ஞாயிறு, 3 நவம்பர், 2019

இந்தியர்களின் விவரங்கள் விற்பனைக்கு.வாட்ஸ்அப் நிறுவனம்
 திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கூட்டாட்சி நீதிமன்றத்தில், கடந்த வாரம் ஒரு வழக்கு நடந்தது. 
அதில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) என்ற நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. 
 அப்போது வாட்ஸ்அப் நிறுவனம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், என்.எஸ்.ஓ நிறுவனம் ’பெகாசுஸ்’ என்ற மென்பொருள் மூலம் சுமார் 1400 தனி நபர்களை கண்காணித்தது தகவல் திருட்டில் ஈடுபட்டது என வாட்ஸ்அப் குற்றம் சாட்டியுள்ளது.
 மேலும், இந்திய மக்களின் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்ப்பததாகவும், குறிப்பாக இந்திய பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் தகவலை

என்.எஸ்.ஓ நிறுவனம் உளவு பார்ப்பதாக தெரிவித்தது.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியே அதே சமயத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த குரூப் - ஐபி என்ற பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய சைபர் கிரைம் திருட்டு பற்றி தகவலை வெளியிட்டுள்ளது.
இணையம் மூலம் திருடப்படும் தகவல்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பகீர் கிளப்பியுள்ளது.

இதில், மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவெனில் ஹேக் செய்யப்பட்ட தகவல்களில் 98 சதவிதம் இந்தியர்களின் தகவல் என குறிப்பிட்டுள்ளது. 

சுமார் 13 லட்சம் இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது என்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்திய நாட்டுமக்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு மிகப்பெரிய பங்கினை வகுக்கும் மத்திய அரசே சைபர் குற்றங்களைத் தடுக்காமல் இருப்பது தொழில்நுட்ப வல்லுநர்களை மேலும் அச்சப்பட வைத்துள்ளது.
முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியர்களின் தகவல் உளவு பார்க்கப்படுவதாக மே மாதமே மத்திய அரசுக்கு எச்சரித்ததாகவும், பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யம்படி கூறி இருந்தோம் என கூறுகிறது வாட்ஸ்அப்.
ஆனாலும், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு இத்தைய தகவல் திருட்டு சம்பவங்களை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 பா.ஜ.க அரசின் சைபர் பிரிவு, சமூக வலைதளங்களில் மத்திய அரசை விமர்சிப்பவர்களை கண்காணிக்கும் வேலையை மட்டுமே செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செல்போன் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மத்திய அரசின் சில அமைப்புகள் உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கி அதை உலவ விட்டு தகவல்களை உளவு பார்த்து வருகிறது.
தனிநபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் உரிமையாக உள்ள நிலையில் அதை மீறும் வகையில் பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் இருக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
 
ஒரு கணக்கை கொண்டு, ஒரே சமயத்தில் பல சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான சேவையை வழங்க, 'வாட்ஸ் ஆப்' முயற்சி செய்து வருகிறது.

இப்போது வரை வாட்ஸ் ஆப்பை பொறுத்தவரை, ஒரே சமயத்தில் ஒரு சாதனத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இனி, விரைவில் ஒரு கணக்கை கொண்டு,
பல்வேறு சாதனங்களில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியும்.

உதாரணமாக, 'ஐபோன்' மூலமாகவும், 'ஐபேடு' மூலமாகவும் ஒரே சமயத்தில்,
 வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------

ந்நாளில் ,
முன்னால்

பாம்பே டைம்ஸ் (டைம்ஸ் ஆஃப் இந்தியா) முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)

 பனாமா விடுதலை தினம்(1903)
அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)
போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)


1783  - காண்டினெண்டல் ஆர்மி என்றழைக் கப்படும், (உண்மையில் அமெரிக்காவின் முதல் ராணுவமான) அமெரிக்க விடுதலைப்படை கலைக்கப்பட்டது.

அமெரிக்காவில் குடியேற்றங்களை இங்கிலாந்து ஏற்படுத்தியபோது அங்கு ராணுவமெல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்களான செவ் விந்தியர்களுடனான மோதல்களைத் தொடர்ந்து, ஒவ்வொரு குடியேற்றமும் தங்களுக்கென்று குடிப்படைகளை உருவாக்கிக்கொண்டன.
நிரந்தர வீரர்களற்ற இவற்றில், தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள்,போர்க்காலங்களில்மட்டும் வீரர்களாகப் பணியாற்றுவார்கள். பிற ஐரோப்பியக் குடியேற்றங்களுடன் மோதல்கள் ஏற்பட்டு, 1754-63இல் நடைபெற்ற பிரெஞ்சுக்காரர்களும், செவ்விந்தியர்களும் இணைந்து மோதியபோரைத் தொடர்ந்து, கொஞ்சம் இங்கிலாந்துப் படைகள் அமெரிக்காவில் நிறுத்தப்பட்டன.
குடியேற்றங்களின் பாதுகாப்புக்காக அங்குள்ள படைக்கு, குடியேற்றங்களிடம் வசூலித்து ஊதியமளிப்பதற்காகவே 1765இன் முத்திரைச்சட்டம் இயற்றப்பட்டது. தங்களைப் பற்றிய முடிவுகளில் தலையிட தங்களுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பங்களிக்காத நிலையில், வரி கேட்பது நியாயமில்லை என்ற முரண்பாடே அமெரிக்க விடுதலைவரை இட்டுச்சென்றது.
முரண்பாட்டின்தொடக்கமே ராணுவத்திற்கு ஊதியம் அளிப்பதில்தான் என்பதால், இங்கிலாந்து ராணுவம் குடியேற்றங்களுக்கு எதிராகவே இருந்த நிலையில், அதனுடனேயே போரிடவேண்டியதாக அமைந்த விடுதலைப் போருக்கு, அனைத்துக் குடியேற்றங்களும் படைதிரட்டிஅனுப்பவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
அவ்வாறு திரட்டப்பட்ட (முறையான ராணுவமல்லாத!) குடிப்படையே, அமெரிக்க விடுதலைப்படையாக, ஒரு கட்டத்தில் சுமார் 80 ஆயிரம் வீரர்களைக்கொண்டு போரிட்டு, வெற்றியும்பெற்றது. படையினருக்கு போரின்போது வழங்கப்பட்ட ஊதியத்தில் பாதியை, போருக்குப்பின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக வழங்குவதாக1780இல் கூட்டணி நாடாளுமன்றம் உறுதியளித்திருந் தது.
1783 செப்டம்பர் 3இல் ஏற்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின்படிதான் போர் முறைப்படி முடிவுக்குவந்தாலும், 1781அக்டோபரில் யார்க்டவுன் முற்றுகையில் தோல்வியடைந்ததுமே, இங்கிலாந்து பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதித்துவிட்டதால், போரின் தீவிரம் குறைந்துவிட்டது.
இதனாலும், கடுமையான நிதிநெருக்கடியினாலும் வீரர்களுக்குப் பல மாதங்கள் ஊதியமளிக்கப்படாததுடன், ஓய்வூதியமும் குறைக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டணி நாடாளுமன்றத்தைக் கவிழ்க்க படை யினர் முயற்சித்த நியூபர்க் சதி 1783 மார்ச்சில் வெளியானது.
இவற்றால், அமெரிக்காவுக்கு ராணுவமே வேண்டாம் என்று கூட்டணி நாடாளுமன்றம் முடிவெடுக்க, போரில்லாத காலத்திலும் ராணுவம் தேவை என்று வாதிட்ட வாஷிங்டன், கடைசியாக வைத்த 900 வீரர்களாவது இருக்கட்டும் என்ற கோரிக்கைகூட ஏற்கப்படவில்லை.
சில குறிப்பிட்ட இடங்களைப் பாதுகாக்க வெறும் 30 பேரை வைத்துக்கொண்டு, மீதமுள்ள படைகளுக்கு விடைகொடுக்கும் செய்தியை நவம்பர் 2இல் செய்தித்தாள்களுக்கு வாஷிங்டன் அளித்ததைத் தொடர்ந்து நவம்பர் 3இல் படைகள் கலைக்கப்பட்டன.
 
 - அறிவுக்கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------------
 
Kannan Rajan
முதல் படத்தில் இருப்பவர் தற்போது ஆட்சி அதிகாரம் எதிலும் இல்லாதவர் ஆனால் சுயமரியாதைக்காரர். திமுககாரர். எச்.ராஜா முன்னால் நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறார்.

இரண்டாவது படத்தில் இருப்பவர் இரண்டுமுறை முதலமைச்சர்.

 இப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர். ஆனா அதிமுககாரர். கூனி குறுகி ராஜா முன்னால் நிற்கிறார்.

அது கம்பீரத்தின் அடையாளம் என்றால் இது பயத்தின் வெளிப்பாடு. 

எங்கள கைவிட்டுடாதீங்கோ என்கிற கெஞ்சல்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

கூடங்குளம்;அணு உலை 'சைபர்' தாக்குதல்

உண்மையில் இந்த அபாயம்  பெரியது.

சில நாட்களுக்கு முன்பாக கூடங்குளம் அணு உலையின் கணினிகள் தீங்கேற்படுத்தும் நிரல்களால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. 
அணு உலையை இயக்கும் இந்திய அணு மின்சாரக் கழகமும் (என்பிசிஐஎல்) சில கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது. உண்மையில் இந்த அபாயம் எவ்வளவு பெரியது?
இந்திய அளவில் மதிக்கப்படும் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளரான புக்ராஜ் சிங் அக்டோபர் 28ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல் ஒன்றை வெளியிட்டார்.
இந்தத் தாக்குதலைத் தான் கண்டுபிடிக்கவில்லையென்றும் வேறொருவர் கண்டுபிடித்துத் தனக்குத் தெரிவித்ததாகவும் தான் அரசிடம் தெரிவித்ததாகவும் அடுத்தடுத்த ட்விட்டர் செய்திகளில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
 இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 அதில் அம்மாதிரி தாக்குதல் நடைபெறவில்லையென மறுக்கப்பட்டிருந்தது.

"இந்திய அணுசக்தி நிலையங்களின் கட்டுப்பாட்டு கணினிகள் தனியாக இயங்குபவை. வெளியில் உள்ள வலைபின்னலுடனோ, இணையத்துடனோ இணைக்கப்படாதவை.
 அணுசக்தி நிலைய கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவது சாத்தியமில்லாதது. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகள் முறையே 1000 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன.
 அணு உலையை இயக்குவது தொடர்பாகவோ, பாதுகாப்பு தொடர்பாகவோ எவ்வித பிரச்சனையும் இல்லை" என அந்த அறிக்கை தெரிவித்தது.
ஆனால், இணையத்தில் இருந்த இணைய பாதுகாப்பு ஆர்வலர்கள், இந்தத் தாக்குதல் மூலம் தகவல் கசிந்தது குறித்து தொடர்ந்து தகவல்களை வெளியிட்டுவந்தனர்.
ஆனால், அடுத்த நாளே கூடங்குளம் அணு உலையை இயக்கும் மும்பையில் உள்ள இந்திய அணு மின்சாரக் கழகம் (NPCIL) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில் "என்பிசிஐஎல்லின் கம்ப்யூட்டர்களில் 'மால்வேர்' கண்டுபிடிக்கப்பட்டது சரிதான். செப்டம்பர் நான்காம் தேதி சிஇஆர்டி (Indian Computer Emergency Response Team) இதனைக் கண்டறிந்தவுடன் எங்களுக்குத் தெரிவித்தது," என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், "இந்த விவகாரத்தை உடனடியாக அணுசக்தித் துறை நிபுணர்கள் ஆய்வுசெய்தனர்.
 இணையத்துடன் இணைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஒன்றை (அணுமின்நிலைய) பயனாளி ஒருவர் அணு உலையின் நிர்வாக ரீதியான வலைப்பின்னலுடன் இணைத்தார். இந்த நெட்வர்க்கிற்கும் அணு உலையின் முக்கியப் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
 நெட்வர்க்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அணு உலையில் உள்ள கணிணிகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது" என அந்த அறிக்கை கூறியிருந்தது.
என்பிசிஐஎல் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையில் எந்த அணு உலையின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவில் தாராபூர், ராவபட்டா, கல்பாக்கம், கூடங்குளம், கைகா, நரோரா, காக்ரபூர் என ஏழு இடங்களில் மொத்தம் 22 அணு உலைகள் இயங்கிவருகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் 6780 மெகாவாட்டாக உள்ளது.
 இவற்றில் இந்தியாவிலேயே மிகப் பெரிய இரு அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஆயிரம் மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்டவை.
இந்த நிலையில், இம்மாதிரி அணு உலையில் சைபர் தாக்குதல் நடந்திருப்பது நாடு முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது. இம்மாதிரி தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அணு உலையை ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முடியுமா என்றும் விவாதிக்கப்பட்டது.
ஆனால், அது சாத்தியமில்லை என்கிறார்கள் இணைய பாதுகாப்புத் துறையில் உள்ளவர்கள். காரணம், அணு உலைகள் இரண்டு நெட்வொர்க்குகள் மூலம் இயங்குகின்றன.
 ஒன்று தொழிற்கட்டுப்பாட்டு அமைப்பு. இதுதான் அணு உலையின் எந்திரங்களை இயக்குகிறது. எவ்வளவு எரிபொருள் எரிக்கப்படுகிறது, எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற தகவல்களையும் சேகரிக்கிறது. இந்த நெட்வொர்க்கில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள்.
 அணு உலையின் பிற தகவல்கள், பிற கட்டுப்பாடுகள் குறிப்பாக பணியாளர்கள், பராமரிப்பு குறித்த தகவல்கள், தரக்கட்டுப்பாடு குறித்த தகவல்கள் அனைத்தும் மற்றொரு நெட்வொர்க் மூலம் கையாளப்படுகின்றன.
இந்த நெட்வொர்க் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடும்.
இந்த நெட்வொர்க்கில்தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்.

"அணு உலை பெரும்பாலும் SCADA (supervisory control and data acquisition) நெட்வொர்க்கில் இயங்கக்கூடியது.
அதனை ஊடுருவது முடியாது.
காரணம், அவை தனித்த (standalone) நெட்வொர்க்காக இருக்கும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிபுணரான ஈஸ்வர் பிரசாத்.
லசாரஸ் குழுமம் Lazarus Group எனப்படும் ஒரு ஹாக்கிங் குழுமத்தின் வேலையாகவே இந்த மால்வேர் தாக்குதல் கருதப்படுகிறது. இந்த லசாரஸ் குழுமம் வட கொரியாவுக்காக சில பணிகளைச் செய்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால், அவை உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருக்கின்றன.
இந்திய அணு உலை அமைப்புகளைத் தாக்கிய இந்த DTRack மால்வேர் என்பது பெரும்பாலும் வங்கி போன்ற நிதி அமைப்புகளைத் தாக்கி, தகவல்களை எடுக்கப் பயன்படுபவை. ஏடிஎம் கார்ட் தொடர்பான தகவல்களைத் திருடும் இதேபோன்ற மால்வேர்கள் ATM DTRack என்று அழைக்கப்படுகிறது" என்கிறார் ஈஸ்வர் பிரசாத்.
"சிறிய அளவிலான தகவல்கள் எடுக்கப்பட்டிருக்கலாமே தவிர, அணு உலையின் கட்டுப்பாட்டு அமைப்பை இதனால் ஊடுருவ முடியாது.
காரணம், இவர்கள் தற்போது ஊடுருவியிருப்பது விண்டோஸில் இயங்குபவை. ஆனால், அணு உலையின் கட்டுப்பாடு என்பது லினக்ஸ் இயங்குதளம் மூலம் செயல்படுத்தப்படும் எனக் கருதுகிறேன். அவற்றை ஊடுருவுவது இயலாது" என்கிறார் ஈஸ்வர் பிரசாத்.
ஆனால், கூடங்குளம் அணு உலையின் நிர்வாகத் தகவல்களைக் கையாளும் நெட்வொர்க் குறித்து அறிந்து அதற்கேற்றபடி இந்த DTRack மால்வேர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என இணையப் பாதுகாப்பு குறித்து எழுதிவரும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இது தொடர்பாக வெளியிடப்பட்ட இரு அறிக்கைகளைத் தவிர, வெறு தகவல்கள் குறித்து அணு உலை நிர்வாகத்தில் யாரும் பேசுவதற்குத் தயாராக இல்லை.
நீண்ட காலமாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்துவரும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், மத்திய அரசு இது தொடர்பான வெள்ளை அறிக்கையை கோரியுள்ளது.
 அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பாக இல்லை. அதனுடைய கட்டுப்பாட்டு அமைப்பு அத்துமீறப்பட்டிருக்கிறது என்றால், மிக முக்கியமான தகவல்கள் நியர் கைகளுக்குப் போயிருக்கின்றன என்று பொருள்.
 அங்கேயிருக்கும் யுரேனியத்தின் அளவு, எரிக்கப்பட்ட எரிகோல்கள் அளவு, பாதுகாப்பு ரகசியங்கள் அனைத்தும் அம்பலமாயிருக்கின்றன. இந்த உலைகளை உடனடியாக மூடுவது ஒன்றே மக்களுக்குச் செய்யும் கடமையாக இருக்க முடியும். கூடங்குளத்தில் கூடுதல் உலைகள் கட்டும் வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். "
அணுசக்தித்துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம் அனைவரும் சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்த முன்வர வேண்டும். ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு மக்களோடு பகிரப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் இரானின் நடான்சில் உள்ள அணுசக்தி நிலையத்தின் கம்யூட்டர்களில் Stuxnet என்ற தீங்கு ஏற்படுத்தும் நிரல் பரவியது.
இது ஒரு யுஎஸ்பி டிரைவ் மூலம் பரவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. இந்தத் தாக்குதல் மூலம் யுரேனியத்தை பிரிக்கும் எந்திரங்கள் (centrifuges) கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நாடான்ஸ் உலையிலிருந்த இருபது சதவீத centrifuges எந்திரங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, உலகில் உள்ள எல்லா அணு உலைகளிலுமே கணினி பாதுகாப்புகள் கடுமையாக்கப்பட்டன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 லத்தீன் அமெரிக்கா.

எப்போதும் மாற்றிச் சிந்திப்பது லத்தீன் அமெரிக்காவின் வழக்கம்.
தென்அமெரிக்கா விலும், மத்திய அமெரிக்காவிலும்  கரீபியன் கடல் அருகே சிறிதும் பெரிதுமாக 33 நாடுகளும் அவற்றின் 63 கோடி மக்களும் எப்போதும் உலகத்துக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளனர்.
அரசியல் என்றாலும், இலக்கியம் என்றாலும் புதுவழிகள் திறந்தவர்களின் ஒரு பெரும் வரிசை இந்த நாடுகளிலிருந்து உலகத்தின்முன் பல சமயங்களில் தலை உயர்த்தி வந்துள்ளனர்.

இன்று லத்தீன் அமெரிக்கா மீண்டும் கவனத்திற்குரிய மையமாகிறது.
 அங்கு பல நாடுகளும்இடது பாதைக்குச் செல்கின்றன.
எப்போதும் இடதுசாரிகளின் முன்மாதிரியாக விளங்குகிற கியூபாவுடன் சேர்த்துச் சொல்ல வேண்டிய நாடுகளின் பட்டியல் நீள்கிறது.
வெனிசுலா, நிகரகுவா, மெக்ஸிகோ, பொலிவியா ஆகிய நாடுகளுடன் இப்போது இதோ அர்ஜென்டினா விலும் இடதுசாரிகள் அதிகாரத்திற்கு வந்துவிட்டார்கள்.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அர்ஜென்டினாவில் இடதுசாரி அரசு அதிகாரத்திற்கு வந்துள்ளது. அக்டோபர் 27 அன்று நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதியாக பெரொனிஸ்ட் கட்சியின் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டசும், துணை ஜனாதிபதியாக  முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டீனா பெர்னாண்டசும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
97 சதவீத வாக்குகள் எண்ணி முடித்த போது இடதுசாரியான ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் 48. 1 சதவீத வாக்குகளும், தற்போதைய வலதுசாரி ஜனாதிபதி மௌரிசியோ மாக்ரி 40. 4 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
நீண்டகாலம் இராணுவ சர்வாதிகாரத்தின் கீழும், தொடர்ந்து வலதுசாரி ஆட்சியின் கீழும் இருந்த அர்ஜென்டினாவில் 2004-ஆம்ஆண்டு கிறிஸ்டீனாவின் கணவர் நெஸ்ட்டர் கிரிர்ச்னர் மூலம் இடதுசாரிக் கட்சி அதிகாரத்திற்கு வந்திருந்தது.
ஆனால் 2015-இல் அது அதிகாரத்திலிருந்து வெளியேறியது.
அதற்குப்பிறகு நான்கு ஆண்டுகள் நாடு வலதுசாரிகளின் வசமானது.
 கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.
வறுமை பத்து சதவீதம்வரை அதிகரித்தது. கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம்.

 மக்கள் போராட்டக் களத்தில் இறங்கினர்.
மீண்டும் அவர்கள் இடதுசாரிக் கட்சிகள் மீதுநம்பிக்கை வைத்தனர். கடுமையான போராட்டங்களின் இறுதியில் அவர்கள் வெற்றிபெற்றனர்.

லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிகளின் முன்னேற்றம் என்று உலக முதலாளித்துவ ஊடகங்களால் ஊதப்பட்ட ஆட்சி மாற்றங்களுக்கு முடிவுகட்டும் விதத்தில் தற்போது லத்தீன்அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றாக இடது பக்கம் சாய்கின்றன.

2012-இல் பராகுவேயில் பெர்ணாடோ லுகோய் அதிகாரத்தை இழந்ததுடன் அது வலதுசாரிகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான நிகழ்வின் துவக்கமாக அமைந்தது.
2015-இல் அர்ஜென்டினாவுக்குப் பிறகுவெனிசுலாவில் நடைபெற்ற தேசிய நாடாளு மன்றத் தேர்தலில் மதுரோவின் கட்சியைவிட அதிக தொகுதிகள் வலதுசாரி கட்சிக்குக் கிடைத்தன.
இடதுசாரித் தலைவரான ஜனாதிபதி டில்மா ரூஸெப்பை, நாடாளுமன்ற கண்டனத் தீர்மானம் மூலம், வலதுசாரிகள் 2016-இல் பிரேசிலில் வெளியேற்றினர்.
 கொலம்பியாவில் இடதுசாரி ஃபார்க் கொரில்லாக்களுக்கும் சான்ட்ரோஸ் அரசுக்குமிடையே கையெழுத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை க்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். ஹைட்டி யிலும் பெருவிலும் வலதுசாரி அரசுகள் அமெரிக்காவின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்தன.
இடதுசாரி சக்திகளின் தொடர்ச்சியான இந்தத் தோல்விகள் இயல்பாகவே கார்ப்பரேட் ஊடகங்களுக்கு உற்சாகமளித்தன.
அவர்கள் லத்தீன் அமெரிக்காவில் ‘இடதுசாரிகளின் மரணம்’ என்றே அறிவித்தனர்.
 கடந்த ஆண்டு அக்டோபரில் பிரேசிலில் தீவிர வலதுசாரியான ஜெயிர் பொல்சானாரோ அதிகாரத்திற்கு வந்ததுடன் அங்கு இடதுசாரி இயக்கம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக முதலாளித்துவ ஊது குழல்கள் எல்லோரும் உறுதிசெய்தனர்.
ஆனால், இதற்கிடையேதான் 2018 ஜூலை யில் ஆன்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரதோர் மெக்ஸிகோ ஜனாதிபதியாகவும், மே மாதம் சோசலிஸ்ட் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெனிசுலா ஜனாதிபதியாகவும் இடதுசாரி முன்னேற்றங்களுக்கு வலுசேர்த்தனர்.

மத்திய அமெரிக்காவின் இடதுசாரியாகிய லொரேன்டினோ நிட்டோ கோர்ட்டிஸோ 2019 மேமாதம் பனமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
 2019 அக்டோபரில் சோசலிஸ்ட் இயக்கத்தின் தலைவர் ஈவோ மொரேல்ஸ் பொலிவியா ஜனாதிபதியாகவும் மீண்டும் வெற்றிபெற்றனர். இப்போது அர்ஜென்டினா தேர்தல் முடிவுகளும் வெளிவந்துள்ளன.அதுமட்டுமல்லாமல் 2014-ஆம் ஆண்டு உருகுவேயில் அதிகாரத்திற்கு வந்த  இடதுசாரி அரசு மீண்டும் மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்குத் தயாராகிறது.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருதரப்பும் சமமாக இருந்தாலும் இடதுசாரிகளின் வெற்றியை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஏற்கெனவே இடதுசாரிகளின் ஆட்சிகள் மலர்ந்துள்ள நாடுகளுடன், இப்போது இன்னுமொரு லத்தீன் அமெரிக்க நாடாகிய சிலியில், தீவிர வலதுசாரி அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தலைநகர் சாண்டியாகோவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற  பிரம்மாண்டப் பேரணியில் பத்து லட்சம்மக்கள் பங்கேற்றனர்.
மெட்ரோ ரயில் கட்டணஉயர்வுக்கு எதிரான போராட்டமாகத் துவங்கியதென்றாலும் அந்தப் போராட்டம் வலதுசாரி ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான வலிமையைப் பெற்றுள்ளது.
 லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளிலும் இத்தகைய பிரச்சனைகள் மூலம் தான் ஆட்சியின் மீதான அதிருப்தி வெளிப்படு கிறது.
அது மக்கள் போராட்டமாக வளருவதும், பிறகு அது தேர்தலில் பிரதிபலிப்பதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவான ஆட்சி மாற்றங்கள் பெரும்பாலானவையும் மகத்தான போராட்டப் பாரம்பரியத்தின் மூலம் மக்கள் வென்று பெற்றவையாகும்.

1959-இல் பிடல் காஸ்ட்ரோவின், சே குவேராவின் தலைமையில் நடைபெற்ற கியூபப்புரட்சிதான் லத்தீன் அமெரிக்க அரசியலில் இடதுசாரி முன்னேற்றத்திற்கு ஒரு பாய்ச்சலை வழங்கியது.
ஆனால், மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் சாத்தியமானது கியூபாவின் முன்மாதிரியில் நீண்டு நடைபெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலமாக அல்ல.
அவர்கள் போராட்டங்களின் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
1998-இல் வெனிசுலாவில் ஆட்சிப்பீடம் ஏறிய ஹியூகோ சாவேஸ், இந்த மாற்றத்தின் இயக்குச் சக்தியாக விளங்கினார்.
எப்போதும் - எல்லா அர்த்தத்திலும் அமெரிக்காவின் கொல்லைப்புறமாக இருந்த லத்தீன் அமெரிக்கா இன்று அமெரிக்காவுக்கு எதிராக எழுந்து நின்று விரல்சுண்டுகிற ஒரேவரிசை நாடுகளின் கூட்டமாக உள்ளது. அமெரிக்காவை அங்கீகரிக்காத எந்தவொரு ஆட்சித் தலைவரும் முன்பு லத்தீன் அமெரிக்காவில் வாழமுடியாத நிலை இருந்தது. அமெரிக்காவுக்குச் சவால் விடுகிறவர்களையெல்லாம் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மூலமாகவும், நிதி கொடுத்து கலகங்களை உருவாக்கியும் அவர்
களை ஆட்சியிலிருந்து வெளியேற்றியது.
இன்றும் அதே தந்திரங்களை அமெரிக்கா பிரயோகிக்கிறது. ஆனால் முன்னைப் போல் அது எதுவும் வெற்றி பெறுவது இல்லை.இன்று லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கஎதிர்ப்பு நாடுகள் பரஸ்பரம் கைகோர்த்துச் செயல்படுகின்றன.
 இராணுவ, பொருளாதார ஒத்துழைப்புக்காக அமைப்புகளை உருவாக்கி அந்நாடுகள் ஒன்றுசேர்ந்து நிற்கின்றன. அமெரிக்காவின் தலையீடுக்கு வழிதராமல் இருப்பதற்கு இந்தக் கூட்டமைப்புகள் உதவியாக உள்ளன. என்றாலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டவற்றிலிருந்து தப்பித்துத் தாக்குப்பிடிப்பது சிரமம்தான்.
இடதுசாரி என்கிற முத்திரையில் அதிகாரத்திற்கு வருகிற கட்சிகள் எல்லாமே முழுமையானவை அல்லதான். ஆனாலும் நிகழ்வுப் போக்கில் மாற்றம் வெளிப்படுகிறது.
 லத்தீன் அமெரிக்கா இடதுசாரிப் பாதையில்தான் பயணப்படுகிறது.
 மேலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் போராட்டங்களையும் ஆட்சி மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம்.
நன்றி: மலையாள நாளிதழ் தேசாபிமானி (31.10.2019)
தமிழில்: தி.வரதராசன்

--------------------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை வாய்ப்புகள் 
ISRO-ல்- உள்ள காலிப்பணியிடங்கள் 
Indian Space- Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------  “Air India Engineering Services Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant Supervisor (General Admin/ Finance/ MMD)
காலியிடங்கள்: 170
சம்பள விகிதம்: ரூ.19,570
வயது வரம்பு: 1.8.2019 தேதியின்படி 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு அல்லது Aircraft Maintenance/ Computer Science Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து AVIATION துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன்மூலம் செலுத்த வேண்டும். (SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.500).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணயைதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 5.11.2019. மேலும் காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------- 
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி 
இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------

  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

காக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 

7,000 பேர் ஆட்குறைப்பு

சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ்.
இந்த நிறுவனத்திலிருந்து, 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கப் படவுள்ளதாக வெளியான தகவல்சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில்உள்ள இன, மத, மொழி ரீதியானவன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் ‘கண்டெண்ட் மாடரேஷன்’ துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப் படுவார்கள் என்றும் காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
 ஆயினும், ஊழியர்கள் மத்தியில் வேலை பறிக்கப்படுமோ, அடுத்த வேலைக்கு இப்போதே முயற்சி செய்ய வேண்மோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் எத்தனை ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போகிறார்கள் என இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என காக்னிசண்ட் ஊழியர்ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

“ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பீடு இருக்கும். அதுமட்டுமல்லாது இதுபோன்ற நெருக்கடி சமயத்தில் பணியாளர்களின் திறன்களை சோதிக் கிறோம் என அறிவிப்பார்கள். இதற்குமுந்தைய காலத்தில் நடந்தமதிப்பீடுகளை வைத்துக்கொண்டு, தற்போது குறைத்து மதிப்பெண் கொடுத்து, எங்கள் நிறுவனத்திற்கு தேவையான திறன் இல்லை எனகூறிவிடுவார்கள்.
யாருக்கு வேலைபறிக்கப்படும் என்ற பயத்தில் இருக்கிறோம்,’’ என்கிறார் அந்த ஊழியர்.
‘’வேலையில் இருந்து நீக்கிவிட்டால், என் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடன் வேலைசெய்யும் நண்பர்கள் பலரும் இதே சூழலில்தான் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு வேலை போகக் கூடாது என்ற சுயநலமான எண் ணம் வந்துவிட்டது,’’ என வருத் தத்துடன் பேசுகிறார் அந்த ஊழியர்.2017ல் ஏற்பட்டது போல பெரியஅளவில் ஆட்குறைப்பு நடைபெறும் என்ற பதற்றம் காக்னிசண்ட் ஊழியர்களைத் தொற்றியுள்ளது என்று மற்றொரு ஊழியர் கூறினார்.
 “வேலையில் இருந்துநீக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.10 முதல் 18 லட்சம்வரை சம்பளம் வாங்குபவர்களாகஇருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு மற்ற நிறுவங்களில் எளிதாக வேலை கிடைக்காது. பணியில் இருந்து நீக்கப்படுபவர்களில் ஒரு சிலர் மட்டுமே, புதிய பயிற்சிகள் மற்றும் மதிப்பீட்டில் தேறிமீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 10,000 பேரில் வெறும் 2,000 பேர்தான் தேறுவார்கள்’’ என்றும் அவர் கூறினார்.
ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க குறைந்தபட்சம் மூன்று மாதம் அவகாசம் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட பல விதிகளை மென்பொருள் நிறுவனங்கள்பின்பற்றுவதில்லை என ஐடி ஊழியர்களுக்கான அமைப்பை நடத்தி வரும் பரிமளா கூறுகிறார்.“ஒரு நிறுவனம் ஆட்குறைப் பில் ஈடுபடுவதற்கு முன்னர், தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் மூத்தபணியாளர்களை நீக்கப்போகிறோம் என தற்போது காக்னிசண்ட்தெரிவித்துள்ளது.
 மூத்த பணியாளர்கள் என்றால், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, சுமார் 40 வயதை தொடும் நபராக இருப்பார்கள்,’’ என்று அவர் கூறுகிறார்.“ஒரு சில நிறுவனங்கள் பணியாளர்களை நீக்குவதற்கு பதிலாக, அவர்களாகவே வெளியேற விரும்புவதாக கடிதம் கொடுக்கச் சொல்வார்கள்.
அடுத்தகட்டமாக மதிப்பீடு செய்கிறோம் எனக் கூறி வெளியேற்ற முயற்சிப்பார்கள்.

ஊழியர்கள் தொழிலாளர் நலத் துறை அல்லது நீதிமன்றம் சென்றால் வழக்கு முடிய குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும்.அதுவரை வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியாது என்பதால் துணிச்சலுடன், பல நிறுவனங்கள் ஊழியர்களை மிரட்டுவார்கள்,’’ என்றும் அவர் கூறுகிறார்.
 சார் அப்படி என்ன சாதனை பண்ணிட்டீங்கன்னு 
உங்களுக்கு விருது ?