பிரியாணி பிரசாரம் தோற்றறது ஏன்?
"பயங்கரவாதிகளுக்கு பிரியாணிகளுக்கு பதிலாக துப்பாக்கி குண்டுகள் வழங்கப்பட வேண்டும்,"
"அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி,"
இது சாதாரண வார்த்தைகள் இல்லை. இந்த வார்த்தைகளைப் பேசிதான் டெல்லி தேர்தலில் சமூக ரீதியாக மக்களைப் பிரிக்க முனைந்தனர்.
இம்மாதிரியான வார்த்தைகளால் பாஜகவின் நட்சத்திர பிரசாரக்காரர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
பாஜக டெல்லி தேர்தலில் தோற்றதற்கு இது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?
பிரதமர் மோதி மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு கெஜ்ரிவால் தடை விதிப்பதாக தெரிவித்திருந்தார். அரவிந்த கேஜ்ரிவாலின் அரசாங்கம் ஆயுஷ்மான் பார்த் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
பிரவேஷ் வர்மா மற்றும் அனுராக் தாக்கூர் போன்ற தலைவர்கள், `ஷாஹீன் பாக்`, `துரோகிகள்`, `பாகிஸ்தான்` மற்றும் `பயங்கரவாதம்` ஆகிய சொற்களை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்
இந்திய எல்லை எவ்வளவு வலிமையாக உள்ளது என்றும், எதிரிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு உள்ளது என்றும் அமித் ஷா போன்ற தலைவர்கள் பேசி வந்தனர்.
மேலும் இந்தியா பாகிஸ்தானை எவ்வாறு நடுங்க வைத்துள்ளது என்பது குறித்தும் அவர் திரும்ப திரும்ப பேசினார்.
வேலைவாய்ப்பு மற்றும் தூய்மையான நீர், நல்ல சாலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் பேசப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும், உறுதிகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் எனவும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்கப்படும் எனவும் உறுதிகள் அளிக்கப்பட்டன.
இந்த பேச்சுக்களுக்கு மத்தியில் பெரும்பாலும் அனைத்து தலைவர்களின் பேச்சுக்களும் பிரித்தாலும் யுக்தியை மையப்படுத்தியே இருந்தது.
இந்தியர்கள் யார், யாருக்கு தேசப்பற்று உள்ளது, சிஏஏக்கு எதிரானவர்கள் போன்ற பேச்சுக்கள் அதிகமாகக் காணப்பட்டன.
அதேபோல் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள், ரோஹிஞ்சா முஸ்லிம்கள், மேலும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைகிறார்கள், அவர்களைத் திருப்பி அனுப்ப மத்திய அரசு எவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்று திரும்ப திரும்ப பேசப்பட்டது.
மேலும் நம் நாட்டிற்கு என்ஆர்சி மற்றும் சிஏஏ ஏன் தேவை என்பதையும் விளக்கினர். சமூக ஊடகம் முதல் அனைத்து பிரசாரங்கள் முதல் இதே போன்றுதான் பேசப்பட்டது.
டெல்லியில் பாஜகவின் 250 எம்பிக்களையும் களம் இறக்கியது பாஜக. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர்கள் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த மத்திய அமைச்சர்களையும் இரவு பகலாக பிரசாரம் செய்ய வைத்தனர். எம்பிக்கள் குடிசைப்பகுதி இரவு தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். கேஜ்ரிவாலுக்குக் குடிசைப் பகுதிகளில் அதிக செல்வாக்கை உள்ளது தடுக்கவே இந்த முயற்சி.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மத ரீதியாக பிரித்தாளுதலைப் பயன்படுத்துதல் இது முதல்முறையல்ல.
இதற்கு முன்பு பல சட்டசபை தேர்தல்களிலும் சரி, 2019 பொதுத் தேர்தலிலும் சரி பாஜக தேர்தல் தொடங்கியவுடன் தங்கள் நட்சத்திர பிரசாரக்காரர்களை களமிறக்கிவிடும்.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களில் பாஜக தோல்வி பெற்றாலும், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் சமூக ஊடக பிரசாரங்கள் ஆகியவை `மதம் மற்றும் புதிய வகை தேசியவாதம் கொண்டு அமைந்தது` அதுவும் தேர்தலுக்கு கடைசி சில தினங்களில் அது மிகவும் அதிகமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த தேர்தலில் பாஜக 70 இடங்களில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. இந்த முறை சுமார் 6 இடங்களில் வெற்றி பெறும். இந்து பிரித்தாலும் யுக்தியால் கிடைத்த வெற்றி ஆனால் அது ஒரு எல்லைக்குத்தான் ஏனென்றால் தற்போது டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது ஆம் ஆத்மி கட்சிதான்.
------------------------------+கடந்த ஐந்தாண்டுகளில், நிதிமோசடி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மோசடி குற்றங்கள் செய்த 72 முதலாளிகளை மோடிஅரசு வெளிநாட்டிற்கு தப்பவிட்டுள்ளது.இந்திய வங்கிகளில் பல கோடிரூபாய் அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு, அவற்றைத் திரும்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, நீரவ் மோடி, சந்தேசரா உள் ளிட்டோரை மோடி அரசு வெளிநாட்டிற்கு தப்பவிட்டது.
கடந்த 2019 ஜனவரி 4-ஆம்தேதி வரை, இவ்வாறு மொத்தம்27 பெருமுதலாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பியிருந்தனர்.
இந்நிலையில், 2020 ஜனவரிக்குள்- ஓராண்டிற்குள் மேலும் 45 மோசடி முதலாளிகளை வெளிநாட்டிற்கு மோடி அரசு தப்பவிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு தப்பிய மோசடிப் பேர்வழிகளில், புஷ்பேஷ் பெய்ட், ஆஷிஷ் ஜோபன் புத்ரா, விஜய் மல்லையா, சன்னிகல்ரா, எஸ்.கே. கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா,உமேஷ் பரேக், கம்லேஷ் பரேக், நிலேஷ் பரேக், எக்லவ்யா கார்க், வினய் மிட்டல், நீரவ் மோடி, நீஷல் மோடி, மெகுல் சோக்சி, சப்ய சேத், ராஜீவ் கோயல், அல்கா கோயல், லலித் மோடி, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்திபென் சேதன்குமார் சந்தேசரா, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் என் படேல், மயூரிபென் படேல்,பிரிதி ஆஷிஷ் ஜோபன்புத்ரா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.
இதனை நாடாளுமன்றத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது.
----------------------------------
உங்கள் குழந்தைகளிடமிருந்து Facebook அக்கவுண்டை காமிக்காமல் இருப்பது நல்லது மேலும் நீங்கள் பேஸ்புக்கில் உங்களின் பேமிலி ( குடும்ப ) போட்டோவை போடும்போது தங்கள் குடுப்பத்தை பற்றுக அதிக தகவல் பகிராமல் இருப்பது நல்லது.இதில் உதாரணத்துக்கு உங்கள் குழந்தை எதை அதிக விரும்பி சாப்பிடும் என்பதை உள்பட பகிராமல் இருப்பது நல்லது மேலும் பலர் தங்கள் குழந்தை எந்த பள்ளியில் படிகிறது என்று பள்ளி பெயர் முகவரி, மற்றும் நேரம் போன்ற தகவல்களை பேஸ்புக் பக்கத்தில் பகிராமல் இருப்பது நல்லது ஏன் என்றால் இது போன்ற சூழ்நிலையில் நாமே நம் குழந்தை காணாமல் போக மிக பெரிய காரணமாக அமையலாம்.
சோசியல் மீடியாவான பேஸ்புக்கில் எதையாவது போஸ்ட் செய்யாவிட்டால் நம் அன்றாட வாழ்க்கை முழுமையடையாது என்று நம்மில் பலர் உணர்கிறோம். நீங்கள் பேஸ்புக்கில் எதையாவது போஸ்ட் செய்யும்பொழுது, பெரும்பாலும் உங்கள் நண்பர் பட்டியலில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதுடன், அவர்கள் உங்கள் போஸ்டில் ஏதேனும் ஒன்றை விரும்புவதாகவும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.விருப்பங்களையும் கருத்துகளையும் எண்ணும் இந்த செயல்முறை உங்களை நன்றாக உணரக்கூடும், ஆனால் உண்மை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் சரியான வகையான கவனத்தை ஈர்க்கவில்லை என்றால். பேஸ்புக் முதன்மையாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும், ஆனால் அதை எதிர்கொள்வோம், நாம் அனைவரும் தொல்லைதரும் நண்பர்கள், சிறந்த புறக்கணிக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் உங்களை ஒருபோதும் பின்தொடரக்கூடாது. நீங்கள் பேஸ்புக்கில் இடுகையிடுவதிலிருந்து எழும் கடினமான சூழ்நிலைகளைத் தவிர்க்க, பேஸ்புக்கில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 11 ஆபத்தான தவறுகள் இங்கே..
----------------------------------
உங்கள் குழந்தைகளிடமிருந்து Facebook அக்கவுண்டை காமிக்காமல் இருப்பது நல்லது மேலும் நீங்கள் பேஸ்புக்கில் உங்களின் பேமிலி ( குடும்ப ) போட்டோவை போடும்போது தங்கள் குடுப்பத்தை பற்றுக அதிக தகவல் பகிராமல் இருப்பது நல்லது.இதில் உதாரணத்துக்கு உங்கள் குழந்தை எதை அதிக விரும்பி சாப்பிடும் என்பதை உள்பட பகிராமல் இருப்பது நல்லது மேலும் பலர் தங்கள் குழந்தை எந்த பள்ளியில் படிகிறது என்று பள்ளி பெயர் முகவரி, மற்றும் நேரம் போன்ற தகவல்களை பேஸ்புக் பக்கத்தில் பகிராமல் இருப்பது நல்லது ஏன் என்றால் இது போன்ற சூழ்நிலையில் நாமே நம் குழந்தை காணாமல் போக மிக பெரிய காரணமாக அமையலாம்.
சோசியல் மீடியாவான பேஸ்புக்கில் எதையாவது போஸ்ட் செய்யாவிட்டால் நம் அன்றாட வாழ்க்கை முழுமையடையாது என்று நம்மில் பலர் உணர்கிறோம். நீங்கள் பேஸ்புக்கில் எதையாவது போஸ்ட் செய்யும்பொழுது, பெரும்பாலும் உங்கள் நண்பர் பட்டியலில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதுடன், அவர்கள் உங்கள் போஸ்டில் ஏதேனும் ஒன்றை விரும்புவதாகவும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.விருப்பங்களையும் கருத்துகளையும் எண்ணும் இந்த செயல்முறை உங்களை நன்றாக உணரக்கூடும், ஆனால் உண்மை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் சரியான வகையான கவனத்தை ஈர்க்கவில்லை என்றால். பேஸ்புக் முதன்மையாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும், ஆனால் அதை எதிர்கொள்வோம், நாம் அனைவரும் தொல்லைதரும் நண்பர்கள், சிறந்த புறக்கணிக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் உங்களை ஒருபோதும் பின்தொடரக்கூடாது. நீங்கள் பேஸ்புக்கில் இடுகையிடுவதிலிருந்து எழும் கடினமான சூழ்நிலைகளைத் தவிர்க்க, பேஸ்புக்கில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 11 ஆபத்தான தவறுகள் இங்கே..
----------------------------------
மோடி&அமித்ஷா மீது
மோசடி வழக்குப் பதிவு.
ஆட்சிக்கு வந்தால் இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக உறுதியளித்து ஏமாற்றிவிட்டதாக, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது மோசடிவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ராஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எச்.கே. சிங் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட ராஞ்சி உயர்நீதிமன்றம், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123 (பி) பிரிவுடன், இந் திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 415 (மோசடி) மற் றும் 420 (நேர்மையின்மை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் இவ்வழக்கு மார்ச் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என் றும் அறிவித்துள்ளது.முன்னதாக, 2013-14 ஆம் ஆண்டிலேயே வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், மனுதாரர் எச்.கே. சிங் முன்பே ஏன்வழக்கு தொடரவில்லை; இவ்வளவு காலதாமதம் ஏன்? என்றுநீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, “2019 மக்களவைத் தேர்தலையொட்டி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜகவினர் வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியை தற்போது சிஏஏ சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர்.
அதேபோல ரூ. 15 லட்சம் தருவோம்என்ற 2014-ஆம் ஆண்டின் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை?” என்பதேஎனது கேள்வி என்றும், “இதன்மூலம் மோடியும் அமித்ஷாவும் மக்களை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்கள்” என்றும்எச்.கே. சிங் பதிலளித்துள்ளார்.
-----------------------------------------
கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரிக்கும் திட்டத்தை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.
வாகனப் புகையிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு காற்று மாசுவின் அளவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக கார்பன் டை ஆக்சைடு வெளியாகாத வகையில் எரிபொருளை தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளை நடத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சூரிய சக்தி மூலம் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரித்து சாதனை படைத்தனர்.
ஹைட்ரஜன் எரிபொருளின் உற்பத்தி செலவு குறைவாக இருந்தாலும், அது எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்ப தால் வாகனங்களில் பொருத்துவது மற்றும் சேமித்து வைப்பதில் சில பாதகமான விஷயங்கள் உள்ளன. எனினும், அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக் கும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்டன. இந்நிலையில், சென்னை ஐஐடி விஞ்ஞானிகளும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் சாதனையை எட்டியுள்ளனர்.
கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரி பொருளை பயன்படுத்தும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதில்லை. இதனால் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த எரிபொருளை சேமித்து வைக்க தேவையில்லை. நமது தேவைக்கு ஏற்ப தயாரித்துக்கொள்ளலாம். இதனால், பாதுகாப்பு மட்டு மல்லாமல் எரிபொருளை கொண்டு செல்வதற்கான செல வும் ஏற்படாது. கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் செல வும் குறைவு. இந்த ஹைட்ரஜன் எரிபொருளை கார் போன்ற வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் விமான போக்கு வரத்திற்கும் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானி மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை ராக்கெட்டுகளை ஏவுவதற்கும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தில் பயன்படுத்துவதே எங்களின் எதிர்கால திட்டம். அந்த நாளை எதிர்பார்த் துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஹைட்ரஜன் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத் துவது தொடர்பான ஆய்வுகளும் முடிவடைந்துள்ளன. தற்போது ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம் என்றும் ஐஐடி விஞ்ஞானிகள் கூறினர்.
-------------------------------------------
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர்.
இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத ஒரு மாணவி கூறும்போது, “சிஏஏ ஆதரவு கும்பல் சனிக்கிழமை பிற்பகல் 03:30 மணிக்கு கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது. அவர்கள் அனைவரும் மது அருந்தியிருந்தனர். மேலும் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் மாணவிளின் அங்கங்களை தொட்டு கொடுமை படுத்தினர். இது இரவு 09:30 மணி வரை நீண்டது. இவை அனைத்தையும் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.” என்றார்.
நாட்டின் தலைநகரில் அரங்கேறிய இந்த அவலத்தை ஒரு ஊடகம் கூட கண்டு கொள்ளவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.