கொரானாவுக்குப் பின்னான உலகு....

பொய்க் கணக்கு நிதி........
-------------------------------------------------
கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares எனும் நிதி அளிக்கும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி. பிரதமரின் நிவாரண நிதிக் கணக்கில் செலுத்தப்படும் தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அரசுக்கு வர வேண்டிய இந்த நிவாரணத் தொகை தனியார் துவங்கிய ஒரு சேரிட்டபிள் ட்ரஸ்ட்டுக்கு போகிறது. இதற்கு வழங்கும் பணம் அனைத்தும் வருமான வரி விலக்குக்கு உட்பட்டது. இதை மத்திய தணிக்கைக் குழு எனப்படும் CAG தணிக்கை செய்யாது. தனியான ஆடிட்டர்கள்தான் இந்த நிதியை தணிக்கை செய்வார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது CSR தொகையை (Corporate Social Responsibility) இந்த தனியார் கணக்கில்தான் கோடிகோடியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 
நாட்டு மக்கள் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாயை PM cares நிதிக்கு வழங்கியுள்ளனர்.




கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அரசு, இன்னல்களை அனுபவிக்கும் மக்களிடமே மீண்டும் கையேந்தி நிற்கிறது. 
படேலுக்கு பிரமாண்ட சிலை போன்ற தேவையற்ற கட்டுமைப்புகளுக்காக பல்லாயிரம் கோடியைச் செலவழிக்கும் அரசு பேரிடர் காலத்தில் நிதிக்காக மக்களைச் சுரண்டுகிறது.

கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் நரேந்திர மோடி தலைமையிலான இந்த சேரிட்டபிள் டிரஸ்ட் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை பொறுப்பில் வைத்து கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்து வருகிறது.

பிரதமரின் நிவாரண நிதி திட்டம் (Prime Minister's National Relief Fund) ஏற்கனவே இருக்கும்போது இந்தப் புதிய திட்டம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.




PM Cares மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். 
இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது.
இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது. 
இப்படியாக, மக்கள் பணத்தை கேட்பாரின்றி ஒரு கணக்கில் குவித்து வருகிறது மோடி அரசு.
இது குறித்து ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, இந்த நிதி குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நிதி திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசோ இந்த pm (மோடி ) கேர் தனியார் அமைப்புக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொடுக்க அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதுவும் 2021 மார்ச் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்யக்கூறியுள்ளது.
--------------------------------------+8+-------------------------------


ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை யாரெல்லாம் உட்கொள்ளலாம்?


மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகள், கோவிட்-19 நோய் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்து தாங்களும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் இருப்பவர்கள் தவிர வேறு யாரும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், பொதுமக்கள் தாங்களாகவே அந்த மாத்திரைகளை உட்கொள்வது உடல்நலத்தின் மீது மோசமான விளைவுகளை உண்டாக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் பரிந்துரை செய்யப்படாத நபர்களுக்கு அந்த மாத்திரைகளை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8-------------------+------------------8
கொரோனாவிற்குப் பின்னான உலகு.
உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 'இதையெல்லாம் சமாளித்துவிடலாம். ஆனால்' எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.
பணியிடங்களில் மனித வள ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ரோபோக்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் ஃபோர்ட், உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா வைரஸ் பரவல் மாற்றி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தத் தொடங்கிவிட்டன. வால்மார்ட் தரைகளைச் சுத்தப்படுத்தவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேனிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.
கொரோனா வைரஸ்:ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் - என்ன நடக்க இருக்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
2021ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த சமயத்தில் பல இடங்களில் ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகும், இது எதிர்காலத்தில் பெரும் சவாலாகவும், பேரபாயமாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

சுத்தம் செய்யும் ரோபோட்கள்

இடங்களையும் பொருட்களையும் தூய்மை படுத்தும் ரோபோக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் தேவை அதிகம் உள்ளது.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த யுவிடி எனும் நிறுவனம், புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமிகளை அழிக்கும் ரோபோக்களை நூற்றுக்கணக்கில் தயாரித்து சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறது.
யுவிடி ரோபோட்கள்படத்தின் காப்புரிமைUVD-ROBOTS
பல்பொருள் அங்காடி மற்றும் உணவு விடுதிகள் இந்த இயந்திரங்களை பெரிதும் வாங்குகின்றனர்.
இன்னும் பல வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டால் இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் கடைப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் பள்ளி அல்லது அலுவலகத்தில் ரோபோக்கள் சுத்தம் செய்வதை நம்மால் காண முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
"இப்போது நுகர்வோர் தங்கள் பாதுகாப்பு மற்றும் வேலை செய்பவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறார்கள்," என கஸ்டமர் ஆஃப் த ஃப்யூச்சர் என்னும் புத்தகத்தின் எழுத்தாளர் பிலேக் மார்கன் கூறியுள்ளார்.
"தானியங்கி தொழில்நுட்பத்தை நோக்கிச் செல்வது மக்களை உடல்நிலையை பாதுகாக்கும். இதனால் அந்த நிறுவனத்திற்கு மக்கள் வர விரும்புவர்," என்கிறார் அவர்.
ஆனால் இதில் பிரச்சனைகளும் உள்ளது. பல்பொருள் அங்காடியிலிருக்கும் தானியங்கி பணபரிவர்த்தனை செய்யும் ரோபோக்கள் மனிதர்களுடன் பேசுவதை குறைக்கும். ஆனால் அவை பெரும்பாலும் சரியாக வேலை செய்யாததால் அல்லது எளிதாக சேதமடையக்கூடும் என்பதால், அத்தகைய கடைகளைத் தவிர்த்துவிட்டு, பணபரிவர்த்தனை செய்யும் இடத்தில் மனிதர்கள் இருக்கும் கடைகளைத் தேடிச் செல்வார்கள் என மார்கன் கூறியுள்ளார்.
உணவு கொண்டு செல்லுதல் போன்ற வேலைக்கு ரோபோக்கள் பெரிதும் பயன்படலாம். மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் சமைக்கவும் உணவு பரிமாறவும் ரோபோக்களைப் பயன்படுத்தி பரிசோதனை செய்கின்றனர்.
கொரோனா வைரஸ்:ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் - என்ன நடக்க இருக்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்களில் குடோன்களில் வேலை சிறப்பாக நடைபெற ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கோவிட்-19 தொற்றுப் பரவலின்போது பொருட்களை பிரிக்க, அதை வேறு இடத்திற்கு அனுப்ப மற்றும் பேக்கிங்கிற்காக ரோபோக்களைப் பயன்படுத்தப் பார்க்கின்றனர்.
இது குடோன்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சமூக விலகலைக் கடைப்பிடிக்க ஏதுவாக இருக்கும். ஆனால் இது சிலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் செய்யும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஒரு முறை ஒரு நிறுவனம் மனிதர்கள் வேலை செய்வதை மாற்றும் நோக்கில் ரோபோக்களில் முதலீடு செய்தால் மீண்டும் மனித வளத்தை அந்தப் பணிக்காக எடுக்க மாட்டார்கள். ரோபோக்களை வணிகத்திற்காக தயாரிப்பதும் ஒருங்கிணைப்பதும் அதிக செலவுகளைத் தரும். ஆனால் அதை ஒரு முறை செய்துவிட்டால் மனித வளத்தைக் காட்டிலும் குறைவாகவே செலவாகும்.
ஃபியூச்சரிசம் (Futurism) கோட்பாட்டாளரான மார்டின் ஃபோர்ட் கூறுகையில், கோவிட்-19க்கு பிறகு ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலம் சந்தையில் சில நன்மைகள் கிடைக்கும் என்றார்.
"மக்கள் இயந்திரங்கள் அதிகமாகவும் ஆட்கள் குறைவாகவும் இருக்கும் இடத்திற்கு செல்ல விரும்புவர். ஏனென்றால் அங்கே அவர்கள் ஆபத்து குறைவு," எனக் கருதுவார்கள் என கூறுகிறார் ஃபோர்டு.
குடோன்களில் ரோபோட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மனிதர்களை போல இயங்கும் செயற்கை நுண்ணறிவு

இப்போது உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பள்ளி ஆசிரியர், உடற்பயிற்சியாளர், மற்றும் நிதி ஆலோசகர் ஆகிய தொழில்களுக்கு பதிலாக மாற்றப்படலாம்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் பயனை விரிவுபடுத்துகின்றன. ஃபேஸ்புக் மற்றும் கூகுள் முறையற்ற பதிவுகளை நீக்க செயற்கை நுண்ணறிவையே பயன்படுத்துகின்றன.
ரோபோக்களை நம்பாதவர்கள் மனிதர்களின் வேலையே அனைத்து பணிகளிலும் தேவை என நம்புகின்றனர். ஆனால் இந்த ஊரடங்கு அவர்களின் சிந்தனையை மாற்ற உதவியாக இருக்கும். இந்த இயந்திரங்களுக்கு உத்தரவு கொடுக்க மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனிதன்போல் சிந்திக்க தெரிந்தால் போதும்.
மெக்கென்சி என்னும் சர்வதேச தொழில் ஆலோசனை நிறுவனம் 2017ல் ஓர் ஆராய்ச்சியை வெளியிட்டது. அதில் 2030ல் அமெரிக்காவில் மூன்றில் ஒரு பணியாளருக்கு பதில் ரோபோக்கள் இடம் பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது போன்ற பெருந்தொற்று பரவும் சூழல் அத்தகைய நிலைமை வரும் காலகட்டத்தை மாற்றவோ தள்ளிவைக்கவோ வல்லவை. தங்கள் வாழ்வில் அங்கமாக தொழில்நுட்பத்தை எந்த அளவுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மனிதர்களே முடிவு செய்ய வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
------------------------0----------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?