கண்துடைப்பு தொழில்நுட்பம்
அனைவரின் உரிமையும் மீறப்பட்டுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரின், முதல் இரண்டு நாட்கள், பெரும் அமளியுடன் துவங்கியது போலில்லாமல், மூன்றாவது நாளான நேற்று, எந்த பிரச்னையும் இல்லாமல் தான், துவங்கியது.
ஆனால், கேள்வி நேரம் முடிந்து, பூஜ்ய நேரம் துவங்கியதும், மத்திய சென்னை, தி.மு.க., எம்.பி., தயாநிதி, எழுந்து, தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா விவகாரத்தை கிளப்பினார்.
இது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென, தயாநிதி தரப்பில், 'நோட்டீஸ்' தரப்பட்டும், அதை, சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்காததால், தன் வாதத்தை, இன்னொரு வடிவத்தில் ஆரம்பித்தார்.
லோக்சபா விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உயர்த்திப் பிடித்த தயாநிதி, 'ஒட்டுமொத்த சபைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதால், உரிமை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்' என, அவர் குறிப்பிட்டதும், சபை அதிர்ந்தது.
விதிகளை மீறிவிட்டதாக கூறி, எம்.பி., அமைச்சர் என, தனி நபர்கள் மீதுதான் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவது, வழக்கம்.
ஆனால், தயாநிதி கூறுவது போல, ஒட்டுமொத்த சபையின் உரிமையையும் மீறியது யார் என்ற பரபரப்பு எழுந்தது.
தொடர்ந்து பேசிய தயாநிதி, கூறியதாவது:
'\சபாநாயகர் ஆகிய நீங்கள் உள்பட, இங்கிருக்கும் அனைவரின் உரிமையும் மீறப்பட்டுள்ளது.
நீங்கள், இதை எப்படி வேடிக்கை பார்க்கலாம். உங்களுக்காகவும் சேர்த்து தான் நான் பேசுகிறேன்.
கடந்த கூட்டத்தொடரில், 'பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை' என, மத்திய அரசு கூறியது.
அதன் பின்உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்' என்றது.
எது உண்மை. ?
மத்திய அரசு, பரூக் அப்துல்லாவின் கைது நடவடிக்கையை சபைக்கு கூறாமல் உச்ச நீதி மன்றத்துக்கு கூறுகிறது.
அதன் பிறகாவது, அரசு, சபாநாயகருக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம்; சபைக்கும் அறிவித்திருக்கலாம்.
இதை மீறியதால், சபாநாயகருக்கும், எம்.பி.,க்கள் அடங்கிய மக்களவைக்கும் உள்ள உரிமையை தான் நான் வலியுறுத்துகிறேன்.
என தயாநிதி கூறினார்.
செம்மொழி விருதுகள் வழங்க வேண்டும்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., பாலு பேசியதாவது:
செம்மொழியான, தமிழ் ஆய்வில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு தரப்படும் செம்மொழி விருதுகள், பல ஆண்டுகளாக தரப்படவில்லை.
அவற்றை, மீண்டும் வழங்க வேண்டும்.செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தில், இயக்குனர், பதிவாளர் உள்பட, 143 இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை விரைந்து நிரப்பிட, மத்திய அரசு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி :
கடல் அரிப்பின் காரணமாக, மூன்றில் ஒருபங்கு கடலோரப்பகுதிகளை, இந்தியா இழந்துவிட்டதாக, ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் மட்டும், 41 சதவீதம் கடலோரப்பகுதிகளை இழக்க நேர்ந்துள்ளது.
இதில், தூத்துக்குடி வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.
கடலோர கிராமங்கள் பல, காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு, வெறும் தடுப்புச்சுவர்கள் கட்டுவது மட்டுமே போதுமானது அல்ல. கடல் அரிப்பைத் தடுக்க, மத்திய அரசு, நிரந்த தீர்வு காண முன் வேண்டும்.
ராஜ்ய சபாவில் தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா :
நீதிமன்றங்களில், வழக்காடு மொழியாக, அந்தந்த மாநில மொழிகளே இருக்க வேண்டும். வழக்கு போட்டவர்களுக்கு மட்டுமல்லாது, வழக்கை நடத்தும் வழக்கறிஞர்களுக்கும், அது வசதியாக இருக்கும்.
அந்த வகையில், தமிழ் மொழியை, மெட்ராஸ் ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக ஆக்க வேண்டுமென்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக, நிலுவையில் இருந்து வருகிறது.
அதை உடனடியாக நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
ஆனால் வாய் நாற்றம் என்பது தன்னம்பிக்கையை குறைக்கும் பிரச்னை என்பது வந்தால்தான் தெரியவரும்.
வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் நீங்கள் அடுத்தவருடன் உரையாடுவது குறைந்து தனிமையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகும்.
அதனால் இந்த பிரச்னையை அப்படியே விட்டு விட வேண்டாம்.
அதே சமயம் பதற்றப்படவும் வேண்டாம்.
சரியாக
பல் துலக்காததுதான் வாய் நாற்றத்துக்கான முக்கியமான காரணம். தற்போதைய
வேலைப்பளுவால் சிலர் பல் துலக்கும் பழக்கத்தை கைவிட்டு மவுத்வாஷ்
பயன்படுத்துகின்றனர்.
மவுத்வாஷ் பயன்படுத்துவதால் பல்லின் இடுக்குகளில் உள்ள உணவுத்துகளை நீக்க முடியாது.
வயதானவர்கள் பல் செட் பயன்படுத்துவார்கள். அந்த பல் செட் தூய்மையாக இல்லாததாலும் நாற்றம் ஏற்படும்.
தவிர புகையிலை எடுத்துக்கொள்வது, அடைக்கப்பட்ட உணவுகள் (Junk Food) ஆகியவற்றாலும் பல்லில் நாற்றம் உருவாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில்,
முன்னால்
உலக ஹலோ தினம்
உலக மீனவர்கள் தினம்
உலக தொலைக்காட்சி தினம்
இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)
1969 - ஒக்கினாவா ப்ரிஃபெக்ச்சர் பகுதியை 1972இல் ஜப்பானிடம் ஒப்படைப்பதாக, ஜப்பானியப் பிரதமர் எய்சாக்கு சாட்டோ உடனான பேச்சுவார்த்தையில், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
வியட்னாம் போரில் வீசுவதற்காக இங்கு சேமிக்கப்பட்டிருந்த வேதியியல் ஆயுதங்களில் கசிவு ஏற்பட்டதையடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்ப்பியங்களால் அமெரிக்கா இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.
ரியூக்யூ தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த ஒக்கினாவாவை, இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கப்படைகள் கைப்பற்றின.
அந்நடவடிக்கையின்போது, ஒக்கினாவாவின் மூன்றிலொரு பங்கு மக்கள் பலியாயினர்.
(1995இல் எழுப்பப்பட்ட நினைவிடத்தில் 2,40,734 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன!) உலகப்போரில் ஜப்பானின் தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் காப்பாட்சியின்கீழ் வந்த இப்பகுதிக்காக, ரியூக்யூ தீவுகளுக்கான அமெரிக்க ராணுவ அரசு என்பது உருவாக்கப்பட்டது.
கொரியப்போரின்போது, அமெரிக்க ராணுவத்தின் தளமாகச் செயல்பட்ட இப்பகுதியில், சோவியத்துடனான பனிப்போர்க் காலத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் ஒக்கினாவா மக்களின் நிலங்களை அமெரிக்க ராணுவம் தளங்கள் அமைப்பதற்காகப் பிடுங்கிக்கொண்டதுடன், சுமார் 2.5 லட்சம் பேர் வேறிடங்களுக்கு விரட்டப்பட்டனர்.
இக்காலகட்டத்தில், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டதையடுத்து, ஜப்பானுக்கான அமெரிக்கப் படைகள் என்ற பிரிவே அமெரிக்க ராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டு, ஏராளமான படைகள் இங்கு குவிக்கப்பட்டன.
ஜப்பானின் ரகசிய ஒப்புதலுடன் ஏராளமான அணு ஆயுதங்களும் இப்பகுதியில் குவிக்கப்பட்டன. வியட்னாம் போரின்போது, அருகாமை பகுதி என்ற வகையில் தாக்குதலுக்கான முக்கிய மையமாக இது மாற்றப்பட்டது.
பசிபிக் பகுதியின் முக்கியத் தளம் என்று இதனை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுக்கொள்ளுமளவுக்கு மாறிப்போன நிலையில், அமெரிக்கா நுழைந்தபோதே உருவாகியிருந்த ரியூக்யூ விடுதலை இயக்கம் உச்சத்தை அடைந்தது.
வேதியியல் ஆயுதங்களின் கசிவு பற்றிய செய்திகள் பரவலான எதிர்ப்புகளை உருவாக்கிய நிலையில்தான், ஒக்கினாவாவை ஜப்பானிடம் திருப்பியளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டு, 1972இல் நிறைவேற்றியது. தங்கள் கட்டுப்பாட்டிலிருந்தபோது, தங்கள் சொத்தைப்போல அனைத்தையும் அமெரிக்கா மாற்றியிருந்தது. அமெரிக்கப் பாணி வலப்புறப் போக்குவரத்து, 1978இல் இடப்புறப்போக்குவரத்தாக மாற்றியமைக்கப்பட்ட செய்தி இத்தொடரில் 2018 ஜூலை 30இல் வெளியானது.
அமெரிக்கா வெளியேறிவிட்டதாகக் கூறிக்கொண்டாலும், ஜப்பானின் நிலப்பரப்பில் வெறும் அரை சதவீதமேயுள்ள ஒக்கினாவாவில்தான், ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படைகளில் 75 சதவீதம் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளன.
1972இலிருந்து 2009வரை பாலியல் வன்புணர்வு, கொலை, திருட்டு உள்ளிட்ட 5,394 குற்றங்களை, ஒக்கினாவா மக்களுக்கெதிராக அமெரிக்கப் படைகள் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அறிவுக்கடல்
--------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். ----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய எண்ணைக் கழகத்தில் (indian oil corporation) வேலை
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 'டெக்னீசியின் அப்ரென்டிஸ்' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.10.2019 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள் : 22.11.2019
விபரங்களுக்கு:www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf

பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள்
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019
விபரங்களுக்கு: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஜப்பான் என்ன சாதி?
100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது…
கீழ் சாதியனர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் ‘புராக்குமீன்’ (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் “சேரி” களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்…
அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது..
அவர்களுக்கு
செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது.
1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வி யடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது…
இனி ஜப்பான் அவ்வளவு தான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது.
காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக இருந்து, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் “ஹிரோஹிட்டோ’ (Hirohito) பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி கொண்டார்… அவருக்கு பதில் போர்களில் பெரும் பங்கு வகித்த அவரது மந்திரி ‘டோஜோ’ (Tojo) போர் வெறியை தூண்டியதற்காக தூக்கிலிடப்பட்டார்…(அப்பவும் மன்னர்களே தப்பினர் அவரின் எடுபுடிகளான மந்திரிகள் மாட்டிக்கொண்டனர்)
பின்னர் வந்த மக்களாட்சி முறை ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது…ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே ‘ஜப்பானியர்’ என்ற சொல்லை தவிர ‘நான் சாமுராய் இனம், என் பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்’ போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது.
பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது..
விடுமுறைகளை குறைத்தது…
புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது…
ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது…
சாதிய புனைப்பெயர்களை அழித்தது…
உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது…
அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது…
முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது.
“ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது”(Made in Japan) என்றால் அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் விட்டு கொடுக்கவில்லை…நாடு மெல்ல மெல்ல முன்னேறியது…இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைதி செய்து கடுமையாகக் தண்டித்தது…ஆன்மீகத்தை விட அறிவியல் சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது.
கலப்பு சாதி திருமணங்களை வலு கட்டாய மாக்கியது..சம்பந்தி வீட்டார் என்ன சாதி?
நம் மேனேஜர் என்ன சாதி?
சக பணியாளர் என்ன சாதி?
எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ?
என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது.
சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன் இரத்தமும் ஆண்ட சாதியான சாமூராய் இரத்தமும் அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது..
விளைவு…??
இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது.
“புராக்குமீன்” என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது.
நாமும் அறிவியல்சார் நாத்திகமும், மக்கள் மேம்பாடுமே எங்களின் இரு கண்கள் என்போம்,
நம் இந்தியாவைப்பற்றி என்றாவது ஒருநாள் இதுபோன்ற கட்டுரை ஜப்பானில் எழுதப்படும்.
(இந்த ஆய்வுக்கட்டுரையாளருக்கு நன்றி)
தொகுப்பு : வளநாடன்.
நன்றி;,மாற்று
குளிர்கால கூட்டத்தொடரின், முதல் இரண்டு நாட்கள், பெரும் அமளியுடன் துவங்கியது போலில்லாமல், மூன்றாவது நாளான நேற்று, எந்த பிரச்னையும் இல்லாமல் தான், துவங்கியது.
ஆனால், கேள்வி நேரம் முடிந்து, பூஜ்ய நேரம் துவங்கியதும், மத்திய சென்னை, தி.மு.க., எம்.பி., தயாநிதி, எழுந்து, தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா விவகாரத்தை கிளப்பினார்.
இது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென, தயாநிதி தரப்பில், 'நோட்டீஸ்' தரப்பட்டும், அதை, சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்காததால், தன் வாதத்தை, இன்னொரு வடிவத்தில் ஆரம்பித்தார்.
லோக்சபா விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உயர்த்திப் பிடித்த தயாநிதி, 'ஒட்டுமொத்த சபைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதால், உரிமை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்' என, அவர் குறிப்பிட்டதும், சபை அதிர்ந்தது.
விதிகளை மீறிவிட்டதாக கூறி, எம்.பி., அமைச்சர் என, தனி நபர்கள் மீதுதான் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவது, வழக்கம்.
ஆனால், தயாநிதி கூறுவது போல, ஒட்டுமொத்த சபையின் உரிமையையும் மீறியது யார் என்ற பரபரப்பு எழுந்தது.
தொடர்ந்து பேசிய தயாநிதி, கூறியதாவது:
'\சபாநாயகர் ஆகிய நீங்கள் உள்பட, இங்கிருக்கும் அனைவரின் உரிமையும் மீறப்பட்டுள்ளது.
நீங்கள், இதை எப்படி வேடிக்கை பார்க்கலாம். உங்களுக்காகவும் சேர்த்து தான் நான் பேசுகிறேன்.
கடந்த கூட்டத்தொடரில், 'பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை' என, மத்திய அரசு கூறியது.
அதன் பின்உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்' என்றது.
எது உண்மை. ?
மத்திய அரசு, பரூக் அப்துல்லாவின் கைது நடவடிக்கையை சபைக்கு கூறாமல் உச்ச நீதி மன்றத்துக்கு கூறுகிறது.
அதன் பிறகாவது, அரசு, சபாநாயகருக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம்; சபைக்கும் அறிவித்திருக்கலாம்.
இதை மீறியதால், சபாநாயகருக்கும், எம்.பி.,க்கள் அடங்கிய மக்களவைக்கும் உள்ள உரிமையை தான் நான் வலியுறுத்துகிறேன்.
என தயாநிதி கூறினார்.
செம்மொழி விருதுகள் வழங்க வேண்டும்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., பாலு பேசியதாவது:
செம்மொழியான, தமிழ் ஆய்வில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு தரப்படும் செம்மொழி விருதுகள், பல ஆண்டுகளாக தரப்படவில்லை.
அவற்றை, மீண்டும் வழங்க வேண்டும்.செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தில், இயக்குனர், பதிவாளர் உள்பட, 143 இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை விரைந்து நிரப்பிட, மத்திய அரசு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி :
கடல் அரிப்பின் காரணமாக, மூன்றில் ஒருபங்கு கடலோரப்பகுதிகளை, இந்தியா இழந்துவிட்டதாக, ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் மட்டும், 41 சதவீதம் கடலோரப்பகுதிகளை இழக்க நேர்ந்துள்ளது.
இதில், தூத்துக்குடி வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.
கடலோர கிராமங்கள் பல, காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு, வெறும் தடுப்புச்சுவர்கள் கட்டுவது மட்டுமே போதுமானது அல்ல. கடல் அரிப்பைத் தடுக்க, மத்திய அரசு, நிரந்த தீர்வு காண முன் வேண்டும்.
ராஜ்ய சபாவில் தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா :
நீதிமன்றங்களில், வழக்காடு மொழியாக, அந்தந்த மாநில மொழிகளே இருக்க வேண்டும். வழக்கு போட்டவர்களுக்கு மட்டுமல்லாது, வழக்கை நடத்தும் வழக்கறிஞர்களுக்கும், அது வசதியாக இருக்கும்.
அந்த வகையில், தமிழ் மொழியை, மெட்ராஸ் ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக ஆக்க வேண்டுமென்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக, நிலுவையில் இருந்து வருகிறது.
அதை உடனடியாக நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அரசின் கண்துடைப்பு தொழில்நுட்பம்
ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் தொடர்பாக ஐடி (தகவல்
தொழில்நுட்பம்) நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் தொழிலாளர்
நலத்துறை ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தை, வெறும் கண்துடைப்பு என
தகவல்
தொழில்நுட்ப தொழிலாளர் யூனியன் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ், காக்னிசண்ட் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் சமீபகாலமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஊழியர்களை பணியிலிருந்து நிறுவனங்கள் நீக்கும் நடவடிக்கைகளால், ஊழியர்கள், அவர்கள் சார்ந்த குடும்பங்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி வருகின்றன.
இந்த விவகாரத்தில் தீர்வு காணும்பொருட்டு, முன்னணியில் உள்ள 20 நிறுவனங்களின் பிரதிநிதிகள், நாஸ்காம் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்களுடன். மாநில அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர், கடந்த 18ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இந்த நடவடிக்கையை, Union of IT and ITES Employees (UNITE) கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக, ஊடகங்களுக்கு பேட்டியளித்த Union of IT and ITES Employees (UNITE) அமைப்பின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின் கூறியதாவது
'தொழிலாளர் நலத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.
இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டுவிடும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊழியர் நலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க இருந்தோம்.
கூட்டம் நடைபெறும் இடத்திற்கு எங்களை அவர்கள் அனுமதிக்கவே இல்லை. இந்த கூட்டம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான் '
என கூறினார்.
அது போல் இந்த கூட்டத்தில் எவ்வித முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை, ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரத்தில் அரசும் தலையிட்டது என்பதை வெளிக்காட்டவே, இந்த கண்துடைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வாய் துர்நாற்றம் என்பது உலக அளவிலான சிக்கல்.
வேகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் முக்கிய பிரச்னையை கவனிக்கவே நேரம் இல்லாத சூழலில் இது ஒரு பிரச்னையா என நினைக்க தோன்றும்.
ஆனால் வாய் நாற்றம் என்பது தன்னம்பிக்கையை குறைக்கும் பிரச்னை என்பது வந்தால்தான் தெரியவரும்.
வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் நீங்கள் அடுத்தவருடன் உரையாடுவது குறைந்து தனிமையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகும்.
அதனால் இந்த பிரச்னையை அப்படியே விட்டு விட வேண்டாம்.
அதே சமயம் பதற்றப்படவும் வேண்டாம்.
மவுத்வாஷ் பயன்படுத்துவதால் பல்லின் இடுக்குகளில் உள்ள உணவுத்துகளை நீக்க முடியாது.
வயதானவர்கள் பல் செட் பயன்படுத்துவார்கள். அந்த பல் செட் தூய்மையாக இல்லாததாலும் நாற்றம் ஏற்படும்.
தவிர புகையிலை எடுத்துக்கொள்வது, அடைக்கப்பட்ட உணவுகள் (Junk Food) ஆகியவற்றாலும் பல்லில் நாற்றம் உருவாகும்.
சிலர் அளவுக்கு அதிகமாக
பயந்து பல் துலக்குவதையே ஒரு முக்கிய வேலையாக வைத்திருப்பார்கள்.
கண்டுகொள்ளாமல் இருப்பது எப்படி தவறோ அதேபோல அதிகக் கவலையும் தவறு.
இந்நாளில்,
முன்னால்
உலக ஹலோ தினம்
உலக மீனவர்கள் தினம்
உலக தொலைக்காட்சி தினம்
இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)
1969 - ஒக்கினாவா ப்ரிஃபெக்ச்சர் பகுதியை 1972இல் ஜப்பானிடம் ஒப்படைப்பதாக, ஜப்பானியப் பிரதமர் எய்சாக்கு சாட்டோ உடனான பேச்சுவார்த்தையில், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
வியட்னாம் போரில் வீசுவதற்காக இங்கு சேமிக்கப்பட்டிருந்த வேதியியல் ஆயுதங்களில் கசிவு ஏற்பட்டதையடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்ப்பியங்களால் அமெரிக்கா இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.
ரியூக்யூ தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த ஒக்கினாவாவை, இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கப்படைகள் கைப்பற்றின.
அந்நடவடிக்கையின்போது, ஒக்கினாவாவின் மூன்றிலொரு பங்கு மக்கள் பலியாயினர்.
(1995இல் எழுப்பப்பட்ட நினைவிடத்தில் 2,40,734 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன!) உலகப்போரில் ஜப்பானின் தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் காப்பாட்சியின்கீழ் வந்த இப்பகுதிக்காக, ரியூக்யூ தீவுகளுக்கான அமெரிக்க ராணுவ அரசு என்பது உருவாக்கப்பட்டது.
கொரியப்போரின்போது, அமெரிக்க ராணுவத்தின் தளமாகச் செயல்பட்ட இப்பகுதியில், சோவியத்துடனான பனிப்போர்க் காலத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் ஒக்கினாவா மக்களின் நிலங்களை அமெரிக்க ராணுவம் தளங்கள் அமைப்பதற்காகப் பிடுங்கிக்கொண்டதுடன், சுமார் 2.5 லட்சம் பேர் வேறிடங்களுக்கு விரட்டப்பட்டனர்.
இக்காலகட்டத்தில், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டதையடுத்து, ஜப்பானுக்கான அமெரிக்கப் படைகள் என்ற பிரிவே அமெரிக்க ராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டு, ஏராளமான படைகள் இங்கு குவிக்கப்பட்டன.
ஜப்பானின் ரகசிய ஒப்புதலுடன் ஏராளமான அணு ஆயுதங்களும் இப்பகுதியில் குவிக்கப்பட்டன. வியட்னாம் போரின்போது, அருகாமை பகுதி என்ற வகையில் தாக்குதலுக்கான முக்கிய மையமாக இது மாற்றப்பட்டது.
பசிபிக் பகுதியின் முக்கியத் தளம் என்று இதனை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுக்கொள்ளுமளவுக்கு மாறிப்போன நிலையில், அமெரிக்கா நுழைந்தபோதே உருவாகியிருந்த ரியூக்யூ விடுதலை இயக்கம் உச்சத்தை அடைந்தது.
வேதியியல் ஆயுதங்களின் கசிவு பற்றிய செய்திகள் பரவலான எதிர்ப்புகளை உருவாக்கிய நிலையில்தான், ஒக்கினாவாவை ஜப்பானிடம் திருப்பியளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டு, 1972இல் நிறைவேற்றியது. தங்கள் கட்டுப்பாட்டிலிருந்தபோது, தங்கள் சொத்தைப்போல அனைத்தையும் அமெரிக்கா மாற்றியிருந்தது. அமெரிக்கப் பாணி வலப்புறப் போக்குவரத்து, 1978இல் இடப்புறப்போக்குவரத்தாக மாற்றியமைக்கப்பட்ட செய்தி இத்தொடரில் 2018 ஜூலை 30இல் வெளியானது.
அமெரிக்கா வெளியேறிவிட்டதாகக் கூறிக்கொண்டாலும், ஜப்பானின் நிலப்பரப்பில் வெறும் அரை சதவீதமேயுள்ள ஒக்கினாவாவில்தான், ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படைகளில் 75 சதவீதம் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளன.
1972இலிருந்து 2009வரை பாலியல் வன்புணர்வு, கொலை, திருட்டு உள்ளிட்ட 5,394 குற்றங்களை, ஒக்கினாவா மக்களுக்கெதிராக அமெரிக்கப் படைகள் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அறிவுக்கடல்
வேலை வாய்ப்புகள்
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல்
பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13
வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.
வயது: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
இன்று கடைசி தேதி: 21.11.2019
விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.
வயது: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
இன்று கடைசி தேதி: 21.11.2019
விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். ----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய எண்ணைக் கழகத்தில் (indian oil corporation) வேலை
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 'டெக்னீசியின் அப்ரென்டிஸ்' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.10.2019 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள் : 22.11.2019
விபரங்களுக்கு:www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள்
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019
விபரங்களுக்கு: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஜப்பான் என்ன சாதி?
100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது…
கீழ் சாதியனர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் ‘புராக்குமீன்’ (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் “சேரி” களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்…
அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது..
சாதி? |