வியாழன், 28 நவம்பர், 2019

இதிலேயும்v ஏழை-வசதியானவர்கள்பாகுபாடு ?

 மக்களின் உயிரை காவு வாங்கும் வகையில் தரம் குறைந்த மற்றும் போலி மருந்துகள் இந்தியா வில் விநியோகிக்கப்பட்டு வருவதாக வெளி வந்திருக்கும் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியளிப்ப தாக இருக்கிறது.

2017 புள்ளிவிபரத்தின் படி இந்தியாவில் 10,189 பேருக்கு ஒரு அரசு மருத்துவர் மட்டுமே இருக்கி றார். 90,343 பேருக்கு ஒரு அரசு மருத்துவனை என்ற அடிப்படையில்தான் மருத்துவ வசதி இருக் கிறது.
ஆனால் உலக அளவில் மருந்துகள் விற்ப னையில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது.

அப்படி உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 34 சதவிகிதம் தரம் குறைந்தவையாகவும் ஆபத்தை விளை விக்கக் கூடியதாவும் இருக்கிறது என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் செய்த சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரதம மந்திரி பாரதிய ஜனாயுஷாதி பரியோ ஜனா என்கிற பெயரில் மத்திய அரசு குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் வகையில் மருந்தகங்களை ஏற்படுத்தி பாஜக ஆதரவாளர்க ளின் கைகளில் கொடுத்திருக்கிறது.

அந்த மருந்த கங்களில் விற்கப்படும் மருந்துகளை பரிசோதனை செய்ததில் 18 மருந்து நிறுவனங்கள் வழங்கிய மருந்துகளில் 25 தொகுப்புகளில் உள்ள மருந்துகள் தரம் குறைந்தவை என தெரிய வந்திருக்கிறது.
இதில் 17 நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை இந்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் உறுதிப்படுத் தின.
47 ஆயிரம் மாதிரி மருந்துகளில் 3.16 சதவிகி தம் தரமற்றவையாகவும், 0.02 சதவிகிதம் போலியா னவை என்று மக்களவையிலேயே தெரிவிக்கப் பட்டது.

அண்மையில் நெஞ்செரிச்சல் மருந்தான  ரானிடிடினில் அளவிற்கு அதிகமான நைட்ரோச மைனை பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டது. 
இது புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தது. 

உடனே இந்த மருந்தை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் தடை செய்தன. சந்தைகளில் இருந்து திரும்ப பெறப்பட்டது.
ஆனால் இந்தியாவில் உடனே தடை செய்யவில்லை.

 மாறாக அந்தப் பொறுப்பை மத்திய அரசு, மாநில அரசுகள் மீது சுமத்தியது.
அதற்குள் பல இடங்களில் அந்த மருந்துகள் விற்றுத் தீர்ந்தன.

 அப்படியென்றால் ஆபத்து ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்ட வர்களுக்கு யார் பொறுப்பாவது?

 மத்திய அரசு பெரும் மருந்து நிறுவனங்களிள் மேல் காட்டும் அக்கறையில் ஒரு சிறு அளவு கூட மக்கள் நலனில் காட்டவில்லை.

2015 முதல் 2019 வரை ஜார்க்கண்ட் மாநிலத் தில்  மட்டும் 1723 மருந்துகள் தரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் 7 மருந்துகள் குறித்து மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 இது போன்று இந்தியா முழுவதும் கண்டறியப்பட்ட போலி மருந்து நிறுவனங்கள் மீது கூட மத்திய அரசு இதுவரை  முறையான நடவடிக்கை எடுக்கவில்லை .

லாபவெறியில் மக்களின் உயிரோடு விளையா டும் மருந்து நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல் ஊக்குவிப்பது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
 
'பொதுமக்களின் உடல்நலம் குறித்த அக்கறை, மத்திய அரசுக்கு உண்மையிலேயே இருக்குமேயானால், 'இ - -சிகரெட்'டை மட்டுமல்லாமல், புகையிலை சம்பந்தப்பட்ட அனைத்து தயாரிப்புகளையும், தடை விதிக்க முன் வருமா?' 
இ-- - சிகரெட்டுக்கு தடை விதிக்க வழி செய்யும் அவசர சட்டத்திற்கு, ஒப்புதல் கோரும் தீர்மானத்தின் மீது, மக்களவையில்   தி.மு.க. தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் பேசியதாவது:

மிக நெருக்கடியான, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளுக்கு மட்டும் தான், அவசர சட்டம் கொண்டு வரப்படும். 
ஆனால், இ - -சிகரெட் தடைக்கான அவசர சட்டத்தை, மத்திய அரசு, செப்டம்பரிலேயே கொண்டு வந்துவிட்டது.இத்தனைக்கும், நவம்பரில் குளிர்கால கூட்ட தொடர் நடக்கும் என்பதும், அதில், மசோதா கொண்டு வந்து நிறைவேற்றலாம் என்பது தெரிந்தும், இப்பிரச்னையை, அவசர சட்டம் வாயிலாக அணுகுவதன் மர்மம் தான் புரியவில்லை.

வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதாரம், சமூக நீதி என, நிறைய பிரச்னைகள் இருக்கும்போது, மொத்த பயன்பாட்டில், 0.02 சதவீதம் மட்டுமே உள்ள இ -- சிகரெட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? 
இதன் பின்னணியில், 'சிகரெட் லாபி' உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இ -- சிகரெட்டுகள்தான், புகையிலை சிகரெட்டுகளை புழக்கத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என, முக்கிய மருத்துவ ஆய்வு இதழ்கள் கூறுகின்றன.இ--சிகரெட்டுகளுக்கு, தடை விதித்த பல நாடுகள், பிறகு நீக்கி விட்டன. 
புகையிலை சிகரெட்டை விட, இது பல மடங்கு ஆபத்து இல்லை என்பது தான் இதற்கு காரணம்.

டாக்டரான மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கே இது தெரியும். புகையிலை சிகரெட், இ-- சிகரெட் இரண்டுமே உடல்நலத்திற்கு கேடானதுதான். 
ஆனால், இதில் ஒன்றை மட்டும் குறிவைப்பது ஏன் என்பதுதான் தெரியவில்லை.
'இ - சிகரெட் வேண்டாம்' என, சர்வதேச நுரையீரல் புற்றுநோய் ஆய்வு மையம் கூறுவதாக தெரிவிக்கும் மத்திய அரசு, அதே ஆய்வு மையம், 'புகையிலை சிகரெட் நல்லது' என, பரிந்துரை செய்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

உண்மையிலேயே, பொதுமக்களின் உடல்நலத்தில் அக்கறை இருக்குமேயானால், நாடு முழுவதும், புகையிலை பொருட்கள் அனைத்தையுமே தடை விதிக்க, மத்திய அரசுக்கு தைரியம் உண்டா?

 தமிழகத்தில் நடந்த குட்கா ஊழல் குறித்தும், தமிழக அமைச்சரின் பெயரையும் கூறினார்.

ஆரணி எம்.பி., விஷ்ணுபிரசாத் பேசியதாவது:
டிஜிட்டல் இந்தியா' என கூறி, பா.ஜ., ஆட்சியைப் பிடித்துவிட்டு, இப்போது இ - -சிகரெட்டுக்கு தடை விதிப்பது ஆச்சரியம். இ- - சிகரெட்டுகளின் விலை மிகவும் அதிகம். இந்த சிகரெட்டுகளை பிடிப்பவர்கள் வசதியானவர்கள்.
 எனவே, அவர்களைப் பற்றி தான் மத்திய அரசு கவலைப்படுகிறதோ? 
சாதாரண சிகரெட்டுகளை பிடிக்கும் ஏழைகளை அரசு காப்பாற்ற வேண்டாமா?
 புகையிலை லாபியின் நெருக்கடியில் அரசு சிக்கி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.


 பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது(1821)
நியூசிலாந்தில் பெண்கள் முதல்முறையாக வாக்களித்தனர்(1893)
அல்பேனியா விடுதலை தினம்(1912)
நாசா, செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)


 உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான மாமேதை, 
உலகின் முதல் மார்க்சிஸ்ட் தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் 
200வது ஆண்டு பிறந்த நாள் .(1820)
தாராளவாதம் என்பது பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, சுரண்டல் நிறைந்தது, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டிற்கு எதிராகப் பகைமையை  வளர்த்துக் கொண்டு போர்முனையில் சந்திக்க வைப்பது, சுயலாபத்திற்காக ‘பொதுநலம்‘ என்ற பெயரில் ஒவ்வொருவருக்கு இடையேயும் பகைமையை வளர்க்கிறது, 
 சமூகத்தின் பெரும்பான்மையானவர்களை ஏழைகளாகவும், சிலரை மிகவும் வளமிக்க பணக்காரர்களாகவும் மாற்றுவது, சமூகத்தைத் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்வது, முரண்பாடான பொருள்உற்பத்தி மற்றும் நுகர்வுகலாச்சாரம் என முதலாளித்துவம் பல சிக்கல்கள் நிறைந்ததுதாராளவாதம் என்பது பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, சுரண்டல் நிறைந்தது,
ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டிற்கு எதிராகப் பகைமையை  வளர்த்துக் கொண்டு போர்முனையில் சந்திக்க வைப்பது, சுயலாபத்திற்காக ‘பொதுநலம்‘ என்ற பெயரில் ஒவ்வொருவருக்கு இடையேயும் பகைமையை வளர்க்கிறது, சமூகத்தின் பெரும்பான்மையானவர்களை ஏழைகளாகவும், சிலரை மிகவும் வளமிக்க பணக்காரர்களாகவும் மாற்றுவது,
 சமூகத்தைத் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்வது, முரண்பாடான பொருள்உற்பத்தி மற்றும் நுகர்வுகலாச்சாரம் என முதலாளித்துவம் பல சிக்கல்கள் நிறைந்தது

பொதுவேலைநிறுத்தம் என்பது உழைக்கும் மக்களை ஒரு பெரும் போராட்டத்திற்காக தயார்ப்படுத்துகிற ஒரு இராணுவப் பள்ளி என்றும், அப்பெரும் போராட்டத்தை ஒருவராலும், ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது என்றும், உழைக்கும் மக்கள் யாவரையும் ஒரே இயக்கமாக இணைக்கும் பாலமே பொதுவேலைநிறுத்தம்”
தனியுடைமை சொத்து என்பது முதலாளித்துவ அமைப்பில் பின்பற்றப்படும் தனிமனிதத்துவத்துக்கான அடிப்படைக் கூறாகும்.
 முதலாளித்துவ அமைப்பு சொத்து ஏதுமில்லாத பெருவாரியான மக்களின் தனித்தன்மையை சூறையாடுகின்றது. அவ்வாறு சூறையாடப்பட்ட பாட்டாளி மற்றும் ஏழை, எளிய மக்களின் தனித்தன்மையை முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டங்களின் மூலமே வென்றெடுக்க இயலும்”

புரட்சி என்பது உச்சக்கட்டமான ஓர் அரசியல் போராட்டம்.
இந்தச் சமூகத்தில் உள்ள அவலநிலையை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் புரட்சிக்கான அரசியல் போராட்டங்களிலும், புரட்சிக்காகப் பாட்டாளி மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவதும் தலையாய கடமையாகும். பாட்டாளி வர்க்கத்திற்கான நமது அரசியலில் எக்காரணத்தைக் கொண்டும் முதலாளித்துவ கட்சிகளையோ, நிறுவனங்களையோ அண்டிப் பிழைக்கக் கூடாது என்றும், பாட்டாளி வர்க்கத்திற்கென தன்னிச்சையான குறிக்கோள்களும், கொள்கைகளும் அவசியம்”
 -------------------------------------------------------------------------------
 இதற்கு முன்னால்
நவ. 28
1782 - அமெரிக்கக் குடியேற்றங்கள் அனைத்துக்குமான முதல் நன்றி நவிலல் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான வாஷிங்டனுக்கு முன்பே கணக்கில் வராத ஜனாதிபதிகளாக  இருந்தவர்களில் ஒருவரும், இரண்டு காண்டினெண்டல் காங்கிரஸ்களுக்கும் பிறகு அமைக்கப்பட்ட ‘கூட்டமைப்பின் நாடாளுமன்றத்தின்’ முதல் தலைவருமான ஜான் ஹேன்சன் இதற்கான அறிவிப்பை, நவம்பர் 3இல் பதவிக்காலம் முடிவடைவதற்குமுன் வெளியிட்டார்.
 நன்றி நவிலல் நாள் என்பது அடிப்படையில் (பொங்கல் போன்ற) ஓர் அறுவடைத் திருநாளாகும்! புதிய உலகத்திற்கு(அமெரிக்காவிற்கு!) வந்த ஆங்கிலேயர்களில் 53 பேர் தங்கள் முதல் நன்றி நவிலலை 1621 அக்டோபரில், 90 அமெரிக்கத் தொல்குடியினருடன் கொண்டாடினர்.

அமெரிக்காவிலிருந்த குடியேற்றங்கள் தனித்தனியாகக் கொண்டாடிக்கொண்டிருந்த இந்த நன்றி நவிலல் விழாவை, ஒருங்கிணைத்து ஒரே நாளில் கொண்டாடச் செய்வதற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, முதல் குடியரசுத்தலைவராக வாஷிங்டன் 1789இல் பதவியேற்றபின், தங்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்த கடவுளுக்கு, அவ்வாண்டின் நவம்பர் 26(கடைசி வியாழன்) நன்றி நவிலல் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று நாடாளுமன்றம் முடிவெடுத்தது.

தொடர்ச்சியாக இல்லா விட்டாலும், அரசால் அறிவிக்கப்படுகிற ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த இந்த நன்றி நவிலல் நாள், இறை என்பது உலகின் நடைமுறைகளில் தலையிடுவதில்லை என்ற இயற்கைச் சமயக் கொள்கையுடையவரான தாமஸ் ஜெஃபர்சன் 1801இல் குடியரசுத்தலைவரானபின் அறிவிக்கப்படவில்லை. அவருக்குப்பின் குடியரசுத் தலைவரான ஜேம்ஸ் மேடிசன், 1814இல் இம்முறையை புதுப்பித்தார்.
மாநிலங்கள் வேறுபட்ட நாட்களில் இதைக் கடைப்பிடித்துவந்த நிலையில், அறிவிக்கப்படாத தேசிய விடுமுறை நாளாக இருந்துவந்த, அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்தின் கடைசிப் படைகள் வெளியேறிய நவம்பர் 25இல் 1847இன் நன்றி நவிலல் நாளை நியூயார்க் கடைப்பிடித்தது வரவேற்பைப் பெற்றது.

1863இல் ஆண்டுதோறும் நவம்பர் கடைசி வியாழன் நன்றி நவிலல் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்த ஆப்ரஹாம் லிங்கன், அதனைத் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்க, அதனையொட்டியே வரும் வெளியேற்ற நாள் கொண்டாட்டம் மறைந்தது.
- அறிவுக்கடல்
--------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் புவி மற்றும் பாதுகாப்புகண்காணிப்புக்கு உதவும் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் உட்பட 14 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி47 ராக்கெட் புதன்கிழமையன்று காலை 9.28 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் திட்டமிட்டபடி, புவிசுற்றுவட்டப் பாதையில் கார்டோசாட்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் புவி மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவும் கார்டோசாட்-3 உட்பட 14

செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள், 3டி முறையிலான கிராபிக்ஸ் மற்றும் படக்காட்சிகளுடன் விவரித்தனர்.

இதுவரை 8 கார்டோசாட் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
தற்போது 9-வது செயற்கைக்கோளாக கார்டோசாட் - 3 எனும் தொலை உணர்வு செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்து, செலுத்தியுள்ளது.
ஆயிரத்து 625 கிலோ எடையிலான கார்டோசாட்-3 செயற்கைக்கோள், தரையிலிருந்து, 509 கிலோ மீட்டர் தொலைவில் புவிசுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

 இந்த அறிவிப்பு வெளியானவுடன், இஸ்ரோ தலைவர்சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் உற்சாகமடைந்தனர்.

5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் வானில்மேகக் கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது.
மேலும் இரவு நேரங்களிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கும்.
இது, நிலவளம், கடற்பகுதிகள் உள்ளிட்ட புவி ஆராய்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


------------------------------------------------------------------------------------------------------------------------
9...9999999999999

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw

  வேலை வாய்ப்புகள்

பெய்ய இரு...

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw
  பேஷன் டெக்னாலஜி 
கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500.
 கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
---------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தில் 55 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது:
1.11.2019 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30 வயது மற்றும் சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி
: 3.12.2019

விபரங்களுக்கு
: www.cpcl.co.in
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 
 காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு.
 காலியிடங்கள்: உதவி பாதுகாப்பு அதிகாரி- 19, பாதுகாவலர்- 73

வயது: 6-12-2019 அடிப்படையில் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் பொதுப் பிரிவினர்-27, எஸ்.சி.,/எஸ்.டி.,- 32, ஓ.பி.சி.,- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு சலுகை உண்டு.கல்வித் தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்ச்சி முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்' https://recruit.barc.gov.in
கடைசி நாள்
: 6.12.2019
---------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1996 முதல் 1.8.2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 153 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தொடர்புடைய விளையாட்டில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 17.12.2019

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கால்நடை உதவி மருத்துவர்

காலிப்பணியிடம் : 1141 . 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கால்நடை உதவி மருத்துவர்  .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 23.02.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு 1141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கால்நடைத் துறையில் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1141 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.எஸ்., பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கும் கட்டணத்தில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுக்கு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7, 8, 14, 21 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச.28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
2020, ஜன. 19 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு
ஜன.25- ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------