ஞாயிறு, 22 மார்ச், 2020

கொந்தகை எலும்புக்கூடு கூறும் தமிழன் வரலாறு.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்துவரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொந்தகை கிராமத்தில் இந்த எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது.
கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. இந்த நிலையில், கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்து வந்தன.
கொந்தகை பகுதியில் இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. முதல் குழியில் 2 முதுமக்கள் தாழிகளும், 2வது குழியில் 8 முதுமக்கள் தாழிகளும், மூன்றாவது குழியில் 2 தாழிகளும் கிடைத்தன.
இந்த நிலையில், கொந்தகையில் இன்று நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்தப் பகுதியில் வசித்தவர்கள் இருவிதங்களில் உடல்களைப் புதைத்துள்ளனர். ஒன்று தாழியில் வைத்து புதைத்தல். மற்றொன்று குழியைத் தோண்டி புதைப்பது
"இப்போது குழியைத் தோண்டி புதைக்கப்பட்ட உடலின் எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன. தொல்லியல் ஆய்வுகளில் ஒவ்வொரு குழியாகத்தான் ஆய்வு நடக்கும் என்பதால், தற்போது தோண்டப்பட்டுள்ள குழியில் இடுப்பு வரையிலான பகுதிகளே வெளிப்பட்டிருக்கின்றன. அருகில் உள்ள பகுதியையும் தோண்டும்போது முழு எலும்புக்கூடும் கிடைக்கக்கூடும்" என பிபிசியிடம் தெரிவித்தார் மாநில தொல்லியல் துறையின் இயக்குனர் சிவானந்தம்.
இந்த எலும்புக்கூட்டின் வயது, கீழடியில் கிடைத்த பொருட்களின் வயதை ஒத்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இதன் வயது துல்லியமாகத் தெரியவரும்.
மேலும், இரண்டு முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருட்களும் கவனத்துடன் வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன.
கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை தற்போது நடத்திவருகிறது.
இந்த நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இவற்றில் கொந்தகை ஒரு புதைமேடு என கருதப்படுகிறது. கீழடி பகுதியில் வாழ்ந்தவர்கள் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 120 ஏக்கர் பரப்பளவில் 50 லட்ச ரூபாய் செலவில் இந்த அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2014ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையே நடத்திவருகிறது.
---------------------------------------------------- .
கொரோனாவால்
அவமானப்பட்ட சூப்பர் சங்கி
இந்தியாவை தொற்றியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் நாட்டின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது. தொற்று நோயாகப் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் தேசிய ஊரடங்கு உத்தரவு நாளை அமல்படுத்தப்படும் என நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் காணொளி காட்சி மூலம் தெரிவித்தார் பிரதமர் மோடி. வைரஸ் பாதிப்பு தீவிரம் அடையும் போது தொடர்சியாக ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவருவதற்கான முன்னோட்டம் இது என்பதே அவர் அறிவித்ததன் நோக்கமாக இருக்கிறது.

The Print

The Print
ஆனால், பா.ஜ.க ஆதரவாளர்களோ, மோடி எதை அறிவித்தாலும் அதுவே உலகின் தலைசிறந்த அறிவிப்பு என கருதி, பல போலி செய்திகளையும், வதந்திகளையும், புராணக் கட்டுகதைகளையும் திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த வதந்தியை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு கட்சிகளும், சில கும்பல்களும் தொடர்சியாக செய்துவருகிறது.
அந்தவகையில் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா அழியும் என்றும், கொரோனா வைரஸின் ஆயுட்கலாம் 12 மணிநேரம் என்பதால்,14 நேரம் மக்கள் வீட்டுக்குள் இருக்க சொல்லியிருக்கிறார் என்றும், இதனால் வைரஸின் சங்கிலித் தொடரை இல்லாமல் செய்ய முடியும் என்றும், மக்கள் வீட்டுக்குள் இருக்கும்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து கொரோனா எதிர்ப்பு மருந்து தூவப்போகிறார்கள் என்றும் வதந்தியை பரப்பி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் குறித்து பொய் தகவல்களைப் பரப்பிய ரஜினி : வீடியோவை நீக்கிய ட்விட்டர் #Fakenewsrajini
இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளர். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 12 முதல் 14 மணி நேரம் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தினால் மூன்றாவது கட்டத்திற்கு செல்லாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பலர் ரஜினியின் இந்த பதிவை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், கொரோனாவின் ஆயுட்காலம் தொடர்பாக ரஜினி பேசிய அந்த வீடியோ ஆதரமற்றது என தெரிவித்து ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது.
பாஜக சங்கிகள் குருமூர்த்தி,ரங்கராஜ்பான்டே,மாரிதாஸ் போன்றோர் எழுதித்தருவதை வாசித்து வருவதால் தமிழக மக்களிடையே  மாட்டிக்கொண்டு அவமானப்பட்டது காணாதென்று இப்போது உலக அளவில் அசிங்கப்பட்டுள்ளார் ரஜினி.
என்ன செய்வது திரையுலகில் விஜய்யிடம் இழந்த சூப்பர் ஸ்டார் இடத்தை சூப்பர் சங்கி பட்டம் மூலம் ஈடு செய்ய எண்ணுகிறார்.
இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், #FakenewsRajini என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.
அதே போல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டிருந்த வீடியோவையும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பற்று பொய்களை பரப்புவர்களை கைது செய்வதாக்  கூறி ஹீலர் பாஸ்கரை கைது செய்தவர்கள் நடிகர் ரஜினி,லதா மேடம்,சாணிக்கரைசல் ,மாட்டு மூத்திர ஆதரவாளர்களை இதுவரை ஏன் கைது செய்யவில்லை.
பாஜகவினருக்கு விதிவிலக்கு உச்சிநீதிமன்றம் கொடுத்துள்ளதா.

-------------------------------------------------
கொரோனா
இந்தியா எந்தக் கட்டத்தில் உள்ளது?
---

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நாளை நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ முறை கடைபிடிக்கப்பட இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா 2-வது கட்டத்தில் உள்ளது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Corona Alert : “நாம் இரண்டாம் கட்டத்தில் இல்லை... நிலைமை இன்னும் படுமோசம்” - எச்சரிக்கும் மருத்துவர்கள்!
The Print
எந்தவொரு தொற்று நோய் பரவலையும் நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். முதல் கட்டம் : வைரஸ் எங்கிருந்து வந்தது எனத் தெளிவாகத் தெரியும். உதாரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓமன் நாட்டிலிருந்து வந்தவர்.
இரண்டாவது நிலை : வைரஸ் பாதித்த இடங்களுக்குச் சென்றவர்கள் அங்கு செல்லாதவர்களுக்கு பரப்புதல். இந்த கட்டத்தில் Contact tracing மூலம் யார் மூலமாக பரவியது எனக் கண்டறிய முடியும். உதாரணமாக, டெல்லியில் உயிரிழந்த 68 வயது மூதாட்டிக்கு, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி சென்றதால் வைரஸ் பாதித்த தனது மகனிடமிருந்து வைரஸ் பரவியது.
மூன்றாம் நிலை : சமூக பரவல். யாரிடமிருந்து வைரஸ் பரவியது என்பதைக் கண்டறிய முடியாது. இந்த நிலையில், யாரிடமிருந்தும், யாருக்கு வேண்டுமானாலும் பரவும் அபாயகரமான சூழல் ஏற்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு எங்கிருந்து வைரஸ் பரவியிருக்கக் கூடும் என்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே நாம் நோய் பரவலின் மூன்றாவது கட்டத்தை ஏற்கெனவே அடைந்துவிட்டோமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
Corona Alert : “நாம் இரண்டாம் கட்டத்தில் இல்லை... நிலைமை இன்னும் படுமோசம்” - எச்சரிக்கும் மருத்துவர்கள்!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயரப்போகிறது என்று சில மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மார்பு அறுவை சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் அரவிந்த்குமார் கூறுகையில், “நாம் இன்னும் 2-வது கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கும் மக்கள் உண்மையில் கண்களை மூடிக்கொண்டுள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்.
கொரோனா தொற்று சமூகத்தில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கிறது. நிலைமை மிகமோசமாக இருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்