வெற்றிகரமான அசிங்கம்..

 ‘பயங்கரவாத ஒழிப்பு புகழ்’
‘பயங்கரவாத நிதியுதவி’ தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்துவரும் நிறுவனத்திடமிருந்து ‘பயங்கரவாத ஒழிப்பு புகழ்’ பாஜக, பெரிய அளவிலான நன்கொடை பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவரும் மாஃபியா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியுமான இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சியிடமிருந்து சொத்துக்களை வாங்கியது தொடர்பாக ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் லிமிட். நிறுவனத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த நிறுவனம் பாஜகவுக்கு நிதியளித்திருப்பதாக, அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த தகவலில் தெரிவித்துள்ளது.


நெருக்கடி நிலையில் இருக்கும் திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆர். கே. டபிஸ்யூ, 2014 – 15 ஆண்டில் பாஜக -வுக்கு ரூ. 10 கோடி நிதியளித்துள்ளது.
இந்த விசயத்தை கோப்ரா போஸ்டு, கடந்த ஜனவரி 2019-ல் வெளியே கொண்டுவந்தது.

பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டுகிற பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகளிடமிருந்து பாஜக தொடர்ந்து பெரிய அளவிலான நிதியை பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், எந்தவொரு தனிப்பட்ட நிறுவனமும் ஆர்.கே. டபிள்யூ கொடுத்ததைவிட பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக நிதியை கொடுக்கவில்லை.
தற்போது தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சர்ச்சைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், மற்றொரு விசயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். 2014- 15 ஆண்டில் மோடி அரசாங்கம், முன்பின் தெரியாதவர்கள் அரசியல் செல்வாக்கு செலுத்தும் தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால், ஆர்.கே. டபிஸ்யூவின் நன்கொடை வெளிச்சத்துக்கே வந்திருக்காது.

இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஞ்சித் பிந்த்ரா, நிழல் உலகத்தின் சார்பாக ஒப்பந்தங்களை பேசியதாக அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்.
பிந்த்ரா, மிர்ச்சிக்கும்; நிறுவனங்களுக்குமிடையே முகவராகவும் தரகராகவும் செயல்பட்டதாக அமலாக்கத்துறை கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அதுமட்டுமல்ல..
மிர்ச்சியின் சொத்துக்களை வாங்கியதாக அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனமான சன்பிளிங்க் ரியல் எஸ்டேட் , ஒரு பொதுவான இயக்குனர் வழியாக வேறொரு நிறுவனத்தின் மூலம் பாஜகவுக்கு ரூ. 2 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது.

சன்பிளிங்க் இயக்குனரான மெகுல் அனில் பவிஷி, ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இயக்குனராகவும் உள்ளார்.
 தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்த அறிக்கையில் 2014-15 ஆண்டில் ஸ்கில் ரியால்டர்ஸிடமிருந்து ரூ. 2 கோடி நிதி பெற்றுள்ளது.

ஆர்.கே. டபிள்யூ டெவலர்ப்பர்ஸ் இயக்குனர் பிளாசிட் ஜேக்கப் நரோன்ஹா, தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்.

 2016-17-ஆம் ஆண்டில் பாஜகவுக்கு தர்ஷன் ரூ. 7.5 கோடியை வழங்கியுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் நரோன்ஹாவும் விசாரணையில் உள்ளார்.
ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் நிறுவனம் மிர்ச்சியின் சொத்துக்களை விற்க உதவியதாகவும், இதற்காக பிந்த்ரா ரூ. 30 கோடியை கமிஷனாக பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
 நடிகர் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவையும் ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் உடனான உடன்பாடுகளுக்காக அமலாக்கத்துறை விசாரித்தது.
இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி.
ஆர்.கே. டபிள்யூ நிறுவனத்துடன் பரிவர்த்தனைகளில் இருந்த எசென்ஷியல் ஆஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனத்தில் ஷில்பாவும் ஒரு இயக்குனர்.

இரண்டு மாதங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, இக்பால் மிர்ச்சி விசயம், சர்ச்சைக்குரியதாக இருந்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரஃபுல் பட்டேலுக்கு சொந்தமான மில்லேனியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கும், சன்பிளிங்க் நிறுவனத்துக்கும் மிர்ச்சியுடன் சொத்து பரிவர்த்தனை இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணை சொன்னது.

மகாராஷ்டிர தேர்தலுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு, பிரஃபுல் பட்டேலை விசாரித்ததோடு, பிந்த்ரா உள்ளிட்ட இருவரை கைது செய்தது.
பிரஃபுல் பட்டேல் தான் எந்த தவறும் செய்யவில்லை என உறுதியாக மறுத்துள்ளார்.
மிர்ச்சியின் சொத்துக்களை சன்பிளிங் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் மற்றும் மில்லேனியம் டெவலப்பர்ஸ் பிரைவேர் லிமிடெட் நிறுவனங்கள் விற்றது தொடர்பாக மிர்ச்சியின் மைத்துனரான முக்தார் மேமனிடம் அமலாக்கத்துறை விசாரித்தது.
சன்பிளிங்க் நிறுவனத்துக்கு ரூ. 2,186 கோடியை கடன் கொடுத்தது தொடர்பாக கடந்த மாதம் டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தின் பதினான்கு கிளைகளில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை.
 இந்த பணம் துபாய்க்கு அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை நம்புகிறது.

 மிர்ச்சிக்கு சன்பிளிங்கிற்கும் இடையே சொத்து பரிமாற்ற பேச்சுவார்த்தை நடத்தியை பிந்த்ரா ஒப்புக்கொண்டதாக பெயர் சொல்ல விரும்பாத அமலாக்கத்துறை அதிகாரி கூறியதாக பிஸினஸ் டுடே செய்தி வெளியிட்டிருந்தது.

மகாராஷ்டிரத்தில் தனது கடைசி பிரச்சார பயணத்தில் பேசிய பிரதமர் மோடி, மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் நியாயம் செய்யவில்லை என்றார்.
“மும்பை குண்டு குண்டுவெடிப்பின் காயங்களை எங்களால் மறக்க முடியாது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அப்போதைய அரசாங்கம் நீதி செய்யவில்லை, அத்தகைய நிலைப்பாட்டிற்கான காரணம் இப்போதுதான் தெரியவருகிறது.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கைது செய்வதற்குப் பதிலாக, அதிகாரத்தில் இருந்தவர்கள் மிர்ச்சி வியாபாரத்தில் ஈடுபட்டனர்” என அவர் வெடித்தார்.

மிர்ச்சியுடனான நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் ‘தேசத்துரோகத்திற்குக் குறைவானதல்ல’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வெளியானது.
 பிரஃபுல் பட்டேல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் காரணமாக அமித் ஷாவின் பேச்சை மேற்கோள் காட்டிய கட்டுரைகள் TOI இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், TOI யில் வெளியான கட்டுரை pressreader.com வழியாக இன்னும் கிடைக்கிறது.
இந்த வழக்கில் பிந்த்ராவைத் தவிர, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஹாரூன் யூசுப்பும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடக செய்திகளின்படி, பிந்த்ரா நில ஒப்பந்தத்தின் தரகராக செயல்பட்டார்,
அதே நேரத்தில் யூசுப் பணத்தை ஒரு அறக்கட்டளைக்கு மாற்றி ஒப்பந்தத்திற்கு வசதி செய்தார்.

தேசியவாத காங்கிரசை ‘தேச துரோகி’யாகவும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர்களாகவும் பேசிய டெல்லி சாணக்கியர்கள் மோடி – அமித் ஷா, அதே கட்சியுடன் கள்ளக்கூட்டு வைத்து அதிகாலையில் ‘அதிரடி’யாக ஆட்சியமைத்திருக்கிறார்கள் மகாராஷ்டிரத்தில்.
குற்றவாளியுடனும் கூட்டு, குற்றம்சாட்டப்பட்டவனுடனும் கூட்டு!

ஆக, டெல்லி சாணக்கியர்களுக்கு நீதி – நியாயம் – அறம் -மானம் – சூடு -சுரணை என எதுவுமே இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 மராட்டிய
சிங்கம்
மஹாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரை நம்பி, அவசரம் அவசரமாக அமைந்த, பா.ஜ., ஆட்சி, நான்கே நாட்களில் கலைந்தது. சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து ஏற்பட்ட திருப்பங்களால், முதல்வர் பதவியை தேவேந்திர பட்னவிசும், துணை முதல்வர் பதவியை அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தலைமையில், புதிய அரசு அமையவுள்ளது.
மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவுக்கு பெரும்பான்மை தொகுதிகள் கிடைத்தன. முதல்வர் பதவி, அமைச்சரவை பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்தது.

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது. சிவசேனா தலைமையில், காங்., - தேசியவாத காங்., கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டன. இந்நிலையில், 22ல், அதிரடி திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைத்தது. தேவேந்தி பட்னவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இதை எதிர்த்து, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அஜித் பவாரும், தங்கள் கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏ.,க்களும் மட்டுமே, பா.ஜ.,வுடன் இருப்பதாகவும், மற்ற எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடன் இருப்பதாகவும் தேசியவாத காங்., கட்சி அறிவித்தது. 
இதற்கிடையே, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், சிவசேனா, காங்., தேசியவாத காங்.,கட்சிகளை சேர்ந்த, 162 எம்.எல்.ஏ.,க்களின் அணிவகுப்பு, பத்திரிகையாளர்களின் முன், நேற்று முன்தினம் இரவு நடந்தது. 
இதன் மூலம், அஜித் பவாருடன் இருந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரிடம் திரும்பி விட்டது உறுதிப் படுத்தப்பட்டது.

இந்நிலையில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் தொடர்ந்த வழக்கில், நீதிபதி என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று காலை, 10:30க்கு தீர்ப்பளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: பட்னவிஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், உடனடியாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டால், குதிரை பேரம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதுபோன்ற நேரத்தில், ஜனநாயகத்தின் மதிப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே, சட்டசபையின் மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்து, இன்று மாலை, 5:00 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பட்னவிஸ் தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

ஓட்டெடுப்பில், எந்தவித ரகசியமும் கூடாது. வெளிப்படையாக, நேரடியாக நடத்தப்பட வேண்டும்; இதை,நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஓட்டெடுப்புக்கு முன், புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு, இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பின், மஹாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. டில்லியில், பிரதமர் மோடியுடன், பா.ஜ., தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, சொந்த காரணத்துக்காக, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, அஜித் பவார் அறிவித்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே, பட்னவிஸ், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து, நீண்ட விளக்கம் அளித்தார். பின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தன் பக்கம் இருப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே, ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். பதவிப் பிரமாணமும் எடுத்தோம்.
ஆனால், சொந்த காரணங்களுக்காக, துணை முதல்வர் பதவியிலிருந்த விலகுவதாக, அஜித் பவார், சற்று முன், என்னிடம் தெரிவித்தார்.
இதனால், பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை எங்களிடம் இல்லை. எனவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, சட்டசபையில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, கவர்னர் மாளிகைக்கு சென்ற பட்னவிஸ், தன் ராஜினாமா கடிதத்தை, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியிடம் அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்பதாக, கவர்னர் அறிவித்தார். அடுத்த கட்டமாக, சிவசேனா தலைமையில், தேசியவாத காங்., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

அஜித் பவாரை நம்பி, அவசரப்பட்டு முடிவு எடுத்து, முதல்வராக பதவியேற்ற பட்னவிஸ், நான்கு நாட்களிலேயே ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. மஹாராஷ்டிரா சட்டசபையில், பா.ஜ.,வுக்கு, 105 உறுப்பினர்களும், சிவசேனாவுக்கு, 56 உறுப்பினர்களும் உள்ளனர். தேசியவாத காங்கிரசுக்கு, 54 பேரும், காங்கிரசுக்கு, 44 பேரும் உள்ளனர்.

சட்டசபையில், பெரும்பான்மைக்கு, 144 உறுப்பினர்கள் தேவை. சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் அடங்கிய, 'மஹா விகாஸ் அகாதி' கூட்டணிக்கு, 154 உறுப்பினர்கள் உள்ளனர். தேசியவாத காங்கிரசின் அஜித் பவார், யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதவிர, சில சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த சிலரும், இந்த மூன்று கட்சி கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, உத்தவ் தாக்கரே தான், மஹாராஷ்டிராவின் முதல்வர். இதில் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லை. அஜித் பவார், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனால், மீண்டும் சரத் பவார் பக்கம் வந்து விடுவார் என நம்புகிறோம். சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனா

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மஹாராஷ்டிரா சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக, பா.ஜ., வைச் சேர்ந்தவரும், சபையின் மூத்த உறுப்பினருமான காளிதாஸ் கோலம்ப்கர், நேற்று தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, இன்று காலை, 8:00 மணிக்கு, மஹாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் கூடுகிறது. இதில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

மஹாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததுமே, குதிரை பேரத்தில் ஈடுபடுவது இல்லை என்பதில் உறுதியாக இருந்தோம். எதிர்காலத்திலும், அது தொடரும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, பா.ஜ., மீது சுமத்துகின்றன. சிவசேனா தான், அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

ஆட்சி அதிகாரத்துக்காக, ஹிந்துத்வா கொள்கையை, காங்., தேசியவாத காங்., கட்சிகளிடம், சிவசேனா அடகு வைத்து விட்டது. பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தான், மஹாராஷ்டிரா மக்கள் ஓட்டளித்தனர். மக்கள் தீர்ப்பை மதிக்காமல், சிவசேனா தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். சிவசேனாவுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி அளிப்பதாக, தேர்தலுக்கு முன், எந்த வாக்குறுதியையும், பா.ஜ., அளிக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றால், கூட்டணி கட்சிகளான காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கூட்டணி மாறி, குழப்பத்தை ஏற்படுத்தியதால், அவர், கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட வாய்ப்புள்ளது. 'தேசியவாத காங்., கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஜெயந்த் பாட்டீல், காங்கிரசின் மூத்த தலைவரான பாலாசாகிப் த்ரோட் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம்' என, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து 'மஹா விகாஸ் அகாதி' என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியை வழிநடத்துவதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டணியின் தலைவராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே 59 தேர்வு செய்யப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் நாளை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.


போலந்து அரசியலைப்பு பெறப்பட்டது(1815)
ஆல்பிரட் நோபல், நோபல் பரிசு திட்டத்தை தெரிவித்தார்(1895)
ரத்மலானை விமான நிலையத்திற்கு முதலாவது விமானம் சென்னை வந்திறங்கியது(1935)


கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை ஆரம்பித்த ரொஸ் மாக்வேர்ட்டர் இறந்த தினம்(1975)

 வி.பி.சிங், இறந்த தினம் (2008)

 உ.பி., மாநிலம், அலகாபாத் நகரில், ராஜ வம்சத்தில், 1931, ஜூன், 25ல் பிறந்தார்.
அலகாபாத் மற்றும் புனே பல்கலைகளில், இயற்பியல் பட்டம் பெற்றார்.
ஏழைகள் மீது பரிவு காட்டி, வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்தில் இணைந்து, தன் நிலங்களை தானமாக அளித்தார்.
 அரசியலில் இறங்கிய இவர், காங்கிரசில் இணைந்து பணியாற்றினார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது, போபர்ஸ் ஊழல் விவகாரத்தில், அப்போதைய பிரதமர் ராஜிவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்; அதன் காரணமாக, அமைச்சரவை மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.ராஜிவுக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களையும், தி.மு.க உட்பட்ட பிற கட்சிகளையும் திரட்டி, தேசிய முன்னணியை, வி.பி.சிங் துவக்கினார்.
1989 லோக்சபா தேர்தலில், இக்கூட்டணி பெரும்பான்மை பெற்றது. 1989 --- 90ல், பிரதமராக இருந்தார். 2008 நவ., 27ல் காலமானார்.
 
முதல் சிலுவைப் போர் 
1095 - முதல் சிலுவைப் போராகத் தற்போது குறிப்பிடப்படும் போருக்கு, க்ளெர்மாண்ட் அவை என்ற ழைக்கப்படும் ஒரு கூட்டத்தில் திருத்தந்தை இரண்டாம் அர்பன் அழைப்பு விடுத்தார்.
புனித பூமியை(ஜெருசலேம்), இஸ்லாமி யர்களிடமிருந்து மீட்பதற்காக 1095 இலிருந்து 1291வரை நடைபெற்றவை சிலுவைப் போர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. புனித பூமி என்று குறிப்பிடப்படும் இடம், தற்காலத்திய இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பகுதிகள், ஜோர்டானின் மேற்கு, லெப னானின் தெற்கு, சிரியாவின் தென்மேற்குப் பகுதிகள் அடங்கியது.
 கிறித்து சிலுவையில் அறையப்பட்டதும், உயிர்த்தெழுந்ததும் இங்குதான் என்பதால் கிறித்தவர்களுக்கும், இஸ்ரா-மிராஜ் ஒரே இரவுப் பயணத்தில் முகம்மது நபி இங்கிருந்துதான் விண்ணுலகம் சென்று இறைவனைச் சந்தித்துப் பேசியதாக நம்பப்படுவதால் இஸ்லாமி யர்களுக்கும், (கிறித்துவுக்குச் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு!) அரசர் சாலமன் முதல் கோயிலைக் கட்டிய இடம் என்பதால் யூதர்களுக்கும் இது புனித பூமியாக உள்ளது.
தற்காலத்திய எபிரேய(ஹீப்ரூ), அரேபிய மொழிகளில் அமைதி என்ற பொருளுடைய சலம் அல்லது ஷலோம் என்ற சொல்லிலிருந்து, அமைதியான குடியிருப்பு என்ற பொருளில் ஜெருசலேம் என்ற பெயர் உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது. வழிநடக்குமிடம் என்ற பொருள்கொண்ட யிரே, அமைதி என்ற பொருள்கொண்ட ஷலேம் ஆகிய எபிரேயச் சொற்கள் கடவுளால் இணைக்கப்பட்டு  ஜெருசலேம் என்ற பெயர் உருவானதாக எபிரேய விவிலியம் குறிப்பிடுகிறது.
பைசாந்தியப் பேரரசை வீழ்த்தியபின் அனடோலியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய செல்ஜூக் துருக்கி யர்கள் 1073இல் ஜெருசலேமைக் கைப்பற்றினர்.
1099இல் ஜெருசலேமை மீட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட தகவல்களில், புனித மண்ணை மீட்பதற்கான போர் என்று குறிப்பிடப்பட்டாலும், க்ளெர்மாண்ட் அவையில் திருத்தந்தை இரண்டாம் அர்பன் நிகழ்த்திய உரையில் இதைப்பற்றிய தகவல்கள் இல்லையென்றும் கூறப்படுகிறது.
விவசாயிகளும், பொதுமக்களுமாகத் துருக்கியர்களுக்கெதிராகத் திரண்டு சென்ற கூட்டம், வழியில் ரைன்லாந்தில் யூதர்களையும் தாக்கிச்சென்றது.
பொதுமக்கள் சிலு வைப்போர் என்றழைக்கப்படும் இந்தப் படை தோல்வியுற்றபின், (ஐரோப்பிய) இளவர சர்களின் சிலுவைப்போர் என்றழைக்கப்படும் முறையான படைகள் போரிட்டுத்தான்  பூமியை மீட்டன.
 மீண்டும் 1146இல் துருக்கியர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து 1291வரை மொத்தம் 9 சிலுவைப்போர்களும் நடைபெற்றன.
- அறிவுக்கடல்


 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
  காவி பயங்கரவாதம்
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

அண்மையில் சிபிஎம்-மின் பாதுகாப்பின் கீழ் தஞ்சம் புகுந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உதவியாளரின் வெளிப்பாடுகளால், “எது ஒன்றையும் புத்திக்கூர்மையுடன் செய்வோம்” என்று கூச்சலிடும் ஆர்.எஸ்.எஸ்.-ன் அக்கிரமங்களோடு அதன் முட்டாள்தனமும் முச்சந்தியில் நிற்கிறது.

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.-ஸின் பிராரச்சாரகராக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் இருப்பதாகக் கூறும் சுதீஷ் மின்னி, தனது சுயசரிதையான, (நரகசகேதிலே உல்லாரக்கல்) நரகத்தின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்-லில், அவர் நேரடியாக கண்ட பல சம்பவங்களை மேற்கோள் காட்டி ஆர்.எஸ்.எஸ்ஸின் இரகசிய செயல்பாட்டு மூலோபாயத்தை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.
சுதீஷ் மின்னி


தனது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக, சிபிஎம் வழங்கிய கடுமையான பாதுகாப்பின் கீழ் இப்போது வாழும் சுதீஷ் மின்னி, புத்தகத்தை வெளியீட்டதன் மூலம் வாழ்க்கைக்கான தனது பணி நிறைவேறிவிட்டது, என்று கூறுகிறார்.

கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் கோட்டையாக அறியப்பட்ட அயிக்கராவில் ஒரு சங்க குடும்பத்தைச் சேர்ந்த, மின்னி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ் ஆண்கள் மற்றும் பிற உயர் சாதி சமூகத்தினரின் தொடர்ச்சியான மிருகத்தனமான தலித் எதிர்ப்பு சித்திரவதைகள் ஆர்.எஸ்.எஸ் உடனான தனது தொடர்பை முடிவுக்கு கொண்டுவர கட்டாயப்படுத்தியது என்கிறார்.

“குஜ்ஜர் கலவரம் ஜெய்ப்பூரில் நிகழ்ந்த போது, ​​நான் அங்கு பல மாடிகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைமையகத்தில் தங்கியிருந்தேன்..
அப்போது, இரவில் ஒரு இளம் பெண்னின் அலறலைக் கேட்டேன்.
 பின்னர், ஆர்.எஸ்.எஸ் ஆண்கள் குஜ்ஜார் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நான் அறிந்தேன், அந்த பிராந்தியத்தில் ஒவ்வொரு சமூக அமைதியின்மை நிலவும் போதும், உயர் சாதியினரால் இவை ஒரு சடங்கு போல் செயல்படுத்தப்படும்.

உயர் சாதியினரால் தலித் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளை தத்தெடுத்து பின்னர் பிற மதங்கள் மற்றும் சாதிகள் மீது மேலாதிக்கத்திற்கான போரில் அடியாட்களாக பயன்படுத்தலாம்.
 “அத்தகைய குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கும், பயிற்சியளிப்பதற்கும் ஆர்.எஸ்.எஸ் சிறப்பு அனாதை இல்லங்களை நடத்துகிறது ”. அந்த சிறுமிகளின் கூக்குரல்கள் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்ந்து வாட்டிக்கொண்டிருந்தது”, என்று மின்னி கூறினார்.
சங்கத்துடன் பல வருட அனுபவத்தின் மூலம், ஆர்.எஸ்.எஸ் என்பது பிராமணர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு உயரடுக்கு இந்து உயர் சாதி நிறுவனம் என்பதை மின்னி உணர்ந்துள்ளார்.
 ஒரு பிராமணர் இல்லையென்றாலும், அலுவலகங்களில் நடத்தப்படும் சடங்குகளில் பிராமணர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதால் புனித நூல் அணிந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது, என்று அவர் குற்றம் சாட்டினார்.

வேத கணிதத்தில் நிபுணரான மின்னி பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் பிற மத மையங்களிலிருந்து விவரங்களை சேகரிக்க ஒரு உளவாளியாக பணியாற்றினார். எஸ்.எஸ்.டி.பி மற்றும் சிவகிரிக்குள் ஆர்.எஸ்.எஸ் நுழைவதற்கு எளிதான பாதையை அமைப்பதற்காக, அலுவாவில் உள்ள அத்வைதாஸ்ரத்தின் ஆசிரமத்தை பிடிக்க கடைசி நோக்கம் இருந்தது. 
“ஆனால் நான் ஆசிரமத் தலைவருக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிட்டு பதுங்கிவிட்டேன்,” என்று அவர் கூறினார்.
வகுப்புவாத வெறுப்பை பரப்புவதற்கான ஆர்.எஸ்.எஸ் உத்திகள், தலித் பெண்களின் இன தூய்மையை மாசுபடுத்தும் சம்பவங்கள், கோத்ரா கலவரத்திற்கான ஏற்பாடுகள், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் இத்தாலிய கைத்துப்பாக்கியுடன் பயிற்சி, சங்க வட்டங்களில் சாதி பாகுபாடு, தியாகிகளின் விதவைகள் மீதான பாலியல் சுரண்டல், தாழ்த்தப்பட்ட பெண்களை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்துதல் மற்றும் பலவற்றை இந்த புத்தகம் பதிவுசெய்திருக்கிறது.

அண்மையில் கண்ணூரில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு நிகழ்ச்சியில், சிபிஎம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தான் இந்த புத்தகத்தை வெளியிட்டார்.

அப்போதிருந்து, ஆர்.எஸ்.எஸ் அவரை குறிவைத்தது, மற்றும் சங்கபரிவாரத்தில் உள்ள அவரது நண்பர்கள், அவரை கொல்ல சதி நடப்பதாக எச்சரித்துள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------
 இரு...

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw

  வேலை வாய்ப்புகள்

பெய்ய இரு...

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw
  பேஷன் டெக்னாலஜி 
கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
---------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தில் 55 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது:
1.11.2019 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30 வயது மற்றும் சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி
: 3.12.2019

விபரங்களுக்கு
: www.cpcl.co.in
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 
 காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு.
 காலியிடங்கள்: உதவி பாதுகாப்பு அதிகாரி- 19, பாதுகாவலர்- 73

வயது: 6-12-2019 அடிப்படையில் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் பொதுப் பிரிவினர்-27, எஸ்.சி.,/எஸ்.டி.,- 32, ஓ.பி.சி.,- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு சலுகை உண்டு.


கல்வித் தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்ச்சி முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்' https://recruit.barc.gov.in
கடைசி நாள்
: 6.12.2019
---------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1996 முதல் 1.8.2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 153 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தொடர்புடைய விளையாட்டில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 17.12.2019

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கால்நடை உதவி மருத்துவர்

காலிப்பணியிடம் : 1141 . 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கால்நடை உதவி மருத்துவர்  .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 23.02.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு 1141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கால்நடைத் துறையில் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1141 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.எஸ்., பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கும் கட்டணத்தில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுக்கு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7, 8, 14, 21 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச.28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
2020, ஜன. 19 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு
ஜன.25- ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நிர்ணயித்த வரியில் 50 சதவிகிதம்  கூட எட்ட முடியாத நிலை
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி எனப்படும் ‘சரக்குமற்றும் சேவை வரி’யை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியது.

இதன்மூலம் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிப்பை 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என்ற நான்குஅடுக்குகளின்கீழ் கொண்டுவந்த மோடி அரசு, இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் வரி வசூலிக்க இலக்குநிர்ணயித்தது.

ஆனால், ஜிஎஸ்டி அமல் படுத்தியதிலிருந்து ஒவ்வொரு மாதமும் இலக்கைக் காட்டிலும் குறைவான தொகையே வசூலாகி வருகிறது. 

குறிப்பாக, 2019-20 நிதியாண்டின் ஏப்ரல்முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ. 6 லட்சத்து 63 ஆயிரத்து 343 கோடி வசூல் செய்ய அரசு இலக்குநிர்ணயம் செய்திருந்தது.
ஆனால், மொத் தம் ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 490 கோடி மட்டுமே தற்போது வசூலாகியுள்ளது.
நிர்ணயித்த வரியில் 50 சதவிகித இலக்கைக் கூட எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி வரி வருவாயைப் பொறுத்தவரையில், 2019-20 நிதியாண்டில் ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது;
ஆனால், அக்டோபர் வரையில் ரூ. 5 லட்சத்து 18 ஆயிரத்து 084 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் நவம்பர் 25-ஆம்தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண் டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?