மக்கள் நலக்கூட்டணி
" ஊழலை ஒழிப்பேன்.திராவிடக்கட்சிகள் இரண்டும் அகற்றப்பட வேண்டியவை"
இதுதான் சில காலத்திற்கு முன் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசனின் தாரக மந்திரம்.
திராவிடத்தை ஒழிக்கும் இக்குரல் ஏற்கனவே உள்ள பார்ப்பண,ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க,வின் மய்யக்குரல் என்பது உலகறிந்த மெய்.
ஆனால் தான் பா.ஜ.க வின் ஐந்தாம்படை என்பதை இன்றளவும் கமல் ஒப்புக்கொள்வதே இல்லை.
ஊழல் ஒழிப்பு நாயகனின் தற்போதைய தேர்தல் கூட்டாளிகளைப் பார்த்தாலே ஊழலை கமல்ஹாசன் ஒழிக்கும் முறை தெரியும்.இதற்குப் பெயர்தான் உறவாடிக் கெடுப்பது என்பார்களோ.
ஐ.ஜே.கே. கட்சி பச்சமுத்து( எ) பாரிவேந்தர்,நடிகர் சரத்குமார் இன்றைய கூட்டாளிகளில் முதன்மையாளர்கள்.
இதில் சரத்குமார் கமலை சந்தித்து விட்டு 'கமல் தலைமையில் கூட்டணி' என்றார்.உடனே கமல்" கைகுலுக்கினால் கூட்டணி என அர்த்தமா?" என அறிவியல்பூர்வமாக ஊடகத்தினரிடம் வினா எழுப்பினார்.
இப்போது அவர்கள் இருவருக்கும் 40,40 என தொகுதியை அள்ளிக் கொடுத்துள்ளார்.இது அவர் கூட்டணிக்கு அழுத்தம போகாத காங்கிரசுக்கு சற்று பொறாமையைத்தந்திருக்கும்.இங்கு 25 தானே.
சரத்குமாரை பொறுத்தவரை எல்லாக்கட்சிக்கும் சென்று வந்து சமத்துவத் தனிக்கடை நடத்துபவர்.
சென்ற முறை கூட ஜெயலலிதா கேட்ட தை(?) தரவில்லை என்பதால் ' நான் கறிவேப்பிலையா? ' எனக் கேள்வி கேட்டு வீராவேசமாக வெளியே வந்து எதிர் பார்த்ததையும்,திருச்செந்தூர் ச.ம.தொகுதியும் கொடுத்தவுடன் அதிமுக கூட்ணிக்கு திரும்பி தி.மு.க அனிதாராதாகிருஷ்ணனிடம் தோற்றவர்.நடிகை ராதிகாவுடன் பரப்புரை செய்தும் பலனில்லை.
சென்ற நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரும்,ராதாரவியும் சங்கப் பணத்தில் ஊழல் செய்து விட்டதாகவும்,சங்க இடத்தை சத்யம் குழுமத்திற்கு முறைகேடாக கையூட்டு வாங்கி குத்தகைக்கு விட்டதாகவும் அதனால் இருவரையும் சிங் கப் பொறுப்பில் இருந்து நீக்க விஷால்,கார்த்தி இணைக்கும் பின்னால் பலமாக இருந்து செயல்பட்டவர் இதே கமல்ஹாசன்.
அப்போது அத்தேர்தல் மேடையில் கமலை தரக்குறைவாகப் பேசியவர் இதே சரத்குமார்தான்.
அன்றைய ஊழல்வாதி இன்று கூட்டாளி?
பக்கா அரசியல்வாதியாகிவிட்டார் கமல்ஹாசன்.
பணம் தேவை அவருக்கு .அதனால்தான் அதிமுகவை விட்டதும் பெரிய கருவூலம் வைத்துள்ள பச்சமுத்துவை கண்டு கைகுழுக்கிக்கொண்டார்.இவரை கூட்டணியாக வைத்துதான் ஊழலை ஒழிக்கப்போகிறார் கமல்.
பழைய பச்சமுத்து முதல் இன்று பாரிவேந்தர் வரலாறு வேந்தர் பிலிம்ஸ் விவகாரம் வரை தமிழகம் கண்டவைதான்.
இவரதுSRMபல்கலைக்கழகம் எப்படி பணம் பிடுங்கிக் களவகம் என்பது உலகறிந்தது.
இப்போதுவரை பல மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட பெருமைமிக்கது.
புதியதலைமுறை,புதுயுகம்,வேந்தர் என பல தொலைக்காட்சிகள் நம் பாரிவேந்தருடையதுதான்.
தன்னை,பணத்தை பாதுகாத்துக் கொள்ளவேஇந்திய ஜனநாயகக் கட்சியை துவக்கி நடத்திக்கொண்டு வருகிறார்.
பணம் சம்பாதிக்க ச.ம.க.என்றால் கணக்கற்ற பணத்தைப் பாதுகாக்க ஐ.ஜே.கே.
கமல்ஹாசனிடம் பற்றாக்குறையாக உள்ள பணத்தை ,தேர்தல் செலவிற்கான தொகையை பெற்றுத்தரத்தான் சரத்குமார் தரகராக இருந்து இருவரையும் கைகுழுக்க வைத்து கூட்டணியாக்கி தானும் நாலு காசு பார்த்துள்ளார்.அதை தரகுக் காசு என்றே சொல்லலாம்.
தி.மு.க.வை ஊழல் வாதிகள் எனக் கூறி ஒழிக்கப் புறப்பட்ட கமல்ஹாசன் கையில் ஏந்தி இருப்பது ஊழல் பச்சமுத்து என்ற வாள்.இப்போது கமல்ஹாசன் ' டான் குவிக்சாட்' ஆகத்தான் காட்சியளிக்கிறார்.
அந்த பச்சமுத்து என்கிற வாள் தி.மு.க எதிர்ப்பாக இருந்தாலும் பாரிவேந்தர் தி.மு.க வைச்சேர்ந்த மக்களவை உறுப்பினர் என்பதுதான் நகைமுரண்.
ஸ்டாலின் நினைத்தால் பாரிவேந்தர் எம்.பி என்பதில் எம்.பி அடை மொழியை பறித்துவிடலாம்.
தி.மு.க.உறுப்பினரில் இருந்து விலக்கினால் சயேட்சையாக நீடிக்கலாம்.
ஆனால் அவர் தி.மு.க, அல்ல.ஐ.ஜே.கே கட்சி நிறுவனத் தலைவர்.இப்போது மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்துள்ளார்.அவர் மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த தி.மு.க உறுப்பினர் அட்டை போலி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளார் என வேறு ஒருவர் மூலம் வழக்குத் தொடர்ந்தாலே போதும்.
எதுவோ ஊழல் ஒழிப்பு வீரர்,ஊழல் ஒழிக்க இத்தேர்தலில் எடுத்துள்ளஆயுதங்கள் முழுக்க ஊழல் முறைகேடுக துருவேறி இற்றுப்போனவை என்பதை சுட்டிக்காட்டுவது நடிகர் கமல்ஹாசனின் ரசிகர் என்றளவில் நம் கடமையாகிவிட்டது.
------------------------_--------------------------------_--------------------------