என் அப்பா வைத்திருக்கும் 10 பிகாஸ் நிலத்தில் தான் எங்களின் வாழ்வாதாரம். வருடத்திற்கு ரூ. 50 ஆயிரத்துக்கும் குறைவான வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஏ.எம்.யூவில் ஷாத்தின் தங்கை பேஷன் டிசைனிங் படித்து வருகிறார். ”என்னுடைய மாமா என்னுடைய இதர தேவைகளை கவனித்து கொள்கிறார்.
என்னுடைய குடும்பத்தினர் கடனால் உழன்று வருகின்றனர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் அது குறித்து வெளிப்படையாக அறிவிக்கமாட்டார்கள். மைனாரிட்டி ஸ்காலர்ஷிப்பாக ரூ. 2000 மற்றும் ட்யூசன் எடுப்பதன் மூலம் ரூ. 3000 பணத்தை வைத்து என்னுடைய தேவையை தீர்த்து வருகின்றேன். ஒன்று நான் கல்விக்கடன் வாங்க வங்கிக்கு செல்ல வேண்டும். அல்லது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.

பிகாரின் தனப்பூரில் நந்தினி முதலாமாண்டு பஷ்தோ படித்து வருகிறார். அவருடைய தந்தை ஒரு விவசாயி. அவர்களுடைய நிலத்தில் இருந்து வரும் வருமானம் தான் அவர்களின்
வாழ்வாதாரம். வருடத்திற்கு ரூ. 90 ஆயிரம் வரை வருமானம் ஈட்டப்படுவதாக அறிவிக்கிறார் நந்தினி ஷர்மா. ஷர்மாவின் தங்கை பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார்.
 இதர தேவைகளுக்காக டியூசன் எடுத்து வருகின்றேன்.
அதன் மூலம் மாதம் 3 ஆயிரம் சம்பாதிக்கின்றேன். கல்வி கட்டணம் மேலும் உயருமென்றால் படிப்பை நிறுத்துவது தான் தீர்வாக அமையும்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஹோஷாங்காபாத்தில் இருக்கும் பிபரியாயில் பிறந்தவர் விகால்ப் குமார். ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவில் எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் விகால்ப். அவருடைய அப்பா ஃப்ரீலான்ஸ் ஜெர்னலிஸ்டாக பணியாற்றுகிறார் அவர்.
இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்று கூறும் விகால்ப்,
இந்த கட்டண உயர்வு எங்களால் சமாளிக்க இயலாததாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
   வேலை வாய்ப்புகள் 

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13 வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது
: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி
: 21.11.2019 

விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய எண்ணைக் கழகத்தில் (indian oil corporation) வேலை

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 'டெக்னீசியின் அப்ரென்டிஸ்' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.10.2019 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள் : 22.11.2019

விபரங்களுக்கு:www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------- 
  பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
 ----------------------------------------------------------------------------------------------------------------------------

 பயங்கரவாதி கார்பரேட் சாமியார்
கார்பரேட் சாமியார் ராம்தேவ் ஒரு டிவி நேர்காணல் நிகழ்ச்சியில் சாதி ஒழிப்பை வலியுறுத்திய அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்களின் ஆதரவாளர்களை அறிவார்ந்த பயங்கரவாதிகள் என்று கூறியதால் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பதஞ்சலி உணவுப் பொருட்கள் விற்பனை மூலம் தொழிலதிபராகவும் யோகா குருவாகவும் உள்ள பாபா ராம்தேவ் ஒரு தனியார் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த நேரகாணல் ஒளிபரப்பானது.

 அதில், பாபா ராம்தேவ், டாக்டர் அம்பேத்கரையும் பெரியாரையும் பின்பற்றுபவர்களை கண்டு, தான் கவலை கொள்வதாகவும், அஞ்சுவதாகவும், தந்தை பெரியாரை “அறிவார்ந்த தீவிரவாதி” என்றும் விமர்சித்தார்.

மேலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சிந்தனை கொண்ட கும்பலுக்கு, ஒவைசி தலைவர் போல செயல்படுவதாகவும் கூறினார்.

ராம்தேவின் இந்த பேச்சுக்கு டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
பெரியார், அம்பேத்கர் குறித்த தனது கருத்துக்கு, பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

ராம்தேவுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பலரும் பதிவிட்டதால், ராம்தேவுக்கு எதிரான கண்டனம் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது.
மேலும், பலர் ஜெய் பெரியார், ஜெய்பீம் என்று பதிவிட்டதால் இந்த வாசகமும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாபா ராம்தேவ் பேசியதைக் குறிப்பிட்டு, பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதலை கடுமையாக கண்டனம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் கீழ்நிலையில் உள்ளவர்களுக்காகப் போராடினர். அவர் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அவர் சாதி முறைக்கு எதிராகப் பேசினார். அனைத்து ஒடுக்குகிற சக்திகளின் எதிர்ப்பிலிருந்தும் திராவிடக் கொள்கையை திமுக பாதுகாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

M.K.Stalin @mkstalin
I strongly condemn this targeted attack on Periyar and our ideology by right-wing forces.

Periyar fought for the downtrodden classes. He voiced the rights of women. He spoke against the caste system.

The DMK will defend the Dravidian ideology against all such oppressive forces. https://twitter.com/Kalaignarnews/status/1196284011837968384 




Kalaignar Seithigal @Kalaignarnews

தந்தை பெரியார் குறித்து சாமியார் ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு : இந்திய அளவில் டிரெண்ட் ஆன ‘#ARRESTRAMDEV’!#RamdevInsultsPeriyar #ArrestRamdev #shutdownPatanjali#PERIYAR #Periyar_India_Pride #Ramdevhttps://www.kalaignarseithigal.com/viral/2019/11/18/baba-ramdev-controversy-over-periyar-arrest-ramdev-hashtags-trended-in-twitter 
1,558
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை

மேலும் ட்விட்டரில் பாபா ராம்தேவ்வை கைது செய்யவும், பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கக் கோரியும் ட்விட்டரில் #RamdevInsultsPeriyar, #ArrestRamdev, #ShutdownPatanjali என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பாபா ராம்தேவின் கருத்துக்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் #ArrestRamdev என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

 உங்கள நீங்களே கலாய்ச்சி கிட்டா நாங்க என்ன பண்ரது ?
 --------------------------------------------------------------------------------------------
“சட்டமன்றத் தேர்தலில் ரஜினி மதுரையில் போட்டியிட வேண்டும்”  
- ரஜினி ரசிகர்கள் தீர்மானம்.

 --------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?