நடந்தவை

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காலியான 6 எம்.பி.க்களுக்கான இடத்துக்குப் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியில்லாததால் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்துக்கு 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் கோட்டா உள்ளது. இதில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் வீதம் வெவ்வேறு காலகட்டத்தில் மும்முறை மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். தற்போது 2014-ம் ஆண்டு தேர்வான எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிந்ததால் புதிய எம்.பி.க்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது.
திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கவில்லை. மூத்த உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது, ஏற்கெனவே மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்டு வைகோ போட்டியிட்டதால் மாற்றப்பட்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.அதிமுகவில் கூட்டணிக் கட்சிகள் நெருக்குதல் அதிகமாக இருந்தது. தேமுதிக நேரடியாக முதல்வரிடம் பேசியது. பிரேமலதா பகிரங்கமாக பேட்டி அளித்தார். ஆனால் யாரும் எதிர்பாராதவண்ணம் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி இருவரில் கே.பி.முனுசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கரூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த தம்பிதுரைக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இவர்கள் தவிர வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடக்கும் வாய்ப்பு இல்லாததால் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழை சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் வழங்கினார்.
தேர்வு செய்யப்பட்ட அனைவரும் அடுத்து வரும் ஆறாண்டுகளுக்கு (2026-ம் ஆண்டு வரை) மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகிப்பார்கள்
-------++-++------------------------
 கேவலமான விளம்பரம்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பகவான் நந்து என்ற நந்த கோபால். இவர் திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த் 17ம் தேதி இரவு தனது செல்போன் கடையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் போன்ற ஆயுங்களால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் போலிஸாரிடம் பகவான் நந்து புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பகவான் நந்து கார் ஓட்டுநர் ருத்ரமூர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூர்த்தி முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.


இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் மூர்த்தியிடம் கெடுபிடியாக விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் போது அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அப்போது இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்த ருத்ரமூர்த்தி, இந்து மக்கள் கட்சியின் நிர்வாகியான பரமசிவம் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டாக சேர்ந்து இந்த முடிவை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும், திட்டம் படி பரமசிவம் நந்துவைக் கத்தியால் முதுகில் கிழித்ததாகவும், அதன் பின் நந்து தனது இரண்டு கைகளில் காயத்தினை ஏற்படுத்திக்கொண்டு அத்தகைய காயத்தினை இதர மதத்தினர் மற்றும் வேஷ்டி கட்டியவர்கள் ஏற்படுத்தியதாகவும் நாடகம் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பகவான் நந்து, வாகன ஓட்டுநர் ருத்ர மூர்த்தி மற்றும் உடந்தையாக இருந்தவர்களை கைது செய்த போலிஸார் பொய் வழக்கு பதிவு செய்தல், மதக்கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அரசியல் ஆதாயம் பெற நினைத்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த நினைத்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளின் செயலால் திருப்பூர் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சுய விளம்பரத்திற்காக மற்றும் அரசியல் லாபத்திற்காக பொதுமக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்குடன் இந்து மக்கள் தொடர்சியாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை தமிழக அரசு தடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக திருச்சியில், தனது வாகனத்தை எரித்துவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு கலவரத்தைத் தூண்ட நினைத்த இந்து முன்னணி பிரமுகரை போலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------
கடந்த 2 நாட்களில் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 984 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 659 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகச் சென்னையில் 232 பேர் நேற்று ஒரே நாளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-------------------------------------------------------
மாட்டு மூத்திரம்.
கைது.
மாட்டுச் சிறுநீரை குடிக்கவைத்து, மனித உயிர்களுக்குஆபத்தை ஏற்படுத்த முயன்றதாக பாஜக தலைவர் ஒருவரை, கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் சாட்டர்ஜி. பாஜக தலைவரான இவர், திங்கட்கிழமையன்று, ‘கொரோனா தடுப்பு’ நிகழ்ச்சிஒன்றை ஏற்பாடு செய்துள் ளார். நாராயணன் சாட்டர்ஜியின் அழைப்பை ஏற்று, ஏராளமானோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து என்று மாட் டின் சிறுநீரைக் கொடுத்து, நாராணயன் சாட்டர்ஜி குடிக்க வைத்துள்ளார். 
மாட்டின் சிறுநீரைக் குடிப்பதால், கொரோனா வைரஸிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்என்று பிரச்சாரம் செய்தஅவர், சீருடைப் பணியாளரான பிந்து பிராமணிக் என்பவருக்கும் ‘தீர்த்தம்’ என்று வழங்கியுள்ளார். மாட்டுச் சிறுநீர் என்பதை அறியாமல் அவரும் வாங்கிக் குடித் துள்ளார். பின்னர், தான்ஏமாற்றப்பட்டதை உணர்ந்து,ஜோரபகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டார்.இதையடுத்து, நாராயணன் சாட்டர்ஜி மீது, 269 (சட்டவிரோதமான முறையில் உயிருக்கு ஆபத்தான நோயை பரப்புவது), 278 (உடலுக்குத் தீங்கு விளைவிப்பது), 114 (குற்றம் நிகழும்போது உடனிருந்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை உடனடியாக கைதும் செய்துள்ளனர்.
---------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு