டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தது யார்


இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்திலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் மிகக்கடுமையாக விமர்சனம் வைத்த பிறகு மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் திங்கள் கிழமையன்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.


“மத்திய அரசும் சரி, ரயில்வேயும் சரி ஒருபோதும் இடம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது குறித்து பேசியதே கிடையாது. 85 சதவிகிதமான போக்குவரத்துச் செலவை ரயில்வேதான் ஏற்றுக் கொள்கிறது. மாநிலங்கள் வெறும் 15 சதவிகிதத்தை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன” என்று பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் கொடுத்திருந்தார்.

பாஜகவின் ஆதரவாளர்களும், மத்திய நரேந்திர மோடி அரசின் ஆதரவாளர்களும் இந்த விளக்கத்திற்கு பின்பாக எதிர்க்கட்சிகளை தாக்குவதற்கு ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். அவர்கள் இடம் பெயர் தொழிலாளர்களிடம் கட்டணமே வசூலிக்கப்படவில்லை என்ற கற்பனை உலகில் இருந்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே இடம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கான கட்டணங்களை செலுத்திவிட்டிருந்தார்கள்.

லாவ் அகர்வாலின் இந்த அறிக்கையை 100% உண்மை என்று நம்பியவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெரிதாக்கியதாக உச்சக் குரலில் கத்திக் கொண்டிருந்தார்கள். உடனடியாக பி.எல்.சந்தோஷ் சம்பித் பத்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது தங்கள் தாக்குதலைத் தொடுத்தார்கள். இந்த அரசாங்கங்கள் கருணையே இல்லாமல் இடம் பெயர் தொழிலாளர்களிடம் பணம் வசூலித்துவிட்டதாக பகடி செய்து கொண்டிருந்தார்கள். இவர்களே இந்தக் குதி குதித்தால் மோடிக்கு சேவகம் செய்வதற்கே உருவாக்கப்பட்டிருப்பதாக கனவில் மிதந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளும் இதேபோன்று மோடி துதியும், எதிர்க்கட்சிகள் மீது வன்மத்தையும் ஒளிபரப்பிப் கொண்டிருந்தார்கள்.


உண்மைதான் என்ன?

இடம் பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டதா?
அப்படியெனில், ஏற்கனவே அகர்வால் சொன்னதுபோல மத்திய அரசும், மாநில அரசும் கட்டணத்தைச் செலுத்திவிட்டால் தொழிலாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?
அகர்வால் சொல்லும் 85%:15% பார்முலா எங்கிருந்து வந்தது?
இந்தப் பிரச்சினை எப்படி வெளிவந்தது?

தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து வேலையின்றியும், முறையான தங்குமிடமின்றியும் லட்சக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்கள் துயரத்தில் உழன்று கொண்டிருந்தனர். வேறு வழியற்ற தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை நோக்கி பல நூறு கிலோமீட்டர் நடந்தே செல்லும் காட்சிகள் மனதைப் பதறச் செய்தன. ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பாக இந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று சேர்வதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யாத மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

மே 1ம் தேதி எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தது. அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதாக அறிவித்தது. ஆனால், இதன் பிறகு இப்படி பயணம் செய்வர்களுக்கான வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. அந்த வழிமுறைகள் இன்னும் கூடுதலான விமர்சனங்களை எதிர்கொண்டது. அந்த வழிமுறைகளில்,

“ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட இடத்திற்கான ரயில் டிக்கெட்டுகளை மட்டுமே அச்சடிக்கும். எந்த மாநிலம் அவர்களை அனுப்புகிறதோ அந்த மாநிலத்திலிருந்து எந்த மாநிலத்துக்கு செல்கிறார்களோ அங்குள்ள அதிகாரிகளிடம் ஒரே ஒரு இடத்தில் ஒப்படைக்கும். எந்த மாநிலத்திலிருந்து தொழிலாளர்கள் கிளம்புகிறார்களோ, அந்த மாநில அரசாங்கம் ரயில் கட்டணத்திற்கான மொத்தத் தொகையையும் செலுத்திவிட்டு, டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களிடம் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்” என்று தனது தாராள குணத்தைக் காட்டியிருந்தது.

இதன்பிறகு, வெளிநாட்டில் உல்லாசப் பயணம் சென்று மாட்டிக் கொண்ட பல பேரை பணம் செலவு செய்து விமானத்தில் அழைத்து வந்த மத்திய அரசாங்கம் வேலைதேடிப் போன தொழிலாளர்களிடம் இப்படி கட்டணம் வசூலிப்பது நியாயமா? என்று மிகக்கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
எதிர்க்கட்சிகள் மத்திய அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை மனிதத்தன்மையற்றது என்றும் மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு என்றும் கடுமையாக விமர்சித்தார்கள்.

ஊரடங்கிற்குப் பிறகு வேலையின்றி, அதனால் வருமானமுமின்றி கிடைத்ததைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் இப்படி அடித்துப் பிடுங்குவது நியாயமா? என்ற கேள்வியை முன்வைத்தார்கள்.

மத்திய அரசின் விளக்கம் : 85% : 15% பார்முலா!

இந்த விமர்சனங்களால் நிதானத்துக்கு வந்த மத்திய அரசு தாங்கள் நல்லவர்கள் போல் காட்டிக் கொள்வதற்கு முயற்சித்தது. அதன் விளைவே, அகர்வால் கொடுத்த விளக்கம். அப்படியென்றால், இந்திய ரயில்வே இந்த தொழிலாளர் சிறப்பு ரயில்களை இலவசமாக இயக்கினார்களா? இல்லை. அகர்வாலின் இந்த அறிக்கைக்குப் பிறகு, மத்திய அரசிடமிருந்தோ இந்திய ரயில்வே நிர்வாகத்திடமிருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த 85%:15% பார்முலா என்றால் என்ன? என்பதை பாஜக தலைவர் சம்பித் பத்ரா ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அதாவது, இந்திய ரயில்வே தொழிலாளர் சிறப்பு ரயிலை இயக்குவதன் மூலமாக ஏற்படும் உத்தேச செலவில் 85 சதவிகிதத்தை மானியமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று ஒரு கதையை அவிழ்த்துவிட்டார்.

அதாவது, வழக்கமான ரயில் பயணங்களில் சாதாரண படுக்கை வசதியில் பயணிப்பவர்களுக்கு ஆகும் செலவில் ரயில்வே நிர்வாகம் 53 சதவிகிதத்தைத்தான் கட்டணமாக வசூலிக்கிறதாம். மீதமுள்ள 47 சதவிகிதத்தை மானியமாக ரயில்வே கொடுக்கிறதாம். இந்த வகையில்தான் சம்பித் பத்ரா மத்திய அரசு எப்படி 85% கட்டணத்தை ஏற்றுக் கொள்கிறது என்று விவரித்துக் கொண்டிருந்தார். அதாவது, இடம் பெயர் தொழிலாளர்களின் சிறப்பு ரயில்களில் 1200 பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது என்பது விதியாம். அதுதான் தனிநபர் இடைவெளியை உத்தரவாதப்படுத்துவதற்கான ரயில்வே நிர்வாகத்தின் வழிகாட்டுதலாம்.

இதனால், வழக்கமாக ஏற்றிச் செல்லும் எண்ணிக்கையை விட குறைவாக ஏற்றிச் செல்வதால் அந்தப் பணத்தையும், அதேபோன்று, அப்படிச் சென்ற ரயில்கள் திரும்பி வரும்போது பயணிகளே இல்லாமல் வரும் என்பதால் அதற்கான செலவையும் சேர்த்துக் கணக்கிட்டால், மொத்த செலவில் 85% கட்டணத்தை மானியமாக வழங்குவதாக சம்பித் பத்ரா தனக்குத்தானே புகழ்மாலை சூட்டிக் கொண்டார். (எத்தனை இரக்கமிக்க அரசாங்கம் இது… நினைக்க நினைக்க மனம் குளிர்கிறது… இத்தனை இரக்கமுள்ளவர்களாக மத்திய அரசு இல்லாமல் இருந்தால் இந்த இடம் பெயர் தொழிலாளர்கள் எத்தனை மடங்கு செலவழித்திருக்க வேண்டும்)

அவருடைய வாதத்தின் படி, ரயில்வேக்கு ஆகும் செலவில் 15% தான் ரயில் டிக்கெட்டில் அச்சடிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை மாநில அரசுகள் கொடுத்துவிட வேண்டும். அதாவது, இதன் பொருள் மத்திய அரசாங்கம் ஆணியில் உள்ள ஒரு தூசியைக் கூட துடைக்கவில்லை.

டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தது யார்?

நாங்கள்தான் 85% கட்டணத்தை கொடுக்கிறோம் என்று மத்திய அரசு பீற்றிக் கொண்டாலும் இந்த டிக்கெட்டுக்கான கட்டணத்தில் ஒரு செல்லாத நையாப் பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. அப்படி ஏதாவது கொடுக்கப்போவதாகவும் இதுவரை சொல்லவில்லை. உண்மையில் மத்திய அரசு இந்த சுமையையும் எங்களுக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த மாநில அரசுகளின் தலையில் சுமத்திவிட்டார்கள்.

சம்பித் பத்ரா மாநில அரசுகள் தேவை என்றால் தங்கள் நிதியில் கொடுக்கட்டும். இல்லையென்றால், பயணம் செல்கின்ற தொழிலாளர்களிடம் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய கூற்றுப்படி உ.பி., திரிபுரா மற்றும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் அனைத்தும் கட்டணத்தை தாங்களே ஏற்றுக் கொண்டார்களாம். காங்கிரஸ் அரசுகள்தான் மறுத்துக் கொண்டிருக்கின்றனவாம். இந்த முடிவும் கூட காங்கிரஸ் கட்சி இடம் பெயர் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை தாங்களே செலுத்திக் கொள்கிறோம் என்று முன்வந்ததற்குப் பிறகு வந்த பின்யோசனை.
இதுவெல்லாம் ஒருபுறமிருக்க எப்போதும் போல ‘மாதிரி மாநிலமான’ பாஜகவின் குஜராத் டிக்கெட்டுக்கான பணத்தை தொழிலாளர்களிடமிருந்து கறந்துவிட்டது.

தொழிலாளர்களுக்கான இந்த சிறப்பு ரயில் கட்டணம் வழக்கத்தை விட குறைவா?

இல்லவே இல்லை. உண்மையில், வழக்கமான கட்டணத்தை விட இந்தக் கட்டணம் அதிகம். ரயில்வே வழக்கமான படுக்கை வசதிக் கட்டணத்தை கூடுதலாக 50 ரூபாய் வசூலித்துக் கொண்டது. இதற்கு ஒரு சிறப்பு பெயர் வேற வைத்துவிட்டார்கள். அது, கொரோனா சர்சார்ஜ் ஆம்.
அந்த தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் ஒரு டிக்கெட்டைக் காண்பித்தார். மும்பைக்கு அருகிலுள்ள வாசியிலிருந்து உ.பி.யிலுள்ள கோரக்பூருக்கு செல்வதற்கு வழக்கமாக 660 ரூபாயிலிருந்து 680 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், சிறப்பு தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணமாக ரூ.740/- கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்த 85% கதை உண்மையானால் தொழிலாளர்களிடம் மேற்கண்ட பயணத்திற்கு 102 ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, 740 ரூ வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கேரளாவிலிருந்து ஜார்க்கண்ட்க்கு வழக்கமாக 800 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது 850 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.

வழக்கம் போலவே நேரடியாக பதில் சொல்லாமல் செய்யாத ஒன்றை செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கம் அறிக்கை வெளியிடுவதும், அதைத் தூக்கிக் கொண்டு மோடி ஆதரவாளர்கள் கூத்தாடுவதுமே இந்தப் பிரச்சினையிலும் நடந்திருக்கிறது.
மொத்த சுமையையும் மாநில அரசுகளின் மீது சுமத்திவிட்டு வெற்று பீற்றலை மோடி அரசு தனக்குத்தானே சூடிக் கொண்டத

மிழில் க.கனகராஜ்


,------------------------+-------++-----------+-------------

அரசு கடன் பத்திரங்கள் ஒரு பார்வை.

நேற்று ஒரு செய்தியை பார்க்க நேரிட்டது.

டாஸ்மாக் வருமானத்தில்  தங்களுக்கும் பங்கு  வேண்டும் என்று மத்திய அரசின் வருமான வரித்துறை நீதி மன்றத்தில்  நீதியை நாடி இருக்கிறார்கள். அதிலும் கடந்த வருடத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய் அளவு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.



தமிழக அரசே பல பேர் ஏச்சு, பேச்சுக்களை கடந்து டாஸ்மாக்கை திறந்தால் அதற்கும் தடை வாங்கி வைத்துள்ளார்கள். இதில் மத்திய அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றால் பிச்சை எடுத்த பெருமாளிடம் திருடி தின்னும் அனுமார் கதை தான்.


கடந்த பதிவில் பார்த்தவாறு எங்கே போனால் பணம் கிடைக்கும் என்று அலையும் நிலையில் தான் மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன. அதன் விளைவு தான் நேற்று பேருந்து உயர்வு கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட்டது. அடுத்து மின்சார கட்டண உயர்வும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆதார நிதி மூலங்களின் வலுவற்ற நிலையே இதற்கு காரணம் என்று சொல்லலாம். 18 ரூபாய் உண்மையான பெட்ரோலின் விலைக்கு 75 ரூபாய் கொடுத்து வருகிறோம். அதே நேரம் மக்கள் வெளியே போகாமல், வாகனங்கள் இருந்ததால் பெட்ரோலின் தேவை 50%க்கும் குறைவாக சென்று விட்டது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி அளவு வருவாய் மத்திய அரசுக்கு இதன் மூலமே கிடைத்து வருகிறது. அதில்  தடை ஏற்பட்டுள்ளதால் அரசு இனி அடுத்து அதிகமாக பயன்படுத்தும் பொருள் ஒன்றை யோசித்து வரி போடவும் வாய்ப்புகள் உள்ளன.
மொத்தத்தில் அரசின் இந்த வரி பிடியில் இருந்து தப்ப வேண்டும் என்றால் நமது செலவுகளை அதிக அளவில் குறைத்தால் தான் தப்ப முடியும். இல்லாவிட்டால் நேர்முக வரி, மறைமுக வரி என்று எல்லாவற்றிலும் அடைபட்டு கிடைக்க வேண்டி வரலாம்.

வரி கொடுப்பதை குறைவாக சொல்லவரவில்லை. ஆனால் அந்த வரி என்பது மக்களை வருத்தி வாங்குவதாக இருக்க கூடாது.

இது தவிர, தற்போது பண வருவாய்க்கு அரசு கடைசியாக எடுத்திருக்கும் ஆயுதம் கடன். இந்த வருடம் 7 லட்சம் கோடி அளவுக்கு தான் கடன் வாங்க நிர்மலாஜி திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் நேற்று 12 லட்சம் கோடி கடன் வாங்குவதாக சொல்லி இருக்கிறார்கள். அதாவது 7 லட்சம் கோடியில் 3.5% என்பது பட்ஜெட் நிதி பற்றாகுறை என்றால் 12 லட்சம் கோடியில் 6% என்பதை எட்டலாம். முந்தைய காங்கிரஸ் அரசை கடன் வாங்குவதில் முந்தி விட்டார்கள்.

இந்த கடன் எப்படி வாங்குகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

அரசு கடன் பாத்திரங்களை சந்தையில் வெளியீடும். சந்தையில் அதிக அளவு கடன் பத்திரங்கள் புழக்கத்தில் வரும் போது அந்த கடன் பத்திரங்களுக்கான வட்டியும் அதிகமாகும்.

இந்த வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து தான் நமது நிறுவனங்கள்  சர்வதேச சந்தையில் கடன் வாங்குகின்றன.  அதனால் அவர்கள் அதிக வட்டி கொடுக்க வேண்டி வரும். அதிக அளவு கடன் வைத்து இருக்கின்ற நிறுவனங்களுக்கு இது ஒரு எதிர்மறையான செய்தி தான்.

இவ்வாறு வெளியீடும் கடன் பாத்திரங்களை நமது வங்கிகள் தங்களிடம் இருக்கும் Reserved Cash பகுதியில் இருந்து எடுத்து வாங்கி கொள்ளலாம். அதாவது அந்த Reserved Cash என்பதும் மக்களின் டெபாசிட் தொகை தான். அதற்கு அரசு வட்டி கொடுக்கும்.

அவ்வாறு கிடைக்கும் கடன் வருமானத்தை அரசு அதிக அளவு முறையாக செலவிடப்பட்டால் மக்களிடம் பணப் புழக்கம் பெருகும். மக்களிடம் மிதமிஞ்சிய பணம் வந்தால்,  அந்த பணத்தை மீண்டும் வங்கியில் போடுவார்கள். மீண்டும் திருப்பி Reserved Cash பகுதி பெருகும். இப்படி ஒரு வட்டம் உருவாகி பொருளாதாரத்தை சீரமைக்க உதவுகிறது.

ஆனால் இந்த வட்டம் ஒழுங்காக வருவதற்கு அரசு இந்த 12 லட்சம் கோடி  ரூபாயை எப்படி செலவு  செய்ய போகிறது என்பதை பொறுத்தே அமையும்.

பார்க்கலாம்!  நல்லது நடக்குமென எதிர்பார்ப்போம்., 
இதற்கு மேல் மக்களிடம் தாங்கும் சக்தியும் இல்லை...

------------------------------------------
வேகமான கொரோனா.
ஊரடங்கு தளர்வில் சென்னை.
சரியாகுமா?

தமிழகத்தில் அதிக பட்சமாக சென்னையிலேயே கொரோனா பாதிப்பு தினந்தோறு நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் 4வது இடத்தில் உள்ளது சென்னை.

நேற்று வரை மட்டுமே 3330 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 501 பேர் குணமடந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும், 27 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆகவே, 2,786 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 15 மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநகராட்சி முழுவதும் சுமா 400க்கும் மேலான பகுதிகள் நோய் கட்டுப்பாடுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், ஊரடங்கு சமயத்தில் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது எடப்பாடி அரசு.

அதன்படி, இன்று வெளியான அறிக்கையில் சலூன், ஸ்பா, பியூட்டி பார்லரை தவிர்த்து மற்ற அனைத்து வகையான தனிக்கடைகள் இயங்கலாம் என அறிவித்து சிலக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

ஏற்கெனவே, டாஸ்மாக் கடைகளை திறந்து கல்லா கட்டியதால் அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டது. இதனால், நாளை முதல் டீக்கடை உள்ளிட்ட தனிக்கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பது மக்களின் தனிமனித இடைவெளியையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வரும் சமயத்தில் இவ்வாறு தளர்வுகளை வழங்குவது தமிழகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு கிடைக்கவேண்டிய நிதியை போர்க்கால அடிப்படையில் கேட்டுப் பெற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் நோய் பரவலை முறியடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

-----------------+------------------------------

அதிகாரப் பசியால் அநீதி

 கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மோடி அரசு தன்னுடைய பல்வேறு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி வருகிறது.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வரு டங்களுக்கு (2020- 21, 2021-22) நிறுத்தி வைப்பதாக தன்னிச்சையாக அறிவித்தது மோடி அரசு. மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்க ளவை உறுப்பினர்கள் தங்களது மாநிலங்களில் மேம்பாட்டு பணிகளுக்குத்தான் தங்களது தொ குதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துகின்றனர்.  கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் உட்பட பல உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை மருத்துவமனை மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஒதுக்கினர். இத னால் மாநிலஅரசுகளின் சுமை ஓரளவு பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிலையில் ஏற்கெனவே இரண்டு ஆண்டு களுக்கான நிதியை நிறுத்தி வைத்த மோடி அரசு தற்போது 2019- 20 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கைவைத்துள்ளது. இதற் கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில் இந்த நிதியும் ஒதுக்கப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இது முற்றிலும் அநீதி யான ஒன்றாகும். கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கி னால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தைச் சமாளிக்க மாநில அரசுகள் கேட்கும் நிதியை ஒதுக்க மத்திய பாஜக கூட்டணி அரசு மறுக்கிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரை மோடிஅரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. 

மத்திய ஆட்சியாளர்களின் தயவில் நாட்களை நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு இதை தட்டிக் கேட்க திராணியின்றி திகைத்து நிற்கிறது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கி 12 ஆயிரம் கோடி, திட்டமானியம் ரூ.10 ஆயிரம் கோடி போன்ற வற்றை தர மத்திய அரசு மறுக்கிறது.

இதை மக்களிடம் எடுத்துச் சொல்லக்கூட தைரிய மின்றி தமிழக அதிமுக அரசு, ஒட்டுமொத்த சுமை யையும் மாநில மக்கள் மீது மடைமாற்றம் செய்கிறது. மறுபுறத்தில் புதிய மின்சார சட்டத்திருத்தம் 2020 மூலம் மின்துறையில் மாநிலங்களின் அதிகா ரத்தை கபளீகரம் செய்கிறது மோடி அரசு. பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தை எடுத்துக் கொள் வதோடு, மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த மின்துறையையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் மத்திய அரசு எடுத்துக் கொள்ள முயல்கிறது. இதனால் தமிழ கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாயிக ளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் ரத்தாகும் அபாயம் உள்ளது.  இந்த இடர்பாடான காலத்தை பயன்படுத்தி மத்தியில் அனைத்து அதிகாரங்களையும், நிதியா தாரங்களையும் குவிப்பதில்தான் மோடி அரசு கவனம் செலுத்துகிறதே அன்றி மக்களை பாதுகாப்பதில் அல்ல.

------------------------------------8------------------------------------------

-----_-----------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?