திங்கள், 5 ஏப்ரல், 2021

வாக்களிக்க வாரீர்.

 விலை(மாதான) போன இந்திய ஊடகங்கள்

ரஃபேல் போர்விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகருக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது குறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது தற்போது அந்நாட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது, எனி ஆனால் இந்திய ஊடகங்கள் இதை ஒரு விவாத பொருளாக கூட ஆக்க முடியாத ,செய்தி கூட வெளியான மவுனநிலையில் உள்ளன.

ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 126 விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பிறகு பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைக்க, 126 விமானங்களுக்குப் பதிலாக ஒரு விமானத்தின் விலையே 1,670 கோடி ரூபாய் என்று 36 விமானங்கள் வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு செப்படம்பர் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று நடுநிலை மக்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இந்தநிலையில், ரஃபேல் விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் வழக்கில் சிபிஐ விசாரணையில் வளையத்தில் உள்ள பாதுகாப்பு முகவர் சுஷென் குப்தாவுடன் இந்திய பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளனர் என்பது மேலும் புருவங்களை உயர்த்த வைக்கிறது.


பிரான்ஸ் ஊழல் தடுப்பு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், ‘இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இருப்பினும், டசால்ட் நிறுவனம் மீது அந்த நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. இதுகுறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேரந்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி வெளியான நிலையில் மோடி அரசின் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டிவருகிறது.எனினும் தொலைகாட்சி ஊடகங்கள் இதை குறித்து பேசாமல் கோமா நிலையில் உள்ளதை காணமுடிகிறது,

டெஃப்சிஸ் நிறுவனம் இந்தியாவில் டசால்ட் நிறுவனத்தின் துணை ஒப்பந்ததார நிறுவனமாகும். மேலும், இந்த நிறுவனத்தின் சுசேன் குப்தாவின் மீது விவிஐபிக்களுக்கான விமானம் வாங்கும் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக அகஸ்டாவெஸ்ட் லேண்ட் வழக்கில் இவர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்துவருகிறது.

ரஃபேல் ஊழல் குறித்து தி இந்து ராம், அக்குவேறு ஆணிவேராக அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து ஊழல் நடைபெற்றதை அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


(--------------------)-----------------(--------------------)------------8

வாக்களிக்க வாரீர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. கோடிக் கணக்கானோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.

அவ்வாறு தயாராகி வருவோரில் நீங்களும் இருந்தால், நீங்கள் சில தகவல்களை அறிய வேண்டும்.

முதலில் அறிய வேண்டியவை...

உங்களுக்கு எத்தனை வயது? குறைந்தது 18 வயதானவராக நீங்கள் இருக்க வேண்டும். வாக்களிப்பவராக நீங்கள் உங்களை பதிவு செய்திருந்தால் நீங்கள் வாக்களிக்கும் நிலையத்திற்கு செல்லலாம்.

வாக்குச் சாவடியை சென்றடைந்தவுடன், சிறிய குழுக்களாக நீங்கள் உள்ளே அனுப்பப்படுவீர்கள்.

உங்களுடைய முறை வருகிறபோது, உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போட், பேன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம் அல்லது அரசாங்கம் வழங்கிய, புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி நீங்கள் வாக்களிக்கலாம். வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர் ஒருவர் உங்களின் அடையாளத்தை சரிபார்ப்பார்.

இரண்டாவது அலுவலர் அழிந்துவிடாத மை கொண்டு உங்கள் விரலில் அடையாளம் வைப்பார்.

இதற்கு பிறகு, வாக்காளர் பதிவேட்டில், நீங்கள் கையெழுத்திட வேண்டும். இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலர் உங்களுக்கு கையெழுத்திடப்பட்ட வாக்காளர் சீட்டை வழங்குவார்.

மூன்றாவது அலுவலர் உங்கள் வாக்காளர் சீட்டை பெற்றுக்கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்துவார்.

இப்போது உங்கள் வாக்கைப் பதிவு செய்ய நீங்கள் தயாராகி விட்டீர்கள்.

பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வாக்களிக்கும் அலகு வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு நீங்கள் செல்வீர்கள்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்களிக்கும் அலகு என்றால் என்ன?

தேர்தலில் போட்டியிடும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் பெயர்களும், அந்த பெயர்களுக்கு அருகில் அவர்களின் சின்னங்களும் வரிசையாக இந்த எந்திரத்தில் இருக்கும்.

வேட்பாளர்களின் பெயர் அந்த தொகுதியின் பெரும்பான்மையினர் பேசுகின்ற மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.

எழுத்தறிவில்லாத வேட்பாளருக்கு உதவும் வகையில் வேட்பாளர் பெயருக்குப் பக்கத்தில் அவரது அல்லது அவரது கட்சியின் சின்னம் இடம் பெற்றிருக்கும்.

நீங்கள் வாக்குப் பதிவு செய்யத் தயாராக இருக்கும்போது, நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு அடுத்ததாக இருக்கும் நீல நிற பொத்தானை ஒரு முறை அழுத்தவும்.

இதைச் செய்தவுடன் வாக்கு பதிவாகிவிட்டது என்று பொருளாகாது.

'பீப்' என்ற சத்தம் கேட்டு, அந்த எந்திரத்தின் விளக்கு அணைந்தால்தான் நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்று பொருள்.

அந்த மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்திலுள்ள வாக்குப் பதிவை முடிப்பதற்கான பொத்தானை அலுவலர்கள் அழுத்தினால்தான், மேலதிக வாக்குகள் பதிவாவது நிறுத்தப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேட்டைத் தவிர்க்க, இது முத்திரையிட்டு மூடப்பட்டிருக்கும். தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பான பட்டையால் சுற்றப்பட்டு, வரிசை எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதுதான் இது திறக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை நாளில், எண்ணிக்கை தொடங்கும் முன்னால், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை நடத்தும் ஊழியர்கள் மற்றும் முகர்வகளால் தனித்தனியாக ஆய்வு செய்யப்படும்.

இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வை செய்வார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை அந்த அலுவலர் திருப்தியடைந்தால், முடிவுகளைக் காட்டுவதற்கான பொத்தானை அவர் அழுத்துவார். அப்போது வேட்பாளர்களின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருப்பார்கள்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் எதிராக கட்டுப்பாட்டு அலகில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை இந்த அலுவலர் ஆய்வு செய்வார்.

திருப்பதியடைந்தால், அவர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடங்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டு, தேர்தல் ஆணையத்தோடு பகிர்ந்து கொள்வார்.

அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கும் மின்னணு திரைகளிலும் இந்த முடிவுகள் காட்டப்படும்.

இறுதி முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

-----------------------------+----------------------------