யார் தடுக்கப் போகிறார்கள்.?
தேர்தல் தமிழ்நாடு உட்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்கும் பதிவுக்கும்,வாக்கு எண்ணிக்கைகும் இடையே ஒரு மாத இடைவெளி தேவையின்றி உள்ளது.
கேட்டால் மே.வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கின்றதாம் அதனால் தமிழக வெற்றி,தோல்வி பாதிப்பு மே.வங்க வாக்குப்பதிவை மாற்றி விடலாமாம்.
முதலில் மே.வங்கத்தில் எட்டு கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டிய தேவையே இல்லை என்கிறார்கள் அங்குள்ள கட்சித்தலைவர்கள்.
மேலும் மே.வங்கத்தில் தமிழகத்தின் ஆளுமையுள்ள கட்சிகள் தி.மு.க,அதிமுக போட்டியிடவே இல்லை.
சரத்குமார்,விஜயகாந்த்,கமல்ஹாசன்,சீமான் கட்சிகளுக்குக் கூட கிளைகள் இல்லை.
தமிழ்நாடு வெற்றித் தோல்வி மே.வங்கத்தில் என்ன விளைவுகளை உருவாக்கிவிடும்.
அப்படியே உருவானாலும் தேர்தல்ஆணையத்துக்கு என்ன சிக்கல்.? மக்களுக்கு வாக்களிப்பதில் தெளிவுதானே உண்டாகும்.அது கட்சிகளுக்குத்தானே கலவரம் தரும்.
பாதுகாப்பு இடர்பாடைத்தரும் என்று சொல்லவும் வாய்ப்பில்லை இந்தியா முழுக்க பொதுத்தேர்தல் நடத்தும் அளவு திறன் உள்ளதே.நடத்தியும் உள்ளோமே.
பல வாரங்கள் இடைவெளி வைக்கும் பெட்டிகள் மாற்றவும்,அதில் பதிவானவை மாறி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதை வெளிக்கொணருவதற்காகத் தரப்படும் காலத்திற்கான இடைவெளி எனும் பேச்சு வெளி உலாவுகிறதே.அதை நம்ப வைக்கும் படிதானே உள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை ஏற்கனவே பயன்படுத்திய நாடுகள் பழைய காகிதமுறைக்கே மாறி விட்டன.
நம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்குப்பதிவு எந்திரத்திற்கான சிப் தயாரித்துத்தரும் ஜப்பானிலேயே காகிதமுறைதான்.
ஆனாலும் இ.தே.ஆணையம் மட்டுமே எந்திரத்தை நம்புகிறது.மக்களையும் நம்பச் சொல்கிறது.எதிர்ப்போரை தேசத்துரோக வழக்கில் தள்ளுகிறது.
ஆனால் தேனி மக்களவைத்தேர்தலில் வெளியில் இருந்து வந்த ஐம்பது எந்திரங்கள்தான் முடிவையே மாற்றியது எனும் நம்பிக்கை உண்மைக்கு அருகில்தீன் உள்ளது.
மி.வா.ப.எந்திரத்தை வெளியில் இருந்து கட்டுப்படுத்த முடியும் என செய்துகாட்ட வரும் அறிவியலாருக்கு தான் தரும் எந்திரத்தை மட்டுமே சோதிக்க வேண்டும் என்பதும் ஏற்கனவே பதிவுக்கு உபயோகமான ,அவர்கள் கேட்கும் வேறு எந்திரங்களைத் தர தே.ஆணையம் மறுப்பபதேன்.
பல ஐயங்களுக்கு விடை தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே உள்ளது.
வாக்குப்பதிவை வாக்காளர் அட்டையை விட்டு,விட்டு ஆதார் அட்டை க்யூ ஆர் குறியீட்டு அட்டை மூலம் நடத்தலாமே.
இதனால் வாக்காளர் பட்டியல் எனும் கோடிகளை விழுங்கும் செலவைத் தவிர்க்கலாமே.
மின்னணு தொழில் நுட்பம் மூலம் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஆதார் அட்டையை சொருகி ஒவ்வொருவலும் வாக்களிக்க வசதி செய்யலாமே.
இதனால் கள்ள வாக்குகள் பதிவு ஆகாதே.
வீட்டில் இருந்தே வாக்குச்சாவடி வர இயலாதவர்களும்,முதியவர்களும் இணையம் மூலம் அவரவர் தொகுதியை தேர்ந்தெடுத்துவாக்களிக்க முடியும்
தபால் மூலம் வாக்குகளே தேவையில்லையே.
நியாயவிலைக்கடைகள்,ஏ.டி.எம் களில் வெற்றிகரமாக உள்ள அட்டை முறை ஆதார் அட்டை மூலமாக தேர்தலில் செயல்படுத்த என்ன தயக்கம்.
யார் தடுக்கப் போகிறார்கள்.?
முறைகேடாக பதவியில் வந்து அமர்ந்திருப்பவர்கள்,அமர இருப்பவர்களைத்தவிர..?
@#₹%&-+()£€$¢^°={}*"':;!?