இந்திய பொருளாதாரத்திற்கு மரண அடி தரும் கையெழுத்து ,

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசால் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது. தொழில் துறை உற்பத்தியில் நாட்டின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

அதனால் வேலை வாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 சதவிதமாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நிர்ணயித்த ஜி.எஸ்.டி வரி வருவாய் இலக்கை அடையமுடியாமலும், பொருளாதார மந்தநிலையை சீர்படுத்த முடியாமலும் கடும் சவால்களை சந்தித்து வரும் மத்திய பா.ஜ.க அரசு, மேலும் சிக்கலுக்குள் இந்தியாவை சிக்கவைக்க முயற்சி செய்கிறது.

 இதன் மூலம் இந்திய நாட்டு மக்கள் மற்றொரு சவாலைச் சந்திக்க வேண்டியுள்ளது.
 அது என்னவெனில், ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் 16- வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 14-வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3-வது பிராந்திய பொருளாதார மாநாடும் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளான புருனை, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பின்ஸ், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன.
இவற்றுடன் 6 தடையில்லா வர்த்தக உடன்பாடு செய்துள்ள நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆசிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.


இந்த 16 நாடுகளும் தங்களுக்குள் தடையில்லா வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, ‘‘பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மை’’ என்ற திட்டத்தை 2012–ம் ஆண்டு கம்போடியாவில் நடந்த மாநாட்டில் உருவாக்கின.

இதன் மூலம் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற 15 நாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கவும், அன்னிய செலாவணி கையிருப்பும் மேம்படும் எனக் கூறுகின்றனர்.

ஆனால், சீனா போன்ற நாடுகள் இந்திய சந்தையை அதிகம் ஆக்கிரமிக்கக்கூடும் என்பதே உண்மை நிலவரம்.
குறிப்பாக, சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு பொருட்கள் இறக்குமதியாகும்போது, இந்தியாவில் அதிகமான உற்பத்தி செலவில் தயாரிக்கப்படும் பொருகள் அதோடு போட்டிபோட முடியாது.

அதேபோல நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் குறைந்த விலையில் பால் பொருட்களை இங்கு கொண்டுவரும்போது, இங்குள்ள பால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும்.

இதனால் 7 கோடியே 30 லட்சம் பால் உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவார்கள். அதேபோல், வாகன உற்பத்தி, ஜவுளி மற்றும் விவசாயம் போன்ற பல தொழில்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சரி செய்யாமல், தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதிலும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் பிரதமர் மோடி தீவிர ஆர்வம் காட்டுகிறார்.
 இந்தியப் பொருளாதாரமே முற்றுகைக்கு ஆளாகியிருப்பது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், இதுபோதாதென்று, தாய்லாந்தில் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகம் நடைபெறுவதற்கான பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (ஆர்.சி.இ.பி) கையெழுத்திட மத்திய பா.ஜ.க அரசு தயாராக இருக்கிறது.
 இதனால் விவசாயம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும்.

 இதனால் இந்திய பொருளாதாரற்கு மரண அடி விழும்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் 324% புற்றுநோய் அதிகரிப்பு

இந்தியாவில் 2017ம் ஆண்டை விட, 2018 ம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 324 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொற்றா நோய் குறித்து தேசிய சுகாதாரத் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பொதுவான புற்றுநோயாக கருதப்படும் வாய், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள் கடந்த 2017 ம் ஆண்டை விட 2018 ல் 324 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அந்த ஓராண்டில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, 2017 ல் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3.5 இருந்தது, 2018 ல் 6.6 கோடியாக உயர்ந்துள்ளது.

இதற்கான காரணங்களாக ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள் கூறுகையில், மன அழுத்தம், உணவுப் பழக்கம் மற்றும் புகையிலை, ஆல்கஹால் பொருட்கள் உள்ளிட்டவை தான் இந்த நோய் அதிகரிக்க காரணமாக கூறுகின்றனர்.

மேலும், இந்தியாவில் அதிகபட்சமாக குஜராத்தில் 72,169 பேர் பாதிப்புள்ளாகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் உள்ளன.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் ,
முன்னால்
  • பனாமா கொடி நாள்
  • இத்தாலி ராணுவ படை தினம்
  • வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1861)
  • ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)
  • அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்டது(1869)
1939 - அமெரிக்காவின் 147 ஆண்டு நடுநிலைக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த ‘1939இன் நடுநிலைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.
 ஃப்ரான்சுடனான ராணுவக் கூட்டணியின்றி, அமெரிக்க விடுதலைப்போரில் இங்கிலாந்தை வென்றிருக்கவே முடியாது என்றாலும், அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே, 1792இல் இங்கிலாந்துக்கும் ஃப்ரான்சுக்கும் போர் ஏற்பட்டபோது, நடுநிலை வகிப்பதாக அறிவித்த ஜார்ஜ் வாஷிங்டன், குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிந்து வெளியிட்ட விடைச்செய்தியிலும், யாருடனும் கூட்டணியின்றி இருப்பதே அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உகந்தது என்றே குறிப்பிட்டிருந்தார்.
  முதல் உலகப்போரின்போதுகூட, அமெரிக்க வணிகக்கப்பல்களை ஜெர்மெனி மூழ்கடித்ததைத் தொடர்ந்து, முதலில் ஜெர்மெனிமீதும், பின்னர் ஆஸ்திரிய-ஹங்கேரிமீதும் அமெரிக்கா போர் தொடுத்ததே தவிர, எந்த அணியிலும் இல்லை என்ற நிலையையே இறுதிவரை பின்பற்றியது.

ஆனாலும், முதல் உலகப்போரில் அமெரிக்கா இறங்கியதற்குக் காரணம் ஆயுத வணிகர்களும், (தனியார்) வங்கிகளும்தான் என்ற அமெரிக்க மக்களின் எண்ணமே ‘மரண வியாபாரிகள்’ என்ற சொல்லாடல் உருவாகக் காரணமானதுடன், அதைப்பற்றி விசாரிக்க 1934இல் நை குழு என்பதும் அமைக்கப்பட்டது.
இவற்றால், 1935இல் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டவுடனேயே, எந்த அணியிலும் இருக்கப்போவதில்லை, போரிட்டுக்கொள்ளும் நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பதில்லை என்ற நடுநிலைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியதுடன், 1936, 1937இலும் புதுப்பித்தது.

போரினால் ஏற்றுமதி பாதிக்கப்பட, ஏற்கெனவே, முதல் உலகப்போரில், அமெரிக்காவின் வணிகக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதாலேயே போரில் இறங்கவேண்டியதானதால், பணத்தைக் கொடுத்து பொருளைத் தங்கள் பொறுப்பில் எடுத்துச் செல்லும் நாடுகளுடன் வணிகம் செய்யலாம் என்ற ‘கேஷ்-அண்ட்-கேரி’ கொள்கையை குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அறிவித்தார்.
நடுநிலை வகிக்கும் நாடுகள் ஆயுதங்களை வாங்கி, போரிடும் நாடுகளுக்கு விற்க முடியும்  என்பதால், போரிடும் நாடுகளுக்கே விற்கலாம் என்று கேஷ்-அண்ட்-கேரி கொள்கையை  விரிவாக்கி, நடுநிலைக்கொள்கையின் முடிவைத் தொடங்கியதுதான், 1939இன் நடுநிலைச் சட்டம்.

1941 டிசம்பரில் முத்துத்துறைமுகம் தாக்கப்பட்டபின்னரே அமெரிக்காவும் போரில் குதித்தது என்பதால், அதுவரை ஆயுதங்கள் விற்று, உலகின் மிகக் கணிசமான தங்கத்தைத் தங்கள் கையிருப்பாக்கிக்கொண்டதே, டாலர் உலக நாணயமாகக் காரணமாகியது.
முதல் உலகப்போரில் உலக நாட்டாமை பிம்பமும் (இத்தொடரில் 2018 ஏப்ரல் 1), இரண்டாம் உலகப்போரில் உலகத்தின் நாணயம் என்ற ஆதிக்கத்தையும் பெற்றதன்மூலம், உலகப்போர்களின் உண்மையான பலனை அமெரிக்காவே அடைந்தது.

 போரிடும் நாடுகளுக்கு சில இரவல்களைக்கொடுத்து, அந்நாடுகளில் ராணுவ தளங்களைக் குத்தகைக்குப் பெறக்காரணமான, 1941 மார்ச்சில் இயற்றப்பட்ட இரவல்-குத்தகைச் சட்டம், அமெரிக்காவின் நடுநிலைக்கொள்கையின் முடிவுரையாக அமைந்தது!

-அறிவுக்கடல்

-------------------------------------------------------------------------------------------------------------
 வேலை வாய்ப்புகள் 

ISRO-ல்- உள்ள காலிப்பணியிடங்கள் 
Indian Space- Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------  “Air India Engineering Services Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant Supervisor (General Admin/ Finance/ MMD)
காலியிடங்கள்: 170
சம்பள விகிதம்: ரூ.19,570
வயது வரம்பு: 1.8.2019 தேதியின்படி 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு அல்லது Aircraft Maintenance/ Computer Science Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து AVIATION துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன்மூலம் செலுத்த வேண்டும். (SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.500).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணயைதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 5.11.2019. மேலும் காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------- 
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி 
இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------

  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------- ‘கரப்சன் - கமிசன் - கலெக்சன்’
“தமிழகத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் எடுத்து தொழில் நடத்தி வரும், அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், ஊழல் அ.தி.மு.க அரசைச் சேர்ந்த எந்த அமைச்சரோடு தொடர்பு வைத்திருக்கிறது என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனப் பேசியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

மிகப்பெரிய காண்ட்ராக்ட்காரர் ஈரோட்டில் அசோக்குமார் என்ற ஒருவர், அவருடைய பேக்டரியில், அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் என்ற ஒரு நிறுவனத்தில் அண்மையில் சோதனை செய்தபொழுது, 450 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்று இருக்கிறது.

அவர் மிகப்பெரிய காண்ட்ராக்ட்காரர்; பெரிய பிரபலமான காண்ட்ராக்ட்காரர். இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேலே ஒப்பந்தங்களை செய்து தொழில் நடத்தி வருபவர்.
ஆக, அவர் யாரோடு, எந்த அமைச்சரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்ற செய்தி விரைவில் வெளிவரப்போகிறது.

 எனக்குத் தெரியும்; ஆனால், இப்போதே நான் சொல்லிவிட்டால், அது பாதகமாகக் கூட முடியும்.
ஆக, அந்தச் செய்தி மிக விரைவில் வெளிவரப் போகிறது.
 நாட்டு மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வருவது மட்டுமல்ல, நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கக்கூடிய ‘கரப்சன் - கமிசன் - கலெக்சன்’ என்ற நிலையில், ஆட்சி நடத்தியிருக்கக்கூடிய இவர்களையெல்லாம் மக்களுக்கு அடையாளம் காட்ட, அப்படிப்பட்டவர்கள் மீது முறையாக உரிய நடடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்ற உறுதியை இன்றைக்குச் சொல்கிறேன்” எனப் பேசினார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ம் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அமைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து அரசியல் கட்சியினர் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஆனால், மொழிவாரி மாநிலங்களை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் தற்போது தமிழ்நாட்டு மக்களை நெருங்கும் முயற்சியில் இறங்கி தமிழ்மொழிக்குப் பெருமை செய்தவர்களை இழிவுபடுத்தி வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க சார்பில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் இருக்கக்கூடிய படத்தில் திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிந்து, ருத்திராட்ச மாலை, பட்டை என மத அடையாளங்களைப் பூசி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

 இதற்கு இணையத்தில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி
#BJPInsultsThiruvalluvar 
என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பலரும் பா.ஜ.கவினருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?