முதல்வர் இவர்தான்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் முதலாக அடி எடுத்து வைத்த மாநிலம் கேரளா. தற்போது அங்கு 200 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.
கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்தவுடனேயே, ஆரம்பத்திலேயே தற்காப்பு நடவடிக்கைகளில் களம் இறங்கிவிட்டது தமிழகம். கேரளா ஏற்கனவே எபோலா வைரஸால் பாதிக்கப் பட்ட அனுபவம் இருப்பதால் கேரளா மேற்கொண்ட தடுப்பு மற்றும் மருத்துவ நிவாரண முறைகளைக் கண்டு வியந்தவர்கள் அதே போன்று தங்கள் மாநிலத்திலும் நடை முறைப்படுத்துகின்றனர். அந்த வகையில் தமிழகமும் அதனை ஓரளவுக்கு பின்பற்றி வருகிறது.
வெளிநாடுவாழ் இந்தியர்களை அதிக அளவில் கொண்ட மாநிலமான கேரளா, கொடூர கொரோனாவின் தாக்கத்திலும் முதன்மையிலிருக்கிறது. ஆனாலும் துவண்டுவிடாத பினராய் விஜயன் தடுப்பு மற்றும் நிவா ரண நடவடிக்கைகளைத் துணிச்சலாகவே மேற்கொள்கிறார். ஏனெனில் வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் தங்களின் தாயகம் வந்து போவதுதான் அடிப்படைக் காரணம்.
மார்ச் 20-ல் மட்டும் ஒரே நாளில் பிரிட்டிஷ், துபாயிலிருந்து வந்தவர்களால் காசர்கோட்டில் 6, எர்ணாகுளத்தில் 5 பேர், பாலக்காட்டில் ஒருவர் என 12 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டு “ஐஸோலேஷன்’ எனப் படும் தனிமைப்படுத்தும் வார்டின் அதி தீவிரக் கண்காணிப்பில் வைக்கப் பட்டவர்களின் கொரோ னா பாஸிட்டிவ் எண்ணிக்கை 52. 
மாநிலம் முழுவதும் அந்தந்த மாநி லங்களின் மருத்துவர்களின் கண்காணிப்பி லிருப்பவர் (வீடுகளில்) கள் சுமார் பல ஆயிரம் பேர்கள். இவர்களில் 3 ஆயிரம் பேர்கள் அவரவர்களின் வீடுகளிலேயே தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அந்தந்த சரகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்களால் அன்றாடம் கவனிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலமே பினராய் விஜயனுக்கு தோளுக்குத் தோள் நிற்கிறது. மட்டுமல்ல மூன்றாம் நிலையில் கொரோனாவின் தாக்கம் வீரியம் கொண்டவையாக இருக்கும் என்பதால் பலவிதமான முன்னேற்பாடுகள்.
பிளான் ஏ திட்டப் படி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று 40 படுக்கைகள், பிளான் பி யில் தனியார் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் 500 படுக்கைகள், பிளான் சி படி நட்சத்திர ஹோட்டல்கள், பழைய மருத்துவமனைகள், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள் போன்றவைகளை ஒருங்கிணைத்து சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் எனப் பக்காவாக அமைக்கப்பட்டு மருத்துவர்கள் உபகரணங்கள் என்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இப்படி என்றால் மாநிலத்திலுள்ள 19 மாவட்டங்களிலும் இதே போன்று நடவடிக்கைகள். வரும் மூன்றாம், நான்காம் நிலைகளில் கொரோனாவின் தாக்கம் கடுமையாகலாம், பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயர வாய்ப்பு என்பதால் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
50 கோடி மதிப்பீட்டில் ஏப்ரலில் மாநிலம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றில் மக்களுக்காக இருபது ரூபாய் குறைந்த கட்டணத்தில் உணவு சப்ளை செய்யப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனரமைப்பிற்காக அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐந்நூறு கோடி தயார் நிலையில். கேரளா முழுவதிலும், நிறுத்தி வைக்கப்பட்ட காண்ட்ராக்ட் பணிகளின் பில் தொகை ஏப்ரலில் செட்டில் செய்யப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பதினான்காயிரம் கோடி.
கொரோனா தாக்க நேரத்தில் ஆட்டோக்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் மாநிலம் முழுவதிலுள்ள ஆட்டோக்களுக் கான பிட்னஸ் சார்ஜ் எனப்படும் எப்.சி. கட்டணத்தில் முழு விலக்கு.
சிறு வாடகை வாகனங்கள், ஒப்பந்தப் பேருந்துகளுக்கு அரசு வரிக்கட்டணம் குறைப்பு. போக்குவரத்து டாக்ஸிகள் கட்டுகிற மூன்று மாதத்திற்கான அரசு வரிக்கட்டணத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. மாநிலம் முழுவதிலும், மின்கட்டணம், குடிநீர்க்கட்டணம் செலுத்துவதில் ஒரு மாதம் அலவன்ஸ் அளிக்கப்படுகிறது. தவிர, கேரளாவிலுள்ள அனைத்து திரையரங்குகளின் கேளிக்கை வரியினைக் குறைப்பதற்காகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 இத்தனைக்கும் மேலாக, மாநில வங்கிகளின் அமைப்புச் செயலாருடன் பேசிய முதல்வர் பினராய்விஜயன் கேரளாவின் அனைத்து வங்கிகளிலும், கடன் பெற்றவர்களிடம் ஒரு வருடம் கடன் தொகையைக் கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது. பாக்கித் தவணைக்காக அவர்களின் இனங்களை ஜப்தி செய்யவும் கூடாது என்று வலியுறுத்தியதை வங்கிகளின் சம்மேளனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சுற்றுலா, எஸ்டேட் தொழில் அண்டிப்பருப்பு தொழிற் சாலைகள் உள்ளிட்ட சிறு நிறுவனங்களின் மூலமாகவே சொற்ப அளவிலான வருமானத்தைக் கொண்ட கேரளா, இந்த பேரிடரில் இத்தனை பெரிய தொகையை நிவாரணமாகக் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும் நடைமுறைப்படுத்துவது அசாதாரணம் என்கிறார்கள். 
இவைகளனைத்தையும் சுட்டிக்காட்டி தங்களின் மாநிலத்திற்கு முறையாக வரவேண்டிய நிலுவை நிதியினை உடனே விடுவிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் பினராய்விஜயன்.
இதனிடையே கேரள காவல்துறை கொரோனா தடுப்பு முறைபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க் அணிந்து கைகளில் சோப்பு கொண்டு கழுவும் முறையைக் காவலர்கள் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டு கானாபாட்டுப் பாடியபடி குத்தாட்டம் மூலம் வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.
இரு பெரும் மழை வெள்ளங்களால் சிதைக்கப்பட்ட கேரளாவைப் பல்வேறு வழிகளில் புனரமைத்து மீட்டெடுத்த பினராய் விஜயன், கொடூரக் கொரோனாவின் தாக்கத்திலும் மீட்டெடுக்க அசுரபலத்துடன் போராடி வருகிறார்.
இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசை நம்பாமல்,கெஞ்சாமல் துணிவுன்,மக்கள் துணையுடன் போராடும் முதல்வர் பிரனாயி விஜயன்தான் முதல்வர்
.
---------------------------------------------------------------------

இந்தியாவில் புதிதாக 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 124 பேர் குணமடைந்துள்ளனர். 1,238 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- மத்திய சுகாதாரத்துறை தகவல்.
------------------------------------------
நெல்லையில் மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது.
-  நெல்லைமாவட்ட ஆட்சியர் தகவல்.
---------------------------------------
"தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கலீல் பேரில் 515 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தி விட்டோம். மீதமுள்ள 616 பேரை தேடி வருகிறோம். அவர்கள் தாங்களாகவே முன்வந்து சோதித்துக்கொள்வது நல்லது!"
- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
-------------------------------------------

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்குகிறது.
-------------------------------------------------------
20 பெண்களுடன் தனிமையான மன்னர்
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் தாய்லாந்து மன்னர், தன்னை 'தனிமை'ப்படுத்திக் கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. தாய்லாந்து நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தாய்லாந்தில் 1,651 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலொங்கோன் என்ற ராமா எக்ஸ், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதில் என்ன வியப்பு என்கிறீர்களா? இருக்கிறது...
தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலொங்கோன், ஜெர்மனியின் ஜூக்ஸ் ஸ்ப்லிட்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஒரு பிரமாண்ட ஹோட்டலில் உள்ள மொத்த அறைகளையும் 'புக்' செய்து, துணைக்கு 20 பெண்களுடன் அங்கு தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தாய்லாந்து மன்னரை விமர்சித்தால் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனும் கடுமையான கட்டுப்பாடு அங்கு உண்டு. ஆனாலும், மக்களைத் தாக்கும் கொரோனா தொற்று நடவடிக்கையில் இறங்காமல், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மன்னரை தாய்லாந்து மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தாய்லாந்தை விடுத்து, வெளிநாடுகளிலேயே சுற்றித் திரியும் மன்னருக்கு எதிராக சமீபத்தில் #WhyDoWeNeedKing? எனும் ஹேஷ்டேகை அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக்கியுள்ளனர்.
-------------------------------------------

உலக அளவில்... 

மொத்த பாதிப்பு             -     8,01,117
மொத்த மரணம்             -     38,770
புதிய மரணங்கள்          -     987
குணமடைந்தவர்கள்   -     1,72,319

பாதிக்கப்பட்டோர் (மரணம்)

அமெரிக்கா        -     1,64,359 (3,173)
இத்தாலி               -     1,01,739 (11,591)
ஸ்பெயின்           -     94,417 (8,189)
சீனா                      -     81,518 (3,305)
ஜெர்மனி             -     67,051 (651)
ஈரான்                   -     44,605 (2,898)
பிரான்ஸ்             -     44,550 (3,024)
பிரிட்டன்             -     22,141 (1,408)
ஸ்விட்சர்லாந்து -     16,176 (373)
பெல்ஜியம்         -     12,775 (705)
நெதர்லாந்து      -     11,750 (864)
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 பேராக  உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றவாது நிலையான சமூக பரிமாற்றம் என்ற அபாய கட்டத்திற்கு செல்லவில்லை. உள்ளூர் பரிமாற்ற அளவில்தான் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமங்கள், தகுதிச் சான்றிதழ் ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் செவ்வாயன்று (மார்ச் 31) ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தனி மருத்துவமனையாக   ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட எந்தவொரு தொழிலாளர்களிடமும் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்கள் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.  சோதனை முடிந்தவுடன்,100 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று  கூறியுள்ளது.
கோவிட் குணப்படுத்த வாய்ப்புள்ள 3 மருந்துகள் தயாராக உள்ளதாக ரஷ்ய விஞ்ஞான அகாடமியின் துணைத்தலைவரும், உயிரி மருத்துவ அறிவியல் பிரிவின் தலைவருமான விளாடிமிர் செகோனின் தெரிவித்துள்ளார். 
பொருளாதார வீழ்ச்சி காரணமாக  கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய மருத்துவப் பொருட்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. சீனா வழங்கிய பொருள்கள் மிகவும் நல்ல பொருள்கள். ரஷியாவும் நல்ல மருத்துவப் பொருள்களை வழங்கியது. மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார்.
உ யிரியல் இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் கொரோனா வைரஸ் பரவல்  விரைவில் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த இஎம்ஐ தவணை தேதி நாளை முதல் துவங்கும் நிலையில், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோட்டக் உள்ளிட்ட வங்கிகள் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளன.
ஏர்டெல், பி.எஸ்.என்.எல். சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளன. ஏர்டெல்  ப்ரீபெய்டு பேக் முடிவடையும் காலத்தை ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். ஏப்ரல் 20 வரை, ப்ரீ பெய்டு காலத்தை நீட்டித்துள்ளது. 
தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆகியோர், மத்திய வேளாண் துறை உயர் அதிகாரிகளுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’  மூலம் ஆலோசனை நடத்தினர். ஏப்ரல் 2-க்குள்  தமிழக விவசாயிகளுக்கான நிவாரண நிதியை விடுவிப்பதாக, மத்திய அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். 
கேஸ் சிலிண்டர் டெலிவரி ஊழியர்கள், கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தால், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று  இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஊரடங்கை முன்னிட்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, நெல் கொள்முதல் செய்யும் பணியை வாணிபக்கழகம் நிறுத்தியுள்ளது. 
கொரோனா தொற்று நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான வெண்டிலேட்டர்கள், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்பு சாதனங்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பட  நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார்.
செவ்வாயன்று மாலை 4.45 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.  தமிழகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம்  தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஊர் திரும்ப முடியாமல் இந்தியாவில் ஆங்காங்கே சிக்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்திட மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சிறப்பு இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் குவியலான பாதிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் முதலில் பாதிப்பு குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில் செவ்வாயன்று ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மொத்த பாதிப்பு 2,337 ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் அரசுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியிருப்பது போலியாக பரப்பப்படுகிற வதந்திகள்தான் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வேகமாக சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில், இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் தளத்தில் உள்ள மருத்துவர்கள், ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரிலிருந்து ஒரே நேரத்தில் 6 பேருக்கு அளிக்கும் விதத்தில் சிறிய அளவிலான கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அடுத்த 30 நாட்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு மிக மிக முக்கியமான நாட்கள் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
பெல்ஜியத்தில் கொரோனாவுக்கு 12 வயது சிறுமி மரணடைந்துள்ளார். இது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது என்று குறிப்பிட்ட பெல்ஜியம் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் இமானுவேல், உலகில் மிக குறைந்த வயது கொரோனா மரணம் இது என்றார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள், நாட்டிற்குள் வந்ததால் தான் கொரோனா பரவியது என்று தவறாக முத்திரை குத்தாதீர்கள்; அவர்கள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள்; அவர்களை குற்றவாளிகளாக கருதி விடாதீர் என பினராயி விஜயன் கூறியுள்ளார். உண்மைதானே?
-----------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?