இந்தியாவை கலவரப் பூமியாக்கிய

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன?

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது.
அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஆனால், இந்த சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது.
கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: முழுமையான விளக்கம் 500 வார்த்தைகளில்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்ப்பவர்கள் மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: முழுமையான விளக்கம் 500 வார்த்தைகளில்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் மாணவிகள்
மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன.
இந்திய அரசமைப்பு மதத்தைப் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது.
அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.
சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாகளையும் விட்டுவிட்டார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.
டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கெளதம் பாட்டியா, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும், மத பாகுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டத் திருத்தம் என்கிறார்.
இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன.
கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது இந்த சட்டதிருத்தம் என சிவசேனை சாம்னாவில் தலையெங்கம் எழுதியது.
ஆனால், நாடாளுமன்றத்தில் இதனை ஆதரித்து இருக்கிறது சிவசேனை.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து இருக்கிறார்கள்.
அதிமுக இந்த சட்டமசோதாவை ஆதரித்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

இரண்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: முழுமையான விளக்கம் 500 வார்த்தைகளில்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேதி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆக இருந்தது. என்ஆா்சி நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டது அன்று. அதே வேளையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மதத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது.
அப்படியானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் இந்த குடியுரிமை பெற்று அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்க முடியும்.
இதன் காரணமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கின்றன.

விலக்கப்பட்ட பகுதிகள் என ஏதேனும் இருக்கிறதா?

நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் ஆர் ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார்.

படத்தின் காப்புரிம
குடியுரிமை பெறக் குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய அமித்ஷா, "காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்டமசோதா" என்றார்.
"ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார் அமித்ஷா.
"இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது," என்றார்.
இந்த சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து 293 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது.
அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்வாக்களித்துள்ளனர்.
ஆனால், இந்த சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது.
கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: முழுமையான விளக்கம் 500 வார்த்தைகளில்படத்தின் காப்புரிம

அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்பு வலுக்கக் காரணம்.
மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: முழுமையான விளக்கம் 500 வார்த்தைகளில்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் மாணவிகள்

மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன.
இந்திய அரசமைப்பு மதத்தைப் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது.
அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.
சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாகளையும் விட்டுவிட்டார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.
டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கெளதம் பாட்டியா, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும், மத பாகுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டத் திருத்தம் என்கிறார்.
இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன.
கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது இந்த சட்டதிருத்தம் என சிவசேனை சாம்னாவில் தலையெங்கம் எழுதியது.
ஆனால், நாடாளுமன்றத்தில் இதனை ஆதரித்து இருக்கிறது சிவசேனை.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து இருக்கிறார்கள்.
அதிமுக இந்த சட்டமசோதாவை ஆதரித்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

இரண்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: முழுமையான விளக்கம் 500 வார்த்தைகளில்படத்தின் காப்புரிமை

அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேதி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆக இருந்தது. என்ஆா்சி நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டது அன்று. அதே வேளையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மதத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது.
அப்படியானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் இந்த குடியுரிமை பெற்று அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்க முடியும்.
இதன் காரணமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கின்றன.

விலக்கப்பட்ட பகுதிகள் என ஏதேனும் இருக்கிறதா?

நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் ஆர் ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார்.

பாஜகஅரசு என்ன சொல்கிறது?

படத்தின் காப்புரிமை

குடியுரிமை பெறக் குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய அமித்ஷா, "காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்டமசோதா" என்றார்.
"ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார் அமித்ஷா.
"இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது," என்றார்.
இந்த சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து 293 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
மேலவையில் போதுமான ஆதரவு இல்லாமல் எதிர்கட்சிகள் கை ஓங்கியிருந்த போதும் பாஜக வின் அடிமைகள் என கேலி செய்யப்படும் அதிமுகவின் 11உறுப்பினர்களும் பாமக அன்புமணியும் ஆதரித்து வாக்களித்து இச்சட்டத்தை வெற்றிபெற வைத்துவிட்டனர்.
அன்புமணியும்,அதிமுகவும் தங்கள் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து பாதுகாப்பு தேடியே அமித்ஷா ஆணையின் பேரில் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அஜித்பவார் மகராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க ஆதரவு எனக்கூறியதும் அவர்மீதான 400கோடி ஊழல் வழக்கு கைவிடப்பட்டதை அவர்கள் ஆதாரமாக்க் காட்டுகின்றனர்.
-------------------------------------------------
பயர் சாட்.
இணைய வசதி அடிப்படை உரிமை என்று சொல்லப்படுவதை எல்லாம் விட்டுத்தள்ளங்கள். இணைய வசதி முடக்கப்படுவது அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பது தான் நிதர்சனம். இந்தியாவின் பல பகுதிகளில் பல காரணங்களுக்காக இணைய வசதி முடக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் இணையம் முடக்கப்பட்ட நிலை வெற்றிகரமாக (!) 100 நாட்களை கடந்திருக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இணையம் முடக்கப்படுவதாக அரசு தரப்பில் காரணம் சொல்லப்பட்டாலும், இந்த கருத்து விவாதத்திற்கு உரியது. இணைய முடக்கம் நடைமுறையில் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய இடர்களும், இன்னல்களும் இன்னும் முக்கியமானது. காஷ்மீரையே எடுத்துக்கொள்வோம், அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டதால், தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் திண்டாடுகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்கள், வதந்தி பரவும் இடங்கள், போராட்டம் வெடிக்கும் பகுதிகள் என பல இடங்களில் இணையவசதி தற்காலிகமாக முடக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இது தான் புதிய இந்தியாவின் யதார்த்தம்.
டிஜிட்டல் இந்தியாவை ஒரு கொள்கையாக முன்னிறுத்தும் ஒரு தேசத்தில், இணையவசதி முடக்கப்படும் சாத்தியம் ஒரு மோசமான முரண் நகை தான்.
இந்த பின்னணியில் நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய செயலிகளில் ஒன்றாக ’பயர்சாட்’ (FireChat ) இருக்கிறது. பயர்சாட், ஒன் டு ஒன் சாட் வசதி அளிக்கும் செயலியாகும். அதாவது, ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அரட்டை அடிக்க வழி செய்யும் செயலி. ஆனால் வழக்கமாக அறியப்பட்ட வாட்ஸ் அப் போன்ற செயலிகளில் இருந்து பயர்சாட் வேறுபட்டது மட்டும் அல்ல மிகவும் விஷேசமானது.
இணைய வசதி இல்லாத இடத்திலும் பயன்படுத்தலாம் என்பது தான் பயர்சாட் செயலியின் தனித்தன்மை. ஆம், பயர்சாட் செயலி இணைய இணைப்பு இல்லாமலேயே செயல்படக்கூடியது. போனில் உள்ள வைபை மற்றும் புளுடூத் வசதியை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் இந்த செயலிக்கு இணைய இணைப்பு தேவையில்லை.
நீங்கள் உலக நடப்புகளை கவனிப்பவர் என்றால், ஹாங்காங்கில் தொடர்ந்து நடைபெற்றும் வரும் ஜனநாயக போராட்டத்தை அறிந்திருக்கலாம். ஹாங்காங் போராட்டக்காரர்கள், அரசின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு, தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள அதிகம் பயன்படுத்திய செயலிகளில் பயர்சாட்டும் ஒன்று.
இணையம் இல்லாமல் எப்படி ஒரு செயலி இயங்கும் எனும் சந்தேகம் உங்களுக்கு உண்டாகலாம். இந்த சந்தேகத்திற்கான பதில் மெஷ் நெட்வொர்க் எனும் தொழில்நுட்பத்தில் இருக்கிறது. அதாவது அருகாமையில் இருப்பவர்கள் போன்கள் மூலம் உருவாக்கி கொள்ளும் வலைப்பின்னல் என எளிமையாக புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே சொன்னபடி, போனில் உள்ள வைபை மற்றும் புளூடூத் வசதியை மையமாக கொண்டு இந்த வலைப்பின்னல் வசதி அமைகிறது.
இணையம் இல்லாமலேயே பயன்படுத்தலாம் என்றாலும் பயர்சாட் வசதியில் சில குறைகளும் இருக்கின்றன. இந்த செயலியை அருகாமையில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். உத்தேசமாக 200 அடி தொலைவுக்குள் இருப்பவர்களுடன் தான் இந்த செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும். எனவே, குறிப்பிட்ட எல்லைக்குள் தான் இந்த செயலி வேலை செய்யும்.
ஆனால் ஒன்று, இந்த செயலியில் எத்தனை பேர் இணைகின்றனரோ அந்த அளவுக்கு இதன் வீச்சு அதிகரிக்கும். எனவே, அருகாமை எல்லையில் நூற்றுக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தும் பட்சத்தில், அதன் பயனாக கொஞ்சம் தொலைவில் உள்ளவர்களையும் இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
hkஇந்த செயலியின் மேலும் ஒரு பாதகம், இதில் பகிரப்படும் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை என்பதால், இதில் ரகசியம் கிடையாது. எனவே போராட்டக்காரர்கள் இந்த செயலியை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால், தகவல் தொடர்பு முடக்கப்படும் இடங்களில் இந்த செயலி பேரூதவியாக இருக்கும்.
போராட்ட களங்களில் என்றில்லை, பேரிடர் பாதிப்புகளால் இணையம் செயல்படாமல் போகும் இடங்களிலும் இந்த செயலியை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்,. பயர்சாட் செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் அதில் ஒரு கணக்கு துவங்கி பயன்படுத்தலாம். அரட்டை அறைகளை பொதுவெளியில் அல்லது தனிப்பட்டதாக உருவாக்கி கொள்ளலாம்,
இந்தியாவில், குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான எதிர்ப்பை அடுத்து பல இடங்களில் இணையம் முடக்கப்படும் சூழலில், பல்வேறு இணையதளங்களும், செய்தி தளங்களும், பயர்சாட் செயலியை அறிமுகம் செய்து வருகின்றன. ஓபன் கார்டன் எனும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
ஆனால், 2014 ம் ஆண்டிலேயே பயர்சாட் செயலி இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டதாக குவார்ட்ஸ் இணைய இதழின் பழைய கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. ஹாங்காங் போராட்டத்திற்கு முன்பாகவே இந்தியாவில் பயர்சாட் பரவலாக பயன்படுத்தப்பட்டதாகவும், மோசமான இணைய வசதி பாதிப்பால் இணையம் செயல்படாத பகுதிகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது.
போதிய இணைய வசதி இல்லாத காரணத்தால் பயன்படுத்த நேர்த பயர்சாட் செயலியை, இணைய முடக்கம் காரணமாக பயன்படுத்தும் நிலைக்கு நாம் முன்னேறி வந்திருக்கிறோம். வாழ்க டிஜிட்டல் இந்தியா!
பயர்சாட் செயலி இணைய தளம்: https://www.opengarden.com/
சைபர் சிம்மன்
-------------------------------------------------------------

 ஆதரித்து ஆர்ப்பாட்டம்.
ஹைகோர்ட்தனம்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?