முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவும் கொரோனாவும்.

இன்று காலை(06.03.20) நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 131,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 12,641 ஆக உள்ளது. இத்தாலியில் 128,948 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 15,887- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்றைய நிலவரப்படி 4247 ஆக உள்ளது. சீனாவை விட மக்கள் நெரிசல் மிக்க இந்தியாவில் கொரோனா பரவினால், 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள், 20 முதல் 25 லட்சம் பேர் வரை இறப்பார்கள் என்று சில வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தனர். அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இவைகள் தான் இந்தியாவில் இருக்கும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்து என்று கூறுகிறார் டாக்டர் நாரேந்திர குமார் வர்மா.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திய நரேந்திர குமார் வர்மா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறியதாவது:-

இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம்.ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகளையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.
பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன.இதை T-உயிரணுக்கள் என்று சொல்லலாம். அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன. வெளியில் இருந்து ஏதேனும் புதுவிதமான வைரஸ்களநம் உடலில் நுழைந்தால்,T-செல்கள் தாக்கி அழித்துவிடும்.
இதன் காரணமே கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவவில்லை. சுத்தம், சுகாதாரத்தோடு வாழும் ஐரோப்பா, அமெரிக்க நாட்டினருக்கு இது போன்ற T-செல்கள் குறைவாக இருப்பது பின்னடைவு தான், வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்துள்ளது.
இந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசால் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன.இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்கள் சீனர்களுடன் ஒப்பிடும் போது, அன்றாட உணவில் இந்தியர்கள் சேர்த்து கொள்ளும்,பொருட்கள் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
உடலுக்குன் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மரபணுக்களின் அமைப்புதான் இம்முனி சிஸ்டம் (Immunue Syste) வைரஸ்களை அழித்து நம்மை பாதுகாக்கும் இம்முனி சிஸ்டத்தின் அங்கம் ஹெச்.எல்.எ ஜீன், இந்த மரபணுக்களின் வேலை என்ன என்றால், உடலில் அந்நிய வைரஸ் நுழைந்தால், ஹெச்.எல்.எ மரபணுக்கள் அடையாளம் கண்டதுடன், உடனடியாக இம்முனி சிஸ்டத்தை உஷார் படுத்துவிடுகிறது.
அதை தொடர்ந்து T-செல்கள் போர் வீரனாக செயல்புரிந்து, அந்நிய வைரஸ்களை அழிக்கும், இதில் ஹெச்.எல்.இ மரபணுக்களின் பங்கு மிகவும் முக்கியம்.பல வித வைரஸ் கிருமிகளால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடலில், சில குறிப்பிட்ட வகையான ஹெச்.எல்.எ அணுக்கள், அதிக அளவில் இருக்கின்றன.அது போன்ற ஹெச்.எல்.எ மரபணுக்கள், ஐரோப்பிய, அமெரிக்க, சீன மக்களின் இம்முனி சிஸ்டத்தின் குறைவு தான், இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கூறினார்.
--------+---------#---------+------------
கைத்தட்டலிலே பாடம் படிக்காத பிரதமர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் எனவும், வேறு எதற்காகவும் வெளியே அநாவசியமாக சுற்றித்திரியக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தெருக்களில் அவசியமின்றி சுற்றித்திரிபவர்களை கண்டித்தும், எச்சரிக்கை விடுத்தும், சமயங்களை கைது, வழக்குப்பதிவுகள் போன்ற சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு காரணாமாக உலகெங்கும் காற்று மாசுபாடு குறைந்து இயற்கை தன்னிலைக்கு மீண்டும் திரும்பியது என்பதை அண்மைக்காலங்களாக பார்த்துகொண்டிருந்த வேளையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் நாட்டில் மாசு ஏற்பட்டதோடு, கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையும் தவிடு பொடியானதே மிச்சமானதாக இன்றைய இரவு நிகழ்ந்தவையின் மூலம் உணர முடிகிறது.
ஒற்றுமையை பலப்படுத்துவோம் என்ற பெயரில் சங்கிகள் சிலர் அதீத ஆர்வத்தில் தெருக்களில் கூடியது கொரோனா வைரஸ் மீதான அச்சம் மக்களிடையே மேலோங்கியுள்ளது.
------------------8-----------------------

---------------------------%-------------------------

மர்ம தீவாக ஈஷா யோகா மையம்...

 கோவை ஈஷா மையத்தில், ஜக்கி வாசுதேவ் பிப்ரவரி 21ஆம் தேதி லட்சக் கணக்கானோர் கலந்து கொண்ட சிவராத்திரி விழாவை நடத்தியிருக்கிறார். அதில் ஒரு கொரோனா நோயாளி இருந்தால் கூட அவர் நூற்றுக்கணக்கான பேருக்கு கொரோனா நோயைப் பரப்பியிருப்பார் எனப் பயத்துடன் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

மஹா சிவராத்திரி 2020. பிப்ரவரி 21- உலகெங்கிலும் உள்ள ஈஷாவின் பக்தர்கள் சங்கமிக்கும் இடம் கோவை வெள்ளியங்கிரி மலை. என ஜனவரி ஆரம்பத்தில் இருந்தே ஜக்கியின் விளம்பரங்கள் கோவை முழுக்க கொடிகட்டிப் பறந்தன .

அந்த விளம்பரங்கள் இணையம் வாயிலாக உள்வாங்கப்பட்டு ஆயிரக் கணக்கில் வெளி நாட்டவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என கோவை விமான நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வந்து இறங்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் வந்திறங்கிய போது கொரோனா தொற்று பரிசோதனை யாருக்கும் செய்யப்படவில்லை என்பதுதான் இப்போது கொரோனா நோய் பரவ முக்கியக் காரணமாக விளங்குகிறது எனச் சொல்லப்படுகிறது. யாரும் பரிசோதனை செய்யப்படவில்லையா என விமான நிலையத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரியிடம் அலைபேசியில் கேட்டோம்.

 



மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள பாரீஸ், லண்டன், ஜோகன்ஸ்பர்க், டர்பன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, ஜூலுலாண்ட், நாஷ்வில்லி, லெபனான், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர்... என பல நாடுகளில் இருந்து நிறைய பேர் வந்து குவிந்தார்கள். அவர்கள் யாருக்கும் எந்தவித டெஸ்ட்களும் செய்யப்படவில்லை. மும்பை, பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் எந்த டெஸ்டும் செய்யப்படவில்லை.
 
போதாக்குறைக்கு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார் என்பதால் ஏர்போர்ட்டில் மெடிக்கல் கெடுபிடிகள் எதுவும் இல்லை. ஜக்கி வாசுதேவின் வாகனங்களே விருந்தினர்களைக் கூட்டிக் கொண்டு போயின என்கிறார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் பாடகர்கள், சீரியல் நடிகைகள் என பல பேர் பங்கெடுத்த சிவராத்திரி விழாவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர்கள் வந்து கலந்து கொண்டனர். ஈஷா யோகா மையத்திற்கு யார் வந்தாலும் அதைப்பற்றி அவர்கள் யாரிடமும் தெரிவிக்க மாட்டார்கள்.

 



பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜுலி வந்த போது கூட யாருக்கும் ஈஷா மையம் தெரிவிக்கவில்லை என வெளிநாட்டு பயணிகள் வருகை மறைக்கப்படுவது பற்றி குற்றம் சுமத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 
சிவராத்திரிக்காக இங்கே வந்த வெளி நாட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு ஈஷாவின் கட்டிடங்களுக்குள்ளேயே தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், முதல்வர் எடப்பாடியே ஈஷாவுக்குள் இருக்கும் ஒவ்வொரு வரையும் பரிசோதனை செய்ய வேண்டும். அப்படி கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்... எனக் கடந்த 1-ந் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பு வந்ததுமே ஈஷா உடனடியாய் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில்... "இங்கே மஹா சிவராத்திரிக்காக வந்த வெளி நாட்டவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்பே எல்லோரும் ஈஷாவை விட்டு தங்கள் நாடுகளுக்கு கிளம்பி விட்டார்கள் . ஒருவர்கூட வெளி நாட்டவர்கள் இங்கே இல்லை.

எங்கள் ஈஷா மருத்துவர்களை வைத்து பரிசோதனை செய்ததில் இங்கே தங்கி உள்ள வாலண்ட்ரீஸ் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. அதனால் யாரும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி யாரேனும் கொரோனா இங்கிருந்துதான் பரப்பப்பட்டது எனச் சொன்னால்... அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றது
சிவராத்திரிக்கு வந்த வெளி நாட்டினர்கள் கோவிட்19 வைரஸையும் ஏன் கொண்டு வந்திருக்க மாட்டார்கள் எனக் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்களுக்கு ஈஷா தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் கொரோனா பாதிப்பு வந்த பிறகுதான் சிவராத்திரி விழாவை நடத்தினோம். அதனால் கொரோனா பாதிப்புக்குள்ளான கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து யாரும் விழாவிற்கு வரவேண்டாம்'' எனச் சொல்லிவிட்டோம் என்கிறது ஈஷா.

அதேநேரத்தில், ஈஷா மையத்திற்குள் 150க்கும் அதிகமானோர் ஒரு பெரிய கட்டிடத்தில் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும், பெரும்பாலானவர்கள் வெளி நாட்டவர்கள்தான் என்றும், அவர்களுக்கு ஈஷாவில் உள்ள மருத்துவர் களால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிறார்கள் சுற்றுப்புறவாசிகள். மேலும் அவர்கள், ஒரு வெளிநாட்டவர் கூட இங்கே வசிக்கவில்லை என்றால் போலீசையும், சுகாதாரத் துறையினரையும் உள்ளே வரவழைக்க வேண்டியதுதானே! அரசாங்கமே... ஈஷாவுக்குள் இருக்கிறவர்களை பரிசோதனை செய்ய வேண்டும்... எனச் சொன்ன பின்னால்... யாரும் சோதிக்கத் தேவையில்லை என ஏன் ஜக்கி பதற வேண்டும்? என்கிறார்கள்.

ஈஷாவின் விதிமுறைகளுக்கு எதிராகப் போராடி வரும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நம்மிடம், கேரளாவில் எப்படி அமிர்தானந்தமயி ஆசிரமத்திற்குள் போலீஸ் நுழைந்து அவரின் சீடர்களிடம் கொரோனா வைரஸ் இருக்கிறதா...? என ஆராய்ந்ததைப்போல இங்கே ஜக்கி வளாகத்திற்குள்ளும் நுழைந்து பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால்... ஆசிரமத்திற்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்...? என ஜக்கி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்'' என்கிறார்..
---------------------9---------------6--------------8

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?