தேர்தல் நிறுத்தம் செய்தி பின்னணி யாருங்க?

 ஆணையத்துக்கு கேள்வி.

தேர்தல் ரத்து என்று செய்தி வெளியான விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்றும் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும் திமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் நேற்று (மார்ச் 29) அளித்த புகாரில், “முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை ஜீரணிக்க முடியாத ஆளும்கட்சியினர் மற்றும் அதிகாரிகள், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து திமுக மற்றும் கட்சித் தலைவர்கள் மீது கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கே.என்.நேருவின் பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

கடந்த மார்ச் 27ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் 'கரூர், திருவண்ணாமலை, திருச்சி மேற்கு தொகுதிகளில் தேர்தல் ரத்து?' என்று செய்தி வெளியானது. மேலும், கே.என்.நேரு காவல்நிலையங்களுக்குப் பணம் கொடுத்து தேர்தல் குழுவினரின் செயல்பாடுகள் அறிந்து கொள்வதாகவும் சமூக ஊடகங்களில் பரவியது.

அதுபோன்று, திருச்சி காவல் ஆணையர் லோகநாதன், திருச்சி மேற்குத் தொகுதியில் அமைந்துள்ள ஆறு காவல் நிலையங்களில் சோதனை செய்தபோது பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. தில்லை நகர் காவல் நிலையத்தில் 12 கவர்களில் 24,000 ரூபாயும், ஜிஹெச் காவல் நிலையத்திலிருந்து 20 கவர்களில் 40,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

காவல் ஆணையர் செய்த விசாரணை நிமிடத்துக்கு நிமிடம் சமூக ஊடகங்களில் எப்படி பரவியது? யார் தகவல் கொடுத்தது? அதோடு, கைப்பற்றப்பட்ட பணம் திமுகவுக்கு சாதகமாக சில வழக்கறிஞர்கள் கொடுத்தது எனக் கூறப்படுகிறது.

இவை எல்லாம் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது எனத் தெரியவருகிறது.

எனவே கீழ் வரும் மூன்று கேள்விகளுக்குத் தெளிவான விசாரணை வேண்டும்...

மேற்குறிப்பிட்ட மூன்று தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்படும் என்று பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது எப்படி?

சமூக ஊடக நபர்கள் எந்த விதத்தில் ரகசிய விசாரணை மற்றும் அறிக்கைகளை எப்படிப் பெறுகிறார்கள்?

விசாரணையின் அறிக்கைகள் கசிய விட்டதற்கு யார் பொறுப்பு?

உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சரின் தலையீடு இல்லாமல், வருவாய்த்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கொண்டு இருக்கும்போது, போலீஸ் அதிகாரிகளின் விசாரணை குறித்த விவரங்கள் வெளி வர வாய்ப்பே இல்லை.

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தால், ஆளும்கட்சியின் விளையாட்டும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அவர்கள் பின்பற்றும் குறுக்குவழித் திட்டமும் தெரியவரும்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, ஆளும்கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், தேர்தல் நேர்மையாக நடைபெறவும் தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தபால் வாக்களிக்கக் காவல் துறையினருக்குப் பண விநியோகம் செய்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் வி.பத்மநாதன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------------------------

கிடா வெட்டி.......

எதையாவது பேச வேண்டும், எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும், எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசியலில் களம் இறங்கியிருக்கும் வேட்பாளர்களின் வேட்கையாக இருக்கிறது. வேட்பாளர்கள் கண்டதையும் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் பேர்வழி என்று மற்றவர்கள் பேசுவது வேட்பாளர்களுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு ஊடகங்களின் தேர்தல் கணிப்புகளும் கூறிவரும் நிலையில், அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பேச்சு, தேர்தல் களத்தில் எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது; கைது நடவடிக்கையும் பாயுமென்று செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. ஏதோ திமுகவில் இருப்பவர்கள் மட்டும்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்பது போல, சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

ஆனால், திமுகவினருக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல, அதிமுகவினரும் தாறுமாறாகப் பேசி, கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். காஸ் சிலிண்டர் 4,500 ரூபாய்க்கு விற்பதால்தான் நாங்கள் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் விலையின்றி கொடுக்கப் போகிறோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, சமூக ஊடகங்களில் சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.



 சிவகாசியிலிருந்து ராஜபாளையத்துக்கு தொகுதி மாறியதற்குக் காரணம் சாதி வாக்குகள்தான் என்று ராஜேந்திர பாலாஜி பேசியது, இரண்டு தொகுதிகளிலும் சத்தமின்றி ரகளையை உண்டாக்கி விட்டிருக்கிறது.

இவர்களுக்குப் போட்டியாக, கோவையில் ஒருவர், ‘திமுக வேட்பாளர்களை வெட்டி பிரியாணி போடுவோம்’ என்று பேசி, பீதியைக் கிளப்பியிருக்கிறார். இவர் அமைச்சரோ, எம்.எல்.ஏ.வோ இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. கட்சியில் கோவை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் என்கிற சாதாரண பொறுப்பில்தான் இவர் இருக்கிறார். ஆனால் அதிமுகவின் இன்றைய அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளர் பொறுப்பில் இருக்கிறார். அதிமுகவைச் சேர்ந்த முதல்வர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவருடைய பேச்சுகளையும் வெளியிடும் பொறுப்பிலுள்ள ஒருவரே இப்படிப் பேசியிருப்பதுதான் அரசியல் வட்டாரத்திலும், ஆளும்கட்சியிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர் அமைச்சர் வேலுமணியின் வலது கரமாகக் கருதப்படுபவர் என்பது கூடுதல் தகவலாகவுள்ளது.

அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘நம்ம கட்சியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து இன்டர்வியூ வைத்துத்தான் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் திமுகவில் கோவை மாவட்ட வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது கையில் ஒரு சொம்பை வைத்துக்கொண்டு தொகுதிக்கு நான்கு பேரை வரவழைத்துத் தண்ணீரைத் தெளிக்கிறார்கள். தலையை ஆட்டினால் வெட்டி விடுகிறார்கள். தொண்டாமுத்தூர் தொகுதிக்கு எவனுமே தலையை ஆட்டாததால் காங்கேயத்திலிருந்து ஒரு மாடு திருடனை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர் வந்ததிலிருந்து தொண்டாமுத்தூர் தொகுதியிலுள்ள மக்கள், மாடுகளைக் கழற்றிவிட்டு, தடியோடு துணைக்கு நிற்கிறார்கள். ஸ்டாலினுக்குச் சொல்லிக் கொள்கிறேன்... மாடு திருடனை வேட்பாளராக அறிவித்து, எங்கள் அமைச்சருக்கு சவால் விடுகிறாய். இந்தத் தேர்தல் முடிந்ததும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி விழாவுக்கு கடா வெட்டி விருந்து வைப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஆடு கம்மியாத்தான் வாங்குவோம். அதுக்குப் பதிலா நீ அனுப்புன ஆட்டைத்தான் வெட்டுவோம். கண்டிப்பாக நீ எழுதி வெச்சுக்க. எல்லா ஆட்டையும் வெட்டி திலகா அக்காவை வெச்சு பிரியாணி போட்டு அனுப்பலைன்னா வேலுமணி அமைச்சர் யாருன்னு கேளு’’ என்று பேசினார்.

இந்த வீடியோ வைரலாகப் பரவ, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சிவசுரேஷ் , வடவள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், தொண்டாமுத்தூர் தேர்தல் அலுவலர் செந்தில் அரசன் அனுப்பிய புகாரை ஏற்று, சந்திரசேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சந்திரசேகர் மீது 294 (பி) பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், 506(1) கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்திருக்கிறது காவல்துறை. 

-----------------------------------------------------------------------------------

ஹிட்லர்= சீமான்

♠ ஹிட்ல‌ர்முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில் ஆட்சியில் இருந்த‌ ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி(SPD) ஜெர்ம‌னிய‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். ஜெர்ம‌னியை ஆள்ப‌வ‌ர்க‌ள் யூத‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ SPD தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் யூத‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் பிரெஞ்சு இராணுவ‌த்தால் ஜெர்ம‌னிய‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கின‌ர். (முத‌லாம்) உல‌க‌ப் போரில் ந‌ட‌ந்த‌ ஜெர்ம‌ன் இன‌ப்ப‌டுகொலையின் சூத்திர‌தாரிக‌ள் SPD, மார்க்சிய‌வாதிக‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ள் தான்.

♣ சீமான்ஈழ‌ப் போரில் புலிக‌ள் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் டெல்லியில் ஆட்சியில் இருந்த‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான்த‌மிழ்நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் தெலுங்க‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ திராவிட‌க் க‌ட்சிக‌ளின் தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தெலுங்க‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் சிறில‌ங்கா அர‌ச‌ ப‌டைக‌ளால் த‌மிழ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கினார்க‌ள்ஈழ‌ப்போரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலைக்கு கார‌ண‌ம் காங்கிர‌ஸ்திராவிட‌வாதிக‌ள்ம‌ற்றும் தெலுங்க‌ர்க‌ள் தான்.

*****

♠ ஹிட்லர் ஜெர்மன் மொழி இனத்தவராக இருந்தாலும்உண்மையில் ஓர் ஆஸ்திரிய நாட்டு பிரஜைஅன்றைய ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் பல மொழிகளை பேசும் இனங்கள் இருந்தனஹிட்லர் ஒரு ஆஸ்திரிய பிரஜையாக இருந்தாலும்அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் அன்று பிரஷிய ராஜ்ஜியமாக கருதப்பட்ட ஜெர்மனி பற்றியதாக இருந்தது.

♣ சீமான் தமிழ் மொழி இனத்தவராக இருந்தாலும்உண்மையில் ஓர் இந்தியப் பிரஜைஇன்றைய இந்தியாவில் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இருக்கின்றனசீமான் ஓர் இந்தியப் பிரஜையாக இருந்தாலும்அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர் பற்றியதாக இருக்கின்றது.

♠ ஹிட்லர் ஆஸ்திரியாவில் இருந்து ஜெர்மனி சென்றுசக்கரவர்த்தியின் இராணுவத்தில் தானாகப் போய்ச் சேர்ந்தார்அவர் யுத்தகளத்தில் நின்றாலும் எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடவில்லைபோர் நடந்த இடத்திற்கு வெகுதூரம் தள்ளி பங்கருக்குள் இருந்து விட்டுபிற்காலத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார்அன்று இராணுவ வீரர்களாக இருந்த பலருக்கு ஹிட்லரின் புளுகுகள் எல்லாம் தெரிந்திருந்தன.

♣ சீமான் இந்தியாவில் இருந்துஇலங்கையில் புலிகளின் பிரதேசத்திற்கு சென்று போர்க்களத்தில் நின்று விட்டு வந்தார்ஆனால் வன்னியில் சீமான் நின்ற இடம் போர் நடந்த இடத்தில் இருந்து வெகு தூரம்எந்தச் சண்டையும் நேரில் காணவில்லைபிற்காலத்தில் சீமானும் ஈழத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார்முன்னாள் புலிப் போராளிகள் பலருக்கு சீமானின் புளுகுகள் எல்லாம் தெரியும்.

♠ ஹிட்லர்சீமான் இருவரும் சிறந்த பேச்சாளர்கள்கைகளை உயர்த்திநரம்பு புடைக்கசத்தமிட்டுப் பேசும் குணவியல்பைக் கொண்டவர்கள்இன உணர்வைத் தூண்டும் வகையில் உணர்ச்சிவசமாகப் பேசி மக்களைக் கவரும் வல்லமை பெற்றிருந்தனர்.

♣ அன்றைய காலகட்டத்தில் ஹிட்லரின் பேச்சுக்களை கேட்டவர்கள்அவரை ஒரு கோமாளி என நினைத்தார்கள்நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரித்தார்கள்அதே மாதிரிஇன்று சீமானின் பேச்சுக்களை கேட்பவர்கள்அவரை ஒரு கோமாளி என நினைக்கின்றனர்நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரிக்கின்றனர்.

♠ ஜெர்மன் குடியரசில் இரகசியமாக கூட்டம் கூடி வந்த சட்டவிரோத தீவிர ஜெர்மன் தேசியவாத அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்ட ஆள் தான் ஹிட்லர்மியூனிச் நகரில் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறைக்காக குறிப்பெடுக்க சென்று கொண்டிருந்த ஹிட்லர்பின்னர் அவர்களின் கொள்கைகளால் கவரப் பட்டு அங்கத்தவராக சேர்ந்து கொண்டார்ஆளுமை மிக்க பேச்சுகள் மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்தார்பெரும்பாலும் மாணவர்கள்இளைஞர்கள் ஹிட்லரால் கவரப் பட்டனர்.

♣ தடாபொடா போன்ற அடக்குமுறை சட்டங்களின் விளைவாகதமிழ்நாட்டில் இரகசியமாக இயங்கிய தீவிர தமிழ்த்தேசிய அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப்பட்டவர் தான் சீமான். 2009 ஆண்டளவில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டுதனது ஆளுமை மிக்க பேச்சுக்கள் மூலம் பலரை ஈர்த்தார்குறிப்பாக மாணவர்கள்இளைஞர்கள் சீமானால் கவரப் பட்டனர்.

♠ அன்று ஜெர்மனியில் இருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் குறிப்பிட்ட அளவு மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தனர்அதனால் வளர முடியவில்லைஏனெனில் அவர்களது ஆதரவுத்தளமாக இருந்த மத்தியதரவர்க்கபணக்கார வர்க்கத்தினர் மிகச் சிறுபான்மையினர்ஹிட்லர் ஒரு வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார்அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்துசாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசினார்அது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்தவறுமைவேலையில்லாப் பிரச்சினைநலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் ஹிட்லரின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றனஉண்மையிலேயே உலகப்போரில் வென்ற நாடுகள் ஜெர்மனி மீது விதித்த பொருளாதாரத் தடை காரணமாகஅன்று ஏராளமான ஜெர்மன் விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர்.

♣ இன்று தமிழ்நாட்டில் உள்ள பாஜகஆர்எஸ்எஸ் போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகள்பிராமணர்கள்உயர்சாதியினர்செல்வந்தர்கள் போன்ற மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளனர்அதனால் வளர முடியவில்லைசீமான் சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசுகிறார்இது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்தவறுமைவேலையில்லாப் பிரச்சினைநலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் சீமானின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றனஉண்மையிலேயேபொருளாதாரப் பிரச்சினை காரணமாக ஏராளமான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

♠ அன்று ஜெர்மனிக்கு வெளியே பல ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் இனத்தவர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர்ஆஸ்திரியா தவிர செக்கோஸ்லாவாக்கியாபோலந்துசுவிட்சர்லாந்துபெல்ஜியம்பிரான்ஸ்இத்தாலிருமேனியா என்று பல நாடுகளில் ஜெர்மனியர்கள் வாழ்ந்தனர்அவர்களில் பலர் ஹிட்லரை தமது இனத்தின் மீட்பராக பார்த்தனர்அதனால் நிறையப் பணம் அனுப்பினார்கள்.

♣ இன்று பல மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் சீமானுக்கு ஆதரவளிக்கின்றனர்இந்தியாஇலங்கைக்கு வெளியே பிரித்தானியாகனடாஜெர்மனிசுவிட்சர்லாந்து என்று பல நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் சீமானை தமது இனத்தின் மீட்பராக பார்க்கின்றனர்அதனால் நிறையப் பணம் அனுப்புகிறார்கள்.

--------------------------------------------------------------------------

எச்ச.ராஜா. நிலைமை.

காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா தேர்தல் அறிக்கை விளம்பர  பக்கத்தில் தான் ஒரு பாஜக வேட்பாளர் என்பதைக் கூட சொல்லாமல், தன் கட்சிப் பெயரையும் வெளிப்படுத்தாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக வேட்பாளர்  என்று அறிவிப்பு செய்தால் வாக்களர்களிடம் வாக்கு கிடைக்காது என்பதை  உணர்ந்து தவிர்த்து உள்ளாரா என்கிற சந்தேகம் வாக்காளர்களிடம் எழுந்துள்ளது.




----+----------+-----------+---------+---------+--------+


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?