ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

வெட்டிப் பேச்சுதான் மிச்சம்.

இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலைக்குச் சென்ற நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பட்ஜெட்டாக இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் அறிக்கையை வாசித்து முடித்துள்ளார்.
இந்த பட்ஜெட் பல்வேறு சிக்கலும், நடுதர, ஏழை மக்களின் வாழ்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தியதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்கள் யாருக்குமே இந்த பட்ஜெட் பயனளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக தனியார் டி.வி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பொருளதார அறிஞர் ஜெயரஞ்சன் இந்த பட்ஜெட்டின் மோசமான பல அம்சங்களை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.அதில், மாநில அரசின் மூலம் மத்திய அரசுக்கு வரும் வருவாயில் 8 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை மாநில அரசுக்கு கொடுக்கவேண்டும் என நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் தற்போது கொடுத்திருப்பது வெறும் 6 லட்சத்து 56 ஆயிரம் கோடிதான். இதன் மூலம் மாநில அரசுக்கு வரவேண்டிய தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசுக்கு கிடைக்கவில்லை.
மாநில அரசுகள் தான் மக்களுக்கு உண்டான நல வாரியம் நடத்துக்கிறது. அப்படி இருக்கையில் பொருளாதார பிரச்சனை வருகிற போது மாநில அரசிடம் ஆலோசனை பெறாமல், பல்வேறு சலுகைகளையும், கடன் தள்ளுபடிகளையும் முதலாளிகளுக்கு அறிவித்துவிடும் வேலையை மத்திய அரசு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, உணவு மானியத்திலும் இந்த அரசாங்கம் கைவைத்துள்ளது. குறிப்பாக 1 லட்சத்து 92 ஆயிரம் கோடி கொடுக்கவேண்டிய இடத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி மட்டுமே கொடுத்துள்ளார்கள்.இதைவிட கொடுமை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் என்று சொல்லக்கூடிய குழந்தைகள் ஊட்டச்சத்தினை உறுதிப்படுத்தும் திட்டத்தில் 27 ஆயிரம் கோடி நிதியில் இருந்து 22 ஆயிரம் கோடி ரூபாயை வெட்டித் தூக்கியுள்ளனர். இதனை எந்த அரசாங்காமாவது மேற்கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகள் தவிர்த்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மதிய உணவிலும் கை வைத்துள்ளார்கள். இலவச மதிய உணவுத் திட்டத்தில் (Midday Meal Scheme) 11 ஆயிரம் கோடியில் இருந்து 9 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளன.
அதற்கு அடுத்ததாக விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பீடு தொகை 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி, திருத்தப்பட்ட மதிப்பீடு 1 லட்சத்து 1000 கோடி. இதில் முழுக்கணக்கு வெளிவரும் போதுதான் இதன் பாதகம் அம்பலப்படும். குறிப்பாக மார்ச் மாதம் முடியும் இந்த கணக்கு அடுத்த பட்ஜெட் வரும் போது உண்மையான மதிப்பீடு என்ன என்பது தெரியவரும்.அரசு நினைத்தால் திருத்தப்பட்ட மதிப்பீட்டை அதிகமாக கூட வைத்துக்கொள்ளாலம் அது காலத்திற்கு ஏற்றவாறு தவறுகளை மறைப்பதற்கு, ஆனால் கணக்கு விவரங்கள் வெளிவரும் போதுதான் தெரியும் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியை என்ன செய்தார்கள் என்று.
இந்த பிரச்சனைகள் தொடரும் இந்த வேலையில், காஷ்மீரில் விளையும் ஆப்பிள்களை உடனே எடுத்துச் செல்வதற்கு 19 ஆயிரத்து 950 கோடி திருத்தப்பட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளனர். மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய நிதியை அங்கு கொடுத்துள்ளார்.
இதன் மூலம் அரசின் முக்கியத்துவம் எதில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதைப் பற்றியும், மதிய உணவுத்திட்டத்தை பற்றியும் ஏன் விவசாயத்துறையின் வீழ்ச்சிப்பற்றியும் இந்த அரசிற்கு கவலை கிடையாது. மாநில அரசு நிதி சிக்கலில் தவிப்பது பற்றியும் கவலையில்லை.” என ஜெயரஞ்சன் பேசியுள்ளார்
------------------------------
ஜனவரி 31ஆம் நாளிரவு 11 மணிக்கு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தனது 47 ஆண்டுகளின் கூட்டணிக்கு பிரியாவிடை சொல்லிப் பிரிந்தது.
பிரிட்டன் தலைமை அமைச்சர் போரிஸ் ஜான்சன் முன்கூட்டியே தயாரித்த காணொளி உரை இரவு 10 மணிக்கு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. இது பிரிட்டனுக்கு புதிய விடியல் போன்ற தருணம். இது முழு நாடு மீண்டும் மாற்றத்தை நோக்கும் தருணம் என்று அவர் கூறினார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சித் திசை, பிரிட்டனுக்குப் பொருத்தமற்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதில் பொது மக்களின் வேறுபட்ட உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். நாட்டை ஒற்றுமைப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வது அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதையொட்டி பிரிட்டனின் பல இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. இதனிடையே பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
பிப்ரவரி முதல் நாள் தொடங்கி டிசம்பர் 31ஆம் நாளுக்குள் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்று இருதரப்பும் விருப்பம் தெரிவித்துள்ளன.
--------------------------
குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ள்ளியில் நடத்தப்பட்ட நாடகத்திற் காக, பள்ளி தலைமை ஆசிரியரையும், 6-ஆம் வகுப்பு மாணவரின் தாயையும் தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பிதார் பகுதியிலுள்ள ‘ஷாகீன் ஸ்கூல்’ பிரபலமானதாகும். இந்த பள்ளி அமைந்திருக்கும் பிதாரில் இருந்து, கடந்த 2018-ஆம்ஆண்டு 327 பேர் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் ஷாகீன் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்ற நிலையில், அதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விமர் சிக்கும் நாடகம் ஒன்றை மாணவர்கள் அரங்கேற்றியுள்ளனர். 4 முதல் 6-ஆம் வகுப்பு மட்டத்திலான மாணவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் நடித்தநாடகம், பிரதமர் மோடியை களங்கப் படுத்தும் வகையில் இருந்ததாக கூறி,நீலேஷ் ரக்ஷைலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 504, 505(2), 124(ஏ), 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தினர்.அதன்தொடர்ச்சியாக தற்போது, ஷாகீன் பள்ளி தலைமை ஆசிரியையும், மாணவர் ஒருவரின் தாயையும் கைதுசெய்துள்ளனர்.நாடகத்திற்கான அசல் கதை வசனத்தில், பிரதமருக்கு எதிரான சொற்கள்இல்லை; ஆனால், ஆறாம் வகுப்பு மாணவரின் தாயார் ஒருவர், ஒத்திகையின் போது அதனை இணைத்துள்ளார்; பள்ளித்தலைமை ஆசிரியையும் அதனை அனுமதித்துள்ளார் என்று போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
------------------------

மோடி எதைச் செய்தாலும் லாபம் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான்....பாமாயில் தடையிலும் அதானி, ராம்தேவுக்கே ஆதாயம்

-  -_--_--_--_--_-__-__-_--
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது, ஆகியவற்றை மலேசிய நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது விமர்சித்திருந்தார். “இந்தியா தனது மதச்சார்பற்ற அடிப்படைகளிலிருந்து விலகிச் செல்கிறது” என்று அக்கறையுடன் கூடிய தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.ஆனால், மகாதீர் முகம்மது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம்சாட்டி, அதற்கு தண்டனையாக மலேசியா பாமாயில் இறக்குமதிக்குமறைமுகத் தடை விதித்தார் பிரதமர்மோடி. இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் துணிச்சலுடன் செயல்படுவதைப் போன்ற ஒரு தோற்றத்தையும் மோடிக்கு இது கொடுத்தது.இந்நிலையில்தான், மலேசிய பாமாயிலுக்கு, மோடி அரசு விதித்த தடை நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அல்ல; அதுமோடியின் கார்ப்பரேட் முதலாளிகளுக் காக என்பது தெரியவந்துள்ளது.இந்தியாவின் சமையல் எண்ணெய்க்கான தேவையில் சுமார் 45 சதவிகிதத்தைமலேசிய பாமாயில்தான் பூர்த்தி செய்துவந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் சமையல் எண்ணெய்களை விட, மலேசிய பாமாயில் விலை குறைவாக இருந்ததால், வர்த்தகர்களும் மலேசிய பாமாயிலையே அதிகம் இறக்குமதி செய்து வந்தனர். 
தற்போது நேரடியான மலேசிய பாமாயிலுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளதால், சுமார் 45 சதவிகித எண்ணெய் தேவையை உள்நாட்டு நிறுவனங்களே பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.அந்த உள்ளூர் நிறுவனங்கள் வேறுயாருடையதுமல்ல, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களும்- கார்ப்பரேட் முதலாளிகளுமான கௌதம் அதானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோருக்குச் சொந்தமானவைதான்.ஏனெனில் இந்திய சமையல் எண்ணெய் சந்தையில், அதானியின் வில்மர்நிறுவனம், ‘பார்ச்சூன்’ எனும் பெயரில், சோயா எண்ணெய், சூரிய காந்தி எண் ணெய், கடுகு எண்ணெய், அரிசித் தவிடுஎண்ணெய், கடலை எண்ணெய் மற்றும்பருத்தி விதை எண்ணெய் ஆகியவற்றைவிற்பனை செய்து வருகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் நிறுவனமாக ‘ருச்சி சோயா’ உள்ளது. இந்நிறுவனம் நுட்ரெல்லா, மகாகோஷ், சன்ரிச், ருச்சி கோல்டு, ருச்சி ஸ்டார் ஆகிய பிராண்டுகளில் சமையல் எண்ணெய்யை விற்று வருகிறது. இந்தநிறுவனத்தை அண்மையில்தான் ‘பதஞ்சலி’ ராம்தேவ் வளைத்துப் போட்டார். இமாமி அக்ரோடெக், கோகுல் அக்ரோ ரிசோர்ஸஸ், கார்கில் உள்ளிட்டநிறுவனங்கள் இருந்தாலும் அதானியின்பார்ச்சூனும், ராம்தேவின் ருச்சி சோயாவும்தான் பிரதானம். எனவே, மலேசியாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் இப்போது கொள்ளைலாபம் அடையப் போவது யாரென்றால் அவர்கள் அதானியும்... ராம்தேவும்தான். இந்திய சமையலறைகள், இனிமேல் அதானி, ராம்தேவ் கம்பெனிகளையே சார்ந்திருக்கப் போகின்றன. விலை, தரம் உள்பட அனைத்திலும் இனி அவர்கள்வைத்ததே சட்டமாகப் போகின்றன.
இதில் குறிப்பிட வேண்டிய, இன்னொரு முக்கியமான விஷயம், அதானியும், ராம்தேவும் முழுக்க முழுக்க இந்தியாவில் சமையல் எண்ணெய்யை உற்பத்தி செய்து தரப்போவதில்லை; அவர் களும் மலேசிய பாமாயிலைத்தான் வாங்கித் தரப் போகிறார்கள்.. அதற்குத்தான் மோடி தடை விதித்து விட்டாரே என்றால், அதுதான் இல்லை! நேரடியானஇறக்குமதிக்குத்தான் தடை. மலேசியாவிடமிருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா பாமாயில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை. எனவே, மலேசியா பாமாயிலைத்தான் இவர்களும் விற்கப் போகிறார்கள். பின்னர் எதற்காக மோடி தடை விதித்தார்? சந்தேகமே தேவையில்லை அதானி, ராம்தேவ் போன்ற முதலாளி நண்பர்களுக்காகத்தான் இதைச் செய்திருக்கிறார் என்று கருத வேண்டியுள்ளது. ‘ஆடு மேய்த்தது போலவும் ஆச்சு.. அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது போலவும் ஆச்சு..’ என்பார்களே அதுபோல.இங்கே குறிப்பிட வேண்டிய இன் னொரு விஷயமும் உண்டு. அது மலேசியபாமாயிலுக்கு தடை என்ற உடனேயே, அந்நாட்டு பிரதமர் என்ன கூறினார் என்பதுதான்.
“இந்திய வர்த்தகர்கள் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டது கவலை அளிக்கக்கூடியதுதான். அதேநேரம் நாங்கள்வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றாலும், தவறான விஷயமாக இருந்தால்அதுகுறித்துப் பேசித்தான் ஆக வேண்டியதிருக்கிறது; தவறான விஷயங்களை நாங்கள் அனுமதித்தால் - பணத்தை மட்டும் சிந்தித்தால் அப்புறம் எங்களுக்கும் மற்ற மக்களுக்கும் அதிகளவில் தவறான விஷயங்கள் நடைபெறும். இந்தியாவின் புறக்கணிப்பால் மலேசிய பாமாயில் உற்பத்தியாளர்களுக்கு கடும் வருவாய் இழப்புஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கானதீர்வை மலேசிய அரசு கண்டுபிடிக்கும்.” - இவரும் ஒரு நாட்டின் பிரதமர்தான்.
---------------