மனிதாபிமானமிக்க பாஜக.

குறைந்த வருமானத்திற்காக சொந்த ஊரை, குடும்பத்தினரை விட்டு வெளிமாநிலங்களுக்கு பணிக்காகச் சென்று அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு இடையே தற்போது சொந்த ஊருக்குச் செல்வதே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் இன்னலாக அமைந்துள்ளது.

ஊரடங்கால் வேலையின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றாவது உயிர் வாழலாம் என எண்ணி கால்கடுக்க நடையாய் நடந்தும், கிடைக்கும் போக்குவரத்துகளை பயன்படுத்தியும் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு செல்லும் வழிகளில் குடிக்க தண்ணீரில்லாமல், உண்ண உணவு கிடைக்காமல் பல்வேறு தவிப்புகளை கடந்து சென்றாலும் விபத்துகளும் வெளி மாநிலத்தொழிலாளர்களை விட்டுவைக்கவில்லை. தினந்தோறும் கணிசமான தொழிலாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டும், விபத்துகளில் சிக்கியும் உயிரிழப்பதே தொடர்கதையாகி வருகிறது.

உயிருடன் இருக்கும்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மடிந்தும் அந்த கஷ்டங்கள் தீர்ந்தபாடில்லை. அப்படியான சம்பவங்களே அண்மைக் காலங்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், ராஜஸ்தானில் பணியாற்றி வந்த பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 60 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல எத்தனித்து லாரியில் புறப்பட்டிருக்கிறார்கள்.

அவ்வாறு வந்துகொண்டிருக்கும் வேளையில் உத்தர பிரதேசத்தின் அவ்ராயா என்ற பகுதியில் எதிரே வந்த லாரி தொழிலாளர்கள் சென்ற லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

“திறந்த லாரியில் இறந்த உடல்களுடன் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள்” : உ.பி அரசின் மனிதாபிமானமற்ற செயல்!

பின்னர், பலியானவர்களின் உடலை பிளாஸ்டிக் பையில் சுருட்டி வைத்து திறந்தவெளி லாரியில் கிடத்தியதோடு அதனூடே விபத்தில் சிக்கியவர்களையும் அவ்ராயா நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கண்ட அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இது மனிதாபிமானமற்ற செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தர பிரதேச மற்றும் பீகார் அரசைக் குறிப்பிட்டு விபத்தில் சிக்கியவர்களையும், அதில் உயிரிழந்தவர்களின் உடல்களையும் தகுந்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அனுப்பி வைக்குமாறு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதன் பின்னர் உத்தர பிரதேச நெடுஞ்சாலை வழியே லாரி சென்றுகொண்டிருந்த போது

இறந்தவர்கள் உடல்கள் ஆம்புலன்ஸிலும், காயமடைந்தவர்களை வெவ்வேறு ட்ரக்குகளிலும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்-

-------------------------

எட்டு மாதமாச்சாம்

சீனாவில், கொரோனா வைரஸ் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி, அறிகுறி ஏதுமின்றி அமைதியாக இருந்திருக்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, டிசம்பரில், சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில், முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த வைரஸ், கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே, வூஹான் மக்களிடம் அமைதியாக பரவ ஆரம்பித்திருக்கலாம் என, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பல்கலை., விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து, இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு, அக்., - நவ., மாதங்களில், வவ்வால்களிடம் தோன்றிய வைரஸ், அடையாளம் தெரியாத பிராணி அல்லது பிராணிகளின் பாகங்களில் பரவி உள்ளது.அந்த சமயத்தில், சீனாவில், அடுத்தடுத்து மூன்று பெரிய திருவிழாக்கள் வந்ததையொட்டி, உயிருள்ள பிராணிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்த வகையில், அறிகுறியின்றி அமைதியாக பரவிய கொரோனா, டிசம்பரில், திருவிழா காலத்தில் அதிக மக்கள் கூடிய போது, வேகமாக பரவி, பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வூஹான் நகரில், சீனாவின் புத்தாண்டுக் கொண்டாட்டம், குடும்ப விருந்து என்ற இரு பெரிய விழாக்களும், அவற்றில் மக்கள் அதிக அளவில் கூடியதும், கொரோனா பரவ முக்கிய காரணம்.

சீனாவில், 'சார்ஸ்' வைரஸ் தோன்றியதற்கும், வவ்வால்கள், எறும்புத் தின்னிகள் உள்ளிட்ட பிராணிகளுக்கும் தொடர்பு உள்ளது. ஆனால், வைரஸ் பாதித்த முதல் மனிதர் யார் என்பது தான் தெரியவில்லை.வைரஸ் பரவ, பல காரணிகள் துணை புரிகின்றன. வைரஸ் ஆய்வுக் கூடங்கள் கூட, வைரஸ் பரவ உதவுகின்றன.முதல் வைரஸ், கிராமப்புற பண்ணைகளில் பரவ ஆரம்பித்திருக்க கூடும்.

ஏனெனில், கிராமப்புறச் சூழல், கொரோனா வைரஸ் பரவ, சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது. இனி, கொரோனா வைரஸ் போல, மேலும் பல வைரஸ்கள் தோன்றி, பரவ வாய்ப்புள்ளது. தற்போது, கொரோனா வைரஸ், அர்போ வைரஸ், இன்புளுயன்சா வைரஸ் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புதான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------
மனநலன் பாதிப்பு ஆபத்தில்
கொரோனா பாதிப்பாளர்கள்.

தி லான்செட் சைக்கியாட்ரி' இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:கொரோனா நோயாளிகளில், நான்கில் ஒருவர், மனப் பிரமை பிரச்னைக்கு ஆளாகிறார். இது, வழக்கமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவது தான். எனினும், இந்த பிரச்னை, ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது.

கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமானோருக்கு, தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். அதே நேரத்தில், மனப் பிரமை, குழப்பம், ஞாபக மறதி பிரச்னைகளை கொரோனா நோயாளிகள் சந்திப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா நோயாளிகள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா தொடர்பாக ஊடகங்கள் பரப்பி வரும் செய்திகள்,பயத்தை உண்டாக்கும்படியான தேவையற்ற பொய் செய்திகள் பரப்புதல் போன்றவதைதான், அவர்களின் மனநல பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது. அதனால் அவர்கள், 'வீடியோ' மூலம் தங்கள் சுற்றத்தாரை காணவும், பேசவும் வசதி செய்தால், மன நலம் மேம்படும் சாத்தியக் கூறு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-------------------------------------------

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, உற்பத்திக் குறைவால் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நிறுவனங்கள் பலவும், வருமான இழப்பை ஈடுகட்ட ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் அது மக்களை நேரடியாக பாதித்து வருகிறது.

இந்நிலையில், உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய இடர் ஆலோசனைக் குழுவும் மார்ஷ் மெக்லெனன் கம்பெனி மற்றும் சூரிச் காப்பீடு குழுவும் இணைந்து கடந்த மாதம் ஆய்வு ஒன்றை நடத்தின.

347 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், மூன்றில் இரண்டு பங்கு பங்கேற்பாளர்கள், அடுத்த 18 மாதங்களில் உலக பொருளாதாரத்தில் நீடிக்கும் சரிவு முதன்மையான கவலையாக இருப்பதாக பட்டியலிட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மேலாளர்கள், திவால் நிலை, இளைஞர்கள் மத்தியில் உச்சக்கட்ட வேலைவாய்ப்பின்மை போன்றவை ஏற்படுமென தெரிவித்துள்ளனர்.

“பொருளாதார நெருக்கடி நீண்டகாலம் இருக்கும்; புதிய முயற்சிகளுக்கான நேரம் இது” - உலக பொருளாதார மன்றம் தகவல்!

உலக பொருளாதார மன்றத்தின் மேலாண்மை இயக்குநரான சாடியா ஜாஹிடி, “கொரோனா நெருக்கடி வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. இது நீண்டகால தாக்கங்களுடன் ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வித்தியாசமாக முயற்சிகளைச் செய்வதற்கும்,  மக்களுக்கு உதவக்கூடிய நிலையான, நெகிழக்கூடிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சிறந்த பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் இப்போது ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.


--------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?