அமைச்சர் உதயகுமாரின் பாரத்நெட் ஊழல் அம்பலம்

எடப்பாடி பழனிச்சாமியின் கொரோனா
நேர நெஞ்சாலை ஒப்பந்த  ஊழல்.
கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், "பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்" என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி கேட்பார். ஆனால், ஊரடங்கு நேரத்திலும் - ஒரு டெண்டரை விட்டு - அதிலுள்ள முறைகேடுகள் உயர்நீதிமன்ற விசாரணைக்குப் போயிருக்கிறது!
உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு - காணொலி விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள் அ.தி.மு.க. அரசின் ஊழல் சாம்ராஜ்யத்திற்கு “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” போல் இருக்கிறது. துரை ஜெயக்குமார் என்ற பதிவுபெற்ற முதல் நிலை ஒப்பந்தக்காரர் – கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றினை (W.P.NO 7496 /2020) பொதுநல வழக்காகத் தாக்கல் செய்துள்ளார். அதில் பாதிக்கப்பட்டவரே அவர் என்பதால், உயர்நீதிமன்றம் அந்த பொதுநல வழக்கை ரிட் மனுவாக தாக்கல் செய்ய அனுமதித்துள்ளது.

“ஊரடங்கிலும் மறவாமல் டெண்டர் முறைகேட்டில் பிசியாக பணியாற்றும் எடப்பாடி” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள், அ.தி.மு.க. ஆட்சியில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேட்டை” அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில் 462.11கி.மீ. நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் - எங்கு பார்த்தாலும் மக்கள் கொரோனா பீதியில் உறைந்து போய் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த நேரத்தில் - அதாவது 15.4.2020 அன்று ஆன்லைன் டெண்டர் தாக்கல் செய்ய கடைசி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 32 பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலையை ஒரேயொரு ஒப்பந்ததாரருக்கு (MONOPOLY) வழங்கும் விதத்தில் இந்த டெண்டர் விடப்பட்டது என்று உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார் மனுதாரர்.
“இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1,165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது 700 கோடி ரூபாய் வரை அதிகம்” என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது தவிர “அரசு ஆணையில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் - டெண்டரில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது” என்பதையும் விளக்கிக் கூறியிருக்கும் அந்த மனுதாரர் “டெண்டருக்காக குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் பல" ஒருசில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை மனதில் வைத்து, கொண்டு வரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு காண்டிராக்டர் - ஊரடங்கு நேரத்திலும் வழக்குத் தொடருவதற்கு காரணமான இந்த டெண்டரில், துறை அமைச்சராக இருக்கும் திரு. பழனிசாமி - கொரோனா பணிகளுக்கு இடையிலும் அவசரம் காட்டியது ஏன்?
சாலை பராமரிப்புக்கான, ஐந்து வருட பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு ஊரடங்கு முடிவிற்கு வரும் வரை ஏன் முதலமைச்சர் பழனிசாமி பொறுத்திருக்கவில்லை?
கொரோனா நோய்த் தொற்றுப் பணியில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்; போர்க்கால அடிப்படையில் பணியாற்றுகிறோம் என்பதில், இப்படி உயர்நீதிமன்றம் வரை போகும் முறைகேடுகள் அடங்கிய டெண்டர்களை விடும் பணிகளும் அடங்கியுள்ளனவா?
- இப்படி அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்கத் தோன்றுகிறது.

“ஊரடங்கிலும் மறவாமல் டெண்டர் முறைகேட்டில் பிசியாக பணியாற்றும் எடப்பாடி” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
இந்த வழக்கை நிச்சயம் உயர்நீதிமன்றம் விசாரிக்கத்தான் போகிறது. அந்த விசாரணையில் எடப்பாடியின் டெண்டர் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரத்தான் போகின்றன. எல்லா வழக்கிலும் ஓடோடிச் சென்று “ஸ்டே” வாங்குவது போல், இந்த வழக்கையும் இழுத்தடிக்க முதலமைச்சர் பழனிசாமி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யலாம்.
ஆனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அதிகார துஷ்பிரயோகம்?
நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும்! அப்போது ஊரடங்கு நேர ஊழல்களும், கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும் மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும்!
எந்த ஊழலில் இருந்தும் யாரும் தப்பி விட முடியாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
----------+----------+-------------
கொரோனா போர்.

சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்து வரும் வார்த்தை போருக்கு பெரும்பாலும் உள்நாட்டு அரசியலும், எதிர்வரும் தேர்தலும்தான் காரணம். ஆனால், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த அணுகுமுறை வரும் மாதங்கள், ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொடும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது.
கொரோனா வைரஸ் பரவலின் தொடக்க கட்டத்தை சீனா கையாண்ட விதத்தை விமர்சிப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை கொண்டு அரசியல் ஆதாயத்தை பெறுவதற்கு டிரம்ப் மட்டுமின்றி எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து களமிறங்கவுள்ள ஜோ பிடனும் முயற்சித்து வருகின்றனர். இருவரும் தொடர்ந்து சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால், சீனாவுடன் அமெரிக்கா சண்டையை வைத்துக்கொள்வதற்கு சரியான நேரமா இது? என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தனது பிராந்தியத்தில் ராணுவ வல்லரசாக விளங்கும் சீனா, அமெரிக்காவுக்கே சவால் கொடுக்கும் நிலையை நோக்கி பயணிக்கிறது. 5ஜி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சீனாவின் வளர்ச்சி வியப்பளிக்கும் வகையில் உள்ளது.
அதுமட்டுமின்றி, உலகமெங்கும் வர்த்தகம் - நிதி உறவுகளை பலப்படுத்தி வரும் சீனாவின் ஆதிக்கம் சர்வதேச அரங்கில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில்தான் சீனாவை மேற்குலக நாடுகள் கண்காணிக்க தொடங்கியுள்ளன.
குறிப்பாக, சர்வதேச அரங்கில் சீனாவின் வளர்ச்சியை எதிர்கொள்வது அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு கொள்கைக்கான சவாலாக உருவெடுத்துள்ளது. ஆனால், அதே சூழ்நிலையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளில் சீனாவுடன் இணைந்து செயல்படும் வழியையும் அமெரிக்க அதிபர் ஆராய வேண்டியது அவசியம்.


Image copyrightGETTY IMAGESசீனாவுடன் சண்டையிட அமெரிக்காவுக்கு இது சரியான நேரமா?

டிரம்ப் என்ன சொன்னார்?

“சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது என்ற கருத்துக்கு நம்பிக்கை அளிக்கும் ஆதாரத்தை நீங்கள் கண்டுள்ளீர்களா?" என்று கடந்த வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு உடனடியாக பதிலளித்த டிரம்ப், “ஆம், என்னிடம் உள்ளது” என்று பட்டும்படாமல் பதிலளித்தார். மேலும், “சீனாவின் மக்கள் தொடர்பு நிறுவனத்தை போன்று செயல்படுவதற்கு உலக சுகாதார நிறுவனம் வெட்கப்பட வேண்டும்” என்று கூறினார்.


Image copyrightGETTY IMAGESசீனாவுடன் சண்டையிட அமெரிக்காவுக்கு இது சரியான நேரமா?

இந்த கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்குமாறு பிறகு செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் உங்களிடம் அதுகுறித்து சொல்ல முடியாது. அதை சொல்வதற்கு எனக்கு அனுமதி இல்லை” என்று டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைய வேண்டுமென்று சீனா விரும்புவதாக குற்றஞ்சாட்டினார்.
வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்ததா என்று விசாரிக்குமாறு அமெரிக்க புலனாய்வு அமைப்பிடம் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமையன்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
மேலும், கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல் தொடக்க கட்டத்திலேயே தெரிந்திருந்தும் அதை சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் மூடி மறைத்தனவா என்பது குறித்தும் விசாரிக்குமாறு வெள்ளை மாளிகை அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனாவில் அமெரிக்கா இவ்வளவு ஐயம் கொள்ளக் காரணம்? தான் திருடி பிறரை நம்பாள்.என்ற மனநிலைதான்.
ஹெச்.ஐ.வி ஆப்ரிக்காவில் பரவ காரணமே அமெரிக்க சோதனைதான் என்பது உலகறிந்த உண்மை.ஆப்ரிக்காவில் பரவ ஆரம்பித்தாலும் அமெரிக்காவிலும் எய்ட்ஸ் பரவி கணிசமாகப் பலி வாங்கியது.
கோவிட்-19 ம் அமெரிக்கா சீனாவின் வளர்ச்சிப் பிடிக்காமல் பரவ வைத்து அதனால் தானே பாதிக்கப்படுவதாலும்,தேர்தல் நேரம் என்பதாலும் உலக சுகாதார நிறுவனத்தையும்,சீனாவையும் பலியாடுகளாக்குகிறதோ என்ற ஐயம் இயல்பாகவே எழுகிறது.
----------------+-----------------------------
கொரோனா கொடூரம்.
கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாகப்  பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 11.3 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், 61,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அதில் நியூயார்க் நகரம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நியூயார்க்கில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 18,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான மக்களை இழந்துவரும் நியூயார்க் நகரம், உடல்களைப் புதைக்கவும், பாதுகாத்து வைக்கவும் இடமில்லாத அவலநிலையை அடைந்துள்ளது.

இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு இடமில்லாமல் தவித்து வரும் அந்நகர நிர்வாகம், மிகப்பெரிய குழிகளைத் தோண்டி, அதில் குவியல் குவியலாகப் பிணங்களைப் போட்டுப் புதைத்து வருகிறது. அதேபோல இறுதிச் சடங்குகளைச் செய்யும் மையங்களில், குளிரூட்டப்பட்ட அறைகள் என அனைத்தும் நிரம்பிவழியும் நிலையில், சடலங்களை வைக்கும் பைகளும் பல இடங்களில் காலியாகியுள்ளன. இந்நிலையில் அந்நகரத்தில் பல்வேறு இடங்களில், உடல்கள் நிரம்பிய ட்ரக்குகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
புரூக்ளின் பகுதியில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் ஒரு கட்டிடத்துக்கு வெளியே, கடந்த சில வாரங்களாக ஒரு கண்டெய்னர் லாரி நின்றுள்ளது. கடந்த சில நாட்களாக இதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் இதுகுறித்து அரசு நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த கண்டெய்னருக்குள் சுமார் 40 உடல்கள் ஒன்றின்மீது ஒன்று போடப்பட்டு வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகுதான் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பல லாரிகளில் உடல்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து பல நாட்களாக இந்த உடல் ட்ரக்குகளிலேயே வைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் முழுதும் துர்நாற்றம் வீசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துவரும் சூழலில் இதனைக் கையாள முடியாமல் அந்நகர நிர்வாகம் திணறி வருகிறது. 
 -------------------------+---------------------------

பாரத்நெட் ஊழல் அம்பலம் :

பாரத்நெட்” திட்ட டெண்டருக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பதன் மூலம் அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் ஊழல் தலைவிரித்தாடுவது உறுதியாகி இருப்பதால், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு :
“தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் 1,815 கோடி ரூபாய் மதிப்புள்ள “பாரத்நெட்” திட்ட டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை முடியும் வரை, அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று 30.4.2020 அன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக "தி இந்து" ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி - கொரோனா பேரிடர் காலத்திலும், அ.தி.மு.க அரசின் டெண்டர்களில் தலைவிரித்தாடும் ஊழலுக்கு ஆணித்தரமான ஆதாரமாக அமைந்திருக்கிறது.
பாரத்நெட் செயலாக்கம் குறித்த இந்த டெண்டர் விடப்பட்டதிலிருந்தே ஒவ்வொரு சர்ச்சைகளாக அணிவகுத்து வருகின்றன. முதலில் டெண்டர் கோரிவிட்டு - பிறகு தொழில்நுட்ப புள்ளி கூட்டத்தை திடீரென்று ரத்து செய்தனர். உடனே தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த 1995-ம் வருட “பேட்ச்” மூத்த ஐ.எ.ஏஸ் அதிகாரி டாக்டர்.சந்தோஷ் பாபு “விருப்ப ஓய்வில்” செல்வதாக விண்ணப்பித்தார். அதற்கான காரணத்தை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று 21.1.2020 அன்றே நான் அறிக்கை வெளியிட்டேன்.

“பாரத்நெட் ஊழல் அம்பலம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்க” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
ஆனால் சில தினங்களில் டாக்டர். சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டார். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுனத்தின் (டான்பிநெட்) நிர்வாக இயக்குநராக இருந்தவரும் மாற்றப்பட்டு - அந்த இடத்தில் அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) இருந்து – பிறகு நவம்பர் 2019-ல் ஐ.ஏ.எஸ். நிலைக்கு உயர்த்தப்பட்ட ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இவ்வளவும் நடந்த பிறகும், “டெண்டரில் முறைகேடு என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என்று தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் “பொய்யும் புரட்டும்” நிறைந்த அறிக்கையை வெளியிட்டார். சில தினங்களுக்கு முன்பு கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பாரத்நெட் திட்ட டெண்டர் ஊழல் பற்றி சுட்டிக்காட்டியபோது கூட, "திருத்திய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் முறைகேடு என்பது கற்பனையான குற்றச்சாட்டு” என்று மீண்டும் பொய் வாதம் செய்தார் அமைச்சர் உதயகுமார்.
இந்நிலையில்தான் தற்போது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (Department for Promotion of Industry and Internal Trade) தமிழக அரசு தலைமைச் செயலாளர் மற்றும் டான்பிநெட் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் எழுதி, “அறப்போர் இயக்கத்தின் புகாரின் மீது அவசர அறிக்கை கோரியிருப்பதுடன்” “ விசாரணை முடியும் வரை, அந்த 1,815 கோடி ரூபாய் டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது” என்று 30.4.2020 அன்று உத்தரவிட்டுள்ளது. “மேக் இன் இந்தியா” கொள்கையின்படி உள்ளூர் தயாரிப்பாளர்கள், போட்டியாளர்கள் டெண்டர்களில் பங்கேற்கும் வாய்ப்புகளை குறைக்கும் வகையில் எந்த ஒரு டெண்டர் நிபந்தனைகளும் இருக்கக்கூடாது” என்றும், “அவ்வாறு டெண்டர்கள் விடப்பட்டால் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் மத்திய அரசின் 15.6.2017-ம் தேதியிட்ட உத்தரவு தெளிவுபடுத்துகிறது.

“பாரத்நெட் ஊழல் அம்பலம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்க” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
இந்த உத்தரவை - பைபர் ஆப்டிக் டெண்டரில் அ.தி.மு.க அரசு மீறியுள்ளது என்பதுதான் அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு! இதை ஏற்றுக் கொண்டுதான் இப்போது அ.தி.மு.க. அரசின் டெண்டர் குறித்த விசாரணையை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதுமட்டுமின்றி - இந்த டெண்டர் விவகாரத்தை மத்திய அரசின் மூன்று செயலாளர்கள் மற்றும் இரு இணைச் செயலாளர்கள் கொண்ட ஒரு நிலைக்குழுவும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புகாரில் முகாந்திரம் இருக்கிறது என்று கருதி பைபர் ஆப்டிக் டெண்டருக்கு அ.தி.மு.க ஆட்சியின் “கூட்டாளி” அரசான மத்திய அரசே தடை போட்டிருப்பதால் - இப்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் என்ன சொல்லப் போகிறார்?
மத்திய அரசின் நடவடிக்கையும் கற்பனையானது என்று கூறுவாரா? இல்லை, பைபர் ஆப்டிக் டெண்டர் விட்டிருக்கிறோம் என்பதே கற்பனையானது என்று கூறுவாரா?
இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சமும் இருக்கிறது. “மேக் இன் இந்தியா” கொள்கைக்கு விரோதமாக வெளியிடப்படும் டெண்டர்களை கண்காணிக்க வேண்டும்”என்று 20.4.2018 அன்றே மத்திய விழிப்புணர்வு ஆணையம் அறிவுரை வழங்கியிருக்கிறது. அ.தி.மு.க அரசின் கீழ் உள்ள லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு இந்த அறிவுரை தெரியுமா? இந்த “டான்பிநெட்” டெண்டரை கண்காணிக்கிறதா? நான் ஏற்கனவே 28.1.2020 அன்று விடுத்த அறிக்கையில், “இந்த டெண்டர் கோப்புகளைக் கைப்பற்றி விசாரணை நடத்துக” என்று லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைக்கு கோரிக்கை விடுத்தேன். அதன் பிறகாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விழித்துக் கொண்டு இந்த டெண்டரை கண்காணித்ததா?
ஆகவே, “பாரத்நெட்” டெண்டர் மீதான விசாரணை பாரபட்சமின்றி - நியாயமாக நடைபெறுவதற்கு - டான்பிநெட் நிர்வாக இயக்குநரை உடனடியாக வேறு துறைக்கு மாற்ற வேண்டும்.
“டெண்டர் விதிமுறை மீறல்கள் நடக்கவில்லை” என்று பொய்யும் புரட்டும் மிகுந்த அறிக்கைகளை வெளியிட்டு - ஊழலை மறைத்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் - இந்த முறைகேடுகளுக்கு காரணமான அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து மாநில லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணை மேற்கொண்டிட உத்தரவிட வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
--------------------------+--------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?