நூல்கள் காணல்

 இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி சிறப்பாக முடிந்து விட்டது.

சென்ற காட்சிபோல் ஆள்வோர் முறைகேடுகளை நூலாக வெளியிட்டதால் கடை மறுப்பு, எழுத்தாளர் வெளியேதள்ளி கைது போன்ற அசிங்கம் ஏதூம் இ ல்லை.

ஞாயிறன்று நூல்களைப் பார்வையிட  கண்காட்சியை வலம் வந்தேன்.

கூட்டம் அதிகம்தான்.நான் வெளியே வருகையில் கண்காட்சிக்கு வருவோர் கூட்டம் அந்த 2.30 வெயில் நேரமும் மிக அதிகமாகவே இருந்தது. பெரும்பாலோர் குடும்பமாக வந்தது சிறப்பு.

வழமைபோல் ஆண்டுமலர் நக்கீரன் வெளியீடு வாங்கினேன்.நக்கீரன் ,சாருபிரபா என இரு கடைகள் .

பாரதி புத்தகாலயத்தில்,எதிர் வெளியீட்டில் இடதுசாரி நூல்கள் கொள்முதல்.ஆயிரம் ரூபாயில் முடித்துக்கொண்டேன்.ஒதுக்கீடு ஐநூறுதான் என்றாலும் எல்லா நூல்களையும் வாங்க திணவு.

இதன் முன் செல்லும் வேளைகளில் எழுத்தாளர்களைப் பார்த்ததில்லை.கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம்.

இம்முறை முதலில் ' தேசாந்திரி' யில் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியில் எதிர்பட்டார்.சுற்றிலும் இளம்மகளிர் கும்பல்.அனைவருக்கும் நூல்களில் கையொப்பமிட்டுக்கொண்டு பரபரப்பாக இருந்தார்.

தேசாந்திரி முழுக்க அவர் எழுதியவைகள்தான் காட்சி.இவ்வளவு எழுதியுள்ளாரா.அடுத்தமுறை இருகடைகளை அவர் பிடித்து காட்சிப்படுத்த வேண்டியிருக்கும்.

' உயிரமை' வாசலில் மனுஷ்யபுத்திரன்.ஒரு வணக்கம்.சிரித்துக் கொண்டே பதிலி.

நெருங்க எண்ணுகையில் அவரின் நண்பர்கள் இருவர் அருகிட்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.அவர் கவிதைகளை அதிகமாக பார்க்க மட்டுமே செய்த நமக்கு அது அங்கிருந்து ரகர வசதியானது.

'ஜீரோ டிகிரி" வாசலில் அராத்து,ராகவன் என சிலர்.

சாருநிவேதா ? அங்கமிங்கும் பார்க்கையில் நம் முன்னே அதிலிப்ஸ்டிக் பெண் ஒருவரிடம் வழிந்தபடி (அவர் மொழியில் கலந்துரையாடிக்) கொண்டிருந்தார்.

பின் அப்பெண்ணுடன் அலைபேசியில் படமாக்கிக்கொண்டிருந்தார்.

மேலும் பல அரங்குகள் பார்வையிட்டேன்.அரங்கு முன் ஜிப்பா,குர்தா தோள்ப்பை என சிலர் நின்றனர்.

எழுத்தாளர்களாக இருக்கலாம்.

கவனித்த ஒரு செயல்.சில என்ன பல அரங்குகள் புத்தகப் பதிப்பாளர்களாகத் தெரியவில்லை.பிறர் வெளியிடுகள் விற்பனை முகமைத்தன்மையோடு இருந்தன.

பாரதி புத்தகாலயம்,நியு செஞ்சுரி,நக்கீரன்,காலச்சுவடு,தேசாந்திரி போன்ற சில அரங்குகளுக்குள் நுழைவதும் பார்ப்பதும் சிரமமாக இருக்கச் செய்தது கூட்டம்.

ஒவ்வொருமுறையும் அந்தவழியே செல்ல முடியாதபடி இருந்த தமிழ்நாடு பாடப் புத்தக வெளியீட்டு அரங்கு இம்முறை ஊழியர்களால் மட்டுமே நிரம்பியிருந்தது.எல்லாம் கொரோனா செயல்.

இதுவரை ஒவ்வொரு குறுக்கு வழியிலும் கடைகொண்டிருந்த காபிகடைகள் இப்போது நடமாடிக்கொண்டிருந்தன.

காபி குடித்து விட்டு காகிதகோப்பையை போட இடம் தேடினால் எங்குமே குப்பைக் கூடைகள் வைக்கப் படவே இல்லை.முன்பு கடை அருகே கூடையிருக்கும்.காபி விற்றவரிடம் கேட்டால் உள்ளே வரும் வழியில் ஒரு குப்பை கூடை இருக்கும் என்றார்.காபியை குடிப்பதினால் கண்காட்சியை விட்டே வெளியே போக வேண்டுமா என்ன? 

கோபம் வர காபிபையன் திரும்பி பார்க்கையில் வண்டியின் கீழேயிருந்த வெற்றுக்கூடையில் போட்டு ஆரம்பித்து வைத்தேன்.வெளியே 10 ரூ காபியை 20 க்கு விற்பவர்கள் வண்டியிலேயே காலி கோப்பைகளைப் போட வழி செய்யவேண்டாமா.

அதை பபாசியினர் அறிவுறுத்த வேண்டாமா.?

சுற்றிக் களைத்து வெளியேறினால்கால்வலி. வெளி கலையரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.வெறும் நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன்.

மேடையில் தமிழ்வாணனின் மணிமேகலைபிரசுரத்தின்44 நூல்கள் வெளியிட்டு விழா நடந்து கொண்டிருந்தது.ஒருவர் காந்திக்கு விழிப்பை தந்த நூலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.பல நூல்கள் தூக்கத்தைத் தருகையில் விழிப்பை தரும் நூல்கள் சிறப்பானவைதானே.

சேரி பிகேவியர்,மயிர் புகழ் பா.ஜ.க.கலைப்பிரிவு,நடிகை காயத்ரிதான் தலைமையாம்.தலைதாங்க மேற்கண்ட புகழ்களே போதுமானதுதான்.வெளியிட்டவர் அவரின் தந்தை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

ரவி,லேனா தமிழ்வாணன்கள் எப்போது பா.ஜ.கவில் சேர்ந்தார்கள்? 

என்ற கேள்வியோடு வெளியேறினேன்.சங்கிகள் கூட்டத்தில் நமக்கு என்ன வேலை!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?