குஜராத் மாடல்

 இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கொள்ளை நோய் போல பரவி வருவதாக தெரிகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனைகளில் குவிந்து வருவதும். அவர்கள் சிகிச்சைக்காக காத்திருக்கும் போதே மரணிப்பதும் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீதியோரங்களில் பிணங்களை வைத்து காத்திருப்பதுமாக வட இந்திய மாநிலங்கள் முழுக்க கொரோனா ஒரு அவலமாக மாறி வருகிறது. 



இது ஐய்ரோப்பிய நாடுகளில் முன்னர் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற கொள்ளை நோயை நினைவூட்டுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து விட்டது.மகாராஷ்டிர மாநிலத்தில் நிலமை மோசமடைந்து வருவதால் அம்மாநில அரசு ஊரடங்கை அமல் செய்துள்ளது. ஆனால் ஒவ்வொரு மின் மயானத்திலும் நாளொன்றுக்கு 60 முதல் நூறு வரையிலான உடல்கள் எரியூட்டப்படுகின்றன.

 பலரும் உடல்களை வைத்துக் கொண்டு வெளியில் காத்திருக்கும் நிலை. மருத்துவமனைகளில் நிலையோ பெரும் சிக்கலானதாக மாறி வருகிறது.


மகாராஷ்டிரம், குஜராத், டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் கற்பனை செய்ய முடியாத அளவு வேகம் எடுத்துள்ளது. தமிழகத்தில் நிலமையும் அதுதான். 

தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில் இது தொடர்பான நீதிமன்ற வழக்கொன்றில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் நிலமை கைமீறிச் சென்றுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ஆனால், வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் நிலமை சீராக உள்ளது. ஆனால் வரும் வாரங்களில் நோயின் தாக்கம் அதிகரிக்குமோ என்ற அச்சம் அனைவரிடமும் பரவி உள்ளது.
பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 அங்குள்ள மின் தகன மயானம் ஒன்றில் இடைவிடாமல் சடலங்களை எரித்தன் விளைவாக அந்த மின் மயானமே எரிந்து நாசமாகி விட்டது. சூரத் நகர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.
பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உடல்களை மொத்தமாக வைத்து எரிக்கிறார்கள். 

இப்படி எரியூட்டும் மயானங்களில் விறகுத் தட்டுப்பாடு உள்ளதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அடிப்படை வசதிகள் அற்ற அரசு மருத்துவமனைகளில் சாவு எண்ணிக்கை கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துச் செல்வதால் அரசுகள் திணறி வருகிறது.


இந்தியாவில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா - இந்த 2ஆம் அலைக்கு யார் காரணம்? ? கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை அலைகழித்துவருகிறது. பல மாநிலங்களில் சுடுகாடுகள், இடுகாடுகளில் பிணங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. உடல்களை சுட்டெரித்து, சுட்டெரித்து மயான உலோகச் சட்டங்கள் உருகுவதாக செய்திகள் வருகின்றன.

இப்போது வருகிற புள்ளிவிவரங்களும் அதிகபட்ச எச்சரிக்கையைத் தருவதாக இருக்கின்றன. இன்று காலை இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,17,353 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். 1,185 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கையில் இந்தியா பிரேசிலைவிட மோசமாக சென்றுள்ளது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இரண்டாவது அதிக கொரோனா தொற்றுகளைப் பார்த்த நாடாக இந்தியா இருக்கிறது.

பத்தே நாள்களில் இருமடங்கான தினசரி எண்ணிக்கை

ஒரு பெண்ணிடம் இருந்து தொண்டைத் தடவல் மாதிரி எடுக்கும் சுகாதாரப் பணியாளர்

பட மூலாதாரம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு பத்தே நாள்களில் இரண்டு மடங்காகி இருக்கிறது. கடந்த 4,5 தேதிகளில் சுமார் ஒரு லட்சம் என்ற அளவில் இருந்த பாதிப்பு நேற்று 2.17 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 2 லட்சத்துககு மேல் தொற்று கண்டறியப்படுவது இது இரண்டாவது நாளாகும்.

இதில் 8 மாநிலங்களில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்தப் பாதிப்பில் 70 சதவிகிதமாகும். வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் என்ற பேதமில்லாமல் நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்திருப்பது புள்ளி விவரங்களில் தெரியவருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 61,695 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிராவின் பங்கு சுமார் 30 சதவிகிதம். அங்கு நேற்று மட்டும் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 22,339 பேரும், டெல்லியில் 16,699 பேரும், சத்தீஸ்கரில் 15,256 பேரும், கர்நாடகத்தில் 14,738 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 10,166 பேரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கு அடுத்து குஜராத் மாநித்தில் 8,152 பேருக்கும், கேரளாவில் 8,126 பேருக்கும், தமிழ்நாட்டில் 7,987 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் 10 ஆயிரத்துக்கு மேல்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இதுவரை இல்லாத அளவாக 10,497 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையின் இன்று அவசரக்கூட்டம் நடக்கிறது. எனினும் பொது முடக்கம் அறிவிப்பதற்கு வாய்ப்பில்லை என்று அரசு ஏற்கெனவே கூறிவிட்டது.

17 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ள டெல்லியில் வார இறுதி முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை இயங்காது.

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மரணம்

சிபிஐ இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

1974-ஆண்டு பிகார் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சின்ஹா இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். ரயில்வே பாதுகாப்புப்படை, சிபிஐ ஆகியவற்றின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த பிறகு 2012-ஆம் ஆண்டு சிபிஐயின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

கும்ப மேளாவில் கொரோனா

கும்பமேளா

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

கும்பமேளா

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றிருக்கும் கும்பமேளாவில் பங்கேற்ற 30 சாதுக்களுக்கு நேற்று தொற்று உறுதியாகியுள்ளது. ஹரித்வாரில் இரண்டே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

எனினும் திட்டமிட்டபடி வரும் 30-ஆம் தேதி வரை கும்பமேளா நடக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள்தானே.

டெல்லி தொழுகைதானே கொரோனா முதல் அலைவரிசைக்கு காரணம் என்றது பா.ஜ.க,.

இந்து மக்களின் உயிர்களை விட இந்துத்துவாதானே மோடி கும்பலுக்கு முக்கியம்.

-----------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?