அதிமுக தலைமைச்செயலகம்?
அதிமுகவின் கட்சிப் பணிக்காக தலைமைச் செயலகம் பயன்படுவதும், அங்குள்ள அதிகாரிகள் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அரசியல் உத்தரவு போடுவது போன்ற கட்சிப் பணிகளில் ஈடுபடுவதும் கடும் கண்டனத்திற்குரியது என துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“குடியுரிமை மசோதாவை ஆதரித்து மாநிலங்களவையில் அதிமுக வாக்களிக்க வேண்டும் என்று, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் ஒருவர் எஸ்ஆர்பியிடம் பேசியது, முதலமைச்சரின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டா? அல்லது நேரடியாக மத்திய பாஜக அரசின் கட்டளையை ஏற்றா? என்பதை நாட்டு மக்களுக்கு முதல்வர் விளக்கிட வேண்டும்.
மூத்த அரசியல்வாதியும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்ஆர் பாலசுப்ரமணியம், “குடியுரிமை மசோதா குறித்து அதிமுக அலுவலகத்தில் விவாதித்துக் கொண்டிருந்த போது, தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாக” தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகம், எப்படி அரசியல் மயமாகியுள்ளது என்பதற்கும், அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிப் பணியில் எப்படி தங்களது தரத்தைத் தாழ்த்திக் கொண்டு ஈடுபடுகிறார்கள் என்பதற்கும், இந்த நிகழ்வும் ஒரு உதாரணம்.
ஒரு மசோதாவில் வாக்களிப்பது அல்லது எதிர்த்து வாக்களிப்பது என்பது, அதிமுக தலைமை எடுக்க வேண்டிய கொள்கை முடிவு.
அதை அதிமுக, தனது கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, ஒருவர் மூலம் தெரிவிக்கலாமே தவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் ஒருவர் மூலம் எஸ்ஆர்.பாலசுப்பிரமணியம் போன்ற அனுபவமிக்க மாநிலங்களவை உறுப்பினரிடமே இப்படித் தெரிவித்திருப்பது, மிகுந்த வேதனை தருகிறது.
எஸ்ஆர்பிக்கே இந்த நிலைமை என்றால், அதிமுகவில் உள்ள மற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்த மசோதாவில் யாருடைய நிர்பந்தத்திற்குப் பணிந்து வாக்களித்துள்ளார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
சிறுபான்மையின மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிரான இந்தக் குடியுரிமை மசோதாவில் வாக்களிப்பது குறித்த அதிமுகவின் முடிவை, ஒரு அரசு துணைச் செயலாளர் எடுக்கிறார் என்றால், அதிமுக, அதன் தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? அல்லது மத்திய பாஜக அரசின் ஏஜெண்டுகளாக தலைமைச் செயலகத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினருக்கே உத்தரவிடும் அதிகாரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அந்தத் துணைச் செயலாளருக்குக் கொடுக்கப்பட்டதா?
அல்லது, நேரடியாக மத்திய பாஜக அரசில் இருந்து வந்த நிர்பந்தத்தால் தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர், இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆகவே, அரசியல் பணிகளுக்காக, குறிப்பாக, அதிமுகவின் கட்சிப் பணிக்காக தலைமைச் செயலகம் பயன்படுவதும், அங்குள்ள அதிகாரிகள் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அரசியல் உத்தரவு போடுவது போன்ற கட்சிப் பணிகளில் ஈடுபடுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை தமிழக தலைமைச் செயலாளர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்தக் குறிப்பிட்ட துணைச் செயலாளர், முதலமைச்சரின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு எஸ்ஆர்பி அவர்களிடம் பேசினாரா அல்லது நேரடியாக மத்திய பாஜக அரசின் கட்டளையை ஏற்று அப்படிப் பேசினாரா என்பதை நாட்டு மக்களுக்கு முதல்வர் விளக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முகநூலில்
---------+----------

-------------------------------+-----------+++++-----------
பாசிஸ்ட்ஆட்சி
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்கள் நேற்றிலிருந்து போராட்டத்தை துவங்கியுள்ளனர். நேற்று அமைதியாக தொடங்கிய போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
இந்த வன்முறைக்கு போலிஸாரே காரணம் என மாணவர்கள் தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியே வர முயன்ற மாணவர்களை தடுக்க போலிஸார், தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
இந்த தடியடியால் ஆத்திடரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் போலிஸாருடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால் சிறிது நேரத்தில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குள் மர்ம நபர்கள் புகுந்ததாகவும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த காரணத்தைக் கூறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த மாணவர்களை காவல் துறையினர் கைது செய்யத் தொடங்கினர். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க போலிஸார் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த காவல் துறையினர் மாணவர்கள் மீது கண் மூடித்தனமாக தாக்கினர். வகுப்பறை, நூலகத்தில் பதுங்கிய மாணவர்களை விரட்டிச்சென்று போலிஸார் தடியடி நடத்திவருகின்றனர். மேலும் மாணவர்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். மேலும் வளாகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைத்து போலிஸார் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் போலிஸாரின் தாக்குதலுக்கு பயந்து வளாகத்தில் சிதறி ஓடும் காட்சி காண்போரை பதற்றம் அடைய செய்கிறது. பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். போலிஸார் நடவடிக்கைகள மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-------------------++----+----------------------------------
பரிசுத்தர் மோடி.
2002-ம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்ட குஜராத் படுகொலை சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட நானாவதி ஆணையம் ஐந்தாண்டு விசாரணைக்குப் பிறகு தனது அறிக்கையை அப்போதைய அரசாங்கத்திடம் சமர்பித்திருந்தது. படுகொலை நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, அம்மாநில சட்டசபையில் “நானாவதி அறிக்கையை” புதன்கிழமை தாக்கல் செய்தார்.
சில இடங்களில் காவல்துறையினர் கும்பலைக் கட்டுப்படுத்துவதில் செயலற்று இருந்ததாகவும், அவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை அல்லது அவர்களிடம் சரியாக ஆயுதம் இல்லை எனவும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.டி. நானாவதியும், குஜராத் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்ஷய் மேத்தா ஆகியோர் தங்களுடைய அறிக்கையில் கவனப்படுத்தியுள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில், “இந்தத் தாக்குதல்கள் எந்தவொரு மாநில அமைச்சராலும் தூண்டப்பட்டவை அல்லது அவர்களது ஆதிக்கத்தால் நடத்தப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றும் ஆணையம் தனது மிக நீண்ட அறிக்கையில் கூறியுள்ளது.
கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ வைக்கப்பட்டதில் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதைக்காரணம் காட்டி முசுலீம்கள் மீது மிகக் கொடூர வன்முறைகள் காவிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்தக் கலவரம் குறித்து விசாரிக்க 2002-ல் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியால் இந்த ஆணையம் நியமிக்கப்பட்டது.
“முழு விசயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு, கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்கள் உண்மையில் அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தவை என்று ஆணையம் கண்டறிந்துள்ளது. கோத்ரா சம்பவத்தின் காரணமாகவே இந்து சமூகத்தின் பெரும் பகுதியினர் மிகவும் கோபமடைந்தனர், இறுதியில் முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர்” என்று அறிக்கை கூறியுள்ளது.
மேலும் இந்த ‘கலகம்’ தொடர்பாக ‘எந்தவொரு மத அல்லது அரசியல் கட்சி அல்லது அமைப்புகளுக்கும்’ எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் ஆணையம் காவிகளுக்கு ‘பரிசுத்த ஆவிகள்’ பட்டம் வழங்கியுள்ளது.
ஆனாலும், காவிகள் ஆடிய கோர தாண்டவம் ஊடகங்களில் ஆதாரங்களுடன் வெளியானது மறுக்க முடியாதல்லவா? ஆணையம் இதை வேறு வார்த்தைகளில் கூறுகிறது…
“ஆணைக்குழுவின் முன் வந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், உறுதியுடன் கூறக்கூடிய ஒரே விசயம், வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தளத்தின் உள்ளூர் உறுப்பினர்கள் தங்கள் வட்டாரங்களில் நடந்த சம்பவங்களில் பங்கேற்றனர்” என கூறுகிறது.
எனவே, கோத்ராவுக்கு பிந்தைய கலவரம் “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி அல்லது திட்டமிடப்பட்ட வன்முறை அல்ல” என ஆணையம் கூறியுள்ளதோடு, கோத்ராவுக்குப் பிந்தைய கலவரங்களுக்கு கண்மூடித்தனமாக சொல்லப்படும் மாநில அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளில் எந்தப் பொருளும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.
கலவரத்தில் மாநில அரசுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டிய மூன்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா மற்றும் ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரின் நம்பகத்தன்மையையும் ஆணையம் கேள்வி எழுப்பியது. ஆதாரங்களை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர், காவல்துறையின் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இருந்ததாகக் கூற முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்வளவு பெரிய கொடூர படுகொலைகளுக்கு யாருமே காரணம் இல்லை என தெரிவித்திருக்கும் ஆணையம், ‘அமைதி’யை காக்கத் தவறிய போலீசுக்கு லேசாக சில அறிவுரைகளைக் கூறி முடித்திருக்கிறது. நரோடா பாட்டியா மற்றும் குல்பர்க் சொசைட்டி பகுதிகளில் போலீசின் மேற்பார்வையில் நடந்த பச்சை படுகொலைகளுக்கு ஆதாரம் இல்லை என ஆணையம் கண்களை மூடிக்கொண்டது அறிக்கையில் தெரிகிறது.
கமிஷன் அறிக்கையின் முதல் பகுதி செப்டம்பர் 25, 2009 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குழு இறுதி அறிக்கையை 2014 நவம்பர் 18 அன்று அப்போதைய முதலமைச்சர் ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது, ஆனால் அது பின்னர் நிறுத்தப்பட்டது.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவிற்கு இந்த ஆண்டு செப்டம்பரில் பாஜக தலைமையிலான மாநில அரசு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்வைப்பதாகக் கூறியது.
2002, பிப்ரவரியில், கோத்ரா ரயில் படுகொலைக்கான காரணம் மற்றும் மாநிலத்தில் ஏற்பட்ட இனவாத வன்முறைகள் குறித்து விசாரிக்க ஒரு உறுப்பினர் ஆணையத்தை முதல்வர் மோடி அறிவித்தார். அரசாங்கம் பின்னர் ஆணையத்தை மறுசீரமைத்தது; நீதிபதி நானாவதி அதன் தலைவராகவும், குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.ஜி. ஷா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர். நீதிபதி ஷா இறந்த பிறகு, நீதிபதி மேத்தா அவருடைய இடத்தில் நியமிக்கப்பட்டார். அத்துடன் முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளையும் விசாரிக்கலாம் என்பதும் ஆணைய விதிகளில் சேர்க்கப்பட்டது.
சர்வதேச சமூகத்தின் அழுத்ததின் பேரில், மோடி அரசாங்கமே அமைத்த ஆணையத்தின் அறிக்கை, மோடி – ஷா கூட்டணி இந்துராஷ்டிரத் திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்கிக் கொண்டிருக்கும் ‘தக்க நேரத்தில்’ வெளி வந்துள்ளது. இதன் மூலம் அவர்களை ‘பரிசுத்தமான ஆவிகளாக’ அறிவித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கியுள்ள ஆணையம், நீதி, நேர்மை, ஜனநாயகம் ஆகியவற்றை சிலுவையில் அறைந்துள்ளது !
------------------------------------------------------------------------------------------------