‘ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு ஆளுநர்

 தேவையில்லை
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு வகையில் ஆட்சியை பிடிப்பது. இல்லையெனில் ஆளுநர்களை வைத்து ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற குற்றச்சாட்டுகளை பாஜக மீது அரசியல் விமர்சகர்கள் வைத்தாலும், கடைசி நிமிடம் வரை அமைதியாக இருப்பது போல தெரிந்த பாஜக, மகாராஷ்டிரத்திலும் தனது காவிக் கொடியை பறக்கவிட்டுள்ளது. 
அதில் ஆளுநரின் பங்கு முக்கியமானது. 
 அரசியல் களத்தில் ஆறாவது விரல் போல ஆளுநர் பதவி நீடித்துக் கொண்டிருப்பது ஆங்கிலேய ஆட்சியின் சீதனமாகும் ”பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டவாறு, ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்ற வகையில் விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

ஆங்கிலேயர்கள் மாநில அரசுகளை கண்காணிக்கும் கண்காணிகளாக ஆளுநர்களை நியமித்தனர். நாட்டின் விடுதலைக்கு பின் வைஸ்ராய் பதவி தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் பதவியாக மாற்றப்பட்டது. ஓய்வு காலங்களில் மத்தியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆளுநர்களை நியமித்தனர்.
 “தமிழகத்தில் இதுவரை பதவியில் இருந்த ஆளுநர்கள் கண்ணியத்தோடு பொறுப்பில் இருந்ததையும் மறக்க முடியாது. பர்னாலா ஆளுநராக இருந்தபோது அன்றைய பிரதமர் சந்திரசேகர் ஜெயலலிதா தூண்டுதலால் திமுக ஆட்சியை 1991இல் கலைக்க முற்பட்ட போது தனது அறிக்கையை தர மறுத்துவிட்டு ஆட்சிக் கலைப்பு கூடாது என்ற நிலையில் இருந்தார்.
 ஆனால் அவரையும் மீறி ‘வேறு வழிகளிலும்’ (Otherwise) மாநில ஆட்சியை பிரிவு 356-ஐ கொண்டு கலைக்கலாம் என்ற நிலையில் கலைக்கப்பட்டது.

இதுவரை பிரிவு 356ஆனது 72 ஆண்டுகளில் 132 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. பிகார் (சின்கா ஆட்சி) பஞ்சாப் (கெய்ரோன் ஆட்சி), பின் எதிர்க்கட்சி கம்யூனிஸட் ஆன்ட கேரளாவில் இ.எம். எஸ்.நம்பூதிரி பாட் தலைமையலான அரசு கலைக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபொழுது அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெலலிதாவிற்கும் பனிப்போர் நிகழ்ந்தது.
 
”பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரே இருக்கலாம் என்ற சட்ட முன்வடிவு வந்தபொழுது சென்னா ரெட்டி தனது அதிருப்தியை தெரிவித்தார். அதே காலகட்டத்தில் சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தான அறிக்கையை மாநில அரசு என்று முதல்வர் ஜெயலலிதா மீது கண்டனம் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா பூகம்ப நிதிக்கு நன்கொடையாக சென்னாரெட்டியும், ஜெயலலிதாவும் தனித்தனியே நிதி திரட்டினார்கள்.
ஆளுநர் மாளிகை புதுப்பிக்க அனுப்பிய கோப்பினை ஜெயலலிதா கிடப்பில் போட்டுவிட்டார் என்று சென்னா ரெட்டி வேதனைப்பட்டதும் உண்டு.
அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் சென்னை வந்தபோது அவரை வரவேற்க ஆளுநரும், முதல்வரும் தனித்தனியே பந்தல்கள் அமைத்து வரவேற்ற நிகழ்ச்சியை பத்திரிக்கைகள் நைய்யான்டியாகவும் எழுதியது.
ஆளுநர் சென்னாரெட்டி ஒரு முறை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அதை ஜெயலலிதா திரும்ப பெற்றுக் கொண்டார்.
 இப்படியான ஆளுநர்களை குறித்தான விவகாரங்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன.

”கடந்த காலங்களில் ஆந்திராவின் என்.டி.இராமாராவின் அமைச்சரவை நீக்கப்பட்டு அவரது அமைச்சரவையில் இருந்த பாஸ்கர ராவ் என்பவரை முதல்வராக்கும் இந்திரா காந்தியின் முயற்சியை அன்றைய ஆந்திர ஆளுநர் செயல்படுத்தினார்.
 இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
 பெரும்பான்மையுள்ள சட்டமன்றத்தை எப்படி கலைக்கமுடியும் என்று என்டிஆர் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு டெல்லி ஜன்பத்தில் பேரணி நடத்தி குடியரசுத் தலைவரிடம் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
அதே கால கட்டத்தில் காஷ்மீரத்திலும் 356யை பயன்படுத்தி பரூக் அமைச்சரவையை கலைத்து அவருடைய மைத்துனர் ஷா தலைமையில் காங்கிரஸ் பொம்மை அமைச்சரவையை நிறுவியது.

ஆளுநர்கள், முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்திலும், மாநில அரசுகளை கலைக்கும்போதும் தங்களுடைய பங்கு முக்கியமானது , ”ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அவர் மத்திய அரசின் கீழ்ப்பட்டவர் அல்லது மத்திய அரசின் கண்காணிப்பிற்கு உட்பட்டவர் என்ற வகையில் இல்லை.
ஆனால், அவர் சுதந்திரமான ஒரு தனிப்பட்ட அரசியல் அமைப்பின் அங்கமாகவும், மாநில அரசின் அமைப்பில் தலைமையை ஏற்பவர் எனவும், ஹெக்டே முதல்வராக இருந்த போது, கர்நாடக அரசு 1980இல் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக் கூறுகிறது.


மத்திய – மாநில உறவை ஆராயும் சர்க்காரியா குழு ஆளுநரைப் பற்றித் தனியாக குறிப்பிட்டுள்ளது. அதில் ஆளுநருடைய பொறுப்பு மிக முக்கியமானது என்றும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த பாரபட்சமற்றவரே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும், அரசியலில் அண்மைக் காலம் வரை ஈடுபட்ட அரசியல்வாதியாக இருந்தவரை ஆளுநர் பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது.

ஆளுநர் குறித்து சர்க்காரியா கமிஷன் பரிந்துரைசர்க்காரியா கமிஷனில் ஆளுநர் பற்றிய முக்கியமான பரிந்துரைகள்.

**மத்திய அரசிலுள்ள ஆளும் கட்சியைச் சார்ந்தவர், மாற்று கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு நியமிக்கக் கூடாது.

**குடியரசுத் தலைவர் பிரதமர் ஆகியோர் குறிப்பிட்ட மாநிலங்களின் முதல்வரை அவசியம் ஆலோசித்த பின்பு ஆளுநரை நியமிக்க வேண்டும். இதனை முறைப்படுத்தும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 120வது பிரிவை திருத்த வேண்டும்.

**ஆளுநர் பதவி ஐந்து ஆண்டுகளுக்கு உரியது என ஆக்கப்பட வேண்டும். ஆளுநர் பதவியில் இருந்து விருப்பப்படி விடுவிக்கக் கூடாது. ஒருவரை ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கும் முன்பு அவரின் விளக்கத்தைப் பெற்றபின் விலக்கப்பட வேண்டும்.

**ஓர் ஆளுநரை பதவியில் இருந்து விலக்க நேர்ந்தாலோ, மாற்றப்பட்டாலோ அதற்கென காரணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆளுநர் அதைப்பற்றி விளக்கங்கள் அளித்திருந்தால் மக்களவை உறுப்பினர்கள் கவனத்திற்கு அதையும் கொண்டுவர வேண்டும்.

**ஆளுநர் பதவி வகிக்கின்றவர் வருமானம் தரும் எந்த பதவியையும் ஏற்கக் கூடாது என்ற மரபை உருவாக்க வேண்டும். கோப்புகள் பற்றி விளக்கம் பெற, மாநில அரசின் ஆலோசனை பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

**கொள்கைத் திட்டங்களை மாநில அரசிடம் வலியுறுத்துவது ஆளுநரின் பணியல்ல. அதைப்போல பெரும்பான்மை ஆதரவு ஓர் அரசியல் கட்சிக்கு இருக்கிறது என்பதை சட்டமன்றத்தில் தான் சோதிக்க வேண்டுமேயொழிய ராஜ்பவனில் ஆளுநர் சோதனையில் ஈடுபடக் கூடாது.

ஆனால் நாட்டில் நடப்பில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?
எத்தனை அறிக்கைகள், பரிந்துரைகள், தீர்ப்புகள் இருந்தாலும் பயனில்லை.மேலே குறிப்பிட்ட கர்நாடக மாநில வெள்ளை அறிக்கையோடு இல்லாமல், 1965 இல் மொரார்ஜி தேசாய் - ஹனுமந்தய்யா தலைமையில் அமைத்த ‘நிர்வாகக் சீர்திருத்தக்குழு அறிக்கை’, தமிழகத்தின் திமுக அரசு அமைத்த ராஜமன்னார் குழுவின் அறிக்கையும், இந்திரா காந்தி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு அறிக்கையும், மேற்கு வங்க ஜோதி பாசு அரசு அளித்த வெள்ளை அறிக்கையும், என்.டி. ராமாராவ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட ஐதராபாத் பிரகடனமும், ஸ்ரீ நகரில் ஃபரூக் அப்துல்லா நடத்திய மாநாட்டில் ஸ்ரீ நகர் பிரகடனமும்”
“கர்நாடகத்தில் அப்போதைய முதல்வர் ஹெக்டே எடுத்த தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளும், வாஜ்பாய் காலத்தில் மத்திய அரசின் பூஞ்ச் கமிஷனின் பரிந்துரைகளும், மாநிலங்களிடையேயான கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகளும், உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பும், ஆளுநரின் பணிகள், அதிகாரங்கள், வரம்புகள், சமன்பாடுகள், ஆட்சிக் கலைப்பு குறித்தான முடிவுகளை மேற்கொண்டாலும், மத்திய அரசின் கண்காணியாகவே ஆளுநர்கள் இதுவரை செயல்பட்டு வந்துள்ளனர். இவ்வளவு குழுக்களின் ஆய்வுகளின் அறிக்கைகள் இருந்தும் எதுவுமே ஈடேறாமல் இருக்கின்றன.

உலக அரங்கில் ஆளுநர் 
 ”அமெரிக்காவில் ஆளுநர் பொறுப்புக்கு சமமான பதவியை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். பிரிட்டிஷ் காலனியில் கீழிருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற காமன்வெல்த் நாடுகளில் தான் ஆளுநர் என்ற பொறுப்புகள் உள்ளன.

தமிழக முன்னாள் ஆளுநர் குரானா, ஜானகி இராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது எழுந்த சிக்கலில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டக் கோரினார்.
அரசியல் சாசனம் பெரும்பான்மையைப் பற்றி விரிவாக குறிப்பிடப்படவில்லை. மக்களவைக்கு அல்லது மாநில சட்டமன்றத்திற்கு அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. இதுவரை சட்டமன்றத்தில் பெற்றுத்தான் ஆட்சியமைக்கும் மரபு நடைமுறையில் உள்ளது.

ஆனால் 1960இல் திருவிதாங்கூரில் பட்டம் தாணுபிள்ளை அமைச்சரவை அமைத்தார். அவரது கட்சியில் 10 உறுப்பினர்களே இருந்தனர்.
பல மடங்கு மாற்றுக் கட்சி உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு பட்டம் தாணுபிள்ளை தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு இந்திரா காந்தி மத்தியில் சிறுபான்மை பலத்தை பெற்று இருந்தாலும், மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தினார்.
எனவே, இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுகிறபோது குடியரசுத் தலைவர், ஆளுநரின் முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகும். ஆளுநர் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டுமெயொழிய அதற்கு மீறிச் செயல்படுவது நல்லதல்ல எனவும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக் காட்டியுள்ளார்.

”தமிழகத்தின் ஆளுநராக இருந்த பிரகாசா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்ததால், முதல் காங்கிரஸ் அமைச்சரவை உருவாகக் காரணமாக இருந்தார் என்பது சர்ச்சைக்குரிய செய்தியாகும்.

ஆளுநர் மத்திய அரசின் கீழுள்ள ஏஜெண்டாகவோ அல்லது இரப்பர் ஸ்டாம்பாகவோ செயல்படுகிறார். ஆளுநர் பதவி என்பது வெறும் அலங்காரத்திற்காகவும், அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு மட்டும் என்று இல்லாமல், மத்திய – மாநில அரசுகளுக்கு ஒரு பாலமாக இருந்து மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய பயன்களைப் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு ஆற்றினால், மக்கள் பிரச்சினைகள் தீர வாய்ப்புண்டு.

அத்தோடு மத்திய – மாநில உறவுகளில் பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் கவனித்துக் கொள்வதிலும், மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி இல்லாதபோது அதை நிர்வாகம் செய்யும் பொறுப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலங்களில் சம்பந்தப்பட்ட அரசை அகற்ற, ஆளுநரின் பரிந்துரை முக்கியமானது ஆகும்.

இச்சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலை இன்று எழுந்துள்ளது.
“Governor is to be formally Constitutional Head with strictly limited powers whose discharge shown all functions would be required to follow the advice of the Ministry” .
ஆளுநர், கூட்டாட்சித் தத்துவத்திற்கு முக்கியமான அங்கம் வகிக்கின்றவராகவும் ஒரு மாநிலத்தில் தீர்மானம் இல்லாத நேரத்தை அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற பொறுப்பை உடையவராகவும் இருக்கிறார் எனவும், வழக்கறிஞர் திரு. சோலி சோரப்ஜி கூறுகின்றார்.
ஆளுநர் குறிப்பிட்ட அதிகாரத்துடன் மாநில அமைச்சரவை பரிந்துரைக்கும் அரசின் நிர்வாகத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பையும் பெற்றுள்ளார்.

கடந்த காலங்களில் ஆளுநர்களை நியமிக்கும்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ஆளுநரை நியமிக்கும்போது பல பிரச்சினைகள் எழுந்தன. இமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தீர்ப்பில் ஆளுநராக நியமிக்க இருந்த ராமலாலுக்கு எதிரானக் கண்டனங்கள் எழுந்தன.
 இதை குறித்து ராஜமன்னார் குழு அறிக்கையில் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே ஆளுநரை நியமிக்கவேண்டுமென்று பரிந்துரைத்தது.

ஆளுநரை நியமிக்கும்போது மத்திய அரசு பாரபட்சமாகவும் தங்களுடைய கட்சியில் உள்ள ஒரு சிலரை திருப்திப்படுத்தும் வகையில் ஆளுநருடைய முற்கால அரசியல் வரலாற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளாமலும், அடிப்படையில் அவருடைய நேர்மையை ஆராயாமலும் நியமிக்கப்படுவது நல்லதல்ல.
ஆளுநரை நியமிக்கும்போது, சம்பந்தபட்ட மாநில முதல்வருடைய ஆலோசனை கேட்ட பிறகு நியமித்தால், ஆளுநரும் மாநில முதல்வர் தலைமையில் இயங்கும் ஆளுநரால் நியமிக்கப்படுபவர் தங்களுக்கென தனியாக அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில் செயல்படவோ, வீணான ஜம்பத்திற்கு ராஜ்பவனத்தில் செலவுகள் செய்து மக்களுடைய வரிப்பணத்தைப் பாழ்படுத்துவதைத் தவிர்த்து எளிமையாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் ஜனதா ஆட்சி மத்தியில் இருந்தபோது பிரபுதாஸ் பட்வாரி தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் காந்தியவாதி.
சென்னை ராஜ்பவனில் மது, புகை பிடிப்பதை அறவே தடுத்துவிட்டார். அந்தப் பிரச்சினையால் காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பட்வாரி விலக்கப்பட்டார்.
 மத்திய அரசால் ஆளுநராக நியமிக்கப்படுபவர், தாங்கள் விரும்பும் ஒருவரை தங்களின் ஏஜெண்ட் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுவதோ அல்லது விரும்பாதபோது பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதோ கூடாது. ஆளுநர், அரசியல் காரணத்தினால் மத்திய அரசால் அகற்ற நேர்ந்தால் அதற்கு தடையாக (Mutual checks and Balances) அரசியல் சட்டத்தைத் திருத்தப்பட வேண்டும்.

எனவே ஆளுநர், “”As a friend, Phliosapher, guide to the State Government and defender of the Constitution. The Office of the Governer assumes crucial role in a Federal set up. He will be called upon to exercise his discriminary powers in the event of the broke down of the constitutional machinery in the State (Soli J. Sorabjee)” ஒரு மாநில நிர்வாகத்தில் நண்பராகவும், அதை வழி நடத்திச் செல்லக்கூடிய வழி காட்டியாகவும் மாநில அரசுக்காக வாதிடுபவராகவும், அரசியல் அமைப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளார். இன்றைக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களைவிட எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் பல உள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநருடைய அதிகாரங்கள் 154, 160, 161, 162 ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. 356 பிரிவில் இந்தியக் குடியரசுத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தும்போது, ஆளுநருடைய பங்கு மிக முக்கியமானது ஆகும்.
 ஆனால் எஸ்.ஆர். பொம்மை வழக்குக்கு பின் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ தங்களது விருப்பத்திற்கேற்றவாறு பிரிவு 356ஐ பயன்படுத்துவதை தடுக்கப்பட்டுள்ளது என்பது ஒரு நிம்மதியை தந்த செய்தியாகும். இதுவரை இந்த 356வது பிரிவை கொண்டு உத்தரகண்ட் அரசோடு சேர்த்து 126 முறை மாநில அரசு கலைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர்கள் ராஜ்பவனின் வாடகை தராத குடியிருப்புவாசிகள் என்று நீதிபதி கிருஷ்ணய்யர் குறிப்பிட்டதுண்டு. இந்த பகட்டான பதவியால் அரசு கஜானாவின் பணம் விரயமாகிறது என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் பதவி தேவையில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா 25-07-1980இல் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை கொண்டுவந்து, ‘மக்களின் வரிப்பணத்தில் தண்டத்தீனியாக இருக்கும் ஆளுநர் பதவி தேவையற்றது’ என்று கூறினார்.

அரசியலமைப்பு அவையில் கவர்னர் பதவியை பற்றிய விவாதம் வந்தபொழுது விடுதலைப் போரின் முக்கிய தளபதியாக விளங்கிய மஹாவீர் தியாகி, ‘மத்திய அரசின் ஏஜென்ட்டாக தான் ஆளுநர் இருப்பார்’ என்று பேசினார்.

கிருபளானி சென்னை ராஜ்பவனில் பட்வாரி ஆளுநராக இருக்கும்பொழுது விருந்தினராக வந்து தங்கினார். அடியேன், தற்போது தினமணி ஆசிரியரான வைத்தியநாதன் போன்றவர்களெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியாவின் காந்தியார் காலத்திலேயே மூத்த தலைவராக விளங்கியவர்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பட்வாரி, என்னை ஊருக்கு செல்ல விடமாட்டேன் என்கிறார்.
இந்த மாளிகை மாதிரியான ராஜ்பவனில் தங்க மனது ஒப்பவில்லை. வேலையில்லாத மூத்த காங்கிரஸ்காரர்களுக்கு திருப்திப்படுத்த, வசதியோடு அவர்கள் வாழ நியமிக்கும் பதவிதான் கவர்னர். இதுவரை இப்படித்தான் நடந்துள்ளது.’ எனச் சொன்னதுண்டு.
 அவர் பாணியிலேயே, ‘கவர்னர் மத்திய அரசின் கண்காணி (கங்கானி) தானோ? என ராதாகிருஷ்ணன் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நடந்த கூத்துகள்  எந்தவொரு தகுதி அடிப்படையில்லாமல் தேர்ந்தெடுக்கப்படாத அரசியல் சாசன பதவியாக விளங்கும் ஆளுநர் பதவி தேவைதானா? அல்லது அதை முறைப்படுத்த வேண்டுமா? என்று ஆய்வு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.
”காஷ்மீரில் நடைபெற்று வந்த மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றமும் முடக்கப்பட்டது. திடீரென 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜே.கே.எம்.சி) கடந்த 21/11/2018 அன்று ஆளுநரிடம் ஆட்சியமைக்க கோரிக்கை வைத்தது. தனக்கு பாஜகவின் 26 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்ற கட்சிகளை சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு உள்ளதாக கூறியது.

இதேபோல மறுபுறத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி 28 உறுப்பினர்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது. இவர்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரசின் 18 உறுப்பினர்களின் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் மக்கள் ஜனநாயக கட்சியான பிடிபி தெவிரித்தது. இந்நிலையில் மாநில ஆளுநரான சத்யபால் மாலிக் இரண்டு தரப்புகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்காமல் தன்னிச்சையாக சட்டப்பேரவையை கடந்த 21/11/2018 அன்று கலைத்து உத்தரவிட்டார்.”

”இரண்டு தரப்பினரில் யாருக்கு ஆதரவு அதிகமாக உள்ளதோ அதை கண்டறிந்து ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காமல், தான்தோன்றித்தனமாக அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பிரயோகப்படுத்தியது முற்றிலும் தவறானது, நியாயமற்றது, கண்டனத்துக்குரியது.

இதற்கு ஆளுநர் சொல்லும் காரணங்கள் என்னவென்று பார்த்தால்; சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வகையில் குதிரைபேரம் நடக்கும் என்றும், பொருந்தாத கூட்டணியாக எப்படி ஆட்சியமைக்க முடியுமென்றும், காஷ்மீரின் நலனைக் குறித்தே பிரிவு 356-ன்படி சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அப்படியெனில், எதிரெதிரான கொள்கைகளை கொண்ட பாஜகவும், பிடிபியும் கடந்த காலத்தில் எப்படி ஆட்சியமைக்க முடிந்தது. அதுபோல, பிடிபி கட்சி தன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை தொலைநகல் (Fax) மூலமாக அனுப்பியது கிடைக்கவில்லை என்றும், 21/11/2018 நாளானது விடுமுறை என்றும் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். ராஜ்பவனில் அதிகாரிகள் இருப்பார்களே, அப்படியிருந்தும் எப்படி கிடைக்கவில்லை என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்கள் என்பது வேதனையளிக்கிறது. ஆனால், அதே தேதியில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜே.கே.எம்.சி) அனுப்பிய தொலைநகல் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்றது எப்படி என்பது புரியவில்லை.

இதற்கிடையில், பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தன்னுடைய டிவிட்டரில் பாகிஸ்தானின் உத்தரவுப்படியே ஆட்சியமைக்க பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சியும் உரிமை கோரியதாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை அபத்தமாக கூறியபோது, முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதை கண்டித்தபின் தன்னுடைய கருத்தை திரும்பப்பெற்றார் என்பதெல்லாம் மிகவும் விளையாட்டுத்தனமான, முட்டாள்தனமான நடவடிக்கையே.
இப்படி பல சந்தேகங்கள் காஷ்மீர் ஆட்சிக்கலைப்பில் எழுந்துள்ளன.
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் பாஜக கூட்டணியில் முதல்வராக இருந்தவர். அவரும் ஆளுநர் மாலிக்கின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார்.

ஆளுநர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டே தன்னிச்சையாக முடிவு செய்து சட்டமன்றத்தை கலைத்திருப்பது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாணது.
 மத்திய - மாநில அரசு உறவுகளை ஆய்வுசெய்த சர்காரியா கமிஷனின் பரிந்துரையை புறந்தள்ளி அதற்கு மாறாக ஆளுநர் மாலிக் மேற்கொண்ட நடவடிக்கை பொறுப்பற்றதாகும். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவரே அதை அத்துமீறிய ஆளுநரின் நடவடிக்ககையை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஆட்சியமைக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது.

அதன்பின் ஆட்சியமைத்த கட்சி சட்டமன்றத்தில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று உத்தரவிடுவது மட்டும்தான் ஒரு பொறுப்புள்ள ஆளுநரின் சட்டப்பூர்வமான ஜனநாயகக் கடமையாகும். இதைவிடுத்து ஒரே கட்சியா, ஒரே கொள்கையா என்பதையெல்லாம் பரிசீலிப்பது ஆளுநரின் உரிமை கிடையாது.
 சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பது தான் நடைமுறை.
அதை விட்டுவிட்டு ராஜ்பவனில் நான்கு சுவர்களுக்குள் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில ஆளுநர் பெரும்பான்மை கொண்ட மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணியை அழைக்காமல் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்து அந்த ஆட்சியும் தானாகவே சட்டமன்றத்தில் தனது ஆதரவை நிரூபிக்க முடியாமல் அதன் முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

பாஜக ஆட்சியில் உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசத்திலும் இந்த கூத்தை நடத்தினார். அருணாச்சல பிரதேசத்தில் 2016இல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தபின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்து ஆளுநரின் ஆட்சிக்கலைப்பு தவறானது என்று பாஜக அரசு அப்போது குட்டு வாங்கியது.
அதேபோல, உத்தரகாண்டில் ஹரீஸ்ராவூத் தலைமையிலான அரசாங்கத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாளே கலைத்தது. அதை மறுபடியும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் ஆளுநரின் ஆட்சிக்கலைப்பை தவறு என்று தீர்ப்பளித்து அவரே மீண்டும் பொறுப்பேற்றார்.
2005இல் பீகாரில் பூட்டாசிங் கவர்னராக இருந்து ஆட்சிக் கலைப்பு நடந்தபோது, உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கை தவறானது என்று உத்தரவிட்டு பெரும்பான்மை உள்ள ஆட்சியை கலைக்கமுடியாது என்றும் ஆணையிட்டது.

ஜார்க்கண்டில் 2004இல் கவர்னர் சையது 41 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டவரை ஆட்சியமைக்க அழைத்தார்.
 ஆனால், எதிர்முனையில் 80 பேர் ஆதரவுபெற்ற அர்ஜீன் முண்டாவை அழைக்காமல் ஆளுநர் சையது செய்த நடவடிக்கையை கண்டித்தபின் 2004இல் அர்ஜூன் முண்டா ஜார்கண்ட் முதல்வரானார்.
இதேபோல, நாகாலாந்தில் 1992இல் அம்மாநில ஆளுநர் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆட்சியைக் கலைத்தார்.
 ஆனால், அது முற்றிலும் முரணாணது என்று திரும்பவும் ஆட்சி நிறுவப்பட்டது.

அதேபோல, 2009 நவம்பரில் குஜராத்தில் ஆளுநர் கமலா பெனிவால், நரேந்திரமோடி முதலமைச்சராக இருந்தபோது, லோக்அயுக்தா விடயத்தில் கவர்னருக்கும் மோடிக்கும் அங்கு பிரச்சனை ஏற்பட்டது.
 பிற்காலத்தில் கமலா பெனிவாலை அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதெல்லாம் வரலாறுகள்”.

-வழக்கறிஞரும் திமுக தலைவர்களில் ஒருவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தன் வலைப்பதிவில்

------------------------------------------------------------------------------------------------------------------------------------


162எம்.எல்.ஏக்கள்

மஹாராஷ்டிராவில் அதிரடியான அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், முதல்வராக பதவியேற்ற  பாஜகவை சேர்ந்த பட்னாவிஸ் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது எந்த கூட்டணியில் அதிகம் எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

தங்களுடைய பலத்தை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு நிரூபிக்கும் வகையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின்162எம்.எல்.ஏக்கள் மும்பையிலுள்ள ஹயாத் ஹோட்டலில் ஒன்று திரண்டனர்.


மஹாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 162 எம்எல்ஏக்களுடன் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 
சிவசேனா மூத்த நிர்வாகியான சஞ்சய் ராவத் அவரது ட்விட்டர் பக்கத்தில்  
“எங்கள் பக்கம் உள்ள 162 எம்.எல்.ஏக்களுடன் மும்பை ஹயாத் ஓட்டலில் கூடவுள்ளோம். 
 வேண்டுமானால் யார் வந்தும் பார்த்து கொள்ளலாம்”  என பதிவிட்டிருந்தார்.  

தங்களுடைய பலத்தை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு நிரூபிக்கும் வகையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் மும்பையிலுள்ள ஹயாத் ஹோட்டலில் ஒன்று திரண்டுள்ளனர் .

 இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, அசோக் சவான் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

. இதில் கலந்துகொண்ட 162 எம்.எல்.ஏக்களும்,
 ``நாங்கள் கூட்டணிக்கு உறுதுணையாய் நிற்போம். 
பாஜகவிற்கு ஒரு போதும் உதவமாட்டோம். கூட்டணிக்கு  கேடுவிளைவிக்கும் வகையில் எந்த வேலையிலும் ஈடுபடமாட்டோம்” 
என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.
உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)

சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாள்
(1957)
நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)
மும்பை பயங்கரவாத தாக்குதல் தினம் (2008)
 நவம்பர் 26 (1957)சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாள்


1977 - புவியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் வேற்றுக் கிரகவாசிகள் குறுக்கிட்டு, எச்சரிக்கைச் செய்தியை ஒலிபரப்பியதாக நம்பப்பட்ட நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றது.
இங்கிலாந்தின் இண்டிபெண்டண்ட் பிராட்காஸ்ட்டிங் அத்தாரிட்டி(ஐபிஏ) என்ற ஒழுங்காற்று அமைப்பின் கட்டுப் பாட்டிலிருந்த ஹன்னிங்டன் ஒளிபரப்பு மையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த செய்தியறிக்கையில் மாலை 5.10 மணிக்கு இடையூறு ஏற்பட்டது.
முதலில் படம் சற்றுக் குலுங்கியபின், குழப்பமான ஒலிகள் கேட்டு, ஒளிபரப்பின் ஒலி மட்டும், சிதைவுற்ற ஒலிக்கு மாறி, சற்றேறக்குறைய 6 நிமிடங்களுக்கு ஒரு கரகரப்பான குரலில் ஒருவர் பேசியது ஒலிபரப்பாகியது. தன் பெயர் வ்ரில்லியன் என்றும், அஷ்தார் பால்வீதி மண்டல பாதுகாப்புத்துறையின் பிரதிநிதி என்றும் அறிமுகப் படுத்திக்கொண்டார்.

வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கருதுகோள்களை உருவாக்கிய வர்களுள் ஒருவரான வான் டெசல், அஷ்தார் என்னும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி, முதன்முதலாக 1952இல் குறிப்பிட்டார்.

கலிஃபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை(யுஎஃப்ஓ-பறக்கும் தட்டு!) சந்திப்பதற்கான தளம் ஒன்றை 1947இல் உருவாக்கிய இவர், 1952இல் அஷ்தார்களுடன் தொலையுணர்வின்மூலம்(டெலிபதி!) பேசியதாக அறிவித்ததைத்தொடர்ந்து இப்பெயர் புகழ்பெற்றது.
இந்தப் பெயரைத்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பின் இடையில் ஊடுருவியவர் பயன்படுத்தினார்.

புவிக்கோளில் வசிப்பவர்களின் தவறுகளால் ஊழிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், அது பல்வேறு திருத்த நடவடிக்கைகளை புவியில் செய்து மனித இனத்தின் விதியை நிர்ணயிக்கும் என்றும், மனிதர்களின் தவறுகள் புவியைத் தாண்டித் தங்கள் கோள்களையும் பாதிக்கிற அழிவுகளை உருவாக்கத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்த அந்த உரை, அந்த அழிவுகளைத் தடுக்க, தீமையான ஆயுதங்கள் அனைத்தும் ஒழிக்கப்படவேண்டும் என்றும் எச்சரித்தது.
 இதைத் தொடர்ந்து, அச்சமுற்ற மக்கள் ஏராளமான தொலைபேசி அழைப்புகளை ஒளிபரப்பு நிலையத்திற்குச் செய்ததால், மறுநாளின் செய்தித்தாள்களில், யாரோ ஒரு வதந்தி பரப்புபவர், ஒளிபரப்பியைக் கைப்பற்றி, வதந்தி பரப்பியதாகவும், இவ்வாறு நிகழ்வது அதுவே முதல்முறையென்றும்(!) ஐபிஏ விளக்கமளித்தது.
 உலகம் முழுவதும் பரவிய இந்தச் செய்தி அமெரிக்காவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
- அறிவுக்கடல்

இந்த நிலையில் வெப்பசலனம் மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது மீண்டும்...

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெய்ய இரு...

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw

  வேலை வாய்ப்புகள்

பெய்ய இரு...

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw
  பேஷன் டெக்னாலஜி 
கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
---------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தில் 55 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது:
1.11.2019 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30 வயது மற்றும் சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி
: 3.12.2019

விபரங்களுக்கு
: www.cpcl.co.in
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 
 காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு.
 காலியிடங்கள்: உதவி பாதுகாப்பு அதிகாரி- 19, பாதுகாவலர்- 73

வயது: 6-12-2019 அடிப்படையில் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் பொதுப் பிரிவினர்-27, எஸ்.சி.,/எஸ்.டி.,- 32, ஓ.பி.சி.,- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு சலுகை உண்டு.


கல்வித் தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்ச்சி முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்' https://recruit.barc.gov.in
கடைசி நாள்
: 6.12.2019
---------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1996 முதல் 1.8.2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 153 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தொடர்புடைய விளையாட்டில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 17.12.2019

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கால்நடை உதவி மருத்துவர்

காலிப்பணியிடம் : 1141 . 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கால்நடை உதவி மருத்துவர்  .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 23.02.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு 1141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கால்நடைத் துறையில் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1141 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.எஸ்., பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கும் கட்டணத்தில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுக்கு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7, 8, 14, 21 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச.28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
2020, ஜன. 19 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு
ஜன.25- ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழிலோ அல்லது தெலுங்கிலோ பேசவா?
இந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் டாப்சி, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு தன்னுடைய திரை அனுபவங்கள் தொடர்பாக பார்வையாளர் களுடன் ஆங்கிலத்தில் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், அந்த உரையாடலின்போது குறுக்கிட்ட ஒருவர், டாப்சியை இந்தியில் பேசுமாறு வலியுறுத்தியுள்ளார். 

உடனே டாப்சி அரங்கத்தினரை பார்த்து, ‘இங்குள்ள அனைவருக்கும் இந்தி மொழி புரியுமா?’ எனக்கேட்க, பெரும்பாலானோர் ‘புரியாது’ என்று கூறியுள்ளனர். இதனால் ஆங்கிலத்திலேயே டாப்சி தனது பேச்சைத் தொடர்ந்துள்ளார்.
 
ஆனாலும் அந்த நபர், டாப்சி இந்தியில்தான் பேச வேண்டும் என்றுதொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்துள் ளார். நீங்கள் இந்தி நடிகைதானே, அதனால் இந்தியில் பேசுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த டாப்சி, “நான், பாலிவுட் நடிகை மட்டுமல்ல, தென்னிந்திய நடிகையும்தான். 
அதனால் தமிழிலோ அல்லது தெலுங்கிலோ பேசவா?” என்று அவரிடம் எதிர்க்கேள்வி எழுப்பி, பதிலடி கொடுத்துள்ளார்.
 டாப்சியின் இந்த பதிலைக் கேட்டு, அரங்கிலிருந்த அனைவரும் பெரும் ஆரவாரம் எழுப்பியுள்ளனர்.
அவரது கருத்துக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கேள்விகேட்ட நபர் வாயடைத்து அமைதியாக அமர்ந்துள்ளார்.

இந்தியைக் கட்டாயப்படுத்துவதற்கு எதிரான, நடிகை டாப்சியின் துணிச்சலான இந்த பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் தற்போது பாராட் டுக்கள் குவிந்து வருகின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?