இம்முறையும் ராம நாமம்தான் பொரி உருண்டைக்கு.

 தொலைக்காட்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கேள்விகளை தொடுக்கும் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சிக்கு 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் நிகழ்ச்சியின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18 பேர் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்தனர். பொன்னாருக்கு ஆதரவாக 8 பேரே கையை தூக்கினர். நிகழ்ச்சியின் இறுதியை மட்டும் தான் பார்க்க முடிந்தது

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு கடந்த இரண்டு வருடங்களாக திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழிச் சாலை வேலை நடைபெறவில்லை என்றார் பொன்னார். பாஜக தவிர்த்து வேறு யாரை தேர்ந்தெடுத்தாலும் வேலைகள் நடக்காது என்றும், மூன்று வருடங்கள் இனியும் பாஜக தான் மத்தியில் இருக்கப் போகிறது என்றும் மிரட்டும் தொனியில் பேசினார். அதை நாம் தமிழர் வேட்பாளர் உடனே தட்டிக் கேட்கவும் செய்தார். பொன்னார் இன்னொன்றையும் கூறினார். சாதி, மதமென பிரிந்து கிடப்பது போதுமெனவும், மக்களை வாழ விடுங்கள் என்றும் பெரிய யோக்கிய சிகாமணி போல பேசினார். இது பொன்னார் மற்றவர்களை பார்த்துப் பேசினார் என்று நினைப்பதைக் காட்டிலும் தன்னை நோக்கியே பேசினார் என்று எடுத்துக் கொள்ளலாம். மதவாத அரசியலின் உச்ச பலனை பொன்னார் தொட்டு விட்டார். இதற்கு மேல் மதவாதம் வாக்குகளை பெற்றுத் தராது என்ற அனுபவப் பாடத்தை கற்றுக் கொண்டு விட்டார். அதனால் தான் இரவல் சொற்களில் மதச்சார்பின்மை பேசுகிறார். சங்கிலித் திருடன் ஒருவன், ‘அதோ திருடன்…’ என்று சொல்லிக் கொண்டே ஓடுவதை போன்று பொன்னார் மற்றவர்களை பார்த்து மத அரசியல் வேண்டாம் என்று கூறுவது நகைப்புக்கிடமாக இருக்கிறது. மத அரசியலை உதறும் பாவனை கொண்ட பொன்னாரின் தேர்தல் கால சொல்லாடல்களின் இன்னொரு அம்சம் என்னவென்றால் அதானியின் துறைமுக மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு முழுக்க தன்னை நேர்ந்து விட்ட கடப்பாடு. ஒரு பக்கம் இந்துத்துவப் போக்கிரியாகவும் மறுபுறம் அதானிக்கு தம்பிரானாகவும் இருக்க வேண்டிய அந்திம கால அரசியல் நிர்ப்பந்தங்கள் இணைந்து பொன்னாரின் கதையை இன்னொரு முறை முடித்து வைக்க உக்கிரமாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

- ----+++----------++++------------+++++-------------------

பல்கலைக் கழகமா?

 பாலியல் கலகமா??





-----_--------_---------_--------_---------_---------_----------

தேடியந்திரம்.

கோ என்றால் அரசன் எனும் அர்த்தம் தமிழில் உண்டு என்பது தெளிவானது.

இதே போல, ஒற்றைச்சொல்லில் பொருள் கொள்ளக்கூடிய எழுத்துகளின் தமிழின் தனிச்சிறப்பாக கருதலாம். இது பற்றி தமிழ் ஆர்வலர்களிடம் தான் விரிவாக கேட்க வேண்டும்.

இப்போதைய கேள்வி என்னவென்றால், ‘அ’ என்றால் ஏதேனும் பொருள் இருக்கிறதா? என்பது தான்.

இதையே கொஞ்சம் மாற்றி ஆங்கிலத்தில் “A “ எனும் எழுத்திற்கு என்ன பொருள் என்று கேட்டால் எப்படி இருக்கும். இந்த கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால் எப்படி இருக்கும்? அதாவது A என்றால் என்ன என தேடக்கூடாது. மாறாக, A எனும் எழுத்தை மட்டும் கூகுளில் சமர்பித்து தேடினால் என்ன முடிவுகள் கிடைக்கும்?

A எனும் எழுத்தில் தேட என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். கூகுளில் தேடினாலும், இந்த எழுத்துக்கான அகராதி அர்த்தம் மற்றும் விக்கிபீடியா விளக்கம் உள்ளிட்ட தேடல் முடிவுகளே பட்டியலிடப்படுகின்றன.

ஆம், அதற்கென்ன என கேட்பதாக இருந்தால், முழு வடிவங்கள் எனும் பொருளில் அமைந்துள்ள ‘ஃபுல்பார்ம்ஸ் (A ) இணையதளத்தில் தேடிப்பாருங்கள், A எனும் எழுத்திற்கு இத்தனை விதமான பொருள் உண்டா என வியந்து போவீர்கள்.

A என்பது மின்சாரத்தை அளவிடுவதற்கான ஆம்பியரை (Ampere  ) குறிக்கும் என்பதில் துவங்கி, இரத்த வகையை குறிக்கும், மருத்துவத்தில் அடினைனை குறிக்கும், வைட்டமின் வகையை குறிக்கும், ஆர்கன் வாயுவை என வரிசையாக இந்த எழுத்து எதற்கெல்லாம் சுருக்கெழுத்தாக அல்லது முதலெழுத்தாக பயன்படுகிறது எனும் விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதே போல ஆங்கில எழுத்தான B பற்றி தேடினால், பிட்டை (bit ) குறிக்கும், பைட்டை (Byte ) குறிக்கும், அழுத்தமான எழுத்தை (bold) குறிக்கும் , பில்லியனை குறிக்கும், என்றெல்லாம் விளக்கம் அளிக்கிறது. கூகுளில் b என தேடினால் இதெல்லாம் வருவதில்லை.

ஃபுல்பார்ம்ஸ் தளத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள ஆங்கில அகர வரிசை எழுத்துகளில் எந்த எழுத்தை கிளிக் செய்து தேடினாலும், அந்த எழுத்து எத்தைகைய பொருள் மற்றும் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பதற்கான விளக்கம் வருகிறது.

எழுத்துக்கான ஒவ்வொரு பயன்பாடு தொடர்பான விளக்கம் தவிர, அதன் வகை, சுருக்கமான வரையறை மற்றும் உலக அளவிலான பயன்பாடு விவரம் ஆகிய தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதே விதமாக, அப்ரிவேஷன் எனப்படும் சுருக்க எழுத்துக்களுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த தளம் சுருக்க எழுத்து மற்றும் முதலெழுத்துக்களுக்கான விளக்கத்தை அறிவதற்கான தளம் தான். அருமையான இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சுருக்கெழுத்து அல்லது முதலெழுத்து தொடர்பான விளக்கத்தை தேட விரும்பினால், கூகுளில் தேடுவதற்கு பதில் நேரடியாக இந்த தளத்தில் தேடுங்கள்.

ஏனெனில், கூகுள் எல்லாம் வல்ல தேடியந்திரமாக கொண்டாடப்பட்டாலும், அடிப்படையில் கூகுள் ஒரு பொது தேடியந்திரம் தான். குறிப்பிட்ட நோக்கிலான தகவல்கள் தேவை எனில் கூகுளில் தேடுவதை விட, பிரத்யேக தேடியந்திரங்களை நாடுவது தான் சரியானது. அந்த வகையில், ஃபுல்பார்ம்ஸ் தளத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.

இணையத்தில் சுருக்கெழுத்துகளை தேட வேறு சில இணையதளங்களும் இருக்கின்றன. ஆனால், இந்த தளங்களில் காணக்கூடிய விளக்க வேறுபாடு அல்லது குழப்பத்தன்மைக்கு இடமில்லாமல், சுருக்கெழுத்துகளுக்கான சீரான விளக்கத்தை அளிப்பதாக ஃபுல்பார்ம்ஸ் தெரிவிக்கிறது. இதற்கென தனி ஆசிரியர் குழு பணியாற்றி விளக்கங்களுக்கான தர நிர்ணயத்தை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   -                                                                            - சைபர் சிம்மன்.

-------------------------------+----------------------------+----------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?