க்யூ.ஆர். குறியீடு மோசடி ஆரம்பம்.
கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் மட்டும் க்யூ.ஆர் குறியீடு(கோடு )மூலமாக ஏமாற்றப்பட்டதாக 20 புகார்கள் பதிவாகியுள்ளதால், க்யூ.ஆர் கோடு (QR Code) பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
க்யூ.ஆர் குறியீடு என்றால் என்ன?
பெரிய வணிகவளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள்வரை க்யூ.ஆர் கோடு அட்டையில் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தும் முறையை பின்பற்றுகின்றன. க்யூ.ஆர் கோடு என்பது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உடனடியாக செலுத்துவதற்கான வசதி. (Quick Response). ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு பணம் செலுத்தவேண்டுமோ, அவர்களின் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் முறை
பணம் அனுப்புவதற்கு மட்டும்தான் ஸ்கேன் செய்யவேண்டும். ஆனால் தற்போது சென்னையில் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் பணத்தை ஒருவரிடம் இருந்து பெறுவதற்காக க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க்யூ.ஆர் கோடு ஸ்கேன் ஏமாற்றம் எப்படி நடந்தது?
ஆன்லைன் மூலம் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் தளங்களில் இந்த ஏமாற்றம் நடந்துள்ளது. பொருட்களை வாங்குவதாக சொல்லி, பாதிக்கப்பட்டவரிடம் பேசும் நபர், உடனடியாக பணம் அனுப்புவதாக கூறி, ஒரு க்யூ.ஆர் குறியீட்டை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவைப்பார். அதனை செய்யும் நபரின் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் க்யூ.ஆர் கோடு அனுப்பிய நபரின் கணக்கிற்கு சென்றுவிடும்.
ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாஷிங் மெஷினை ஒன்றை விற்பதாகப் பதிவை வெளியிட, சில மணிநேரத்தில் அவருக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், வாஷிங் மெஷினை நேரடியாக வந்து பார்க்க நேரமில்லை என்றும் ஆனால் தனக்கு பிடித்திருப்பதால், உடனடியாக ரூ. 16,000 செலுத்தி வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். ரமேஷ் தான் கோரிய விலைக்கு ஒருவர் உடனடியாக தனது பழைய வாஷிங் மெஷினை வாங்கிக்கொள்வதாகக் கூறிவிட்டதால், நம்பிக்கையோடு இருந்தார்.
ஒரு சில நிமிடங்களில் ரமேஷின் வாட்ஸாப்பிற்கு ஒரு க்யூ.ஆர் கோடு வந்தது. வாஷிங் மெஷினை வாங்கிக்கொள்வதாகக் கூறிய நபர், ரமேஷை அந்த க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் உடனடியாக பணம் வந்துவிடும் என்றார். ரமேஷ் ஸ்கேன் செய்த அந்த நொடியில், அவரது வங்கிக் கணக்கில் மொத்தம் இருந்த ரூ.32,000 தொகை அந்த நபரின் கணக்கிற்கு சென்றுவிட்டது.
ரமேஷ் ஸ்கேன் செய்த அந்த க்யூ.ஆர் குறியீடு அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த நபர் அனுப்பிய குறியீடு. பணத்தை இழந்த ரமேஷால், அந்த நபரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அந்த நபரின் அலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கேன் செய்வதால் பணம் எடுப்பது எப்படி?
ரமேஷ் போல பலரும் க்யூ.ஆர் குறியீடு ஸ்கேன் செய்து பணத்தை இழந்துள்ளனர் என்கிறார் துணை ஆணையர் நாகஜோதி. ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது, விவரங்களை படித்துவிட்டு பணம் செலுத்தவேண்டும் என்று கூறும் அவர், ''பணத்தை செலுத்துவதற்கு மட்டும் ஸ்கேன் செய்யவேண்டும். பணத்தை மற்றவரிடம் இருந்து பெறுவதற்கு, ஸ்கேன் செய்யவேண்டாம் என்பது பலருக்கு தெரியவில்லை. படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியவர் என எந்த பாகுபாடும் இல்லாமல் பலரும் இந்த அந்த க்யூ.ஆர் கோடு ஸ்கேன் மூலமாக ஏமாற்றப்பட்டுள்ளனர்,'' என்கிறார் அவர்.
ஏமாற்றும் நபர்களை கண்டறிவதில் பல தொழில்நுட்ப சிரமங்கள் உள்ளன என்று கூறுகிறார் துணை ஆணையர் நாகஜோதி. ''க்யூ.ஆர் கோடு குறியீடு அனுப்புபவர், உங்களின் பணத்தை எடுப்பதற்கான அனுமதியை உங்களிடம் பெறுகிறார். நீங்கள் ஸ்கேன் செய்யும்போது அந்த அனுமதி கிடைத்து, உடனடியாக அந்த பணம் உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படுகிறது,'' என்கிறார் அவர்.
''க்யூ.ஆர் கோடு அனுப்பும் நபர்கள் போலியான அடையாள அட்டையை தயார் செய்து அலைபேசி எண்ணை பெற்றுவிடுகிறார்கள். கூகிள் பே, பே.டி.எம். என பலவிதமான பேமென்ட் ஆப் வைத்திருக்கிறார்கள். க்யூ.ஆர் கோடு அனுப்பி பணத்தை அபகரித்தவுடன், அந்த சிம் கார்டை பயன்படுத்துவதில்லை. மேலும் உடனடியாக அந்த பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றிவிடுகிறார்கள் என்பதால், பணம் பலரிடம் கை மாறிவிடுகிறது,'' என்கிறார் துணை ஆணையர்.
மேலும் விவரித்த அவர், ''ராஜஸ்தான், அசாம், பிகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் க்யூ.ஆர் கோடு அனுப்பி ஏமாற்றியுள்ளார்கள். அவர்களை அணுகுவது எளிதானதாக இல்லை. போலியான முகவரி, போலியான அடையாளங்களுடன் இருப்பதால், அவர்களிடம் இருந்து பணத்தை மீட்பதற்கு காலதாமதம் ஆகிறது. ஒரு சில மணி துளிகள் நாம் சிந்திக்கத் தவறுவதால், பெரிய ஏமாற்றங்கள் ஏற்படுகிறது. சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒரு நபர் இதுபோல ஏமாற்றப்பட்டுள்ளார்,'' என்கிறார் நாகஜோதி.
பொருட்களை வாங்கும்போதும் ஏமாற்றப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார் நாகஜோதி. ''ஒரு சிலர், வண்டியை விற்பதாகக் கூறி, போலியான ஆவணங்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்புகிறார்கள். அதையும் நம்பி பணத்தை அனுப்புகிறார்கள். க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து குறிப்பிட்ட பணத்தை அனுப்புவதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிடுகிறது,'' என்கிறார்.
போலி க்யூ.ஆர் கோடு: பாதுகாத்துக்கொள்வது எப்படி?
ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் தங்களிடம் பேசியவர்கள் ராணுவத்தில் வேலை பார்ப்பதாகவும் அல்லது சீருடை பணியாளர் பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க்யூ.ஆர் கோடு ஸ்கேன் ஏமாற்றத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என விளக்கினார் உதவி ஆணையர் வேல்முருகன். ''ஒரு பொருளை பார்க்காமல் ஒருவர் வாங்க சம்மதிக்கிறார் என்பது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டும். அதுவும், நீங்கள் சொல்லும் விலைக்கு உடனே ஒப்புக்கொள்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் பணம் பெற்றுக்கொள்ள ஸ்கேன் செய்ய தேவையில்லை. உங்கள் வீட்டில் அல்லது உங்களுடன் பணிபுரிபவர்கள் என யாரிடமாவது கருத்துக்கேட்டு இதுபோன்ற பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுவது நல்லது,'' என்கிறார் அவர்.
சைபர் குற்ற வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம். ''பணம் உடனடியாக கிடைப்பது சிரமம்தான். பேமென்ட் செயலி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக உள்ளன. அந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் மும்பை அல்லது டெல்லி போன்ற ஊர்களில் உள்ளன. உடனடியாக அந்த செயலி நிறுவனங்களிடம் பேசி தீர்வு கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் வழக்கை முடிப்பதற்கான காலம் அதிகமாக இருக்கும். ஏமாற்றப்படும் நபர்கள் ஒரு சிலர் யூபிஐ பின் நபரைகூட பகிர்ந்துவிடுகிறார்கள். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனையை போன்றது அல்ல இந்த க்யூ.ஆர் கோடு பரிவர்த்தனை,'' என்கிறார் அவர்.
''ஒரு செல்போன் எண் இருந்தால்போதும் ஒருவர் கூகிள் பே, பே.டி.எம். போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம் என்பதால் ஏமாற்றுவது எளிதாக உள்ளது. பதிவு செய்யும் நபர்களின் விவரங்கள், ஆவணங்களை கொடுத்தால்தான் சேவையை பயன்படுத்தமுடியும் என்ற விதியை பேமன்ட் செயலிகள் கொண்டுவரவேண்டும்,'' என்கிறார் கார்த்திகேயன்.
-----------------------------+--------------------------
இது குஜராத் மாதிரிரேசன் முறைமோசடி.
2014ல் பிரதமராக மோடி பதவியேற்கும் முன்பு குஜராத் மாடல் என்றும், மோடியை முன்னிலைப் படுத்தியும் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன் என்பதன் ஒரு பகுதியாக, குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை அறிமுகம் செய்து அதன் மூலம் மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது தொடங்கப்பட்டிருந்தாலும் வடமாநிலங்களில் இந்த ஸ்மார்ட் ரேசன் திட்டம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறது.
அந்தவகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் குஜராத் மாநிலத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், ஸ்மார்ட் கார்டு அடிப்படையில் மக்களின் விரல் ரேகைகளை மட்டும் பதிவு செய்து ரேசன் பொருட்கள் வழங்கி வந்துள்ளதாக சைபர் க்ரைம் போலிஸார் அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், குஜராத்தில் உள்ள ரேசன் கடை பணியாளர்கள், பயனாளர்களின் கைரேகை அச்சுகளை போலியாக உருவாக்கி, சட்டவிரோதமாக ரேசன் பொருட்களை தனியாருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சுமார் 1.27 கோடி ஸ்மார்ட் கார்டு பயனாளர்களின் கைரேகைகளை வைத்து கோடிக் கணக்கில் கொள்ளையடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சூரத் நகரில் உள்ள நியாய விலைக் கடையில் இருந்து சுமார் 1,100 பேரின் கைரேகை அச்சுகளை சைபர் க்ரைம் போலிஸார் கைப்பற்றியுள்ளனர். பிரதமர் மோடியின் சகோதரரான பிரகாலாத் மோடியே குஜராத் மாநிலத்தின் ரேசன் கடை உரிமையாளர் சங்கத் தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
இந்த கைரேகை அச்சுகளை போலியாக உருவாக்கி ரேசன் பொருட்கள் மட்டுமல்லாது மக்களின் பண பரிவர்த்தனை, ரகசிய கோப்புகள் என பலவற்றையும் சுலபமாக திருடி தனியாருக்கு விற்க முடியும் என ஏற்கெனவே மும்பையைச் சேர்ந்த ஜூட் டிசோசா என்ற தடயவியல் அதிகாரி எச்சரித்திருந்தார். அது இப்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
---------+--------+-----------+-----------
பொய்.பொய்யைத்தவிர வேறில்லை.
ஜ.க ஐடி செல் தலைவரான அமித் மால்வியா. அவர் இந்துத்துவா கட்சியின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் அதிகாரப்பூர்வ தலைவர் என்பதால், அவரது தவறான கூற்றுக்கள் ஆபத்தான விளைவுகளைக் கொண்டுள்ளன. அவரால் பரப்பப்பட்ட 16 தவறான தகவல்கள் (பொய் செய்திகள்) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்…
***
ஜனவரி 15ம் தேதி, பாரதீய ஜனதா கட்சியின் ஐடி பிரிவை நடத்தும் அதிகாரி அமித் மால்வியா, குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடும் டெல்லியின் ஷாகீன் பாக் பெண்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகக் கூறி ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மால்வியாவின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என ஆல்ட் நியூஸ் – நியூஸ் லாண்ட்ரி விசாரணையால் கண்டறியப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு பிறகு, ஷாகீன் பாக் கில் ஒரு முதியவர் உணவு உண்ணும் புகைப்படத்தை அமித் மால்வியா ட்வீட் செய்தார். “ஷாகீன் பாக் நகரில் பிரியாணி விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரம்!” என்று அவர் கூறினார், அந்த இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ரூ.500 வழங்கப்படுவதாகவும், இலவச உணவு வழங்கப்படுவதாகவும் வதந்தியைப் பரப்பினார். அவரது ட்வீட் ஆதாரமற்றது. ஒரு போராட்டக்களத்தில் உணவு உண்பது ஒரு குற்றமா அல்லது தார்மீகரீதியில் சந்தேகத்திற்குரியதா என்ன?
ஷாகீன் பாக் பற்றி மட்டும் மால்வியா தவறான ட்வீட்டுகள் பதிவிடவில்லை. அவரது சமூக ஊடக பதிவுகளை ஆல்ட் நியூஸ் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.
தனிநபர்கள், சமூகங்கள், எதிர்க்கட்சிகள், தலைவர்கள் மற்றும் சமூக இயக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியில் அவர் பலமுறை தவறான தகவல்களைப் பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்துள்ளது. அவர் பா.ஜ.கவின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் அதிகாரபூர்வ தலைவராக இருப்பதால், மால்வியா பரப்புகின்ற தவறான தகவல்கள் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவரது தவறான கூற்றுக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.கவின் ஆதரவாளர்களால் எதிரொலிக்கப்படுகின்றன, இது மிகப்பெரிய அளவில் தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப்படுவதற்கு வழிவகுக்கிறது.ஸ்
CAA எதிர்ப்பாளர்கள் பற்றிய தவறான தகவல்கள்
லக்னோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டனர்:
டிசம்பர் 28 ம் தேதி, லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட வீடியோவை ட்வீட் செய்ததோடு, அவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் நீடூழி வாழ்க’ என முழக்கமிட்டதாக கூறினார்.
இந்த கூற்று தவறானது என ஆல்ட் நியூஸ் கண்டறிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பவில்லை, மாறாக, “காஷிஃப் சாப் ஜிந்தாபாத்” என முழக்கமிட்டுள்ளனர். அவர்கள் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிகாட்-உல்-முஸ்லிமின் கட்சியின் லக்னோ தலைவர் காஷிஃப் அகமதுவைக் குறிப்பிடுகிறார்கள். அக்கட்சியின் உத்தரபிரதேச தலைவர் ஹாஜி சவுக்கத் அலி ஆல்ட் நியூசிடம் கூறியபோது டிசம்பர் 13 அன்று மாநில தலைநகரில் காஷிஃப் அகமது ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்றார்.
AMU மாணவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிட்டனர்:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் முசுலீம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வீடியோ பரப்பப்பட்டது. டிசம்பர் 16 அன்று, வீடியோ கிளிப்பைப் பகிர்ந்தவர்களில் மால்வியாவும் ஒருவர்.
Are you listening;
All the way from AMU.
Long Live AMU#AMUrejectscab#CABBill2019#CitizenshipAmendmentBill
உண்மையில் மாணவர்கள் இந்துத்துவா, சாவர்க்கர், பா.ஜ.க, பார்ப்பனியம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்துத்துவாவின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், சாவர்க்கரின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், பாஜகவின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், பார்ப்பனியம் மற்றும் சாதியவாதத்திற்கு கல்லறை AMU -வில் தோண்டப்படும் என முழக்கமிட்டுள்ளனர்.
CAA குறித்த பத்திரிக்கையாளரின் பேச்சு திரித்துக் கூறப்பட்டது:
“முசுலீமல்லாதவர்கள், முசுலீம்களின் மத அடையாளம், நம்பிக்கைகள் மற்றும் மேலாதிக்க முழக்கங்களை நற்செய்தியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் வரை CAA எதிர்ப்பு என்பது ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று முசுலீம்கள் விரும்புவதாக அமித் மால்வியா ஜனவரி 26 அன்று ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.
அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் தி வயர் தளத்தைத் சார்ந்த பத்திரிக்கையாளர் அர்பா கானும் ஆற்றிய உரை, கிளிப் செய்யப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை ஸ்தாபிப்பதை ஊக்குவித்து வருவதாகவும், அத்தகைய சமூகம் உருவாகும் வரை முசுலீமல்லாதவர்களுக்கு ஆதரவளிக்கும் பாசாங்கைப் பேணுமாறு போராட்டக்காரர்களை வலியுறுத்துவதாகவும் மால்வியா கூறினார்.
ஆனால் உண்மையில் கானும் இதற்கு முற்றிலும் நேர்மாறாக கூறினார், மத முழக்கங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இயக்கத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பேண வேண்டும் என்றும் அவர் எதிர்ப்பாளர்களை வலியுறுத்தினார்.
***
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றிய தவறான தகவல்கள்
நேருவை ஒழுக்கக்கேடானவராக சித்தரிக்க முயற்சி.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல பெண்களோடு இருக்கும் படங்களின் படத்தொகுப்பை நவம்பர் 2017ல் அமித் மால்வியா பகிர்ந்து கொண்டார். பெரும்பாலான புகைப்படங்கள் நேருவின் சகோதரி அல்லது மருமகளுடன் அல்லது ஜாக்குலின் கென்னடி போன்ற உலகநபர்களோடு இருக்கும் புகைப்படங்கள். மால்வியா பின்னர் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால் இது மற்றவர்கள் இப்படத் தொகுப்பைப் பகிர்வதைத் தடுக்கவில்லை.
மன்மோகன் சிங் குறித்த தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ
நவம்பர் 27, 2018 அன்று மன்மோகன் சிங் குறித்து ஒரு வீடியோவை மால்வியா ட்வீட் செய்துள்ளார், அதில் முன்னாள் பிரதம மந்திரி, “மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் அரசாங்கங்கள் மிகச் சிறந்தவை” என்று சொல்வதைக் கேட்கலாம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மன்மோகன் சிங் பாராட்டு தெரிவிப்பதாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
மன்மோகன்சிங் பேசிய வார்த்தைகளை தவறாக சித்தரிக்கும் வகையில் மால்வியா பகிர்ந்துள்ளார். சிங்கின் வார்த்தைகளின்படி, “மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் அரசாங்கத்துடனான எனது உறவுகள் நன்றாக இருந்தன. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு நாங்கள் ஒரு போதும் பாகுபாடு காட்டவில்லை.” என்று அவர் பேசியுள்ளார்.
ராகுல் காந்தி சோம்நாத் கோயிலில் பதிவேட்டில் ‘இந்து அல்லாதவர்’ என்று கையெழுத்திட்டார்:
நவம்பர் 2017ல் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, குஜராத்தின் சோம்நாத் கோவிலில் ‘இந்து அல்லாதவர்’ என்று பதிவேட்டில் கையெழுத்திட்டதாக மால்வியா கூறினார்.
இருப்பினும் கையெழுத்து பகுப்பாய்வு, பதிவேட்டில் உள்ள கையெழுத்து ராகுல் காந்தியின் பொதுவில் கிடைக்கக்கூடிய கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் பொருந்தவில்லை என்பதைக் காட்டுகிறது.
உருளைக்கிழங்கு தங்க இயந்திரம்
அதே மாதத்தில் ராகுல் காந்தியின் வேறொரு வீடியோவை மால்வியா ட்வீட் செய்துள்ளார். ஒரு உருளைக்கிழங்கு ஒரு முனையிலிருந்து செருகப்பட்டால், மறுமுனையில் தங்கம் வெளியே வரும் வகையில் ஒரு இயந்திரம் நிறுவப்படும் என ராகுல் கூறியதாக அந்த வீடியோவில் உள்ளது.
உண்மையில் நவம்பர் 12, 2017 அன்று குஜராத்தின் பதானில் ஒரு உரையின் போது ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துக் கொண்டிருந்த மிக நீண்ட உரையின் வீடியோ கிளிப் இது. இதன் முழுமையான வீடியோ கிளிப் காங்கிரசின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது.
அதில் ராகுல் பேசும்போது, சில மாதங்களுக்கு முன்பு இங்கு வெள்ளம் வந்தபோது, மோடி ரூ.500 தருவேன் என்று அறிவித்தார், ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை. அவர் உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் “ஒரு இயந்திரத்தை நிறுவுகிறேன், அதில் ஒரு முனையிலிருந்து உருளைக்கிழங்கு செருகப்பட்டால் மறுமுனையிலிருந்து தங்கம் வெளியே வரும் என்றார்”, இவை என் வார்த்தைகள் அல்ல, “நரேந்திர மோடியின் வார்த்தைகள்”.
ராகுல் காந்தி குர்மீத் ராம் ரஹிமின் தேரா சச்சா சவுதாவை பார்வையிட்டார்:
ஆகஸ்ட்2017ல், மால்வியா கூறுகையில், “ராகுல் காந்தி தேரா சச்சா சவுதாவிற்கு ஜனவரி 2017 வரை சென்று வந்தார்.” என்று குற்றம் சாட்டப்பட்டது.
மால்வியா வெளியிட்ட கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட் முதலில் ஜனவரி 29, 2017 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை. “பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தி ஜலந்தரில் உள்ள தலித் சமூகத்தினரின் தேராசச் காண்ட் பல்லனைப் பார்வையிட்டார்.” என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டு இருந்தது.
காந்தி தேரா சச்சா சவுதாவைப் பார்க்கவில்லை, தேரா சச் காண்ட் பல்லன் என்ற இடத்தைத் தான் பார்வையிட்டார், அதன் தலைவர் சாந்த் நிரஞ்சன் தாஸ், சர்ச்சைக்குரிய பாலியல் கொலை குற்றவாளி குர்மீத் ராம் ரஹிமைப் பார்க்கவில்லை என்பதே உண்மை.
***
தேர்தல் பிரச்சாரங்களின் போது தவறான தகவல்கள் பரப்புதல்
01.02.2019 டெல்லி தேர்தலுக்கு முன்னர் தவறான தகவல் பரப்புதல்
டெல்லி மாநில தேர்தலுக்கு முன்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோவை ஜனவரி 31 அன்று மால்வியா ட்வீட் செய்துள்ளார். கெஜ்ரிவால் ‘ரோட் ஷோவில்’ ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் இந்த சம்பவம் பொது தேர்தலுக்கு முன்னதாகவே நிகழ்ந்தது.
மால்வியா முழு படத்தையும் வெளியிடவில்லை. வீடியோவின் பிற கிளிப்புகளில் கெஜ்ரிவாலை ஒரு நபர் அறைந்தார், பின்னர் அவர் முதலமைச்சரின் ஆதரவாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். சமூக ஊடக கூற்றுகளின் படி அந்த மனிதன் கொலை செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னர் தவறான தகவல் பரப்புதல்
2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர், பா.ஜ.க தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் நடந்த கலவரம் குறித்து கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரி மாணவர் ஒருவரின் பதிவை மால்வியா ட்வீட் செய்துள்ளார். அதில் வளாகத்தில் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை அழிக்கப்பட்டதாக திரிணாமூல் காங்கிரசை மாணவர் குற்றம் சாட்டியிருந்தார்.
First person account of a student from Vidyasagar College. Original post in Bangla and translation alongside. He recounts how TMC hooligans orchestrated vandalisation of Ishwar Chandra Vidyasagar’ bust inside the college for their petty politics. #SaveBengalSaveDemocracy
வன்முறையின் காட்சிகளை ஆராய்ந்து அக்கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களை விசாரித்த பின்னர் “மால்வியா பகிர்ந்த இடுகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.” என ஆல்ட் நியூஸ் ஒரு விசாரணை அறிக்கையை பின்னர் வெளியிட்டது.
2018 தெலுங்கானா தேர்தலுக்கு பிறகு தவறான தகவல்கள் பரப்புதல்
பா.ஜ.க -வுக்கு பின்னடைவு ஏற்பட்ட 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மால்வியா தரப்பில் “தெலுங்கானாவில் 7% வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தை பா.ஜ.க வெல்ல முடிந்தது. அதே நேரத்தில் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் வெறும் 2.7% வாக்குகளைப் பெற்று ஏழு இடங்களைப் பெற்றார்.” என ட்வீட் செய்யப்பட்டது.
மால்வியா மேற்கோள் காட்டிய எண்கள் சரியானவை என்றாலும், அந்தக் கூற்று தவறானது. ஏனென்றால் வெறும் 8 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வென்றது AIMIM. மறுபுறம் மாநில சட்டசபையில் 119 இடங்களில் 118 இடங்களில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில் ஒரு இடம் மட்டுமே வென்றுள்ளது. பா.ஜ.கவுடன் ஒப்பிடும்போது AIMIM அதிக சதவீத வித்தியாசத்தில் வென்றுள்ளது. முழுமையான விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் கிடைக்கின்றன.
***
மோடிக்கு ஆதரவான தகவல்கள் பரப்புதல்
கும்பமேளாவைப் பார்வையிட்ட முதல் அரச தலைவர் மோடி
2019 ஜனவரி 24 ஆம் தேதி, நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள கும்பமேளாவில் கங்கையில் நீராடினார். இது குறித்து உடனடியாக ட்வீட் செய்த மால்வியா, “இந்த ஆண்டில் கும்ப மேளாவிற்கு விஜயம் செய்த முதல் மாநிலத் தலைவர் மோடி” என்றார்.
இரண்டு வகையில் இக்கூற்று தவறானது, மோடி மாநிலத் தலைவர் அல்ல, அதே போல் கும்ப மேளாவைப் பார்வையிட்ட முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், கும்பமேளாவைப் பார்வையிட்ட முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பதே உண்மை.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் பணமதிப்பிழப்பை ஆதரித்தார்
2017ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் மோடியின் பணமதிப்பிழப்பை ஆதரித்தார் என மால்வியா ட்வீட் செய்தார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தாலர் இது குறித்து கூறுகையில், “ஊழலை ஒழிப்பது என்ற நல்ல நோக்கத்திற்காக பணமற்ற பரிவர்த்தனை என்பது சிறந்த வழி, ஆனால் 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியதால் இந்த நடவடிக்கையின் நோக்கத்தைக் குறித்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது.” என்றே கூறியுள்ளார்.
யோகேந்திர யாதவ் குறித்த வீடியோ
ஏப்ரல் மாதத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் யோகேந்திர யாதவ் சாதி அரசியல் செய்வதாக மால்வியா குற்றம் சாட்டினார். மால்வியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் காட்டினால் தான் அரசியல் வாழ்விலிருந்தே விலகிவிடுவதாக யோகேந்திர யாதவ் கூறினார். பதிலடியாக, யோகேந்திர யாதவ் தனது முசுலீம் அடையாளத்தைக் கூறி முசுலீம் மக்கள் மத்தியில் பேசுகின்ற வீடியோவை மால்வியா பதிவிட்டார்.
4 things BJP's lie factory conceals:
1. Allegation by @amitmalviya to which I responded:in 2014 election I used Muslim name for votes
2. Date of video:3 yrs+ after election
3 Context: protest meet on lynching by Hindu mob
4. My main message: don't think of revenge or violence twitter.com/amitmalviya/st …
அந்த வீடியோவின் இறுதியில் நீங்கள் எப்போது பொது வாழ்க்கையிலிருந்து விலகப் போகிறீர்கள் என கேள்வியெழுப்பி இருந்தது. வாக்கு வங்கிக்காக தனது முசுலீம் அடையாளத்தைப் பயன்படுத்தியதற்காக யோகேந்திர யாதவிற்கு வரும் ஆதரவைத் தடுக்கவே மால்வியா தேர்தல் பேரணியில் கூட வராத ஒரு வீடியோவை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.