அழிப்பது கழகங்களை அல்ல.தமிழகத்தை.
"இரு கழகங்களையும் அகற்ற வேண்டும் "
மய்யம் கமல்ஹாசனின் கொள்கை அதுதான்.
தமிழ்நாட்டில் தி.மு.கழகத்தை அதாவது திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என்பதுதான் இதன் வெளிப்பாடு.
தி.மு.க வை அழித்து விட்டு எதை தமிழ்நாட்டை ஆளக்கொண்டுவரப் போகிறார்?
காங்கிரசையா?
கம்யூனிஸ்டுகளையா?
இவர்களை எல்லாம் அல்ல .பா.ஜ.க வைத்தான்.
நடிக்கும் போது பெரியார்,கம்யூனிசம்,,திராவிடம் பேசி அரசியல் கருத்துக்களை வைத்தார்.
முரசொலி விழா மேடையில் பேசுகையில் திராவிடத்தை ஆதரித்தும். மேடையில் ஏறி பேச பயந்து கீழேயே அமர்ந்த நடிகர் ரஜியை கிண்டலடித்தும் பேசினார்.
ஆனால் மய்யம் துவக்கி அரசியலில் இறங்கியதும் நேர் எதிராக மாறிவிட்டார்.
மாறினார் என்பதை விட தனது உண்மை முகத்தைக் காட்டினார்.பூணூல் போடாமலே அதன் தத்துவங்களை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.
கம்யூனிசம் பேசியவர் அதன் எதிராளி மம்தா,கெஜ்ரிவாலுடன் தோழமை கொண்டார்.அனைவரும் பூணூல் வம்சம் என்பது தவிர்க்க முடியா உண்மை.
பணமதிப்பிழப்பை ஆதரித்தார்.மோடியின் தமிழர்கள்,இந்திய மக்கள் வாழ்க்கையை கீழே தள்ளும் கார்பரேட் ஆதரவு,,விவசாயிகள்,ஏழை மக்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் எதிர்த்து பேசியதே இல்லை.
ஒப்புக்காக ஒரு டுவிட்.அதன் பொருளை அறிந்து கொள்வதற்குள் தலை வலி வந்துவிடும்.
பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லா தி.மு.கவைத்தான் திட்டுவார்.
மக்கள் விரோத ஊழல் ஆட்சி செய்யும் பா.ஜ்க,அதிமுக ஆட்சியாளர்களை திட்டம் பேசுவதே இல்லை.
இவைகள் எல்லாம்தான் கமல்ஹாசனின் மய்யம் ஒரு பா.ஜ.க வின் ஐந்தாம்படை(பீ டீம்) என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அதிமுக எம்.,ஜி.ஆர் காலத்திலேயே மணியன்,சோ,வித்வான்லட்சுமணன் போன்ற பார்ப்பணர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர்.அதற்கு பார்ப்பணப் பிரிவான மேனன் எம்ஜி.ஆர்,நம்பூதீரி ஜானகி போன்ற மேல் சாதியாக அமைந்த்து வாய்ப்பானது.பின் வந்த ஜெயலலிதா யார் என்பது உலகறியும்.உயிர்ப்புடன் இருக்கும் தமிழக திராவிட இயக்கம் தி.மு.க ஒன்றுதான்.அதன் தலைவராக கலைஞரிடம் அரசியல் பயின்ற ஸ்டாலினே தலைவரானதுதான் சங்பரிவார்களுக்கு எதிராக அமைந்து விட்டது.ரஜினி,கமல்,சீமான் என பலவழிகளில் ஐந்தாம் படைகளை இறக்கிவிட்டுள்ளது.
இவர்கள் அனைவருமே ஆளும் அ.தி.மு.க ஆட்சியாளர் கள் என்ன முறைகேடு,மக்கள் விரோத செயல்களை செய்தாலும் அவர்களைத் திட்டாமல்,பத்தாண்டுகளாக ஆட்சி இல்லாமல் இருக்கும் தி.மு.கவை மட்டுமே அழிக்க வேண்டும் என்று மட்டுமே பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டையும் உ.பி,பீகார் போல் சங்கிகள் கைக்குள் கொண்டுவர தடையாக நிற்பது தி.மு.க மட்டுமே.
அதனால்தான் திராவிடம் என்றால் தி.மு.க.
அதை அழித்தால் தமிழகம் காவி மயம் ஆகி விடும் என சங்பரிவார்கள் கட்சியின் வாரிசுகள் வரிந்து கட்டுகிறார்கள்.
உண்மையான தமிழக எதிரிகளை இனங்கண்டு அழிப்போம்.
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கு முந்தைய தேர்தல்கள் குறித்த சில தகவல்கள்.
சுதந்திர இந்தியாவில் மதராஸ் மாகாண சட்டமன்றத்துக்கு முதன்முறையாக 1952ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலசாரி முதல்வர் ஆனார். அவர் அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை என்பதால் பின்னர் சட்ட மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
- பூசாபதி சஞ்சீவி குமாரசாமி ராஜா சென்னை மாகாணத்தின் முதல்வராக 1950 முதல் 1952ஆம் ஆண்டு வரை இருந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், 1954 - 56ஆம் ஆண்டு வரை ஒரிசா மாநில ஆளுநராக இருந்தார்.
- இந்திய சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் பிரதான எதிர் கட்சி அந்தஸ்து கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் கிடைத்தது. ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள், முதல்வர் ராஜாஜிக்கு சவால் விடுக்கும் வகையில் சட்டமன்றத்தில் செயல்பட்டனர். ஆனால் தமிழகத்தில் அடுத்து வந்த தேர்தல்களில் அவர்களால் அந்த செல்வாக்கை கட்டிக் காக்க முடியவில்லை.
- திமுக தொடங்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 1957 தேர்தல் ஆகும். 1949இல் தொடங்கப்பட்ட திமுக 1952இல் நடந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.
- 1957 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், மறைந்த முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி, க. அன்பழகன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். கருணாநிதி குளித்தலை தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். க. அன்பழகன் எழும்பூர் தொகுதியில் வென்றார்.
- 1957ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து திமுகவுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எம்ஜிஆர் 1967ஆம் ஆண்டு தேர்தலில் பரங்கிமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில்தான், சுடப்பட்ட காயத்துடன் இருந்த எம்ஜிஆர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் வெளியான புகைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவரது வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தது. தேர்தலில் திமுக 137 இடங்களை கைப்பற்றியது.
- 1962ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை தோல்வியை தழுவினாலும், அக்கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பிரதான எதிர் கட்சி அந்தஸ்தை திமுக பெற்றது. திமுக சார்பில் போட்டியிட்ட முக்கிய தலைவர்களில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் மு. கருணாநிதி.
- 1967ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் காமராஜ். அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த பெ. சீனிவாசன் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தவர் சீனிவாசன். தேர்தல் முடிவுகளில் விருதுநகர் தொகுதியில் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜ் தோற்றார். கக்கன், பக்தவத்சலம் போன்றோரும் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.
- 1967ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், அண்ணா போட்டியிடவில்லை. மாறாக தென் சென்னை மக்களைவைத் தொகுதியில் போட்டியிட்டார்.
- அதேபோல 1971ஆம் ஆண்டு தேர்தலில் காமராஜ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவில்லை. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 1967 ஆண்டு திமுக தேர்தலில் வென்றது. 1971இல் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் மீண்டும் தோற்றது.
- எம்ஜிஆர். மறைவுக்கு பிறகு, அதிமுக ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதிமுகவில் ஜெயலலிதா அணிக்கு 1989ஆம் ஆண்டு தேர்தலில் ஆதரவு வழங்க முடிவு செய்ததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கி ஜானகி அணிக்கு ஆதரவு வழங்கினார் நடிகர் சிவாஜி கணேசன்.
11. ஆனால் 1989இல் நடந்த தேர்தலில் பலத்த அடியை சந்தித்தது சிவாஜியின் கட்சி. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசன் திமுக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார்.
12. 1989ஆம் ஆண்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக அரசு, இரண்டே வருடங்களில் அப்போதைய பிரதமர் சந்திரசேகரால் கலைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஆட்சி அமலுக்கு வந்த்து.
13. 1991ஆம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுகவிற்கு 1996ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. திமுக 173 இடங்களை கைப்பற்றியிருந்தது.
14. யூனியன் பிரதேசம் நீங்கலாக மாநிலங்களில் அதிக நாட்கள் ஆட்சி செய்த பெண் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாக பெண் ஒருவர் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஜெயலலிதா..
--------------------------------/------------------------------