ரகசியங்களும்,பரகசியங்களும்.

உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு ஓர் இரகசியம் 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

பொதுவாகவே நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரையும்  ஒவ்வொரு விதமான ஆரோக்கியம் / ஆரோக்கிய குறைபாட்டுடன் சந்திக்கின்றோம்...


ஒருபுறம் நூறு வயதை கடந்தும் சிறந்த  ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடன் வாழும் மனிதர்களை இன்றளவும் நம்மால் காண முடிகிறது...

மறுபுறம் ஒரு வயது குழந்தை முதல் இளம்வயதினர் என  சிகிச்சைகாக பரபப்பாய் ஓடும் கூட்டத்தையும் காண்கிறோம்...

இந்த வேறுபாடு எதனால்...?

இறைவன் அனைவருக்கும் பொதுவாகவே உலகை படைத்தான்... உணவு சங்கிலியை உண்டாக்கினான்...
அழகிய, ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஜீவராசிகள் அனைத்திற்கும் அனைத்தையும் கொடுத்தான்..

ஆனால் சரியான விடையை தேர்வு செய்... என்ற வினாதாளோடு கொடுத்துவிட்டான்...

நிஜம் எது நிழல் எது என்று பொறுமையாக நிதானமாக சிந்தித்தால் மட்டுமே விடை சரியாக அமையும்..

முதல் கோணல் முற்றும் கோணல்...

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சென்றால் கட்டாயம் குழந்தைகளுக்கென்று ஒரு மருந்தகம் வைத்திருப்பார்கள்..

அதில் காய்ச்சலுக்கு, சளிக்கு, இருமலுக்கு, வயிறு வலிக்கு, தும்மலுக்கு என வகை வகையாக மாத்திரைகளும், சிரப்புகளும் வைக்கப்பட்டிருக்கும்... காலாவதி ஆனதும் அனைத்தும் குப்பையில்...

இதுபோன்ற ஆண்டிபயாடிக் பிற ஆங்கிலமருந்துகளால் குழந்தைகள் நோயெதிர்ப்பு சக்தியின்றியும், அரைகுறை ஆரோக்கியத்துடனும் வளர்கிறார்கள்..

நிஜத்தில் ஒரு மருந்து போதும்... காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல், தும்மல், இருமல், வயிற்று வலி, செரிமான கோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாய்ப்புண், சருமநோய், அம்மை, பேச்சு திறன் குறைபாடு ... இன்னும் பல... சர்வரோக நிவாரணியாக பயன்படும் மருந்து ஒன்று ஆயுர்வேதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது....

*அரவிந்தாசவம்...*

இம்மருந்தில் அடங்கியுள்ள மூலிகைகள்...

தாமரை, வெட்டிவேர், குமுதை, நீலாம்பல், மஞ்சிட்டி, குறுந்தொட்டி, ஜடாமாஞ்சி, ஏலக்காய், கோரைக்கிழங்கு, நன்னாரி, கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், வசம்பு, பூலாங்கிழங்கு, சிவதைவேர், அவுரி, முசுமுசுக்கை, துசா, மருதம், இலுப்பை, அதிமதுரம், முரல், உலர்திராட்சை, மலையத்தி, தேன், சர்க்கரை...முதலானவை.

இம்மருந்தினால் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய் தீர்வதுடன் எதிர்காலத்தில் எந்த நோயும் வராமலும் (சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உட்பட) பாதுகாக்கிறது..

இந்த இனிப்பான மருந்தில் சிறப்பான ஒன்று காலாவதி இம்மருந்திற்கு இல்லை...

ஜீவிக்கும் அனைத்திற்கும் மரணிப்பும் உண்டு மறுக்கவில்லை...

ஆனால் வாழ்நாட்கள் நகர்வது மருந்துகளை சார்ந்து இருந்துவிடக்கூடாது...

---------------------------------------++----------
பணக்கார்ர்களிடம் வரி அதிகம் கேட்கச்சொன்ன
தேசத்துரோகிகளை இடைநீக்கம் செய்த மோடி.


பெரும் பணக்காரர்களுக்கு 40 சதவீதம் வருமான வரி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றும், கோவிட் செஸ் வரி 4 சதவீதம் விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்ததற்காக இந்திய வருவாய்ப் பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளில் சிலர் மோடி அரசாங்கத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி அரசாங்கம், இந்திய வருவாய்ப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், பெரும் பணக்காரர்களுக்கு 40 சதவீதம் வருமான வரி விகிதத்தை உயர்த்திட வேண்டும் என்றும், கோவிட் செஸ் வரி 4 சதவீதம் விதித்திட வேண்டும் என்றும் அதிகாரபூர்வமற்ற முறையில் அறிக்கை வெளியிட்டார்கள் என்று கூறி அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதற்கு மோடி அரசாங்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
கோவிட் என்னும் கொரானா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை மீட்டெடுப்பதற்கு ஒரு நிதித்திட்டத்தை அளித்திட வேண்டும் என்று அரசாங்கம் கோரியதன் அடிப்படையிலேயே அவர்கள் இத்தகு முன்மொழிவைத் தயாரித்திருந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


FORCE (Fiscal Options and Responses to Covid-19 Epidemic) என்னும் அமைப்பின்கீழ் பணியாற்றிய அதிகாரிகளால் தயார் செய்யப்பட்ட முன்மொழிவுதான் பணக்காரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற தங்களுடைய வெட்கங்கெட்ட நோக்கத்தைக் காட்டிக்கொடுக்கும் விதத்தில் மோசமாக இருந்தது என்பதால் அரசாங்கத்தை ஆத்திரப்பட வைத்திருக்கிறது.
இவர்கள் அளித்த முன்மொழிவானது, ‘சந்தையில்’ நிச்சயமற்ற தன்மையை முடுக்கிவிடும் என்றும், பெரும் பணக்காரர்கள் ‘புனித பசுக்கள்’ என்றும் அரசாங்கம் தெளிவாகக் கூறியிருக்கிறது.
பெரும் பணக்காரர்கள் ஆதரவான, ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான இந்த அரசாங்கத்தின் வர்க்க அணுகுமுறை, இவர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை பின்தேதியிட்டும், வரவிருக்கும் காலங்களில் கொடுக்க வேண்டியதையும் முடக்கி வைத்தும், ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்திருப்பதிலிருந்து நன்கு தெரிகிறது. இதன் மூலம், வியக்கத்தக்க அளவிற்கு பிரம்மாண்டமான முறையில் அரசின் கஜானா நிரம்பும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.


வங்கிகளில் கோடானுகோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச்செலுத்தாமல் நாட்டைவிட்டே பறந்துசென்ற தலைமறைவு பேர்வழிகள் பெற்ற கடன்தொகைகளை இந்த அரசாங்கம் தள்ளுபடி செய்திருப்பதும் அதனை வெளியே தெரிவிக்காமல் இந்த அரசாங்கம் மறைத்து வந்திருப்பதும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இப்போது பெறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து தெரிய வந்திருக்கிறது.
இவற்றின்மூலம் இந்த அரசாங்கத்திற்கும், நாட்டையே சூறையாடிய கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயான கூட்டு களவாணித்தனம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்திய வருவாய்ப் பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த அரசாங்கம் எடுத்தள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுத்திட வெளிப்படையானவிதத்தில் விவாதங்களைத் தொடங்கிட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மேலும், பெரும் பணக்காரர்கள் நாட்டின் செல்வ வளத்தை மிகப்பெரிய அளவில் தொடர்ந்து சூறையாடும் அதே சமயத்தில், கோவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஏழைகள் மீதும், உழைக்கும் மக்கள் மீதும் ஒருதலைப்பட்சமாக சுமைகளை ஏற்றிடும் நடவடிக்கைகளைத் தடுத்திட உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------

காவேரி விவகாரத்தில்  கலைஞர் மீது அவதூறு  பரப்புவோரின்
13 கேள்விகள்.....பதில்கள்.
கேள்வி( 1)*
1956 ஆம் ஆண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது துளு மொழி பேசும் குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர்.

அத்தகைய வாய்ப்பை மறுத்தது
யார்? விட்டுக் கொடுத்தவர்கள் யார் ? காங்கிரசும் முதல்வராக அப்போது தமிழகத்தை ஆண்ட பெருந்தலைவர் காமராஜரும்தானே
இதற்கு என்ன பதில்?

கேள்வி (2)*

ஹேமாவதி அணைகட்ட 1960 இல்
முடிவெடுக்கப்பட்டது. அதனை தடுக்க காமராஜரும் பக்தவச்சலமும் ஏன் முயற்சி செய்யவில்லை? 1967 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது?


கேள்வி(3)*

1968 இல் இந்திராவுடன் நட்பில் இருந்த காமராஜர் ஏன் ஹேமாவதி ஹேரங்கி அணை கட்டுமானத்தை தடுக்கவில்லை?

'70களில் இந்திராவுடன் நெருக்கமான இருந்த MGR,  காமராஜர் காவேரி பிரட்சினை தீர எந்த முயற்சியையும் எடுக்காமல் வாய் மூடி மௌனம் காத்தது ஏன்?

கேள்வி(4)*

காவேரி வழக்கு வாபஸ் பெறப்பட்டதோ 1972 வருட மத்தியில்தான்.  MGR கலைஞர் மேல் புகார் தந்ததோ நவம்பர் 1972 இல்தான்.
சர்க்காரியா கமிசன் அமைக்கப்பட்டதோ 1976 பிப்ரவரி மாதத்தில்தான்.

பிறகு எந்த அடிப்படையில் கலைஞர் சர்க்காரியா கமிசனுக்கு பயந்து காவேரிவழக்கை வாபஸ் பெற்றதாக சொல்கிறீர்கள் குள்ளநரிகளே?

கேள்வி(5)*

கலைஞர் அரசால் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவின்படியே
வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் மீண்டும் வழக்குப் போடும் உரிமையை தக்க வைத்துக்கொண்டே தற்காலிகமாக  வழக்கு வாபஸ் பெறப்பட்டது எப்படி தவறாகும்?


கேள்வி(6)*

காவேரி வழக்கை வாபஸ் வாங்கினாதான் பேச்சுவார்த்தைக்கு உதவமுடியும் எனத் தெரிவித்துவிட்ட  பிரதமரின் கருத்தை கண்டுக்கொள்ளாமல் அலட்சியம் செய்ய முதலமைச்சரால் முடியுமா?

மேலும் வழக்கு போட்டாலும் தீர்ப்பு வர நீண்டகாலம் ஆகும் என்ற நிலையில் மீண்டும் பேசித்தான் பார்ப்போமே என கலைஞர் முடிவெடுத்ததில் என்ன தவறு?

 கேள்வி(7)*

ஹேமாவதி அணை கட்டப்படுவதை கலைஞர்  தடுக்க முயற்சி எடுக்கவில்லை எனும் முட்டாள்களே அதற்கு நீங்கள் தரும் ஆதாரங்கள் எங்கே?

"கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என பொய் பரப்புகிறார்கள்.

அப்படி பேசியதற்கான ஆதாரத்தை கொடு. முழுமையான பேச்சு விபரத்தை கொடு.
ஒரே ஒரு வரிதான் பேசினாரா?  பேச்சை முழுவதுமாக வெளியிட வேண்டியதுதானே. வெட்டி ஒட்டி ஏன் சொல்லுற?

உன்னால் தரமுடியாது என்பதே உண்மை.


கர்நாடக அரசு 1968 ஆம் ஆண்டு ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.
ஹேமாவதி அணை கட்டி முடிக்கப்பட்டது 1979 ஆம் ஆண்டுதான்.

1968லேயே அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த கழக அரசு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் கோரியது.

மத்திய அரசு செய்த ஏற்பாட்டின்படி 19-8-1968 அன்றும் 20-8-1968 அன்றும் டெல்லியில் காவிரித் தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையை மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார். கர்நாடக முதலமைச்சர் திரு. வீரேந்திரபட்டீல் அவர்கள் பொதுப்பணித்துறைக்கும் அமைச்சர் என்றமுறையில் கலந்துக் கொண்டார். தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் சட்ட அமைச்சர் மாதவனுடன் சென்று கலைஞர் கலந்து கொண்டார்.   முக்கியமாக 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் வாதமாக எடுத்து வைக்கப்பட்டது;  முடிவு எதுவும் தோன்றவில்லை.

பின்னர் 1969-ல் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு 1970 பிப்ரவரி 9 ஆம் நாள், மீண்டும் கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

3.3.1970 அன்று கலைஞர் சட்டமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்பிக்கிறார்
அந்த அறிக்கையில் ஹேமாவதி அணை கட்டுவதால் தமிழகம் எதிர்கொள்ள போகும் ஆபத்துகளை விளக்கி அதை தடுக்க தனது அரசு எல்லாவித முயற்களையும் எடுத்து வருவதை விளக்குகிறார்.
அனைத்து கட்சிகளின் அரிய ஆலோசனைகளின் படி கலைஞரும் தொழில்துறை அமைச்சரும் டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்து ஹேமாவதி அணை கட்டுவதை தடுக்க இந்த
பிரட்சினையில் தலையிட வேண்டியதையும் பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக சொன்னதையும் விவரிக்கிறார்.

மேலும் கர்நாடக அரசு Center water commission இடமோ மத்திய அரசிடமோ எந்த விதமான அனுமதியும் பெறாமல் திட்டகுழு அனுமதியும் பெறாமலேயே ஹேமாவதி அணையை கட்டி வருகிறது. ஆனால் மத்திய அரசு இதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது
என கலைஞர் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்

திரும்பத் திரும்ப நாம் வலியுறுத்தியதன் காரணமாக, 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாட்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன; எனினும் அவை பலனளிக்கவில்லை.

இன்று அரசியல் காரணங்களுக்காக மோடி அரசு வஞ்சிக்கிறது.
அன்றும் அரசியல் காரணங்களுக்காக இந்திரா அரசு தமிழனை வஞ்சித்தது.

1972 ல் கலைஞர் பெறும் வெற்றி பெற்றவுடனேயே திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே இந்திராவின் முக்கிய திட்டமாக இருந்தது.

**


முதன்முதலில் காவேரி நடுவர் மன்ற கோரிக்கை வைத்தது திமுகதான்.

ஹேமாவதி ஹாரங்கி அணைக்கட்டுமானத்தை நிறுத்தவும் மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் நடந்த பேச்சுவார்த்தை பலனளிக்காததால் 1971 ஜூலை 8-ஆம் நாள் காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று திமுக  அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை  நிறைவேற்றியது.


 தொடர்ந்து 1971 ஆகஸ்ட் திங்களில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசிற்கு ஆணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.


கர்நாடக அரசு, புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், நடுவர் மன்றத்திற்கு பிரச்சினையை விடவும் தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறன் ஒரு வழக்கு தொடுத்தார்.


 21-5-1972 அன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், வழக்கு இல்லாமலே பேச்சுவார்த்தை மூலமே சுமுகத் தீர்வு காணலாம் என்று கூறினார்கள். அப்போது கூட கலைஞர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்திலே கூட்டி, கலந்துப்பேசி, அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று தீர்மானித்து - அப்படித் திரும்பப் பெறுகின்ற நேரத்திலே கூட மீண்டும் வழக்கு போட வழி வைத்துக் கொண்டுதான் அந்த வழக்கை, தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டது.


 அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73 ஆகிய நாட்களில் மத்திய பாசன அமைச்சர்  கே.எல்.ராவ் முன்னிலையிலும்,  27-6-74 அன்று கே.சி.பந்த் முன்னிலையிலும், 29-11-1974 மற்றும் 15-2-75 ஆகிய நாட்களில் பாபு ஜெகஜீவன்ராம் முன்னிலையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் அனைத்துக் கட்சிகளைக் கலந்தாலோசித்து, தமிழக அரசு மத்திய அரசினை நடுவர் மன்றம் அமைக்குமாறு கோரி 1975 மே திங்களில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.


1976 ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.


கேள்வி (8)*

வழக்கை வாபஸ் வாங்கி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தபோது திமுக ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது.
1977 இல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் மீண்டும் அந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை?

கேள்வி(9)

1977-1987 வரை ஆட்சி செய்த MGR காவேரி பிரட்சினையை தீர்க்க எந்த முயற்சியும் செய்யாதது ஏன்?

காவேரி தொடர்பாக தஞ்சை விவசாயிகள் 1983 இல் போட்ட வழக்கில் MGR அரசு 1986 இல்தானே தன்னை இணைத்துக்கொண்டது. 3 ஆண்டு காலதாமதம் ஏன்?

கேள்வி(10)

1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என எந்த நீதிமன்றம் சொல்லியிருக்கிறது?
உச்சநீதிமன்றமே தனது இறுதி தீர்ப்பில் 1924 ஒப்பம் செல்லும் எனத்தெரிவித்திருந்தும் எந்த அடிப்படையில் கலைஞரால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்கிறீர்கள்?
காலாவதியான ஒப்பந்தத்தை வைத்து நீதிமன்றம் இறுதி தீர்ப்பை எப்படி வழங்க முடியும்?

கேள்வி எண் (11)
காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007ல் வந்தவுடன் அதனை எதிர்த்தவர் ஜெயலலிதா.
கேரளா, கர்நாடாகா, பாண்டிச்சேரி அரசுகள் அதனை எதிர்த்து உடனேயே உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டது. தீர்ப்பையே எதிர்த்து
மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும் போது
அதனை எப்படி மத்தியஅரசால் அரசிதழில் வெளியிடமுடியும்?
கேள்வி எண்(12)
2013 இல் காவேரியில் தண்ணீர் திறக்க கோரி மட்டுமே ஜெயலலிதா வழக்கு போட்டார். அப்போது நீதிபதி தானாக முன்வந்து காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட மனுத்தாக்கல் செய்யும்படி தெரிவித்தார். தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்தது. அதன் பிறகே வழக்கு நிலுவையில் இருப்பினும் பரவாயில்லை என தெரிவித்து  நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிறகு எந்த அடிப்படையில் காவேரி பிரட்சினையில் துரும்பைக் கூட அசைக்காத ஜெயலலிதாவிற்கு காவேரிதாய் பட்டம் தந்தீர்கள்?
கேள்வி எண் (13)
காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு கெசட்டில் வெளிவந்தபின்னர் 2014-16 காலத்தில்
மோடியுடன் நெருக்கமா இருந்த ஜெயலலிதாவால் காவேரி பிரட்சினையில் எதுவும் செய்ய முடியாதது ஏன்?


By A.PARIMALAM (THE NEWS MAN)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?