4200 கோடி ஊழல் வைரஸ்

"இன்னும் பல திவால்கள் உள்ளன
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது
 குறிப்பாக கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் மட்டுமே என்ற நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,320 புள்ளிகள் சரிந்து 35,256ல் வர்த்தகம் ஆகிவருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 645 புள்ளிகள் சரிந்து 10,339ல் வர்த்தகம் ஆகிவருகிறது.
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு 7.72 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 10% வீழ்ச்சி அடைந்துள்ளன.



“ரூ.7.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்” : மோடி ஆட்சியில் தொடர் பின்னடைவை சந்திக்கும் பங்குச்சந்தை!
இதனிடையே 29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 30% சரிவைக் கண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று மேலும் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.0087 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார நிலை வரலாறு காணாத வகையில் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.
பல்வேறு தொழில் துறைகளின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, ஏற்றுமதி இறக்குமதியிலும் சரிவு காணப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் வாராக்கடன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நிலைமை இப்படி இருக்கையில், மோடி அரசோ, நாட்டில் பொருளாதார மந்தநிலையே இல்லை எனக் கூறி வருவதோடு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
modi
modi
google
இந்நிலையில், வாராக்கடனால் கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த பிரபல தனியார் வங்கியான யெஸ் வங்கி முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.
இதேபோல, அடுத்தடுத்து தனியார் வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டு ரிசர்வ் வங்கி வசமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதில், ஆக்சிஸ், ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகள் அடிபடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினரும், பொருளாதார வல்லுநருமான சுப்பிரமணிய சுவாமி மத்திய அரசின் தனியார் மயமாக்கல் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வங்கிகளின் வாராக்கடன் தொடர்பாக 2015ம் ஆண்டே எச்சரித்திருந்தேன். அதுபோல YES வங்கியின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது. இதேபோல அடுத்தடுத்து திவால் ஆகவிருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 10-ஐ தாண்டும். அந்த வரிசையில் ஆக்சிஸ் வங்கியும் இருக்கிறது என சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார மந்தநிலையை சரிவர கையாளாமல் வங்கிகளை ஆர்பிஐ வசமாக்குவதில் எந்த பயனும் இருந்துவிடப் போவதில்லை என்ற பாணியில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருக்கிறார். 
பாஜக தலைவர்களில் ஒருவரே மோடியரசை தாக்கி டுவிட்டியுள்ளது தற்போது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
8-------------8---------------8-------------------8
ம.பி. பாஜக திருவிளையாடல்.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க பல மாநிலங்களில் தோல்வியை சந்தித்தது. தேர்தலில் தோல்வி அடைந்த பா.ஜ.க எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கலைத்து அங்கு தாங்கள் ஆட்சிக்கு வரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
கடந்தாண்டு கர்நாடகாவிலும் இதே பாணியைத்தான் பா.ஜ.க. கையில் எடுத்தது. தற்போது மத்திய பிரதேசத்தில் பல கோடிகள் கொடுத்து ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படியே, 6 அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏ-க்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்களான அதிருப்தியாளர்கள் நேற்றைய தினம் தனி விமானம் மூலம் பெங்களூருவில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அம்மாநில முதல்வர் கமல்நாத் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.



“அமைச்சர்கள் கூட்டாக ராஜினாமா”: ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க சதி திட்டம்?- என்ன நடக்கிறது மத்திய பிரதேசத்தில்?
இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் மத்திய பிரதேசத்திற்கு திரும்பிய கமல்நாத், தனது இல்லத்தில் நேற்றிரவு 9 மணிக்கு அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதில் 20 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கமல்நாத்திடம் கூறியதாகவும், அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என முதல்வர் கமல்நாத்தை அவர்கள் வலியுறுத்தி தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் கமல்நாத் இது தொடர்பாக ஆலோசிக்க உள்ளார். அமைச்சர்களின் ராஜினாமா முடிவால் மத்தியப் பிரதேச அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-------------------+--------------------
தண்ணியடித்தால் கொரோனா போய்விடுமா?
மது அருந்தினால் கொரோனா குணமாகும் என நம்பி எரிசாராயத்தை குடித்த 16 இரானியர்கள் உயிரிழந்துள்ளது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரானில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அந்நாட்டில் அது குறித்த பல பொய்ச்செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக மதுபானங்கள் அருந்தினாலே, அல்லது வாய் கொப்பளித்தாலோ கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்ற வதந்தி இரானில் வைரலாக பரவி வருகிறது. வோட்கா அருந்துவதால்தான், ரஷ்யர்களை கொரோனா பெரிய அளவில் தாக்கவில்லை என்ற செய்தியும் அதில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இரானின் குசெஸ்தான் மாகாணத்தில் இந்த வதந்திகளை நம்பி எரிசாராயம் மூலம் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதால் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

போலி மதுபானம்

மெத்தனால் கலந்திருந்த அந்த நச்சு மதுபானத்தை அருந்திய 331 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தபட்சம் 16 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இரானில் மதுபானங்கள் குடிப்பது சட்டப்படி குற்றம். இருந்தாலும் சட்டவிரோதமாக அண்டை நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் எரிசாராயத்தை பலர் அங்கு ரகசியமாக அருந்து வருகின்றனர். இந்த எரிசாராயம் விஷமாக மாறி கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்துள்ளது. மேலும் எரிசாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்படோர் பலர், அரசு தங்களை கைது செய்து விடும் என்பதற்காக மருத்துவமனைகளுக்கு செல்வதும் இல்லை.
இந்நிலையில் இந்த போலி மதுபானத்தை தயாரித்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இரான் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.






வளைகுடா நாடுகளில் இரானில்தான் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் கொரோனாவினால் 43 பேர் இரானில் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 7,161 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 237 பேர் உயிரிழந்துள்ளனர்.
----------------0------------------
4200 கோடி ஊழல்.
தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் 3 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியில் ரூ.4200 கோடிக்கு மேல் இமாலய ஊழல் நடந்திருப்பதாக சமூக தணிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. காடுவளர்ப்பு மற்றும் மரங்கள் வளர்ப்பில் 10 மரங்களை நட்டுவிட்டு 1000 மரங்கள் நட்டதாகவும், அதே மரங்கள் வறட்சியாலும் கால்நடைகளாலும் அழிந்து விட்டதாகவும், சிறிய பண்ணைக் குட்டைகள் வெட்டிவிட்டு பெரிய பண்ணைக் குட்டைகள் வெட்டியதாகவும், இப்படி பல்வேறு மோ சடிகள் செய்து இத்திட்டத்தின் நிதிகள் சூறையாடப்பட்டுள்ளன என்று சமூக தணிக்கை பல இடங்களில் தெரிவிக்கிறது.
பல ஊராட்சிகளில் இயந்திரங்கள் பயன் படுத்தி வேலை செய்துவிட்டு மனித சக்தியை பயன்படுத்தி வேலை செய்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து இந்த நிதியை பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் எந்த ஊராட்சியிலும் 100 நாட்கள் வேலை யும் சட்டப்பூர்வ கூலி ரூ.229 வழங்கப்படவே இல்லை.
------------------8----------------0--------------------8------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?