ஆபத்தான நாடு இந்தியா.

இந்தியா தான் உலகிலேயே பெண்களுக்கு மிக வும் ஆபத்தான நாடு என்று தனது ஆய்வில் கூறுகிறது தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம்.
ஆளும் வர்க்கத்தின் அடிப்படைக் குணமான ஆணாதிக்கம் இந்த சமூகத்தை ஆளுகிறது.
அதன் காரணமாக எல்லா விதமான வர்க்கப் பின்னணியும் உடைய எல்லா சமூகக் குழுக்கள் இடையிலும் பெண்க ளுக்கு எதிரான வன்முறை மற்றும் அவர்களை இரண் டாம் தரமானவர்களாக நடத்தும் புறக்கணிப்பு நிகழ்கிறது.

அதிக வருமானம் உடைய, நன்கு படித்தவர்கள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் குடும்ப வன் முறைக்கு உள்ளாகின்றனர்.
பெரும்பாலான பெண்கள் எல்லா மட்டத்திலும் பாரபட்சத்தை சந்திக்கும் நிலை உள்ளது. மக்களாட்சியைப் பின்பற்றும் நாடாக உள்ள போதிலும், இந்தியப் பெண்களில் ஒரு பகுதியினார் முன்னேற்றம் அடைந்து வரும் சூழலிலும் ஆணா திக்கம் தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது.
வரதட்சணைக்காக கணவன், மனைவியை அடிப்பது கூட இந்த சமூகத்தில் இன்னும் முழுமை யாக விலக்கி வைக்கப்பட்டதாகவில்லை. ஜனநாய கத்தின் அனைத்து அமைப்புகளும் பெண்கள் உரிமை மற்றும் சமத்துவத்தை இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
பெண்களுக்கு அவர்களது வீடே மிகவும் அபாயகர மானதாக இருப்பதாக அதிர்ச்சிகரமான விபரங்க ளைச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
3 பேரில் ஒரு பெண் தன் உடன் வசிக்கும் இணையால் உடல் அல்லது மனரீதியிலான வன் முறைக்கு ஆளாவதாக 2017ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.
 மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலும் கூட 95.5 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தெரிந்த நபர்களாலேயே ஏற்படுவதாக சொல்லப் பட்டுள்ளது.

திருமண உறவுகளில் நடக்கும் பாலியல் கொடுமை களை, வன்கொடுமைகளாக  கருத முடியாது என நீதிமன்றம் சொல்கிறது. எனில் நம்முடைய ‘கலாச்சாரம்’ எத்தகையது என்பதை என்பதை புரிந்து கொள்ளலாம்.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட இது குறித்த ஒரு கேள்விக்கு சனாதன இந்துத்துவத்தை கொள்கையாகக் கொண்டிருக்கும் மோடி அரசு “இந்திய சமூகத்தில் திருமணங்கள் புனிதமானவை” எனக் கருது வதால் அதில் நிகழும் வல்லுறவுகளை ‘வல்லுறவுக ளாகக்’ கருதி சட்டத்தால் தண்டிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது.
குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளை, சமத்து வத்தை பேணிக்காக்க வேண்டிய அரசு இத்தகைய பிற்போக்குத் தனத்துடன் நடந்து கொள்ளும்போது அதற்கு கடுமையான எதிர்ப்புக்குரல் எழுப்புவதும், எழும்புவதும் தவிர்க்க முடியாதது. பெண்கள் கருவிலிருந்து கல்லறை வரை நசுக்கப்படுகிறார்கள்.
பெண்கள் மீது ஏதாவது ஒரு வடிவத்தில் வன்முறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலமான உத்தர்கண்ட்டில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்க வில்லை.
கருவிலேயே பெண் படுகொலை மோசமான நிலையை எட்டியுள்ளதன் பயங்கர உதாரணம் இது.  நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் பெண் குழந்தை களின் பிறப்பு விகிதம் 0.75 சதவீதம் மட்டுமே அதி கரித்துள்ளது. தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு  விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 995 பெண் குழந் தைகள். கேரளம், புதுச்சேரியில் மட்டும்தான் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 1000க்கு மேல்.
நீலகிரியில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1041 பெண் குழந்தைகள் என பிறப்பு விகிதம் உயர்ந்து காணப்படு கிறது. தருமபுரியில் 946, தலைநகர் சென்னையில் 986 என பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறை வாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் பெண் குழந்தைக ளின் பிறப்பு விகிதம் 918ஆக மட்டுமே உள்ளது.
ஒவ்வோராண்டும் பிறந்து சில மாதங்களிலேயே பத்து லட்சம் பெண் குழந்தைகள் இறக்கின்றன.
நாட்டில் ஆறு பெண் குழந்தைகளில் ஒருவர் தன்னுடைய பதி னைந்தாம் பிறந்த நாளை பார்க்கும் முன்பே இறந்து விடுகின்றனர்.
நான்கு வயதுக்கு உட்பட்ட பெண் குழந் தைகளின் இறப்பு, ஆண் குழந்தைகள் இறப்பை விட அதிகமாக உள்ளது. சுகாதார பிரச்சனைகளால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
உரிய மருத்துவ சேவை கிடைக்காத காரணத்தாலேயே பெண் குழந்தை களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
நாட்டில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் விகிதம் 65 சதவீதம் மட்டுமே. 5 முதல் 9 வயதுள்ள 53 சதவீதம் பெண் குழந்தைகள் கல்வி கிடைக்காதவர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் 73.9 சதவீதம் பெண்களே எழுத்தறிவு பெற்றவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பெண் குழந்தைகள் 1.2 கோடி பேர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்.
இந்தியாவில் கடந்த 2016ல் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி கடத்தப்பட்டுள்ள பெண் கள், குழந்தைகளின் எண்ணிக்கை 20,000. கிராம பகுதிகளில் குழந்தை கடத்தல் அதிக அளவில் நடை பெறுகிறது. குழந்தை கடத்தல் நடைபெறும் மாநிலங்க ளில் தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
கடத்திச் செல்லப் படும் பெண் குழந்தைகளில் 22 சதவீதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பலர் வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சிலருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
ஆணாதிக்கச் சமூகத்தின் கோர விளைவாக நடக்கும் பாலினப் பாகுபாட்டால் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டும்.
அத்தகைய முடிவின் தொடக்கமாக மாதர் சங்கம் நடை போடுகிறது, நவம்பர் 25 முதல் மாபெரும் நடை பயணமாய்....!

 - ஜி.ராணி
------------------------------------------------------------------------------------------------------------------------------
அஜித் பவார் ஓடியது ஏன் ?
பாஜக மிரட்டல் அம்பலம் 

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது.
முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர்.
இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று இரவு தெரிவித்திருந்தார். ஆனால் 8 மணி நேரத்திற்குள்ளாகவே, அதாவது பொழுது விடிந்ததும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின் பட்னாவிஸ் கூறும்போது, ‘மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான தீர்ப்பினை வழங்கியிருந்தனர்.
ஆனால், தேர்தலுக்கு பிறகு சிவசேனா பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தது. அதன் விளைவாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவுக்கு நிலையான அரசு தேவை, கிச்சடி அரசு தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.
அஜித் பவார் கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் இன்று வரை எந்தவொரு கட்சியாலும் அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. நிலையான அரசு அமைந்தால்தான், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எனவே நாங்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்து, பாஜகவுடன் இணைந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பா.ஜ.க.,வுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இல்லையென்றும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தது அஜித்பவாரின் சொந்த விருப்பம் என்றும் சரத்பவார் திடுக் தகவலை கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் ஆனது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டில் நடந்த முறைகேடு காரணமாக அரசின் கருவூலத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் மும்பை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித்பவார் மற்றும் 70 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அடங்குவர்.
பெரும்பான்மை? 
சிரமம்தான்!.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக வின் அமலாக்கத்துறையினர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்பவார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் இருந்து மீளுவதற்காகவே பா.ஜ.க.,வுடன் அஜித்பவார் கூட்டணி அமைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 தேசியவாத காங்கிரஸ் தரப்பிலிருந்த 54 எம்‌.எல்‌.ஏ-க்களில் 12 பேர் மட்டுமே அஜித் பவாருடன் சென்றிருந்த நிலையில் 5 பேர் திரும்பி வந்து இருக்கிறார்கள். 
இதனால், பா.ஜ.க அரசு பெரும்பான்மையை நிரூபிப்பது சிரமம். 
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் பா.ஜ.க-அஜித் பவார் கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆக, மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீள்கிறது.

இதனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே பல்வேறு மாற்றங்கள் மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; எதிரி ஆதரவாளராகவும், ஆதரவாளர் எதிரியாகவும் மாறலாம். ஆனால், கட்சியின் மனசாட்சியாக இருந்தவர்கள் பதவிக்காக கட்சியை மீறி தலைவரை மீறி செயல்படுவது இந்திய அரசியலில் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.

1990-கள் தொடங்கி சரத் பவாரின் நிழலாக இருந்தவர்தான் இந்த அஜித் பவார். சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், சரத் பவாருக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த நிலையில் தற்போது கட்சிக்கு எதிராகவும், சரத் பவருக்கு எதிராகவும் செயல்பட்டு இருக்கிறார்.


இதே போல 2006ம் ஆண்டு கர்நாடகாவில் நிகழ்ந்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனநாயக கட்சியில் 58 எம்‌.எல்.‌ஏக்கள் இருந்தனர். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை குமாரசாமி திரும்பப் பெற்று 46 பேரை பா.ஜ.கவிற்கு ஆதரவளிக்கச் செய்தார்.

இது தேவகவுடா உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேவகவுடா தனது மகனின் இந்த முடிவை தான் ஆதரவளிக்க வில்லை என்றும் கூறியிருந்தார்.
அன்று தேவகவுடா கூறியதைத் தான் இன்று சரத் பவாரும் கூறியிருக்கிறார்.

மகராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சரியாக ஒரு மாத காலத்திற்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது.
 சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நேற்று இரவு வரை சொல்லப்பட்ட நிலையில் இன்று காலை மகாராஷ்டிரா ராஜ் பவனில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.
செய்தித்தாள்களின் தலைப்புகளை மக்கள் பார்க்கும் முன்னரே, மகாராஷ்டிரா அரசியலின் தலைப்புச் செய்திகளை மாற்றி இருக்கிறார் அஜித் பவார்.
மகாராஷ்டிரா தேர்தல் நடக்க இருந்த நிலையில் 25,000 கோடி ஊழல் வழக்கில் சரத் பவார், அஜித் பவார் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யவே, அஜித் பவார் எம்‌.எல்.‌ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் தான் தற்போது பா.ஜ.க உடன் இணைந்து துணை முதல்வர் பதவியை ஏற்றிருக்கிறார்.
 
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வந்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால் அஜித் பவார் 35 தேசியவாத காங். எம்‌.எல்.‌ஏ-களுடன் பிரிவதாக செய்திகள் முன்னரே வெளியாகின. ஆனால் கூட்டணி முடிவுகள் இறுதியானது குறித்து நேற்று மாலை சரத் பவார் பேசி இருந்தார்.
இந்தக் கூட்டணியில் அஜித் பவாருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தேசியவாத காங்கிரஸ் மாநில செயலாளர் சிவாஜிராவ் கர்ஜேவை தொடர்புகொண்டு எம்‌.எல்‌.ஏக்களின் ஆதரவு கடிதம் குறித்து விசாரித்து இருக்கிறார்.
அந்தக் கடிதத்துடன் தன்னை வந்து சந்திக்குமாறு கர்ஜேவிடம் அஜித் பவார் சொல்லியிருக்கிறார்.

மூன்று கட்சி கூட்டணி இறுதியாகி இருந்த நிலையில் அந்தக் கடிதத்தை அவரிடம் வழங்கி இருக்கிறார் கர்ஜே. சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க காலதாமதம் ஆன நிலையில் தான் இந்த முடிவை நோக்கி சென்றதாக துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் அஜித் பவார்வ நொண்டி சாக்கை கூறியிருக்கிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 கூத்தாடியால் ஒன்றும் செய்ய முடியாது.
பா.ஜ.க., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி இன்று காலை டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சினிமா கூத்தாடிகள் தமிழ்நாட்டிற்காக ஒன்றும் செய்ய முடியாது.
 ரஜினிகாந்த் சினிமா படம் வெளியாகப் போகிறது பப்ளிசிட்டிக்காக அவர் இதுபோன்று கூறியிருக்கலாம். இதுபோன்றுவ எத்தனையோ முறை அவர் படம் வெளியாகப் போகையில் சொல்லிவிட்டார். வரப்போறேன்.. வரப்போறேன்னு சொல்வார்.
கடைசியில் ஒன்றுமே நடக்காது.
இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

 சுப்ரமணிய சாமி இதற்கு முன்பு பலமுறை நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார். சினிமா கூத்தாடி என ரஜினிகாந்தை இப்போது விமர்சித்துள்ளர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
 முன்னால்

ஏபல் டாஸ்மான், வான் டீமனின் நிலம்(தாஸ்மானியா) என்ற தீவை கண்டுபித்தார்(1642)
சார்லஸ் டார்வின், ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற நூலை வெளியிட்டார்(1859)


 இது எப்படியிருக்கு?
இந்திய ஸ்டேட் வங்கி மத்தியப் பிரதேசக் கிளையொன்றில் ஹுக்கும் சிங் என்பவர் 2016ல் ஒரு வங்கிக் கணக்கைத் துவங்கியுள்ளார்.

 அதே பெயருடைய இன்னொரு ஹுக்கும் சிங் 2018ல் கணக்கத் துவக்க அந்த வங்கியை அணுகிய போது, வங்கி மேலாளர் தவறிப் போய் பழைய ஹுக்கும் சிங் கணக்கு எண்ணையே இவருக்கும் ஒதுக்கியிருக்கிறார்.
முதல் ஹுக்கும் சிங் ஒரு நொறுக்குத் தீனி பெட்டிக் கடை வைத்திருக்கிறார்.
இரண்டாவது ஹுக்கும் சிங் ஒரு கூலித் தொழிலாளி.

முதல் ஹுக்கும் சிங் மாதா மாதம் பணத்தைப் போட்டிருக்கிறார்.
இரண்டாவது ஹுக்கும் சிங், அட நம்ம கணக்கிற்கு இவ்வளவு பணம் வந்து கொண்டிருக்கிறதே என மகிழ்ச்சியாகி தொடர்ந்து பணத்தை எடுத்திருக்கிறார்.

முதல் ஹுக்கும் சிங் ஒரு நாள் கணக்கைச் சரி பார்க்கும் போது அதிர்ச்சியாயிருந்திருக்கிறது. அவர் போட்ட தொகை 1,40,000.00 இருப்பதோ வெறும் 35,400 மட்டுமே.

இப்போது இரண்டாவது ஹுக்கும் சிங்கிடம் பணத்தைத் திருப்பித் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.

அவரது பதில்தான் டாப்!
“2014 தேர்தல் வாக்குறுதியில் மோடிஜி சொன்ன மாதிரி வெளிநாட்டு கறுப்புப் பணத்தை மீட்டு என்னுடைய வங்கிக் கணக்கில் மாதா மாதம் போடுகிறார் என நினைத்தேன். திடீரென்று பணத்தைத் திருப்பிக் கேட்டால் நான் எங்கு போவேன்? ”
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 தெர்மாகோல் திட்டத்துக்கு செலவு எவ்வளவு?

வைகை அணையில் உள்ள நீரை ஆவியாகாமல் தடுப்பதற்காக 2017-ம் ஆண்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் திட்டப்படி, அணைகளில் உள்ள நீர் நிலைகளின் மீது தெர்மாகோல் அட்டைகளால் மூடினார்கள்.
ஆனால், தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கியதால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது.
 இந்தத் திட்டம் சமூக வலைத்தளங்களில் கேலிக்கும், விமர்சனத்துக்கும்  உள்ளானது.
திட்டம் செயல் படுத்தல்

இந்தத் திட்டம் குறித்த விமர்சனங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டுகொள்ளவில்லை.

 இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரம்மா, தெர்மாகோல் திட்டம் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்தத் திட்டத்துக்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அறிவுறுத்திய அதிகாரி யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
2017-ம் ஆண்டு தகவல் அறியும் சட்டத்தின்படி பிரம்மா கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை.
 அதனால் முறையீடு செய்துள்ளார்.
ஆனாலும் பதில் கிடைக்காததால் ஆணையத்தில் இரண்டாவது முறையீடு செய்துள்ளார்.
அதன் பின்னர் தற்போது அவரது கேள்விகளுக்குப் பதில் கிடைத்திருக்கிறது.


வைகை அணையின் பரப்பளவு, அதில் நீரின் கொள்ளளவு ஆகியவை குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கேள்விகளுக்கு `இல்லை, தகவல் கிடையாது’ போன்ற பதில்களே கொடுக்கப்பட்டிருக்கிறது.
 `வைகை அணையின் நீர், சூரிய வெப்பத்தால் தினமும் ஒரு மில்லியன் கன அடி அளவுக்கு ஆவியாகிறது’ எனவும் ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கறிஞர் பிரம்மா


இந்த தகவல்கள் குறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், ``வைகை அணையின் நீர் ஆவியாவதைத் தடுக்கும் வகையில் தெர்மாகோல் மூலம் மூடுவதற்கு முயற்சி நடைபெற்றது. அதற்கு எட்டு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தொலைக்காட்சிகளில் பேட்டியளித்ததைப் பார்த்தேன். ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆர்.டி.ஐ தகவலில் பணம் செலவிடப்படவில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்காக டெண்டர் எதுவும் விடவில்லை என்றும், முந்தைய ஆய்வு அறிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஒப்பந்தம் எதுவும் கோராமல் அமைச்சர் தலைமையில் இந்த விழா நடந்தது எப்படி? ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கவில்லை.

தினமும் ஒரு மி.க.அடி தண்ணீர் ஆவியானால் ஒரு மாதத்தில் அணையின் நீர் அளவும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு மாதத்துக்கு எனக்குக் கொடுக்கப்பட்ட பதிலில் 30 நாள்களுக்கும் ஏறக்குறைய ஒரே அளவில் நீர் இருப்பு இருந்துள்ளது.
 பணமே செலவிடவில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். அமைச்சர் மற்றும் இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட சிறப்புத் திட்டத்துக்குப் பணம் செலவாகவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை.
இரண்டுமுறை முறையீடு செய்த பின்னரே எனக்கு ஆர்.டி.ஐ தகவல் கிடைத்திருக்கிறது. அதில், நான் கேட்டிருந்த பல கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.
பதில் கொடுக்காததால் நான் சோர்ந்துவிட மாட்டேன். தெர்மாகோல் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவேன்’’ என்றார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

 வேலை வாய்ப்புகள் 

  பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf ---------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தில் 55 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது:
1.11.2019 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30 வயது மற்றும் சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி
: 3.12.2019

விபரங்களுக்கு
: www.cpcl.co.in
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு.
 காலியிடங்கள்: உதவி பாதுகாப்பு அதிகாரி- 19, பாதுகாவலர்- 73

வயது: 6-12-2019 அடிப்படையில் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் பொதுப் பிரிவினர்-27, எஸ்.சி.,/எஸ்.டி.,- 32, ஓ.பி.சி.,- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு சலுகை உண்டு.
கல்வித் தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்ச்சி முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்' https://recruit.barc.gov.in
கடைசி நாள்
: 6.12.2019
---------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1996 முதல் 1.8.2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 153 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தொடர்புடைய விளையாட்டில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 17.12.2019

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf

------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுக்கு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7, 8, 14, 21 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச.28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
2020, ஜன. 19 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு
ஜன.25- ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 கொலை, கொள்ளை, ஊழல் பேர் வழிகள் 

பாஜக தனது வேட்பாளர்கள்.

 ஜார்க்கண்ட் மாநிலத்தில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. 
இந்நிலையில், பாஜகவின் வேட்பாளர்களில் பலர் கொலை, கொள்ளை மற்றும் ஊழல் புகார் களில் சிக்கியவர்கள் என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக வேட்பாளர்களில் பானு பிரதாப் சாஹி, சஷி பூஷண் மேத்தா ஆகியோர் முக்கியமானவர்கள். 
இவர்களில் பானு பிரதாப் சாஹி மீது, ரூ.130 கோடி மதிப்பிலான மருந்து ஊழல் புகாரும், சஷி பூஷணைப் பொறுத்தவரை, அவர் தனது பள்ளி யில் பணிபுரியும் ஆசிரியரையே கொலை செய்ததாகவும் குற்றச்சாட் டுக்கள் உள்ளன. 
பாஜக-வைச் சேர்ந்த மதுகோடா வின் ஆட்சியில், 2008-ஆம் ஆண்டு பானு பிரதாப் சாஹி, சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
 அப்போது, அவர் விதிகளை மீறி,  தனியார் நிறுவனங்களிடமிருந்து 130 கோடி ரூபாய் மதிப்பிலான மருந் துகளை கொள்முதல் செய்தார்.
இதில் மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டு, கடந்த 2011-ஆம் ஆண்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் சிறை யில் இருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
அதேபோல தனது பள்ளியின் ஆசி ரியரையே கொலை செய்ததாக குற் றம் சாட்டப்பட்டவர் சஷி பூஷண். இவர் அக்டோபர் மாதம்தான் பாஜக-வில் சேர்ந்தார்.
இந்த இவருக்கும் தற்போது பாஜக சீட் வழங்கியுள்ளது.
அதிலும் சாஹியின் பெயர், பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டி யலிலிலேயே இடம்பெற்றுள்ளது.
இதற்கு பாஜக-வுக்கு உள்ளேயே எதிர்ப்பும் எழுந்துள்ளது.
 குறிப்பாக, பானு பிரதாப் சாஹி, சஷி பூஷண் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவந்த்பூர் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ- வான அனந்த் பிரதாப் தேவ், பாஜக விலிருந்து விலகி, ஜார்க்கண்ட் மாண வர் சங்கத்தில் இணைந்துள்ளார்.
ஒழுக்கத்தைப் பற்றி வாய்கிழியப் பேசிக்கொண்டிருந்த பாஜக, தற் போது குற்றவாளிகளையே, தேடிப் பிடித்து சீட் வழங்கிக் கொண்டிருப்ப தாகவும் அனந்த் பிரதாப் தேவ் விமர் சித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளால் சோனியா, ராகுல்காந்திக்கு ஆபத்து என்பதா? @ சீமான் ஆவேசம்.
வக்காலி!! இதே வாய்தானே போன மாசம் "ஆமா... ராஜீவ் காந்தியை கொன்று மண்ணுக்குள் பொதைச்சது விடுதலைப் புலிகள் தான்"னு பேசிச்சு..
-------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?