நீட்டிப்பு கொடுமைகள்.
-------+--------------%-------
நீடிப்பு........?
கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தனிமைப்படுத்தப் படாவிட்டால் அவர் மூலமாக 406 பேருக்கு கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக விலகல் அறிவுறுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் கொரோன வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசியத் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்தும், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடரங்கு உத்தரவை ஒருவர் பின்பற்றாவிட்டால் அவர் மூலமாக ஒரே மாதத்தில் 406 பேருக்கு கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.
மருத்துவ அறிவியலில் R0 என்பது நோய்த் தொற்றின் அடிப்படை இனப்பெருக்க எண் எனப்படுகிறது. அதாவது தொற்று நோயானது அதன் வீரியமிக்க காலத்தில் எவ்வளவு வேகமாகப் பரவும் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகு R Nought (R0) ஆகும்.
ICMR நடத்திய ஆய்வைச் சுட்டிக்காட்டிப் பேசிய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால், “R0-ஐ 2.5 ஆக எடுத்துக் கொண்டால், ஒரு நபர் 30 நாட்களில் 406 பேரைப் பாதிக்கலாம். ஊரடங்கின் மூலம் தனிமைப்படுத்துதல் கடைபிடிக்கப்பட்டால் 75 சதவிகிதம் பரவலைக் குறைந்து, ஒரு நோய்வாய்ப்பட்ட நபர் 2.5 நபர்களை மட்டுமே பாதிக்கச் செய்வார் எனும் அளவிற்குக் குறையலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், காய்கறி, மளிகைக் கடைகளை தவிர்த்து இதர வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த ஊரடங்கு காரணமாக, ஏற்கெனவே இருந்த பொருளாதார மந்தநிலை தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதேபோல தினக்கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு தெலங்கானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என 7க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளதை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏப்ரல் 10ம் தேதிக்குள் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனிடையே தேவையின்றி ஜூன் வரை நீடிப்பது மக்களை வெகுவாகப் பாதிக்கும்.வேலையில்லாத்தால் வருமானம் இன்றி பசியால் வாடுவோர்பசியால் சாகும் நிலைதான் உருவாகும்.ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,பணக்கார்களுக்கு தேவையானவை இருக்கும் இடத்திற்கே வந்துவிடும்.ஆனால் 80% மக்களுக்கு? எனவே படிப்படியாக மூன்று கட்டங்களாக ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டும்.அதுவே தொழிலாளர்கள் நிறைந்துள்ள இந்தியாவுக்குசரியாக இருக்கும் . மாதக்கணக்கில் நடுத்தர மக்களை ,தொழில்களைமுடக்கிப்போடுவது பொருளாதார சீரழிவில் இருக்கும் இந்தியாவை மேலும் சின்னா,பின்னமாக்கி விடும்.என கேரள அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
--------------------------------------------------------
துக்ளக்தனம்
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த 13 வகையான தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மாலையில் அனுமதி அளித்திருந்த தமிழக அரசு, தற்போது அந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக, தொடர்ச்சியான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மாலையில் அரசின் செயலர்களுக்கு தொழில்துறையிலிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் இரும்பு, சிமிண்ட், உரம் உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
உருக்கு தொழிற்சாலை, சுத்திகரிப்புத் தொழிற்சாலை, சிமென்ட், உரம், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலைகள், சர்க்கரை, கண்ணாடி, உருக்கி ஊற்றும் தொழிலகங்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், பேப்பர் தொழிற்சாலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஏற்கனவே மூடப்பட்டிருக்கும் பல தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணியில் ஈடுபட, குறைந்த அளவு தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை பேக் செய்து, லேபிள் ஒட்டி ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த உத்தரவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தொழிற்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்துவந்த நிலையில், பல மாநில முதல்வர்கள் அந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தொழிற்சாலைகளைத் திறக்க தமிழக அரசு அளித்த அனுமதி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தொழிற்சாலைகள் திறந்தால், ஊழியர்கள் எப்படி பணிக்கு வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில்தான் தொழிற்சாலைகள் திறக்கப்படுவது குறித்த ஆணையை நீக்கியுள்ளது தமிழக அரசு.
எதிர்க் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசிக்காமல் ஆணைகளை பிறப்பித்தால் இப்படி துக்ளக்தனமாகத்தான் முடியும்.
------------------------------------------
கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம்.
அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது.
கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது.