புதன், 11 மார்ச், 2020

யெஸ் வங்கி,நோ பணம்.


யெஸ் வங்கியில் நடந்தது என்ன?


Image copyrightGETTY IMAGESயெஸ் வங்கி

ஏற்கனவே பல வங்கிகளில் வராக்கடன்களை வைத்திருந்தவர்கள், திவால் ஆனவர்கள் இந்த வங்கியில் பெருமளவில் கடன் வாங்கியிருக்கிறார்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் கொடுக்கும்போது அரசியல் ரீதியான அழுத்தங்கள் இருந்திருக்கலாம். அப்படி கடன் பெற்றவர்கள், பிறகு கட்டாமல் இருப்பார்கள். அது வேறு. ஆனால், யெஸ் வங்கியில் கடன் வாங்கியிருப்பவர்கள், ஏற்கனவே இம்மாதிரியான பின்னணி உடையவர்கள். இவர்களுக்கு வேறு எங்குமே கடன் கிடைக்காது. அவர்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியிருக்கிறது. இதில், வங்கியின் பிரமோட்டர்களுக்கு லஞ்சமும் கிடைத்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் யெஸ் வங்கியில் பணம் இல்லாமல் போனவுடன், தன்னுடைய பங்குகளை அடகுவைத்து, கடன் வாங்கி இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி தவறுகள் நடக்காமல் கண்காணிக்க பல அமைப்புகள் இருக்கின்றன. ரிசர்வ் வங்கி இருக்கிறது. செபி இருக்கிறது. ரேட்டிங் அமைப்புகள் இருக்கின்றன. இயக்குனர்களின் வாரியம் இருக்கிறது. கணக்குத் தணிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இத்தனை கண்காணிப்புகளையும் மீறி இதெல்லாம் நடந்திருக்கிறது.
யெஸ் வங்கி விவகாரத்தில் வராக் கடன் மட்டும் பிரச்சனையில்லை. இந்த வங்கி அளித்த தவறான விவரங்களை நம்பி, பலர் அதன் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள்.

Image copyrightGETTY IMAGESயெஸ் வங்கி விவகாரம்: தவறு எங்கே நடந்தது?

யெஸ் வங்கி கடன் பத்திரங்களை வெளியிட்ட போது, அதற்கு ரேட்டிங் ஏஜென்சிகள் நல்ல ரேட்டிங்கை வழங்கியிருக்கின்றன. அதை நம்பி பலர் அந்தப் பத்திரங்களை வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே பணத்தை இழந்திருக்கிறார்கள். எல்லோருமே, வங்கி அளித்த புள்ளிவிவரங்களை வைத்தும் ரேட்டிங் ஏஜென்சிகளின் மதிப்பீடுகளை வைத்தும் முதலீடு செய்தவர்கள். இந்த புள்ளிவிவரங்கள், கணக்குகள் சரியா என்பதை ரிசர்வ் வங்கி, செபி ஆகியவை கண்காணித்திருக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக குளோபல் டிரஸ்ட் வங்கியில் பிரச்சனை ஏற்பட்டபோது, அது ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. யெஸ் வங்கி விவகாரத்தில், அந்த வங்கி வேறு வங்கிகளுடன் இணைக்கப்படப்போவதில்லை. அதன் நிலைமையைச் சரியாக்க இந்திய ஸ்டேட் வங்கி அதில் முதலீடு செய்யப்போகிறது. எஸ்பிஐ 49 சதவீத பங்குகளை வாங்குவதாகச் சொல்லியிருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு 29 சதவீத பங்குகளைக் கண்டிப்பாக வைத்திருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், யெஸ் வங்கியின் பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. இருந்தபோதும் அந்த வங்கி மீது ஒரு நம்பிக்கை வருவதற்காக இதைச் செய்கிறது எஸ்பிஐ.
இப்போது யெஸ் வங்கி தொடர்ந்து இயங்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் திரும்பக் கிடைத்துவிடும். ஆனால், பங்குகளை வாங்கியவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள், கடன் பத்திரங்களை வாங்கியவர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட இழப்புகளை எப்படி சரிசெய்ய முடியும்? இதனால், வங்கி அமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடாதா?
இந்தியாவில் வங்கிகளில், நிதிச் சந்தையில் பிரச்சனை ஏற்படுவது முதல் முறையல்ல. பஞ்சாப் நேஷனல் வங்கி, பிஎம்சி, IFLS, எஸ் வங்கி என இதுபோல பல முறை நடந்துவிட்டது. ஆனால், ஒரு தடவைகூட கண்காணிப்பைத் தீவிரப்படுத்தாமல், ஒவ்வொரு முறையும் நடந்த பிறகுதான் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்குமென்றால் எப்படி?

Image copyrightPTIரிசர்வ் வங்கி

நிச்சயமாக இதற்கு தொடர் விளைவுகள் இருக்கும். இனி தனியார் வங்கிகளில் பணம் போடலாமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு வரும்.
சமீபத்தில் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததற்கு கொரோனா வைரஸ் மட்டும் காரணமல்ல. இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம், எஸ் வங்கி பிரச்சனையும் பொருளாதார மந்தமும்தான். இப்போது யெஸ் வங்கியில் தவறு நடந்தவுடன், எங்கெல்லாம் தவறு நடந்திருக்கிறது எனக் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர். ஆனால், இதை ஆரம்பத்திலிருந்தே செய்திருக்க வேண்டும். அதுதான் ரிசர்வ் வங்கியின் வேலை. அந்த அமைப்பு ஏன் தன் பணியில் தவறியது என்பதை அவர் கேட்டிருக்க வேண்டும்.
இந்த வங்கியின் சி.இ.ஓவை மாற்றும்போதே, ரிசர்வ் வங்கிக்கு தவறு நடக்கிறது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், அதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், வங்கியில் சம்பந்தப்பட்டவர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும்.
இனிமேல் இம்மாதிரி நடக்காமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டபோது அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் நகைச்சுவையாக ஒன்றைக் குறிப்பிட்டார். அதாவது, ரிசர்வ் வங்கியை Prompt Corrective Actionக்குக் கீழ் கொண்டுவர வேண்டுமென்றார். கட்டுப்படுத்த வேண்டிய, கண்காணிக்க வேண்டிய அமைப்பே சரியாகச் செயல்படாவிட்டால் என்ன செய்வது?
இதற்கிடையில், அரசு ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது. அதன்படி, இப்படி இழப்பு ஏற்பட்டால், வங்கியில் டெபாசிட் செய்தவர்களும் இழப்பில் பங்கேற்க வேண்டியிருக்கும். 
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் முடிவற்றதாக நீள்கிறது. இந்தமோடி அரசின் புதிய சட்டம் மூலம் இந்தியா படுகுழிக்குள் வீழ்வது மட்டுமல்ல.
வங்கிகளை நம்பி,அரசை நம்பி தனது அவசர,அவசிய,எதிர்காலத்துக்கென தனது முதலை,சேமிப்பை வங்கிகளில் போட்டுவைத்துள்ள சாதாரண பொதுமக்கள்தான் பெரும் இழப்பை எதிர்கொள்ளப் போகிறார்கள்.
நிதிச் சந்தையில் ஒவ்வொரு முறை தவறு நடக்கும்போதும் அது சாதாரண மக்களைத்தான் பாதிக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதும் அதுதான் நடந்தது. பல பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு, வெளியில் சொன்னதைவிட அதிகமாக இருப்பதைக் கண்டறிந்த ரிசர்வ் வங்கி, அவற்றுக்கு சில கட்டுப்பாடுகளை (Prompt Corrective Action) விதித்தது. அதுபோல எஸ் வங்கிக்கு ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்திருந்தால் இவ்வளவு பெரிய சேதத்தை தடுத்திருக்கலாம்.
0-----------------------------8----------------------------0

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது வரும்?

ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர். அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்கிறது.
அதாவது அடுத்த ஆண்டு பாதியில்தான் மருந்து தயார் நிலையில் இருக்கும்.
இவை எல்லாம் எதிர்பார்ப்புகள் மட்டுமே. இந்த தடுப்பு மருந்துகளை உருவாக்க புதிய செயல்முறையை பின்பற்றுவதால் அனைத்தும் சரியானதாக செல்லும் எனக் கூற முடியாது.
ஏற்கனவே நான்கு வகையான கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் சாதாரண சளியைதான் உருவாக்கும். ஆனால் இவை எதற்கும் தடுப்பு மருந்து இல்லை.

இது எல்லா வயதினரையும் காப்பாற்றுமா

இந்த தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான வாய்ப்பு வயோதிகர்களிடம் குறைவாகவே இருக்கும். இதற்கு தடுப்பு மருந்தை குறை சொல்ல முடியாது. வயோதிகர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த மருந்துகளை ஏற்று வினை புரியும் அளவுக்கு வலுவாக இருக்காது.
எல்லா மருந்துகளுக்கும் ஏதாவது ஒரு பக்க விளைவு இருக்கும். ஆனால் ஆராய்ச்சியில் இருக்கும் ஒரு மருந்து என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்மால் கூற முடியாது.
தடுப்பு மருந்து தயாராகும் வரை என்னென்ன சிகிச்சை வழங்கப்படும்?
தடுப்பு மருந்து, வைரஸ் பரவுவதைத் தடுக்கும். இப்போது அவ்வாறு பரவுவதைத் தடுக்க சுகாதாரம் பேணுவது மட்டுமே ஒரே வழி.
பெரும்பாலான மக்களுக்கு கொரோனா வைரசின் பாதிப்பு லேசானதாக மட்டுமே இருக்கும். வைரஸ் தொற்றை குணப்படுத்துவதற்கான சில மருந்துகள் நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய மருந்துகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேலை செய்யும் என்று உறுதியாகக் கூற முடியாது.

தடுப்பு மருந்து எப்படி தயாரிக்கப்படும்?

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தீங்கற்ற முறையில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அடையாளம் காட்டும் பணியை தடுப்பு மருந்துகள் செய்கின்றன. அதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை படையெடுப்பாளர்களாக அடையாளம் காண்டு அதனுடன் எப்படிப் போராடுவது என்பதைக் கற்கும்.
உண்மையான நோய்க் கிருமிகள் எப்போதாவது உடலைத் தாக்கும்போது, அந்த தொற்றினை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது உடலுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
நோய்க்குக் காரணமாகும் வைரசைக் கொண்டே தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முறையே பல பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, மணல்வாரி (மீசல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள், அவற்றுக்கு காரணமான வைரஸ்களின் வீரியம் குறைந்த வடிவத்தைக் கொண்டே தயாரிக்கப்பட்டன.
ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள், அந்த நோய்க்கிருமிகளின் பரவலாக தாக்கும் வகைகளை எடுத்துக் கொண்டு அவற்றை முற்றிலும் செயலிழக்க வைத்து உருவாக்கப்படுகின்றன.
ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் புதிய மற்றும் அதிகம் ஆராயப்படாத ப்ளக் அண்ட் ப்ளே தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன. ஏனென்றால் கொரோனாவின் மரபணுக் குறியீடு, சார்ஸ்-கோவ்-2, நமக்குத் தெரியும். தற்போது அந்த வைரஸ் உருவாகும் முறை நமக்குத் தெரிந்திருக்கிறது.
இதனால் சில ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவைரஸின் மரபணுக் குறியீட்டை எடுத்து பாதிப்பு இல்லாத மற்ற வைரஸ்களுக்குள் செலுத்துகின்றனர்.
அப்படி செய்தால் ஒருவரை நாம் பாதிப்பு எதுவும் இல்லாத வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கலாம். அதை எதிர்ப்பு சக்தி எளிதில் வென்றுவிடும்.
வேறு சிலர் டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ-வில் சிறிது சிறிதாக கொரோனாவின் மரபணுக் குறியீட்டை ஏற்றி அதற்கான தடுப்பு திறனை நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பிலேயே உருவாக்குகிறார்கள்.
8--------------------------------------+----------------------------------8
மெய்நிகர் பணம் தடை நீக்கம் சரியாகுமா!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் விர்ச்சுவல் கரன்ஸி பயன்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். ரிசர்வ் வங்கியின் இந்த தடை விகிதாச்சார சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 அரசாங்கம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் அரசியல் சாசனப் பிரிவு 19(1)(g)-ல் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த பிரிவு தான் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எந்தவொரு தொழிலையும் செய்ய அல்லது எந்தவொரு வர்த்தகத்திலும் ஈடுபட மேற்கொள்ள உரிமையை வழங்குகிறது.
2018ம் ஆண்டு ஆர்.பி.ஐ வெளியிட்ட சுற்றறிக்கையில், வங்கிகள் விர்ச்சுவல் கரன்சி பரிவர்த்தனை மற்றும் தனிநபர் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதாக அறிவித்தது.
 இந்த நாணயங்களுக்கு ஃபியட் அடிப்படை இல்லை என்றும், பொதுநலன் கருதி இந்த நாணயங்களின் பயன்பாட்டிற்கு வங்கிகள் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விர்ச்சுவல் கரன்சிகளுக்கான வரையறை ஏதும் இல்லை. சிலர் மதிப்பினை மாற்றும் முறை என்கிறார்கள். சிலர் நல்ல ப்ரோடக்ட்கள் மற்றும் வர்த்தகம் என்கிறார்கள். விர்ச்சுவல் கரன்சிகள் என்பவை இவை தான் என வரையறை செய்ய முற்பட்ட ஒவ்வொரு கோர்ட்டும் “சமண சமயத்தில் வரும் அனேக்கந்தவடா தத்துவத்தில் வரும் யானையை வரையறுக்க சென்ற நான்கு பார்வையற்றவர்கள்” போலவே செயல்பட்டுள்ளது என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
புதுவகை விர்ச்சுவல் கரன்சிகளை கண்டறிந்த சட்டோஷி நகமோடோ பிட்காய்னகளை “புதிய மின்னணு பணத் திட்டம்” என்று வரையறை செய்துள்ளார். விர்ச்சுவல் கரன்சிக்கள் தொடர்பாக மாற்றங்களை உருவாக்க ஒரு மத்திய ரெகுலேட்டர்கள் இருக்க முடியாது என்பதையே இது உறுதி செய்கிறது. 
ஏனெனில் இந்த கரன்சிகள் உலகளவில் காணக்கூடிய லெட்ஜரில் வைக்கப்படும், தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் அணுகக்கூடியவையாக இவை இருக்கும். இத்தகைய விர்ச்சுவல் கரன்சியின் அனைத்து பயனர்களும் நடைபெறும் பரிவர்த்தனைகளைக் காணவும் கண்காணிக்கவும் முடியும்.
விர்ச்சுவல் கரன்சி என்பது ஆன்லைனில் வர்த்தகம் செய்யப்படும் அனைத்து வகையான ஃபியட் அல்லாத நாணயங்களளையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். விர்ச்சுவல் கரன்சிகள் அனைத்தும் உள்ளூர் விர்ச்சுவல் நெட்வொர்க்குகளில் உருவாக்கப்படுகின்றன, விநியோகிக்கப்படுகின்றன மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 
மறுபுறம், கிரிப்டோகரன்சிகள் கூடுதல் பாதுகாப்பைக் கொண்டுள்ளன. கிரிப்டோகிராஃபிக் முறைகள் நாணயத்தையும் அவை வர்த்தகம் செய்யப்படும் நெட்வொர்க்கையும் பாதுகாப்பானதாக மாற்ற பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான கிரிப்டோகரன்சிகள் இப்போது பிளாக்செயின் அல்லது விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன, இது நெட்வொர்க்கில் உள்ள அனைவருக்கும் உலகளவில் நிகழும் பரிவர்த்தனைகளை கண்காணிக்க அனுமதிக்கிறது.

கிரிப்டோகரன்சிகள் ஆபத்தானவையா?

உலக அளவில் விர்ச்சுவல் கரன்சிகள் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு புரிதலும் அற்ற தடையானது இந்த அமைப்பையே பயன்பாட்டில் இருந்து நீக்கிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளதால் இதற்கான முறையான ஒழுங்குமுறைகள் ஏதும் இல்லை. 2013ம் ஆண்டு முதன்முறையாக ஆர்.பி.ஐ இந்த நாணயங்களை வைத்திருப்பவர்களை எச்சரிக்கை செய்தது. அடுத்த ஆண்டு, நிதி நடவடிக்கை பணிக்குழு இந்த கரன்சி குறித்த முறையான பயன்பாடுகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் வெளிப்படுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
 மற்றொரு அறிக்கையில், பயங்கரவாத நிதிக் குழுக்களிடையே இத்தகைய நாணயங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக அது மீண்டும் கூறியது.
ஆர்.பி.ஐ ஏன் இந்த கரன்சிகளை தடை செய்தது?
அடிப்படைய ஃபியாட்கள் இல்லாதது, ஏற்ற இறக்கங்கள் கொண்டது, உலக அளவிலான பண மோசடி விதிகளுக்கு எதிராக இருப்பது போன்ற காரணங்களால் ஆர்.பி.ஐ இந்த கரன்சியை தடை செய்தது. ஒருபுறம் தரவுகளின் பாதுகாப்புகள் குறித்த அபாயம், கருத்துகள் மற்றொரு புறம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டது. 
உச்ச நீதிமன்ற விவாதங்களில் ஆர்.பி.ஐ. இந்த கரன்சிகள் தொற்றுநோய் போல் பரவுவதை விரும்பவில்லை எனேறும், பொதுநலம் கருதியே இந்த கரன்சிகளை பயன்படுத்தவும், பணப்பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.

மனுதாரர்களின் கருத்து என்ன?

நான் ஃபையட் கரன்சி, கரன்சி கிடையாது. எனவே உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் “ஆர்.பி.ஐ வரம்புக்கு வெளியே இது அமைகிறது. இதில் ஆர்.பி.ஐ தடை விதிக்க இயலாது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த தடையானது மிகவும் கடினமானது. இந்த கரன்சி குறித்த ஆராய்ச்சியை ஆர்.பி.ஐயோ மத்திய அரசோ மேற்கொள்ளவில்லை என்பதை மேற்கோள்காட்டினர். இந்தத் தடை “தார்மீக அடிப்படையில்” மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்ட மனுதாரர்கள், அமலாக்க இயக்குநரகம் அல்லது இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் போன்ற பிற கட்டுப்பாட்டாளர்களால் எடுக்கப்பட்டபடி, ரிசர்வ் வங்கி காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு அணுகுமுறையை பின்பற்றியிருக்க வேண்டும் என்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

புதன்கிழமை 180 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வெளியிட்டது. அடிப்படை உரிமைகள் மீது நேரடி மற்றும் உடனடி தாக்கம்; பெரிய பொது நலன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்; குடிமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம்; தடைசெய்யப்பட்ட சட்டத்தின் உள்ளார்ந்த தீங்கு விளைவிக்கும் தன்மை அல்லது பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறன் அல்லது போக்கு; குறைந்த கடுமையான கட்டுப்பாட்டை விதிப்பதன் மூலம் அதே பொருளை அடைவதற்கான சாத்தியம் ஆகியவை குறித்த விகிதாச்சார சோதனையை மேற்கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியது. உள்நாட்டு ஏஜென்சிகளைத் தவிர, பிற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “லைட்-டச்” அணுகுமுறையை ரிசர்வ் வங்கி பின்பற்ற முடியாது என்று நீதிமன்றம் கூறியது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிட முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
0--------------------------+-----------------------0
மறைந்த மாதவ்ராவ் சிந்தியாவின் அமிர்தமஹோத்ஸவ (75 வது பிறந்த நாள்) நாளில், அவரது மகன் ஜோதிராதித்யா இறுதியாக கமல்நாத்தின் கீழ் இருந்து கம்பளத்தை இழுக்க முடிவு செய்தார்.
 மத்திய பிரதேசத்தின் நகைச்சுவையான, நிலப்பிரபுத்துவ அரசியலின் ஆண்டுகளில் இது மிகவும் மறக்கமுடியாத ஹோலியாக இருக்கும். ராஜ்யசபா இடங்கள் மீதான சண்டையாகத் தொடங்கியவை அரசாங்கத்தின் மறைவில் உச்சக்கட்டத்தை அடையக்கூடும்.
இது எப்போதும் இந்து மகாசபையுடன் இணைந்திருக்கும் சிந்தியா வம்சத்திற்கு ஒரு வகையான வீடு திரும்பும். ஜோதிராதித்யாவின் பாட்டி ராஜ்மதா மகாசபாவின் மிக உயரமான தலைவர்களிலும் பின்னர் ஜனசங்கத்திலும் இருந்தார். அடல் பிஹாரி வாஜ்பாயுடன் பாஜகவின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். அவரது தந்தைவழி அத்தைகள் - வசுந்தரா மற்றும் யசோதரா இருவரும் பாஜகவுடன் இருந்தனர். மாதவ்ராவ் காங்கிரசுடன் மிக நீண்ட காலமாக தொடர்பு கொண்டிருந்த போதிலும், அவர் 1972 ஆம் ஆண்டில் ஜனசங்க எம்.பி.யாகத் தொடங்கினார். இந்திரா காந்தியின் ஆதரவுடன் அவசரகாலத்தில் சிறையிலிருந்து தப்பித்த அவர் 1977 ஆம் ஆண்டில் ஒரு சுயாதீன எம்.பி. ஆனார். பின்னர், 1980 ல் காந்தி ஆட்சிக்கு வந்தபோது, ​​அவர் காங்கிரசில் சேர்ந்தார், 1996 ஆம் ஆண்டு ஹவாலா ஊழல் வரை தொடர்ந்தார், அவர் மீண்டும் போராடி சுதந்திரமாக வென்றபோது, ​​பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.
அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு.
--------------8-------------++++-----------8----------------