தனியார் மயமாக்கலே, கொரோனா நிவாரணமா,?
புதிய தளர்வுகளின் படி, நோய் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில், அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் பாஸ் இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க, பொது மக்கள் அனுமதிக்கப்பட்ட மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கும், மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல பாஸ் முறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் புதிய தளர்வுகள் வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய தளர்வுகளின்படி, அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்காக, வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தமாக பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தலாம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் கட்டுப்பாடுகள் தொடரும்.
புதிய தளர்வுகளின்படி, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில 25 மாவட்டங்களில் தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீத பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீத பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடுப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம், சென்னையில் மாநகர ஆணையளரிடமும் அனுமதி பெற வேண்டும்.
போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் பாஸ் பெற்று மருத்துவ சிகிச்சைக்கு ஆட்டோ, டாக்ஸி ஆகியவற்றை பயன்படுத்த விலக்களிக்கப்படுகிறது.
பொதுவாக தமிழகம் முழுவதும், ஏற்கனவே நடைமுறையில் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். பின்வரும் செயல்பாடுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.
- வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
- பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் , உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள் போன்ற இடங்கள்.
- அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
- பொது மக்களுக்கான விமானம், இரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான இரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான இரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. (மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், இரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)
- டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
- தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ரிசார்ட்டுகள்.
- இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறை தொடரும்.
- நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
- தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
- பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்குப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்..
- ------------------------------------------------------------------
- தாராள பிர
பு.பி ஐந்து நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா நிவாரணம் என்ற பெயரில் வெளியிட்ட அறிவிப்புகள்.இதில் கொரோனா,ஊரடங்கில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் உள்ளது என்று முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
மே 13ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கடன்களின் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிறுவனங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியை வழங்குவதற்காக நிதியம் மற்றும் துணை நிதியங்கள் உருவாக்கப்படும். இது அந்த நிறுவனங்கள் உற்பத்தி திறன் மற்றும் அளவில் விரிவாக உதவும்.
வங்கியல்லாத தொழில் நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, அந்த நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு இந்திய அரசு பகுதி அளவு உத்தரவாதம் அளிக்கும். இந்த கடன்கள் மூலம் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் முதல் 20 சதவிகித இழப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்காக 45,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மே 14ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
ரேஷன் அட்டை இல்லாத உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
நகரங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ குறைந்த வீட்டு வாடகை திட்டங்கள் செயலாக்கப்படும்; அரசு உதவி பெறும் கட்டடங்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும்; தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யலாம். அதற்கு மத்திய அரசு உதவி செய்யும்.
முத்ரா சிஷு திட்டத்தின் கீழ் கடன் பெற்ற சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், 50,000 ரூபாய்க்கு கீழ் கடன் பெற்றவர்களுக்கு 12 மாதங்களுக்கு, வட்டி விகிதத்திலிருந்து 2 சதவீதம் வரை வட்டி குறைக்கப்படும் வழங்கப்படும் இதன்மூலம் 3 கோடி மக்கள் பயன் பெறுவர்.
மே 15ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
விவசாயத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கப்படும். கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பு, குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவைகளுக்கு இந்த நிதி செலவிடப்படுகிறது.
மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக "பிரதமரின் மீன்வள திட்டம்" என்ற பெயரில் புதிய திட்டம் தொடக்கம். இதன் மூலம், நாடு முழுவதும் மீன்வளத்துறையை மேம்படுத்த 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதில் ஒன்பது ஆயிரம் கோடி மீன்வளத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மீதமுள்ள 11 ஆயிரம் கோடி மீனவர்கள் நலனுக்காகவும் செலவிடப்படும்.
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளை ஆகியவை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
மே 16ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
ராணுவத் தளவாட உற்பத்தித்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிப்பு. அதே சமயத்தில், குறிப்பிட்ட சில ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும்.
புதுச்சேரி உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது.
இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும். மேலும், இந்தியாவிலுள்ள மேலும் ஆறு விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இன்று நிர்மலா சீதாராமன கூறியது என்ன?
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மத்திய அரசு செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன். மேலும், நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறை உள்ளிட்ட குறித்த ஏழு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதத்துக்கான மாநில வரிப்பங்கீடு ரூ.46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் ரூ.12,390 கோடி மற்றும் மாநில பேரிடர் நிதியாக ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சுகாதாரத்துறையில் இருந்து ரூ.4,113 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்' என்பதன் அடிப்படையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படுகிறது. ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 'இ-வித்யா' என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும்.
இவைதான் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க மோடி அரசு திட்டங்க--ள்.
20 லட்சம் கோடிக்கு கணக்கு வந்தாச்சு..
மோடி சொன்ன பிறகு கொரோனா உதவி தொகை பற்றி அதிக பேச்சு எழுந்தது. பங்குசந்தையில் கூட உயர்வை எதிர்பார்த்தார்கள். ஆனால் வெறும் 200 புள்ளிகள் உயர்வை மட்டும் பார்த்தது. அதன் பிறகு மேலும் கீழே வந்து விட்டது.நண்பர்கள் கூட இது தொடர்பாக கட்டுரை எழுத கேட்டு இருந்தார்கள். அதனால் வெள்ளியன்றே எழுத வேண்டிய கட்டுரை. ஆனால் புரியாமல் இருந்ததால் என்ன எழுதவென்றே தெரியவில்லை. சரி மூன்று நாளும் உட்கார்ந்து கேட்போம் என்று இருந்தோம். அது நான்கு நாளானது. இன்று ஐந்தாவது நாளோடு வில்லிசை முடிந்தது.இறுதியில் நிர்மலாஜி ஒரு புன் முறுவலோடு நீங்கள் கேட்ட 20 லட்சம் கோடிக்கு கணக்கு கொடுக்குறேன் என்று சொல்லிய போது அவர்களுக்கே மீம்ஸ் தாக்கம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.ஒரு படத்தில் சத்யராஜிடம் வடிவேலு தியேட்டரில் வேலை பார்ப்பதற்கு சம்பளம் கேட்பார். வடிவேலு தூங்கியது, சாப்பிட்டது போக நீ தான் 200 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்வார். அது போல் தான் இந்திய அரசின் கோரோனோ நிதியும்.3 லட்சம் கோடிக்கு MSME நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கிறார்கள். அந்த தொகையும் இதில் அடங்கும். அதற்கு அரசு மூலதன தொகையும் வங்கிகளுக்கு கொடுக்காது. ஆனால் உத்தரவாதம் மட்டும் கொடுப்பார்கள். முதலில் வங்கிகளிடம் இதற்கு காசு இருக்கிறதா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும் அரசை நம்பி எல்லாம் சீக்கிரமாக கொடுக்க மாட்டார்கள். இப்படி நடைமுறைக்கு வராத நிறைய வேலைகள் இந்த 20 லட்சம் கோடியில் வந்து விடுகிறது.- இதே போல் விமான நிறுவனங்களுக்கு நேரே போகுமாறு வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன. இதனால் ஆயிரம் கோடி மிச்சமாகும். அதுவும் இதில் அடங்கும்.அடுத்து P.F தொகையில் சிறிது குறைவாக காட்டினால் போதும். அதாவது நாம் கட்டிய தொகை தான் பிறகு நமக்கு கையில் கிடைக்கும். அதுவும் 20 லட்சம் கோடியில் வருகிறது.விவசாயிகளுக்கு வழக்கமாக கொடுக்க கூடிய அந்த உதவி தொகை இரண்டு மாதத்திற்கு முன்னர் கொடுத்து விடுகிறோம். அதுவும் சேர்ந்து விடும்.ஒரு பக்கம் சுதேசி கொள்கை இந்த பேச்சின் பிரதானம். ஆனால் பல துறைகளில் அந்நிய முதலீடுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதிலும் பாதுகாப்பு துறையில் 49% திறந்து விட்ட போதே வெளிநாட்டு நிருவனங்கள் முதலீடு செய்யவில்லை. தற்போது 74% திறந்து விடப்பட்டுள்ளது. அந்த அளவு சாத்தியம் இந்த கொரோனா சூழ்நிலையில் என்று தெரியவில்லை.ஆக, இப்படி கணக்கை ஒன்றாம் நாள், இரண்டாம் நாள், ...ஐந்தாம் நாள் என்று கூட்டியதில் 20 லட்சத்து 91 ஆயிரம் கோடி வந்துள்ளது. அதாவது சத்யராஜ் - வடிவேலு காமெடி போல் நாம் தான் இந்த அதிகபட்ச 91 ஆயிரம் கோடியை அரசுக்கு கொடுக்க வேண்டிய கடன்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம்.நிர்மலா சீதாராமனின் இந்த கூட்டங்களை பார்க்கும் போது நடைமுறை பிரச்சினைகளுக்கும் அவரது தீர்வுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி தான் அதிகமாக தெரிகிறது.இப்போதைய முக்கிய பிரச்சினையே Demand என்ற தேவை தான். எதனையும் வாங்கும் அளவிற்கு மக்களிடம் பணப் புழக்கம் இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவன் கூட கொரோனாவை பார்த்தவுடன் உயிர் வாழ்தல் போதும் என்ற நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளான். அந்த சூழ்நிலையில் மக்களிடம் நம்பிக்கை கொடுத்து பணப் புழக்கத்தை கூட்டும் எந்த நடவடிக்கையும் இந்த 20 லட்சம் கோடியில் இல்லை.அதே போல் Demand கூடாத வரை நிறுவனங்கள் எந்த சலுகை கொடுத்தாலும் முதலீடு செய்ய முன் வராது. அதான் கடந்த வருடம் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை கொடுத்தது முதல் தொடர்கிறது. தற்போதும் அது தான் தொடர வாய்ப்பு உள்ளது.ஆக, மொத்தத்தில் பொருளாதார உலகில் வாங்குபவர், விற்பவர் என்று இரண்டு பேருக்குமே திருப்தி கொடுக்காத Stimulus தான் இந்த 20 லட்சம் கோடி. இதற்கு மேல் எதுவும் வாய்ப்பு இல்லாததால் சந்தையில் அடுத்த கட்ட சரிவுகளை நாம் தவிர்க்க இயலாது.
- இதனால் அரசுக்குத்தான் வருமானம்.மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
- மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் ஆள்வோர்களாக இருந்தால் மக்கள் வேலைக்குப் போகாமல் ஏழ்மையில் முடங்கி இருக்கையில் வீழ்ச்சியடைந்த பெட்ரோல் விலையை முன்பை விட அதிகமாக்கியிரும்பார்களா,சுங்கக் கட்டணத்தை,ஜி.எஸ்டி யை உயர்த்துவார்களா?
- மதுக்கடைகளைத்தான் திறந்து குடும்பத்தினர் தாலியையும் விற்க வழி செய்வார்களா என்ன,?
- ----------------------------8--------------------------
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
- இலங்கை இணைய தளங்கள் முடக்கம்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளம் நாகரத்னன் பிபிசி தமிழுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
குறிப்பாக இன்றைய தினம் காலை முதல் இலங்கையின் மிக முக்கியமான 5 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force) என்ற அடையாளத்தை கொண்ட ஒரு பிரிவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளமை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான ஹிரு நிறுவனத்தின் செய்தி இணையத்தளம் சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பானவர்களே இந்த சைபர் தாக்குதலை நடத்தியதாக அந்த நிறுவனத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளின் இவ்வாறான சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
கடந்த ஆண்டும் இதேபோன்று சுமார் 10 இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முறை குறித்த சைபர் தாக்குதலை தடுத்து நிறுத்த தாம் பல்வேறு வகையிலான நடைமுறைகளைப் பின்பற்றியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மே மாதம் 18ஆம் தேதி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கான பிரதான காரணம், ஒரு குழுவின் பிரபல்யத்தை உறுதிப்படுத்துவதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனால், குறித்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாதிருப்பதே சிறந்தது என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த ஆண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என தாம் முன்னதாகவே எதிர்பார்த்திருந்ததாக கூறிய அவர், அதனை தடுத்து நிறுத்த பல முன் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை கணினி அவசர தயார் குழு, இலங்கை விமானப்படையின் சைபர் பிரிவு மற்றும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து ஏற்கனவே ஒழு குழுவொன்று தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாக தீனதயாளன் கூறுகின்றார்.
தொடர்ந்தும் குறித்த குழு, இலங்கையிலுள்ள அனைத்து இணையத்தளங்களையும் கண்காணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இணையத்தளங்களை எவ்வாறு பாதுகாப்பது?
இணையத்தளங்களிலுள்ள சில குறைபாடுகளினாலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் தெரிவிக்கின்றார்.
ஈழத் தமிழர் துரோகிகள் யார்?
நமது எம்ஜிஆர் தெளிவாக்குகிறது.