திடீர் புளியோதரை?

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 4 நாட்களாக அறிவித்து வந்தார். அதில், அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதே பெரும்பாலும் இருந்ததால் நாட்டு மக்களிடையே பெரும் சலசலப்பும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பெரும் விமர்சனங்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

அவ்வகையில், மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும் மத்திய மோடி அரசின் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஐந்தாவது நாளான இன்று காலையிலேயே நிதியமைச்சர் தொலைக் காட்சிக்கு வந்து விட்டார். ஐந்து நாட்களிலும் வரவேற்பதற்கு ஒன்றுமில்லையா?

ஐந்து நாட்கள் அறிவிப்புகளில் யாருக்கு பொழிந்திருக்கிறது? எவ்வளவு பொசிந்திருக்கிறது? பொசிந்ததாவது போய்ச் சேருமா? என்பவைதானே அளவுகோல்கள். அறிவிப்புகளின் தன்மையே அடிப்படையான சந்தேகங்களுக்கு காரணம். இன்று என்ன அறிவிப்புகள்?

* கேந்திர தொழில்களிலும் (Strategic sector) தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவற்றில் எல்லாம் தொழிலுக்கு அதிக பட்சம் 4 அரசு நிறுவனங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒரே பிளாங்க் செக் போல கார்ப்பரேட்களுக்கான பொழிவு.

இந்திய விடுதலை பாரம்பரியத்தில் முகிழ்த்த தற்சார்பு கோட்பாடுக்கும் இவர்கள் திடீர் புளியோதரை போன்று சொல்கிற "தற்சார்பு பாரதத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

இவையெல்லாம் அமைதியான, நிதானமான சூழலில் விரிவான கருத்தொற்றுமையோடு எடுக்கப்பட வேண்டிய மிகப் பெரிய பொருளாதார முடிவுகள். நெருக்கடி மிக்க சூழலில் அவசர அவசரமாக திணிக்கப்படுவது ஏன்? ஆன்லைன் கல்வி என்ற பெயரில் டாட்டா, மிட்டல் போன்றவர்களின் நிறுவனங்களுக்கு புதிய சந்தை என்கிற இலவச இணைப்பு வேறு.

* இரண்டாவது மாநில அரசுகளின் கடன் அளவு 3% லிருந்து 5 % ஆக (GSDP யில்) உயரும் என்ற அறிவிப்பு. ஆனால் அந்த அறிவிப்பு ஓர் சுருக்கு கயிறோடு வந்திருக்கிறது. அதாவது கூடுதல் கடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

அதைப் பெற மத்திய அரசு காண்பிக்கிற பொருளாதார திசை வழியில் மாநில அரசுகள் பயணித்தாக வேண்டும். நிதியமைச்சரே, உங்களின் பொருளாதார அணுகுமுறையில் இருந்து மக்கள் கருத்து மாறுபடுவதால்தானே வேறு அரசியல் கட்சிகள் மாநில ஆட்சிகளில் அமர்கின்றன. மாநில அரசின் செயல்பாடுகளை நீங்கள் தீர்மானிப்பது கூட்டாட்சி மீதான தாக்குதல் அல்லவா! மாநில அரசுகளை தேர்ந்தெடுத்துள்ள மக்கள் கருத்தைப் புறம் தள்ளுவது அல்லவா!

* 100 நாள் கிராமப் புற வேலைத் திட்டத்திற்கு ரூ 40000 கோடி ஒதுக்கீடு உயர்வு என அறிவிப்பு. சுகாதார கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு.

பொசிவது போல தோன்றினாலும் அவை போய்ச் சேருமா என்பதே கேள்வி. கரோனா மார்ச் 23 க்கு பிறகுதான் ஊரடங்கு என்ற நிலைக்கு சென்றது. ஆனால் 2019- 20 முழுக்க 100 நாள் வேலைத் திட்டத்தில் கிடைத்த சராசரி நாட்கள் 41 தான். இவர்கள் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிய 61000 கோடியில் இவ்வளவுதான் கிடைத்தது. அதிலுங்கூட ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கூலி பங்கில் மாநில அரசுக்கு வைக்கிற பாக்கி தனிக்கதை.

நிதியமைச்சரே, இப்போது நீங்கள் சொல்கிற 40000 கோடி இந்தியா முழுக்க 100 நாள் வேலை தர போதுமானதா? சராசரி வேலை நாட்கள் கூடுமா? இப்பவும் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை என்ற விதியை நீங்கள் தளர்த்தவில்லையே! கிராமங்களுக்கு திரும்பிப் போய் குடும்பத்தோடு சேர்ந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்க்கு எப்படி வேலை கேட்கும்?

* சுகாதார ஒதுக்கீடு ஜி.டி.பி யில் 3 % வரை இருக்க வேண்டுமென்பது இன்று நேற்றா கோரப்படுகிறது? கடந்த பட்ஜெட்டில் கூட நீங்கள் செய்தது 1.1 சதவீதம் மட்டுமே. இப்போதும் கூட பொதுவான அறிவிப்பாக உள்ளது. ஒதுக்கீடுகளில் எவ்வளவு உயர்வு என்பது சொல்லப்படவில்லை.

வரவேற்போம் பெரும்பான்மை மக்களுக்கு பொழிந்தால்.. ஆனால் பொழிந்திருப்பதோ கார்ப்பரேட்டுகளுக்கு.. ஆறுதல் அடைவோம் கொஞ்சமாவது பொசிந்தால்..ஆனால் காகிதத்தில் மட்டுமே இருந்து கைவசமாகாவிட்டால் என்ன பயன்..

போய்ச் சேராது என்பது எங்கள் சந்தேகம் மட்டுமல்ல... கடந்த கால அனுபவம்... எப்படி வரவேற்பது சொல்லுங்கள்...

                                           - சு.வெங்கடேசன்,mp.


--------------------------------------------------------------------------------

இந்தியா( பி) லிட்.,

-கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தார்.

அதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டு வருகிறார். கடந்த மூன்று நாட்களில் சிறு குறு தொழில் துறையினர், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், மீனவர்களுக்கான திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன், இன்று நான்காம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, நிலக்கரி, சுரங்கம், இராணுவ உற்பத்தி, விண்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், மின்சார விநியோகம், ஆகாயம், அணு ஆற்றல், விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு :

விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம்!

ஆறு விமான நிலையங்கள் ஏலத்தில் விடப்படும். 12 விமான நிலையங்கள் சரவதேச அளவுக்குத் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் சர்வதேச விமானங்களுக்கு மிகப் பெரிய கூடாரமாக இந்தியா திகழமுடியும். இதற்கான முதலீடுகளில் இரண்டு கட்டங்களில் ரூ.13,000 கோடி வரை முதலீடு கிடைக்கும்.

சுரங்கங்கள் தனியார் வசம் ஒப்படைப்பு!

கனிம உற்பத்தி, கனிமச் சுரங்கங்களுக்கான ஏலம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அலுமினிய சுரங்கத் துறையில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக பாக்ஸைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களைச் சேர்த்து ஏலத்தில் விடும் நடைமுறை கொண்டுவரப்படும்.

“மொத்த இந்தியாவே தனியார் மயம்?” - நிதி அமைச்சர் இன்று வெளியிட்ட India Private Limited அறிவிப்புகள்!

வருவாய் பங்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்ட நிலக்கரி சுரங்க ஏல முறை கொண்டுவரப்படும். இதில் அரசின் தலையீடு நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கவும், அதை திறந்தவெளிச் சந்தைகளில் விற்கவும் வழிவகை செய்யப்படும்.

இராணுவத் தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு 74 சதவிகிதம்!

இராணுவத் தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு 74 சதவிகிதமாக அதிகரிப்பு. இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலை மாற்றப்பட்டு சுயசார்பு நிலை உருவாக்கப்படும். இராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு தனியாக பட்ஜெட் போடப்படும்.

மின் விநியோகம் தனியார் மயம்!

முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயம். மின்சார விநியோக முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார விநியோகப் பணி கண்காணிக்கப்படும்.

“மொத்த இந்தியாவே தனியார் மயம்?” - நிதி அமைச்சர் இன்று வெளியிட்ட India Private Limited அறிவிப்புகள்!

விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய விண்வெளித் துறையின் வெற்றிப் பயணத்தில் தனியார் துறையின் பங்களிப்பும் இருக்க வேண்டும். தனியார் துறைக்கு அரசு தரப்பிலிருந்து சிறந்த கொள்கை மற்றும் விதிமுறைச் சூழல் உருவாக்கித் தரப்படும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வழிவகை செய்யப்படும்.

அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!

மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக பொதுமக்கள் - தனியார் பங்களிப்புடன் ஆய்வு உலை அமைக்கப்படும். அணுசக்தி தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொழிற்சூழலை இணைக்க தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்.

இவ்வாறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிதி அமைச்சரின் அறிவிப்புகள் இந்தியாவையே தனியாருக்கு பங்கிட்டு விற்பதைப் போல இருப்பதாக பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து பல்வேறு துறைகளை, மக்களை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார அறிவிப்புகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாட்களாக திட்டங்களை அறிவித்துள்ளார். பொருளாதார முடக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணத்தை மத்தியஅரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் நாட்டில் 89 சதவீத மக்களின் வாராந்திர வருவாய் பூஜ்ஜியமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவை நடத்தியஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களுக்கு செல்லும் போது வேலை கிடைத்தது. இப்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது, அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.

ஏழை மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாக பணத்தை மத்திய அரசு வழங்கவேண்டும் என்ற கருத்தை தொழிலதிபர்கள் அசிம் பிரேம்ஜி, வேணு ஸ்ரீனிவாசன் இருவரும் ஆதரிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சற்று முன்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ப.சிதம்பரம், “பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூபாய் 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான்.

ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்.

------------------------------------------------------------------------

டிவி விவாதத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை, பாஜக-வின் கரு நாகராஜன் பதில் தர முடியாத நிலையில்" மூன்றாந்தர கேவலமான பொம்பளை மலடி" எனஇழிவாகப் பேச விவாத்த்தை விட்டு ஜோதி மணி,கலாநிதி வீராசாமி ஆகியோர் வெளியேறியது பெரும் விவாதமாகியிருக்கிறது. பெண் என்றும் பாராமல் பொது வெளியில் இழிவான வார்த்தைகளால் குறிப்பிட்ட கரு நாகராஜனுக்கு அரசியல் தலைவர்கள், 


ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அதோடு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் உயர்நீதி மன்றமாவது மயிராவது என்ற எச்ச.ராஜா மட்டும் கரு(வாயன்) நாகராஜனை வரவேற்றுள்ளார்.மலம் தின்னும் பன்றி,பன்றி யோடுதான் சேரும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?