வெள்ளி, 22 நவம்பர், 2019

பொருளாதார நலனுக்கு எதிராக அமையும்.

தேர்தல் பத்திரம்.
கறுப்புப் பணத்தை கட்சிக்குள் கொண்டு வரவே பா.ஜ.க அரசு தேசிய பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல், ரிசர்வ் வங்கி விதியை மீறி தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை எளிமைப்படுத்துவதாக ‘தேர்தல் நிதிப் பத்திரம்’ எனும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது பா.ஜ.க அரசு.

அதன்படி அரசியல் கட்சிகளுக்கு 2,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக கொடுக்கமுடியும். அதற்கு மேலான தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் பத்திரங்களை வாங்கியவர் குறித்த தகவல்கள் வங்கியிடம் இருந்தாலும், அந்த நன்கொடையை வழங்கியவர் யார் என்று அரசியல் கட்சிக்குத் தெரியாது.
ஆனால், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும்.

இந்த விதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் ஆகியவை ஆட்சேபனை தெரிவித்தன.
கடும் சர்ச்சையை ஏற்படுத்திய விதிகளை அறிவித்த பா.ஜ.க அரசே அவற்றை மீறும் வகையில் உத்தரவைப் பிறப்பித்து முறைகேட்டுக்கு வழிவகுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க கொண்டுவந்த தேர்தல் பத்திரத் திட்டம், தேர்தல்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வாக்கை சட்டப்பூர்வமாக்கியது.
ரகசியமாக கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வழிவகை செய்ததன் மூலம் வெளிநாட்டுப் பணம் அரசியல் கட்சிகளிடையே புழங்க வழிவகுத்தது பா.ஜ.க அரசு.

மார்ச் 2018ல் முதன்முதலில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் நன்கொடை அளித்ததில் பெறப்பட்ட தொகையான 222 கோடி ரூபாயில், 95 சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், கர்நாடகா, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர், சட்டவிரோதமாக தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க அரசின் விதிகளை மீறுமாறு பிரதமர் அலுவலகம் நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் எம்.பி-யுமான ராஜிவ் கவுடா கூறுகையில், “தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு ஒருநாள் முன்பு பெயரளவில் மட்டுமே ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டது.
ரிசர்வ் வங்கி பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
கருப்பு பணத்தை கட்சிக்குள் கொண்டு வரவே தேர்தல் பத்திரங்களை பா.ஜ.க அரசு வெளியிட்டதால் அவற்றை ரத்து செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

 பொருளாதார நலனுக்கு எதிராக அமையும்

வங்கிகளில், பல கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 30 மோசடி பேர்வழிகளின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
 'இவர்கள் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ள கடன் தொகை, கடந்த ஏப்ரல் மாதம் வரை, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 தொழில் மேம்பாட்டுக்கு எனக் கூறி, பல தொழிலதிபர்கள், வங்கிகளில், பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இவர்களில் பலர், கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். மோசடி செய்தோர் பற்றிய விபரம், பல ஆண்டுகளுக்கு முன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது. 

விபரங்களை வெளியிட்டால், அது நாட்டின் பொருளாதார நலனுக்கு எதிராக அமையும்; வங்கிகளுடனான எங்களின் உறவு பாதிக்கும்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
 இதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாதோர் பட்டியலை வெளியிட வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு, 2015ல் உத்தரவிட்டது. 

இந்நிலையில், 'தி ஒயர்' என்ற இணைய இதழ் சார்பில், ரிசர்வ் வங்கியிடம், கடனை திருப்பிச் செலுத்தாதோர் பற்றிய விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.
 இதை அடுத்து, கடனை திருப்பிச் செலுத்தாத, 30 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலை, ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், 'இந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ள தொகை, கடந்த ஏப்ரல் மாதம் வரை, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த, 30 நிறுவனங்களில், விஜய் மல்லையாவின், 'கிங் பிஷர்' நிறுவனம், வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உள்ளிட்டோரின் நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
வங்கிகளில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாதவர்களின் விபரங்களை, 'டிரான்ஸ்யூனியன் சிபில்' என்ற நிறுவனம் சேகரிக்கிறது.
 இந்நிறுவன கணக்கின் படி, கடந்த ஆண்டு டிசம்பர் வரையில், 11 ஆயிரம் நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத தொகை, 1.61 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என, தெரியவந்துள்ளது.

ஆனால், கடன், எந்த ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்படவில்லை.
நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வழக்குகளை பதிவு செய்து, விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன(1574)
அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)

 மைக் டைசன்
1986 - மிகக்குறைந்த வயதில்  ஹெவிவெய்ட் குத்துச்சண்டைச் சாம்ப்பியன் பட்டம் வென்றவராக 20 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாட்கள் வயதாகியிருந்த மைக் டைசன் ஆனார்.
இன்றுவரை அசைக்க முடியாத இந்தச் சாதனையைச் செய்த டைசன், மொத்தம் 56 தொழில்முறை போட்டிகளில் விளையாடி, 50இல் வென்றுள்ளார்.

 இந்த 50இல் 44 போட்டிகளை நாக் அவுட் மூலம் வென்றார்!
 இவர் விளையாடிய முதல் 19 தொழில்முறை போட்டிகளை நாக் அவுட் மூலமே வென்றார் என்பதும், அவற்றில் 12 முதல் சுற்றிலேயே பெற்ற வெற்றிகள் என்பதும் இன்றும் குத்துச்சண்டை உலகின் அதிசயங்கள்! உலகக் குத்துச்சண்டைச் சங்கம், உலகக் குத்துச்சண்டைக் கவுன்சில், பன்னாட்டு குத்துச்சண்டைக் கூட்டமைப்பு ஆகிய மூன்றின்
வெய்ட் சாம்ப்பியன் பட்டங்களையும் ஒருசேர வென்ற முதல் வீரர் டைசன்தான் என்பதுடன், இவற்றைத் தொடர்ச்சியாக வென்ற ஒரே வீரரும் அவர்தான்.

சிறு வயதில் தந்தையின்றி வறுமையில் வாடிய டைசன், குற்றங்கள் மலிந்த பகுதியில் வளர்ந்தார்.
13 வயதானபோது, 38 முறை சிறிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறார் குற்றவாளிகளுக்கு அறிவுரை வழங்கும் பணியிலிருந்த பாபி ஸ்டூவர்ட் என்பவர்தான் டைசனின் குத்துச்சண்டைத் திறமையைக் கண்டறிந்து, முதலில் பயிற்சியும் அளித்தார்.

1981, 1982 ஜூனியர் ஒலிம்ப்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற டைசன், வெறும் 8 நொடிகளில் நாக் அவுட் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் புரிந்தார்.

 18 வயதில் தொழில்முறைப் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய டைசன், 5 ஆண்டுகள் கழித்து, 38ஆவது போட்டியில்தான் முதல் தோல்வியையே சந்தித்தார்.
1992இல் பாலியல் வன்புணர்வுக் குற்றம் சாட்டப்பட்டு, 6 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற டைசன் 3 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டதும், மீண்டும் சாம்ப்பியன் பட்டங்களை வென்றார்.

 37 வயதில், தோற்று விடுவார் என்று கணிக்கப்பட்ட போட்டியில் கடைசியாகப்பெற்ற தொழில் முறை வெற்றியைக்கூட, முதல் சுற்றிலேயே, அதுவும் வெறும் 49 நொடிகளில் நாக் அவுட் மூலம் பெற்ற டைசன், கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டினாலும், 2003இல் திவாலானார் என்பதும், குத்துச்சண்டையில் கவனம் செலுத்தி வாழ்க்கை இழந்துவிட்டதாகப் பின்னாளில் வருந்தினார் என்பதும் குறிப்பிடவேண்டியவை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
கமல்ஹாசனுக்கு ஓய்வு
2016ம் ஆண்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பின் போது, கமல்ஹாசனுக்கு நிகழ்ந்த விபத்தின் போது கால்முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவரது காலில் டைட்டேனியம் பிளேட் பொருத்தப்பட்டது.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கானச் சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

டாக்டர்களின் ஆலோசனைப்படி 22 ஆம் தேதி (இன்று) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
 சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின், கமல்ஹாசன் நம்மை சந்திப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தசாவதாரம் படத்தின் கமலின் ஒரு கேரக்டரான பல்ராம் நாயுடு கேரக்டரை முதன்மையாக கொண்டு காமெடி திரில்லராக சபாஷ் நாயுடு என்ற படத்தில் இயக்குநர் டி கே ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல் நடித்துக்கொண்டிருந்தார்.
இயக்குநர் ராஜீவ் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இயக்குனர் பணியையும், கமலே மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது .
அடுத்தடுத்து வந்த தடங்கல்களை தொடர்ந்து சபாஷ் நாயுடு படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
கூகுள் மேப்
 பயன்பாட்டிற்கு வந்த பின்பு நாம் துணிந்து முன் பின் தெரியாத இடங்களுக்கும் தைரியமாக செல்கின்றோம்.
அது வெறும் டிஜிட்டல் மேப்பாக மட்டும் இல்லாமல் பயனாளிகளுக்கு பல்வேறு முக்கிய அம்சங்களை அது வழங்குகிறது.
கூகுள் வரைபடம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 6 ட்ரிக்குகள் உங்களுக்காக இதோ!

கூகுள் மேப்பில் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தின் முகவரியை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
அதன் பின்பு நீங்கள் கூகுள் மேப்பின் கீழே இருக்கும் Commute என்ற டேப்பை க்ளிக் செய்தால் உங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியையும், ட்ராஃபிக் குறித்தும், மாற்று வழி குறித்தும் உங்களுக்கு தெளிவான ஐடியாவை தருகிறது.
எனவே நீங்கள் அதற்கு ஏற்றது போல் உங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

உங்களின் வருகை அல்லது நீங்கள் தற்போது எங்கே இருக்கின்றீர்கள் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளிக்க இந்த ஆப்சன் உதவிகரமாக இருக்கும்.

 நீங்கள் இந்த தகவலை வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ் போன்ற செயலிகள் வழியே அனுப்பிக் கொள்ளலாம்.  நீங்கள் இருக்கின்ற இடத்தை காட்டும் நீல நிற புள்ளியை க்ளிக் செய்து, Share your live location மூலமாக இதனை நீங்கள் ஷேர் செய்து கொள்ளலாம்.

 நீங்கள் பயணிக்கும் இடம் குறித்த அப்டேட்களை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிவிக்கலாம். அந்த இடம் எங்கே இருக்கிறது. அதனை சுற்றி என்னென்ன இடங்கள் இருக்கிறது என்பது குறித்து அனைவராலும் அறிந்து கொள்ள இயலும்.
ஷேர் ப்ளேசஸ் என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் எந்த செயலி வழியாக அந்த தகவல்களை அனுப்ப விரும்புகின்றீர்களோ அதன் வழியே அனுப்பிக் கொள்ளலாம்.
 நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள், ஒரு பயணித்தின் போது எத்தனை இடங்களை பார்க்க விரும்புகின்றீர்கள் என்பது குறித்து அனைத்து திட்டங்களையும் நீங்கள் முன்பே தயாரித்து கொள்ள உதவுகிறது இந்த ஆப்சன்.
நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் மேப் பக்கத்தில் ‘Save’ ஆப்சன் இருக்கும். அதில் சென்று ‘Starred places’, ‘Want to go’, ‘Favourites’ என்ற மூன்று ஆப்சன்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
கூகுள் மேப்பில் உங்களால் விரைவாக ஏ.டி.எம் சேவைகள், பெட்ரோல் நிலையங்கள், மற்றும் உணவகங்களை கண்டறிந்து கொள்ள முடியும். மிகவும் அத்தியாவசியமான சேவைகளை வழங்கும் வங்கிகள், மருத்துவமனைகளையும் நீங்கள் கூகுள் மேப் மூலமாக கண்டு பிடிக்க இயலும்.
ஸோமாட்டோ மற்றும் டைன்அவுட் போன்ற நிறுவனங்கள் உணவகங்களை தேடும் சேவைகளை வழங்குவதற்கு முன்பே கூகுள் மேப் இந்த சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

For you

இந்த வசதி மூலம் உங்களின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு உங்களுக்கான இடங்களை காட்டும். உள்ளூர் வழிகாட்டிகள் ஒரு இடம் குறித்து அறிவிக்கும் கருத்துகளையும் நீங்கள் இங்கு படித்து அறிந்து கொள்ளலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்புகள் 

  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய எண்ணைக் கழகத்தில் (indian oil corporation) வேலை

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 'டெக்னீசியின் அப்ரென்டிஸ்' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.10.2019 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள் : 22.11.2019

விபரங்களுக்கு:www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------- 
  பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
 ----------------------------------------------------------------------------------------------------------------------------

அடங்காத சாமி !
கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஜனர்தன ஷர்மா.
 அவருடைய வயது 48. இவருக்கு 4 குழந்தைகள்.
நால்வரையும் கர்நாடகாவில் இருந்த நித்தியானந்தா தியான பீடம் பள்ளியில் 2013ம் ஆண்டு சேர்த்தார். பெங்களூருவில் இருந்து ஆன்மிக கல்வி கற்று வந்த அந்த 4 பெண் குழந்தைகளும், பெற்றோர்களின் அனுமதி ஏதுமின்றி குஜராத்தில் இருக்கும் யோகினி சர்வாக்யபீடத்திற்கு அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் அந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
நவம்பர் 1ம் தேதி ஷர்மா மற்றும் அவருடைய மனைவி தன்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று ஆசிரம நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி குஜராத் மாநில குழந்தைகள் நலன் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் ஒன்றை சமர்பித்தார். அதனைத் தொடர்ந்ந்து காவல்துறை ஆசிரமத்திற்குள் சென்று ஷர்மா தம்பதியினரின் இளைய குழந்தைகள் இருவரையும் மீட்டுள்ளனர்.
 இவ்விரு நபர்களும் மைனர்கள். ஆனால் ஷர்மா தம்பதிகளின் மூத்த மகளான லோபமுத்ரா (21) மற்றும் நந்தித்தா இருவரையும் ஆசிரம வளாகத்தில் சிறைபிடித்துள்ளனர் என்றும் புகார் அளித்திருந்தார் ஷர்மா. ஆனால் ஆசிரமத்துக்குள் இல்லை.

நவம்பர் 17ம் தேதி இரவு நித்தியானந்தா மற்றும் ஆசிரமத்தின் இரண்டு மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 விவேகானந்தா நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நந்தித்தாவை ஸ்கைப் கால் மூலம் தொடர்பு கொண்டது காவல்துறை.
ஒரு முக்கியமான வேலை காரணமாக வெளியே சென்றிருப்பதாகவும். வேலை முடிந்தவுடன் நானே திரும்பி வருகின்றேன் என்றும் கூறியுள்ளார்.
 காவல்துறையினர் நந்தித்தாவின் ஸ்கைப் கால் மூலமாக அவரின் இருப்பிடத்தை அறிய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நவம்பர் 17ம் தேதி முதல் தகவல் அறிக்கை ஹத்திஜன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அப்போது லோபமுத்ரா தன்னுடைய முகநூல் பக்கத்தில் கரீபியன் தீவுகளில் அமைந்திருக்கும் ட்ரினிடாட் நாட்டில் தன் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாக அறிவித்தார்.
இது குறித்து டிவிசன் பெஞ்ச் நடத்திய விசாரணையின் போது மேஜர் பெண்களுக்கு கஸ்டடி கேட்பது ஏன் என்று கேள்வி எழுப்பட்டது.
அப்போது வழக்கறிஞர் ப்ரிதேஷ் ஷா “ஷர்மாவின் 4 குழந்தைகளும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் புஷ்பக் சொசைட்டியில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் 2 வாரத்திற்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
குஜராத் டிஜிபி, அகமதாபாத் எஸ்.பி, விவேகானந்தா காவல் நிலைய இன்ஸ்பெக்டர், நித்தியானந்தா, நிர்பேதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

புதன்கிழமை காலையில் ஆசிரமத்தின் மேலாளர்களான ப்ரான்பிரியா மற்றும் பிரியாதத்வா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 364, 344, 323, 504, 506(2) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்பு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட அவர்களுக்கு 5 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக பெண்களை அடைத்து வைத்திருப்பது தொடர்பாக நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் முறையாக ஆசிரமம் நடத்த அனுமதி அளித்த பள்லி முதல்வர் ஹிதேஷ் பூரி கைது செய்யப்பட்டார்.
 அரசு ஊழியராக இருந்து கொண்டு தன்னுடைய பதவியை துஷ்ப்ர்யோகம் செய்தது மற்றும் காவல் துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்படாமல் பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயல்பட அனுமதி அளித்தது ஆகிய காராணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
விவேகானந்தா நகர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்ட போது, எப்போதிருந்து பள்ளி வளாகம் ஆசிரமத்திற்காக வழங்கப்பட்டது என்ற கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்திய தண்டனைச் சட்டம் 188ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் அது பெய்லபில் அஃபென்ஸ் என்பதால் அவர் ஜாமீன் பெற்று வீடுதிரும்பினார்.
  ------------------------------------------------------------------------------------------------------------------------------
https://twitter.com/Saran_Twitzz/status/1197411948754653184?s=20