முற்றிலும் துர்பிரயோகம்

ஜனநாயகப் படுகொலை என்ற பதத்தையும் கூட அர்த்தமற்று போகச் செய்துவிட்டது நரேந்திர மோடி - அமித்ஷா தலைமையிலான பாஜக.
இதற்கு மேலும் ஒரு கடுமையான வார்த்தையை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. மகாராஷ்டிராவில் அவர்கள் அரங்கேற்றியிருக்கும் மிக மிகக் கொடிய ஜனநாயகப் படுகொலை எனும் பயங்கரம்.
 இதுவரை இப்படி ஒன்றை நாடு கண்டதில்லை.
 குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது, நாடு உறங்கிக் கொண்டிருக்கும் போது, அஜித் பவார் என்ற கருங்காலியை தேசியவாத காங்கிரஸ் கட்சி யிலிருந்து மிரட்டி அழைத்துச் சென்று, அவர் மூலமாக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களது ஆதரவு தங்களுக்கு இருப்பதாக காட்டி, குடி யரசுத் தலைவர் அலுவலகத்தையும் ஆளுநரையும் முற்றிலும் துஷ்பிரயோகம் செய்து, தேவேந்திர பட்னாவிஸை மகாராஷ்டிர முதல மைச்சராக பதவியேற்கச் செய்து அழகு பார்த்தி ருக்கிறார்கள் மோடியும் - அமித்ஷாவும்.

இதைவிட வெட்கக்கேடும், இழிவும், மிகப்பெரும் அவமானமும் இந்திய அரசியல மைப்புச் சட்டத்திற்கு நேர முடியாது.

பாஜகவின் ஈனச்செயல்களால், அவர்களது இந்துத்துவா வன்முறைக் கொள்கையையே தங்களது கொள்கையாகக் கொண்டிருக்கக்கூடிய பிராந்திய கட்சியான சிவசேனா கூட வெகுண்டெ ழுந்து,
பாஜகவுக்கு எதிராக மகாராஷ்டிராவில் களத்தில் இறங்கிவிட்ட தருணத்தில்தான், இனி யும் அங்கு நேர்வழியில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்று தெளிவாக உணர்ந்து கொண்ட இவர்கள், அக்கிரமத்தின் உச்சத்திற்கு சென்று அதிகாரத்தை வசப்படுத்தியிருக்கிறார்கள்.

 ஆனால் அவர்களால் அதை நிரூபிக்க முடி யுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கை கருங்காலி அஜித்பவார் தன்னுடன் கொண்டுவர முடிந்தால் மட்டுமே பட்னாவிஸ் சட்டமன்றத்தில் முதலமைச்சராக நீடித்திருக்க முடியும்.
அதாவது 36 சட்டமன்ற உறுப்பினர்கள்.
அதற்கு குறைவானவர்கள் ஆதரவளித்தால், அவர்கள் கட்சி மாறியதாகவே கருதப்படுவார்கள்.

 அஜித்பவாரை சட்டமன்றக் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்களது கூட்டத்தை அவர் ஞாயிறன்று நடத்தி உறுதி செய்துள்ள நிலையில், அஜித் பவார் மட்டுமே பட்னாவிஸுக்கு ஆதரவானவராக இருந்து கொள்ளக்கூடும். அதனால் பட்னாவிஸுக்கு பலன் கிட்டப்போவதில்லை.
ஞாயிறன்று உச்சநீதி மன்றத்தில் வந்த வழக்கில், சிவசேனா - காங்கி ரஸ் - தேசியவாத காங்கிரஸ் - வழக்கறிஞர்களின் வாதம் இதைத்தான் உணர்த்துகிறது.
 அந்த வாதத்தை ஏற்று, பட்னாவிஸுக்கு ஆதரவு தெரி வித்துள்ள எம்எல்ஏக்களின் கடிதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் பாஜகவுக்கு உத்தரவிட்டி ருக்கிறது.
இதற்காக குதிரை பேரத்தின் எத்தகைய இழிவான எல்லைக்கும் பாஜக செல்லும்.
ஆனாலும் சட்டமன்றத்தில் அதற்கு ஒரு சாட்டையடி கிடைக்கும் என நம்புவோமாக!
 -------------------------------------------------------------------------

“ஒரே நாளில் எடுத்த முடிவல்ல”

பா.ஜ.க-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க நினைத்த அஜித் பவார், ஒரே நாளில் அந்த முடிவுக்கு வரவில்லை என்றும், அதற்குப் பின்னணியில் மனஸ்தாபங்களும், பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்தவராக கட்சிக்குள் அஜித் பவார் இருந்து வந்தார்.
2009ல் துணை முதல்வர் பதவியை அடைந்த பின்னர் அஜித் பவாரின் இலக்கு மராட்டியத்தின் முதல்வர் பதவி என்பது மட்டும் தான். ஆனால் ஊழல் வழக்குகள் அவரை விட்டு வைக்கவில்லை. அரசியலில் தாண்டி குடும்ப பிரச்னைகளும் அஜித் பவார் பா.ஜ.க உடன் இணையக் காரணமாகி இருக்கிறது.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அஜித் பவாரின் மகனான பர்த் பவார் மாவல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்தத் தொகுதியில் தான் 1967ம் ஆண்டு சரத் பவாரும், 1991ம் ஆண்டு அஜித் பவாரும், 2009ம் ஆண்டு சுப்ரியா சுலேவும் வெற்றி பெற்றனர். முதலில் பர்த் பவாருக்கு தேர்தலில் சீட் வழங்க சரத் பவாரும், சுப்ரியா சுலேவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அஜித் பவார் கடும் வாதத்திற்குப் பிறகே தனது மகனுக்கு சீட் பெற்றிருக்கிறார்.
ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் அந்த தோல்விக்கு சரத் பவார் தான் காரணம் என்று அஜித் பவார் மற்றும் குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள்.
அதே குடும்பத்தின் ரோஹித் ராஜேந்திர பவார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். இவரது அரசியல் வளர்ச்சி அஜித் பவாருக்கும் அவரது மகனுக்கும் பிடிக்கவில்லை என்பதும் அஜித் பவார் பிரிந்து செல்ல ஒரு காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.கவுடன் அஜித் பவார் இணைந்தது பல கட்டங்களுக்குப் பின்னர் தான் எனத் தெரிய வருகிறது. கடந்த வெள்ளியன்று மதியம் அஜித் பவாரிடமிருந்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்புவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதேபோல பா.ஜ.க-வின் பட்னாவிஸ் தரப்பிலிருந்து பா.ஜ.க எம்‌.எல்‌.ஏ-க்கள் மற்றும் 15 சுயேட்சை எம்‌.எல்‌.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அதன் பின்னரே ஆளுநர் ஜனாதிபதிக்கு இதுகுறித்து தெரிவித்திருக்கிறார். சனிக்கிழமை காலை பதவி ஏற்க அழைப்பு வந்திருக்கிறது. அதற்கு முன்பாக, வெள்ளி மாலையே பா.ஜ.க மகாராஷ்டிரா தேர்தல் பொறுப்பாளர் பூபேந்திரா யாதவ் மும்பை வந்தது குறிப்பிடத்தக்கது.

 சிவசேனாவுடன் பிரச்னை தொடங்கியது முதலே, தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.
 தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பதை விட இரண்டு கட்சிகள் ஆட்சி அமைப்பது சாத்தியமானது என்று உணர்ந்து இருக்கிறார்கள்.
 கடந்த 12ம் தேதி அஜித் பவார் ஆளுநரிடம் நேரம் கேட்டதற்கு காரணமே பா.ஜ.கவுடன் தொடர்பில் இருந்ததுதான் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்தை கடந்த வெள்ளி அன்று நடந்த நிலையில் கூட்டம் முடிவதற்குள் கிளம்பினார் அஜித் பவார். வழக்கறிஞரை பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் பட்னாவிஸை சந்தித்திருக்கிறார். அதன் பின்னர் தான் ஆட்சியமைப்பு உள்ளிட்ட எல்லா கூத்துகளும் அரங்கேறி இருக்கிறது.
உத்தவ் தாக்கரே மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்பதை நான்கு அறிந்த பின்னர் தான் அஜித் பவாரை தங்கள் பக்கம் கொண்டு வரும் முடிவுக்கு வந்திருக்கிறது பா.ஜ.க.
2019 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, கூட்டணி பேச்சுவார்தைகள் தொடங்கிய பின்னர் துணை முதல்வர் பதவியை ஜெயந்த் பட்டீலுக்கு வழங்க சரத் பவார் முடிவு எடுத்திருக்கிறார்.
அதேபோல, அஜித் பவார் யார் யாருக்கு அமைச்சர் பதவி என்ன துறை என்பது குறித்து சரத் பவாரிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால் அதுகுறித்து அஜித் பவாருடன் சரத் பவார் விவாதிக்க மறுத்து விட்டதாகவும், அதன் காரணமாகவே இப்படியொரு முடிவை அஜித் பவார் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேசியவாதக் காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவாருடன் சென்ற எம்.எல்.ஏக்கள் எத்தனை பேர் என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். மாலை 4.30 மணியளவில் சரத் பவார் தனது அனைத்து எம்.எல்.ஏக்களையும் ஒரு கூட்டத்திற்கு அழைத்திருந்தார்.

அதில் அஜித் பவாரின் பதவியேற்பில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கள் 
1.திலிப் பங்கர்
2.மானிக் ராவ் கோகடே

3.ராஜேந்திர சிங்னே
4.சந்தீப் ஷிர்சாகர்
5.சுனில் ஷெல்கே
6.சுனில் புசாரா
7.நர்ஹரி ஸிர்வால்
8.தனஞ்சய் முண்டே
9.சுனில் டிங்ரே
 என்.சி.பி சரத் பவார் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் அஜித் பவார் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

- சி.ஜீவா பாரதி
---------------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

ஆல்பிரட் நோபல், டைனமைட்  காப்புரிமம் பெற்றார்(1867)
பொஸ்னியா ஹெர்செகோவினா தேசிய தினம்(1943)
சுரிநாம் விடுதலை தினம்(1975)


1839 - புயலைக் குறிக்க, சைக்ளோன் என்ற ஆங்கிலச் சொல் உருவாகக் காரணமான ஒரு பேரழிவுப் புயல், கொரிங்கா என்ற துறைமுக நகரைத் தாக்கியது.
இந்தப் புயலின் பேரழிவுக்குப்பின் மீண்டெழ முடியாத அந்நகரம் இன்று ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமாக எஞ்சியுள்ளது.
காற்றின் வேகம் போன்றவை கணிக்கப்பட்டாத இந்தப் புயலின்போது 40 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்து, கப்பல்களும், படகுகளுமாக சுமார் இருபதாயிரம் கலங்கள் நகருக்குள் அடித்துவரப்பட்டன. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள வெப்பமண்டலப் புயல்களில், மூன்றாவது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய இந்தப் புயலில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
 1881இல் வியட்னாமில் 3 லட்சம் பேரை பலிவாங்கிய ஹைஃபோங் சூறாவளியும் இதற்கிணையாக மூன்றாவது இடத்தில் குறிப்பிடப்படுகிறது.
உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள, மிக அதிக உயிர்ப் பலிகொண்ட   10 புயல்கள், சூறாவளிகள் முதலானவற்றில், 7 வங்காள விரிகுடாவில்தான் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாக, 1789இல் கொரிங்காவைத் தாக்கிய ஒரு பெரும் புயலில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானாலும், மீண்டெழுந்த அந்தத் துறைமுக நகரம், 1839 புயலுக்குப்பின் (தனுஷ்கோடியைப் போன்று!), மறுகட்டுமானம் செய்யப்படாமல் சிறிய கிராமமாக சுருங்கிப்போனது. இப்பகுதியில் ஏற்படும் புயல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஜர்னல் ஆஃப் த ஆஷியாட்டிக் சொசைட்டிக்கு எழுதியபோதுதான், ஹென்றி பிடிங்டன், சைக்ளோன் என்ற சொல்லை உருவாக்கினார்.
ஆங்கிலேய வணிகக் கப்பல் தளபதியாக வங்கத்திற்கு வந்த இவர் அங்கேயே தங்கியதுடன், புயல்களில் சிக்கிய பல கப்பல்லகளை ஆய்வு செய்து, புயலின் மையப்பகுதி அமைதியாக இருப்பதாகவும், அதன் வெளிப்பகுதி புவியின் தெற்கு அரைக்கோளத்தில் கடிகாரச் சுற்றிலும், வடக்கு அரைக்கோளத்தில் எதிர்ப்புறமாகவும் சுழல்வதைக் கண்டறிந்தார்.
பாம்பு உடலைச் சுற்றுவதுபோல என்பதைக் குறிக்க சைக்ளோன் என்ற சொல்லை உருவாக்கிய இவர், புயல்களை மாலுமிகள் எதிர்கொள்ள வழிகாட்டும் நூலையும் எழுதினார்.
வங்கத்தின் நிலவியல் அருங்காட்சியக் காப்பாளராகவும் இருந்த பிடிங்டன், புயலால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகமென்பதால், கல்கத்தாவின் தென்கிழக்குப் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டாமென்று அறிவுறுத்தினாலும், 1858இல் அவர் மறைவுக்குப்பின் அமைக்கப்பட்ட அத்துறைமுகம் 1867இல் ஏற்பட்ட புயலில் அழிந்ததும் குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------------

  வேலை வாய்ப்புகள் 

  பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
---------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தில் 55 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது:
1.11.2019 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30 வயது மற்றும் சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி
: 3.12.2019

விபரங்களுக்கு
: www.cpcl.co.in
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு.
 காலியிடங்கள்: உதவி பாதுகாப்பு அதிகாரி- 19, பாதுகாவலர்- 73

வயது: 6-12-2019 அடிப்படையில் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் பொதுப் பிரிவினர்-27, எஸ்.சி.,/எஸ்.டி.,- 32, ஓ.பி.சி.,- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு சலுகை உண்டு.

கல்வித் தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்ச்சி முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்' https://recruit.barc.gov.in
கடைசி நாள்
: 6.12.2019
---------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1996 முதல் 1.8.2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 153 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தொடர்புடைய விளையாட்டில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 17.12.2019

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf

------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுக்கு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7, 8, 14, 21 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச.28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
2020, ஜன. 19 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு
ஜன.25- ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------  
 ஸ்மார்ட்போன் வெடிப்பு 
நாம் தவிர்க்க வேண்டிய   தவறுகள்!
ஸ்மார்ட்போன் வெடிப்பு சம்பவங்களில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதை பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனம்.

 அதொன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல!
சில குறிப்பிட்ட தவறுகளை தவிர்த்தாலே போதும், ஸ்மார்ட்போன் வெடிப்பு அல்லது ஸ்மார்ட்போன் தீப்பிடிப்பு போன்ற சம்பவங்களை நாம் தவிர்க்கலாம்.
மாறாக அதையெல்லாம் "அடிக்கடி" செய்தால் உங்கள் ஸ்மாட்போன் "டமால்" தான்!

நம்மில் சிலருக்கு ஸ்மார்ட்போன்களை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை தலையணையின் கீழ் வைக்கும் போது, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இண்டர்னெல் டெம்ப்ரேச்சர் அதிகரிக்கும்.
தவிர உங்களின் உடல் எடையும் ஸ்மார்ட்போனின் மீதான தேவையற்ற அழுத்தத்தை செலுத்தும்.
இது வெடிப்பு அல்லது தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு வழிவகுக்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய போலியான சார்ஜர்கள் அல்லது பிற நிறுவங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன்களின் அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டாம்.
 குறிப்பாக உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய கார் சார்ஜிங் அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக பவர் பேங்கைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
அவசரத்திற்கு ஒரு 10 நிமிடங்கள் சார்ஜ் செய்து கொண்டால் என்ன? என்று நீங்கள் தெரிந்தே செய்யும் இந்த பிழையானது விபரீதமான முடிவுகளை வழங்கும் என்பதை மறக்க வேண்டாம்!

ஒரு ஸ்மார்ட்போன் சூடாகத் தொடங்கினால் அதை தொடர்ந்து பயன்படுத்த கூடாது, சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
 இருந்தாலும் கூட விடாமல் கேமிங் செய்வோம் அல்லது சாட்டிங் / காலிங் நிகழ்த்துவோம்.
சார்ஜ் தீர்ந்தால் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என்று தெரிந்த நமக்கு, அது சூடாகும் பட்சத்தில் அதற்கு சற்று ஒய்வு கொடுக்க வேண்டும், அதை மீண்டும் சகஜமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை, பாவம்!

என்ன ரூ.30,000 ஆ? பரவாயில்லை இ.எம்.ஐ போட்டாவது இந்த ஸ்மார்ட்போனை வாங்கிட வேண்டும்" என்கிற ஆர்வமானது அந்த ஸ்மார்ட்போனை வாங்கியபின்னர், குறிப்பாக பேட்டரிகளை மாற்றும் போது இருப்பதில்லை.
 "இதுக்கு வேற தனியா செலவு செய்யணுமா" என்று சலித்துக்கொண்டு நிறுவனங்களின் அசல் பேட்டரிகளை வாங்காமல் போலியான மாற்று பேட்டரிகளை வாங்கும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதென்றால், எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு நடக்கலாம்.

ஸ்மார்ட்போனை கீழே போடுவது என்பது ஒன்றும் பெரிய தவறல்ல.
ஒருவேளை ஏதேனும் கடுமையான சேதங்களை உங்கள் ஸ்மார்ட்போன் சந்தித்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, நிறுவனத்தின் சேவை மையத்திற்கு கொண்டு சென்று அதை சரிபார்க்கவும். ஏனெனில் நம் கண்களுக்கு மேலோட்டமான சேதங்கள் மட்டுமே புலப்படும், உள்ளூர எதாவது சிக்கல்கள் உள்ளதா?
அதன் விளைவாக பேட்டரி வெடிப்பு அல்லது தீப்பிடிப்பு நிகழுமா என்பதை வல்லுநர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை உறுதி செய்தபின்னர் அதை தொடர்ந்த்து பயன்படுத்தவும்.

 உங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்வது (இது சில பழைய ஸ்மார்ட்போன்களுக்கு தான் பொருந்தும்). 

உங்கள் ஸ்மார்ட்போனை நேரடியாக சூரிய ஒளியில் வைத்திருக்க வேண்டாம், அதேபோல சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து அதை சார்ஜ் செய்ய வேண்டாம். 

உங்கள் ஸ்மார்ட்போனை பவர் ஸ்ட்ரிப் அல்லது எக்ஸ்டென்சன் கார்ட் வழியாக சார்ஜ் செய்வதை தவிர்க்க பாருங்கள். உள்ளூர் பழுதுபார்க்கும் கடைகளில் உங்கள் ஸ்மார்ட்போனை சரிசெய்ய வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சேவை மையங்களுக்கு மட்டுமே செல்லுங்கள். 

உங்கள் ஸ்மார்ட்போனின் மீது தேவையற்ற அழுத்தத்தை செலுத்த வேண்டாம், குறிப்பாக சார்ஜ் செய்யும் போது, அதன் மேல் எந்தவிதமான எடையையும் ஏற்ற வேண்டாம். 

இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டால் போதும்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------- 

முகநூல் 

Syed Khaleel

“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”
தமிழக அமைச்சர்களின் ‘அந்தப்புர அந்தரங்கங்கள்’ அம்பலமாகும் நேரம் இது போல!
’ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஜெயகுமார் தொடங்கி, ‘ஆழ்துளை கிணறு அழுக்கு வேட்டி ஸ்பெஷலிஸ்ட்’ விஜயபாஸ்கர் வரை பல மாண்புமிகுக்களின் திரைமறைவு சங்கதிகள் தொடர்ந்து வெளியாகி, மக்களை முகம் சுளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ‘உவ்வே’ வரிசையில் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் இணைந்திருக்கிறார்.
கோவையில் செட்டிலாகியிருக்கும் அந்த வட இந்திய பெண்ணின் பெயர் சோனாலி பிரதீப்.
ஏற்கனவே பாஜக மகளிரணியில் பல ஆண்டுகளாக கும்மியடித்து வந்தவர் இந்த சோனாலி..
செக்கச் சிவந்த மேனி, செழுமையான உடலமைப்பு, கேட்பவரைக் கவர்ந்திழுக்கும் பேச்சு என சோனாலியிடம் ஏகப்பட்டத் தூண்டில்கள் உண்டு.

“அது யாரானாலும் சரி…ஒரு முறை என்னைப் பார்த்துவிட்டால் அப்புறம் சரண்டர்தான்’’ என தன்னைப் பற்றி இவர் பெருமையாக சொல்வதுண்டாம். ஆளை கிறங்கடிக்கும் தோற்றம் கொண்ட இவர் பல அழகிப் போட்டிகளிலும் மகுடம் சூடியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் வேலுமணியை எதேச்சையாக சந்தித்திருக்கிறார் சோனாலி. முதல் சந்திப்பிலேயே அமைச்சரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளீரிட்டிருக்கிறது.
“ஏதாவது தேவைண்ணா காண்டாக்ட் பண்ணுங்க’’ என வேலுமணி சொல்ல, இதற்காகவே காத்திருந்த சோனாலி அந்த நிமிடம் முதல் இன்று வரை தொடர்ந்து அமைச்சருடன் தொடர்பில் இருந்து வருகிறாராம்.

நாளுக்கு நாள் அதிகமான இந்த நெருக்கம், சோனாலியை முதல்வர் எடப்பாடியிடம் அறிமுகம் செய்துவைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
இதனால் ஏற்பட்ட தெம்பில், “டமிள்நாடு கவர்மென்டில் என்ன மேட்டர் ஆனாலும் செஞ்சி தர்றேன். நான் சொன்னா யாரும் தட்டமாட்டாங்க’’ எனப் பலரிடமும் சோனாலி சொல்லி வருவதாகப் பேச்சு.
வேலுமணியுடனான தொடர்பின் அடுத்தக் கட்டமாக அண்மையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார் சோனாலி. சூட்டோடு சூடாக கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனுவும் தாக்கல் செய்ய, “இங்க என்னப்பா நடக்குது!’’ என விபரம் புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள்.

“ஆரம்பத்தில் பொது இடங்களில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் அமைச்சரை சந்திச்சி அந்த பொண்ணு போட்டோ எடுத்தபோது நாங்க பெருசா கண்டுக்கலீங்க.
ஆனால் அதற்கப்புறம் கோவைக்கு அமைச்சர் வரும்போதெல்லாம் இந்த பொண்ணும் கரெக்டா வந்திடுதுங்க. ‘மேயர் சீட் எனக்குதான், அமைச்சர் பிராமிஸ் பண்ணிட்டாருண்ணு’ சொல்லுது. இது எங்கே போய் முடியப் போகுதோன்னு தெரியலீங்க’’ எனப் புலம்புகிறார்கள் லோக்கல் அதிமுக புள்ளி ராஜாக்கள்..
 --------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?