அதிகப்படியான பாதிப்பு.......,......

 கனமழைக்கு வாய்ப்பு இல்லை
 இந்தியவானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, அக்டோபர் 3வது வாரம் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழை காலமாகும். இவ்வாண்டு வட கிழக்கு பருவமழை, அக்டோபர் 15ம் தேதி, தொடங்கியது.

கியார் மற்றும் மகா புயல்கள் இந்த காலகட்டத்தில் உருவாகின. 
ஆனால், அவை நேரடியாக தமிழகத்தை நெருங்கவில்லை. ஆனால் பரவலாக மழை பெய்ததால், அக்டோபர் 31 வரை தமிழகத்தில் 17 செமீ பெய்வது வழக்கம்.
இந்த வருடம், இதே காலகட்டத்தில் 22 செமீ பெய்துள்ளது.
 தேசிய அளவில், இக்காலகட்டத்தில் சராசரியாக, 7 செ.மீ மழை பெய்யும். 
ஆனால், இம்முறை, 11 செ.மீ பெய்துள்ளது. 
இது இயல்பைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த 'மகா' புயல் தமிழகத்தை விட்டு விலகி லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து சென்று கொண்டுள்ளது. 
எனவே, தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள மகா புயல், தீவிர புயலாக மாறியது. 
மங்களூரில் இருந்து மேற்கு வட மேற்கு திசையில் அரபிக்கடலில், 390 கிலோ மீட்டர் தொலைவில் புயல் உள்ளது.
 இதேபோல, லட்சத்தீவு பகுதியில் அம்மினி தீவில் இருந்து 400 கிலோ மீட்டர் வடக்கு வடமேற்கு திசையிலும், புயல் உள்ளது.

புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 கனமழைக்கு வாய்ப்பு இல்லை .

வரும் 4ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் 
இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதுஎன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
MSG உப்பு என்றால் என்ன?

உணவுக்கு சுவை கூட்ட பயன்படும் ஒரு வேதியியல் உப்பு மோனோ சோடியம் குளூட்டாமேட்.MSG உப்பு.

இந்த மோனோ சோடியம் குளூட்டாமேட்உப்பை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர் அஜினோமோட்டோ
அந்த நிறுவனத்தின் பெயராலேயே இந்த உப்பை அழைக்கிறார்கள்.
இப்போது தெரிகிற

 கடல்பாசியில் இருந்து தயாரிக்கப் பட்ட அஜினோமோட்டோ தற்போது கோதுமை, பீட்ரூட், கரும்பு போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

MSG என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த உப்பின் வேதியியல் பெயர் மோனோ சோடியம் குளூட்டாமேட்.

 சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உப்பை உணவில் சுவைகூட்ட பயன்படுத்தினார்கள்.

இந்த உப்பில் சோடியமும் குளூட்டாமேட்டும் அடங்கியிருக்கிறது.
சோடியம் அன்றாடம் நாம் பயன்படுத்தும் உப்பில் நிறைந்திருக்கிறது.

நமது உடலில் இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், நரம்பு மற்றும் தசைகளின் இயக்கம் சீராக இருக்க சோடியமும் சீராக இருக்க வேண்டும்.
 ஆனால் இவை அளவுக்கு அதிகமாகும் போது உடல் அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளாகிறது.

அடுத்தது குளூட்டாமேட். அன்றாட தேவைக்கு ஏற்ற அளவை நாம் உணவின் மூலமாக பெற்றுவிடுகிறோம் என்பதால் இவற்றின் அளவு அதிகரிக்கும் போது மூளையின் முக்கிய பகுதியைச் சிதைத்து பல உபாதைகளை உண்டாக்கிவிடும்.

ஏனெனில் அஜினோமோட்டோவில் சோடியம் 22% குளூட்டாமேட் 78% அளவு இருப்பதால் இவை நிச்சயம் பாதிப்பை மட் டுமே உண்டாக்கும்.


பாக்கெட்டில் அடைத்த உணவுப்பொருள்களில் சுவையூட்டவும், அதை பதப்படுத்துவதற்கும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், துரித உணவுகள் அனைத்திலும் இந்த வேதியியல் உப்பு அதிகப்படியான சுவையூட்டவே என்று சேர்க்கப்பட்டுவருகிறது.
ஆரம்பத்தில் இந்த உப்பு உணவகங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில் உணவில் அதிகப்படியான சுவையைக் கொடுக்கும் என்று விளம்பரங்கள் அதிகமாகவே பெரும்பாலான மக்கள் வீட்டில் சமைக்கும் போதும் அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

மாதா மாதம் மளிகை லிஸ்ட்டில் அஜினோமோட்டோ பெயரில்லாமல் இருக்காது.
 நஞ்சை வாங்குகிறோம் என்றே தெரியா மல் இன்றும் மக்கள் இந்த வேதியியல் உப்பை சேர்த்தால் தான் உணவு சுவையாக இருக்கும் என்று நம்பி கொண்டிருக்கி றார்கள்.
 அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி 1968 ஆம் ஆண்டு இந்த MSG வேதியியல் உப்பை ஆய்வு செய்தது.
சீரான அளவு எடுத்து கொள்ளும் போது இது எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது என்று தெரிவித்தது. ஆனால் எல்லா உணவு வகைகளிலும் இந்த வேதியியல் உப்பை பயன்படுத்தும் போது அவை உடலில் சீராக இல்லாமல் அளவுக்கதிகமாகவே சேர்கிறது. அதனால் இவை ஆபத்தை மட்டுமே உண்டாக்குகிறது.
எப்போதாவது வரும் தலைவலி இப்போதெல்லாம் அடிக்கடி வந்துவிடுகிறது.
 தலைவலியிலும் வாட்டி எடுக்கும் தீராத தலைவலியை உண்டாக்கும் ஒற்றைத்தலைவலிக்கு காரணங்களில் முதன்மையானது அதிகப்படியாக சேர்க்கப்படும் இந்த வேதியியல் உப்பு தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மூளையைக் கடுமையாக பாதித்து மூளையில் இருக்கும் செல்களை அழித்துவிடுகிறது. மேலும் மூளையின் முக்கிய பகுதி யான ஹைப்போதலாமஸ் என்னும் பகுதியை சிதைத்து விடுகிறது.
இதனால் நினைவுத்திறன் குறைகிறது.
குழந்தைகள் அதிகப்படியான துரித உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது அதிகப்படியான மந்தம் சுறுசுறுப் பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாவதும் உண்டு.
இதை இன்றைய பிள்ளைகளிடம் நாம் கண்கூடாக பார்க்கி றோம்.

தொடர்ந்து இந்த வேதி உப்பு சேர்க்கப்பட்ட உணவை எடுத்துகொள்ளும்போது உடலில் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு குழந்தைகளின் மூளை செயல்பாட்டு திறனும் குறைகிறது.

சிறுநீரக பணியில் உணவுகளின் கழிவுகள் மற்றும் உப்புகள் சிறுநீரகத்தின் உட்புறங்களில் தேங்க தொடங்குகிறது. இவை தான் சிறுநீரக கற்களாக உருமாறதொடங்குகிறது.
அதிகப்படியான உப்புகள் நிறைந்திருக்கும் இந்த வேதியியல் உப்பு இந்தப் பணியை செவ்வனே செய்கிறது.

மசாலாக்கள் நிறைந்த துரித உணவுகளில் சுவையைக் கூட்ட சேர்க்கப்படும் இந்த வேதியியல் உப்பு இதயத்திலும் பிரச் சனைகளை உண்டாக்குகிறது.
இதயத்தில் படபடப்பு, இதய அடைப்பை வேகமாக ஏற்படுத்துகிறது.

மூளையின் முக்கிய உறுப்பான ஹைபோதலாமஸ் பகுதியைத் தூண்டுகிறது.
அடிக்கடி அதிகமாக உணவு உண்ண வேண் டும் என்ற உணர்வை தூண்டி உடல் பருமனுக்கு உள்ளாக்குகிறது.
அதிகப்படியான உடல் எடை உடல் சோர்வு போன்ற பிரச் சனைகளையும் உண்டாக்கிவிடுகிறது.

இவை மட்டுமல்லாமல் வயிறு வலி, இரைப்பை பிரச்சனை, அல்சர், சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிப்பு, ஆஸ் துமா, மன அழுத்தம்,உணர்வின்மை, கழுத்து இறுக்கம், எரிச்சல், நீரிழிவு என அடுக்கடுக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு செல்லும் காரணங்களில் இவைகளும் ஒன்றாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

ஒரு பொருளில் பல பயன்கள் என்று பயன்படுத்திய முன்னோர்களின் வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பல நோய் களை உருவாக்கும் ஒரு பொருளை விடாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------- 
ந்நாளில் , 
முன்னால் 
பரிதிமாற் கலைஞர் 


1795  ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது.


1903 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர்


1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.


1950 – ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத்தாளர்

பரிதிமாற் கலைஞர்
-9மதுரை அருகே விளாச்சேரி ஊராட்சி எனும் ஊரில் கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக 6, ஜூ லை 1870ல்  பிறந்தார்.-9
 வடமொழியை தந்தையாரிடமும், தமிழை ம9துரை சபாபதி முதலியாரிடமும் கற்றார்.
 இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், 9இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.
 கலாவதி (1898), ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார்.
 இராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார். தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.
அவர் 1898 ல் மறைந்தபோது,
 மாமதுரைப் பெம்மான்மேல் மாலையெனப் பேர்புனைந்து
 காமர் சிலேடை வெண்பாக் கட்டுரைத்த பாவலனே
பாமணார் கோவே நீ பாரினைவிட் டேகியது
தாமதுரை சாமீ தமியேன்செய் தீவினையோ
என்று பாடி வருந்தினார்
இது தவிர வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார்

தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 99லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன.
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார்.
அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
  • ரூபாவதி
  • கலாவதி
  • மான விஜயம்
  • தனிப்பாசுரத் தொகை
  • பாவலர் விருந்து
  • மதிவாணன்
  • நாடகவியல்
  • தமிழ் வியாசங்கள்
  • தமிழ் மொழியின் வரலாறு.
  • சித்திரக்கவி விளக்கம்
  • சூர்ப்ப நகை - புராண நாடகம்

பதிப்பித்த நூல்கள்

  • சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
  • மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
  • புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
  • உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
  • தனிப்பாசுரத்தொகை (1901)
33 ஆண்டுகளே வாழ்ந்த பரிதிமாற் கலைஞர் நவம்பர் 2, 1903இல்  மறைந்தார்.
1947  ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு நீளமான இறக்கையும், 5 மாடிக் கட்டிடத்தின் உயரமும் கொண்டதாக வருணிக்கப்பட்ட, இன்றுவரை உலகின் மிகப்பெரிய இறக்கை கொண்ட விமானமான ‘ஹ்யூஜஸ் எச்-4 ஹெர்க்குலிஸ்’, முதலும் கடைசியுமாகப் பறந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் யு-போட் என்னும் நீர்மூழ்கிகளால், அட்லாண்ட்டிக்  கடற்பகுதியில் பெரும் இழப்புகளைச் சந்தித்தது அமெரிக்கா.
அருகாமை பகுதிகளுக்கு மட்டுமே தளவாடங்களை எடுத்துச்செல்லும் திறன்கொண்ட விமானங்கள்தான் அப்போது இருந்தன.
தொலைதூரத்தி லுள்ள பிற போர்க்களங்களுக்கும், மிகப்பெரிய எடையைச் சுமந்து செல்லத்தக்க மூன்று விமானங்களை இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரித்துத்தருமாறு 1942இல் அமெரிக்கப் போர்த்துறை கேட்டுக்கொண்டது.
கப்பல் கட்டுபவரான ஹென்றி கெய்சர், விமான வடிவமைப்பாள ரான ஹோவர்ட் ஹ்யூஜஸ் உதவியுடன், 68 டன் சரக்குகள் அல்லது, ஒவ்வொன்றும் 30 டன் எடையுள்ள இரண்டு கவசவண்டிகளைச் சுமந்துசெல்லக்கூடிய ‘பறக்கும் சரக்குக் கப்பல்’ ஒன்றை உருவாக்க முனைந்தனர்.

போரினால் அலுமினியம் கிடைப்பதிலிருந்த சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால், தயாரிப்புப் பணிகள் 16 மாதங்களுக்குத் தொடங்கவேயில்லை.
 இதனால், கெய்சர் விலகிக்கொண்டார். அக்காலத்தின் மிகச்சிறந்த முன்னேற்றமாகக் கருதப்பட்ட ட்யூராமோல்ட் முறையில் பாதுகாக்கப்பட்ட மரத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட இவ்விமானம், போர் முடியும்வரை முழுமைபெறவில்லை.
1947இல் (ஒரு விமானம் மட்டும்) கட்டி முடிக்கப்பட்டபோது 2.3 கோடி டாலர்கள் (இன்று இந்திய ரூபாயில் 2,150 கோடி!) செலவாகியிருந்தது.
 8 என்ஜின்களும், 321 அடிநீள இறக்கைகளும் கொண்ட இது 4 பகுதிகளாக கலிஃபோர்னியாவின் லாங் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டது. அதைச்சுற்றி விமானக்கொட்டகையும், நீரில் இறக்குவதற்கு சரிவுப் பாதையும் அமைக்கப்பட்டன.
நவம்பர் 2 அன்று, ஏராளமா னோர் முன்னிலையில் 36 பேருடன், 70 அடி உயரத்தில், 217 கி.மீ. வேகத்தில் 26 நொடிகள் மட்டும் பறந்து,  பறக்கும் திறன் நிரூபிக்கப்பட்டதோடு, போர் முடிந்து விட்டதால் தேவையின்றிப்போன இதன் பயன்பாடு முடிந்து போனது.
ஹ்யூஜஸ் உயிருடன் இருந்தவரை முறையாகப் பராமரிக்கப்பட்டுவந்த, இதன் உரிமையாளர் யார் என்பதில், அவர் இறந்தபின் சச்சரவுகள் ஏற்பட்டு 1970களில் தீர்க்கப்பட்டது.
 இது தற்போது ஓரிகானிலுள்ள எவர்க்ரீன் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்திலுள்ளது.
 2019இல் வானில் பறந்துகொண்டே செயற்கைக்கோள்களை ஏவ உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோலாஞ்ச் என்ற விமானத்தின் 385 இறக்கை இதைவிடப்பெரிது என்றாலும், அது வழக்கமான விமானமில்லை என்பதுடன், பறக்கும் படகு(கப்பல்!) என்ற வகையிலும், ஹெர்க்குலிஸ் தனித்தன்மை கொண்டதாகவே விளங்குகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 கமல் ஹாசன்
 60 ஆண்டு திரைப்பயணம்
  கொண்டாட்டம்
களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமான கமல் ஹாசன் திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர் என்று பன்முக தன்மை கொண்டவராக அசத்தி வருகிறார் கமல்.

60 ஆண்டுகள் திரையுலகில் நிறைவு செய்ததை முன்னிட்டு கமலுக்கு பல்வேறு பிரபலங்கள், பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக வருகிற நவம்பர் 7, 8, 9, ஆகிய மூன்று நாட்களும் இதை கொண்டாட முடிவு செய்துள்ளனர். இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏறத்தாழ 106 வருடங்களைத்‌ தொட்டுத்‌ தொடரும்‌ இந்தியத்‌ திரையுலகத்தின்‌ நீண்ட நெடும்‌ பயணத்தில்‌, கமல்‌ஹாசன்‌ எனும்‌ ஒற்றை மனிதனின்‌ வாழ்வும்‌ அர்ப்பணிப்பும்‌ 60 வருடங்களாக இருப்பது பெரும்‌ பங்களிப்பாகும்‌.

தனது 65 வயதில்‌ 60 வருடங்கள்‌ ஒரு நடிகராக, ஈடு இணையற்ற தனித்தன்மையுடன்‌, எவ்விதத்திலும்‌ சமரசம்‌ செய்திடாத பல வெற்றிகளை பெற்று, பல்துறை வித்தகராக திரையுலகிலும்‌ சமூக வாழ்விலும்‌ விஸ்வரூபம்‌ எடுத்து நிற்கின்றார்‌ பத்மபூஷன்‌ திரு. கமல்ஹாசன்‌.
திரைத்துறையின்‌ பல்வேறு துறைகளில்‌ அடியெடுத்து வைக்க விரும்பும்‌ சமகால கலைஞர்களுக்கும்‌, எதிர்கால சந்ததியினருக்கும்‌ “தரம்‌” என்பதற்கான ஒரு தங்கத்‌ திறனளவாக திரு.கமல்‌ஹாசன்‌ அவர்கள்‌ உயர்ந்து நிற்கிறார்‌. கலையின்‌ மீது பேரார்வமும்‌ பெருங்காதலும்‌ கொண்ட ஒரு தனி மனிதன்‌, எவ்வாறு போற்றுதலுக்குறிய நாயகனாக உருவெடுக்கிறான்‌ என்பதற்குத் திரு.கமல்ஹாசன்‌ அவர்களே பெரும்‌
உதாரணம்‌.

காலத்தால்‌ அழிக்க முடியா பல அரிய படைப்புகளையும்‌, திரை உருவாக்கத்தில்‌ புதிய யுக்திகளையும்‌, தொழில்நுட்பங்களையும்‌ உட்புகுத்தி உலக திரைப்படங்களுக்கு, நிகராக இந்திய திரைப்படங்களை தரம்‌ உயர்த்துவதை ஒரு தவமாகவே செய்து வருகிறார்‌ திரு.கமல்‌ஹாசன்‌.

திரு.கமல்‌ ஹாசன்‌ அவர்களின்‌ இந்த ஈடு இணையற்ற பயணத்தினைக்‌ கொண்டாடும்‌ விதமாக, நவம்பர்‌ 7, 8, 9 ஆகிய தேதிகளில்‌ ஒரு தொடர்‌ கொண்டாட்டமாக ராஜ்கமல்‌ ஃப்லிம்ஸ்‌ இண்டதேஷனல்‌ நிறுவனம்‌ அறிவிக்கின்றது.
7 நவம்பர்‌ 2019: திரு. கமல்ஹாசன்‌ அவர்களின்‌ பிறந்த தினமே அவாது தந்தையாரும்‌ சுதந்திர போராட்ட வீரரும்‌, வழக்கறிஞருமான அய்யா திரு. டி சீனிவாசன்‌ அவர்களின்‌ நினைவு தினமுமாகும்‌. எனவே அன்றைய தினம்‌ திரு.கமல்ஹாசன்‌ அவர்கள்‌, தனது தந்தையாரின்‌ திருவுருவச்சிலையினை தமது சொந்த ஊரான பரமக்குடியில்‌ தமது குடும்பத்தினருடனும்‌, நண்பர்களுடனும்‌ காலை 10.30 மணி அளவில்‌ திறக்கவுள்ளார்‌.

இந்நிகழ்வு மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ நிர்வாகிகள்‌, திரு.கமல்‌ஹாசன்‌ அவர்களின்‌ அன்பிற்குரிய கட்சி , உறுப்பினர்கள்‌, நற்பணி இயக்கத்தார்‌ மற்றும்‌ ஊடகங்கள்‌ முன்னிலையில்‌ நடைபெறும்‌.

8 நவம்பர்‌ 2019: தனது திரையுலக குருவான திரு.பாலச்சந்தர்‌ அவர்களின்‌ திருவுருவச்‌ சிலையினை, ராஜ்கமல்‌ ஃப்லிம்ஸ்‌ இண்டர்நேஷனல்‌ நிறுவனத்தின்‌ புதிய அலுவலகத்தில்‌ காலை 9.30 மணி அளவில்‌ திறக்கவுள்ளார்‌.
இந்நிகழ்வில்‌ திரு.பாலச்சந்தர்‌ அவர்களின்‌ குடும்பத்தாரும்‌, திரையுலகத்தினைச்‌ சார்ந்த முக்கிய பிரமுகர்களும்‌, ஊடக நண்பர்களும்‌ கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்‌.
காந்தியாரின்‌ 150வது ஆண்டு விழாவினைக்‌ கொண்டாடும்‌ விதமாக திரு.கமல்‌ஹாசன்‌ அவர்களின்‌ இயக்கத்தில்‌ வெளியான “ஹே ராம்‌” திரைப்படத்தின்‌ சிறப்பு காட்சி, சென்னை சத்யம்‌ திரையரங்கில்‌ மதியம்‌ 3.30 மணியளவில்‌ திரையிடப்படவுள்ளது.

இந்நிகழ்வின்‌ பொழுது வருகை தரும்‌ திரையுலக பிரமுகர்கள்‌ மற்றும்‌ ஊடகத்தினருடன்‌ இத்திரைப்படம்‌ குறித்து திரு. கமல்‌ஹாசன்‌ அவர்கள்‌ கல9ந்துரையாடல்‌ நடத்தவிருக்கிறார்‌.
999999999
9 நவம்பர்‌, 2019: கலையுலக நாயகன்‌ திரு.கமல்ஹாசன்‌ அவர்களின்‌ 60 ஆண்டு கலைப்பயணத்தினை கொண்டாடும்‌ வகையில்‌ இசைஞானி இளையராஜா அவர்களின்‌ மிகப்பிரமாண்டமான இசை நிகழ்ச்சி
நடைபெறவுள்ளது.
பல்வேறு திரைப்‌ பிரபலங்கள்‌ மற்றும்‌ நட்சத்திரங்களும்‌ கலந்துகொண்டு சிறப்பிக்கும்‌ இந்த இசைவிழாவில்‌ பல்வேறு நிகழ்ச்சிகள்‌, கொண்டாட்டங்கள்‌ நடைபெறவுள்ளது.

மேற்சொன்ன அனைத்து நிகழ்ச்சிகளும்‌ கமல்‌ஹாசன்‌ என்கின்ற மாமனிதனை நேசத்துடனும்‌, நம்பிக்கையுடனும்‌ கொண்டாடும்‌ தமிழக மக்களின்‌ உணர்வுப்பூர்வமான, உயிர்ப்புள்ள ஒரு நிகழ்வாக அமையும்‌ என்று நாங்கள்‌ உறுதியாக நம்புகின்றோம்‌. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியின்‌ ஒளிபரப்பு உரிமம்‌ விஜய்‌ தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 




  வேலை வாய்ப்புகள் 
ISRO-ல்- உள்ள காலிப்பணியிடங்கள் 
Indian Space- Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------  “Air India Engineering Services Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant Supervisor (General Admin/ Finance/ MMD)
காலியிடங்கள்: 170
சம்பள விகிதம்: ரூ.19,570
வயது வரம்பு: 1.8.2019 தேதியின்படி 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு அல்லது Aircraft Maintenance/ Computer Science Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து AVIATION துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன்மூலம் செலுத்த வேண்டும். (SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.500).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணயைதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 5.11.2019. மேலும் காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------- 
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி 
இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------

  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
ராணுவத்தின் கீழ் செயல்படும் “Border Roads Organisation” 
-ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------
 உற்பத்தி குறைந்து உள்ளது
 இந்தியாவின் உள்கட்டமைப்பு உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீதம் சரிந்து உள்ளது.
 இது இந்த ஆண்டின்  மிக மோசமான செயல்திறன் ஆகும்.
 தொழில்துறை உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மிக விரைவான விகிதத்தில் குறைந்து உள்ளது

கச்சா எண்ணை உற்பத்தியில் 5.4 சதவீதமும்,
 இயற்கை எரிவாயு உற்பத்தியில் 4.99 சதவீதமும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலக்கரி, இரும்பு, கச்சா எண்ணை உற்பத்தி, கியாஸ் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, சிமெண்டு, மின்துறை, உரத்துறை ஆகிய 8 துறைகள் நாட்டின் முன்னணி உற்பத்தி துறைகளாக உள்ளன. 
இதன் வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 
உரம் தவிர, மற்ற 7 துறைகளிலும் உற்பத்தி வளர்ச்சி சரிவை கண்டுள்து.

அதே நேரத்தில் எண்ணை சுத்திகரிப்பு துறையில் மைனஸ் 6.7 சதவீதமும், சிமெண்டு உற்பத்தியில் மைனஸ் 2.1 சதவீதமும், இரும்பு உற்பத்தியில் மைனஸ் 0.3 சதவீதமும், மின்துறையில் மைனஸ் 3.7 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

உரத்துறை மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. 
அந்த துறையில் 5.4 சதவீதம் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்  பொருளாதாரம் செப்டம்பரில் 7.2 சதவீமாக  ஆக உயர்ந்தது என்று கூறி உள்ளது.
 இது  பொருளாதாரத்தில் மந்த நிலையின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. 

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்   அக்டோபரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக  ஆக உயர்ந்து உள்ளது என கூறி உள்ளது.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------


பிகில்;கைது எண்ணிக்கை 50.

சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டரில், கடந்த 25 ந்தேதி பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக் கட்டு போடப்படும் என்று விஜய் ரசிகர் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
பிகில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அந்த ரசிகர், மிரட்டல் விடுத்த தனது வீடியோ யூடியூப்பில் வெளியாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, தனது தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்புக் கேட்டு கெஞ்சி வீடியோ வெளியிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதேபோல, கிருஷ்ணகிரியில் பிகில் படத்தின் அதிகாலை 5 மணி காட்சியை, முன்கூட்டியே ஒரு மணிக்கே வெளியிடக் கோரி, விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
 இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை வைத்து மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதில் 7 சிறுவர்கள் உள்பட 18 விஜய் ரசிகர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், 7 சிறுவர்களும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
 மீதமுள்ள 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சினிமாவுக்காக ரகளையில் ஈடுபட்ட தங்கள் பிள்ளைகள் கைது செய்து அழைத்து சென்ற காட்சியைக் கண்டு காவல் நிலைய வாசலில் பெற்றோர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.
18 பேரும் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதும், பெற்றோர் தங்கள் முகத்தை மூடியபடியே செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தற்போது வரை கிருஷ்ணகிரி பிகில் ரகளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரசிகர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
/-- -----------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?