திங்கள், 19 ஏப்ரல், 2021

இரண்டாம் தாக்குதல்

 தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசு பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவையாவன:

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.


தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை யல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
கொரோனா மேளா


மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம் / ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது

இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

---------------------------------------------------------------------------------

சாலைகள் அல்ல; பாதைகள்!

"உப்புக்கும் முத்துக்கும் இடமளிக்கும் கடல், உயிர் பறிக்கும் திமிங்கிலங்களுக்கும் இடமளிப்பது போல் - வல்லவர்க்கும் நல்லவர்க்கும் இடம்தரும் வரலாறு; வஞ்சகர்களுக்கும் கோழைகளுக்கும் இடமளிக்கத்தான் செய்கிறது" - என்று எழுதினார், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

எத்தனையோ பெரிய மனிதர்கள் குடியிருந்த கோட்டையில், பழனிசாமி போன்ற வஞ்சகர்களும் கோழைகளும் இடம்பெற்றுவிட்டதும் தமிழ்நாட்டின் வரலாறுதான். தகுதியற்றவரை அந்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டால், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எத்தகைய இழிசெயலையும் செய்வார். அத்தகைய இழிசெயல்களின் பட்டியல், பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் ஏராளம்! ஏராளம்!

இறுதியாய் நடந்திருக்கும் இழி செயல்கள்தான் - சாலைகளின் பெயரை மாற்றுதல்! பதவி பறிபோகும் நேரத்தில் கூட, பா.ஜ.க.வின் காலைச் சிக்கெனப் பற்றி நிற்கும் இழிசெய்கை அது! தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக தொடர் விழாவாக நடத்திய அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.தி.மு.க. அரசு 1979 இல், "பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை" என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று பெயர் மாற்றியது.

மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார். அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு -நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் - ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க்ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? கேட்டால், சென்னை மாநகராட்சிதான் அப்படிப் பெயர் சூட்டியது, நெடுஞ்சாலைத் துறை சூட்டவில்லை என்று வியாக்கியானம் சொல்கிறார்கள்.

நெடுஞ்சாலைத் துறை சூட்டவில்லை என்றால், இதுவரை நெடுஞ்சாலைகளில் ‘பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை' என்று இருந்தது எப்படி? எந்த உத்தரவை வைத்து அப்படி இத்தனை ஆண்டு காலம் போட்டீர்கள்? உத்தரவே இல்லாமல் போட்டுக் கொண்டீர்களா? பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயரைப் பார்த்ததும் யாருக்கு வலிக்கிறது? பழனிசாமிக்கா? பா.ஜ.க. வுக்கா? அல்லது அதிகாரிகளுக்கா? அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லையா? இந்தத் துணிச்சலுக்கு யார் காரணம்? யார் கொடுத்த துணிச்சல் இது?

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் ‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு’ என்றும், சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் ‘கிராண்ட்நார்தென் டிரங்க் ரோடு’ என்றும் குறிக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் சொல்கின்றன. ‘மவுண்ட் ரோடு’ என்பது, ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்டு விட்ட பிறகும் சில மண்டூகங்கள் மனமில்லாமல் மவுண்ட் ரோடு என்று எழுதியும் பேசியும் வருவதையும் பார்க்கிறோம். அண்ணாவின் பெயரை உச்சரிப்பதற்கே அவ்வளவு வலிக்கிறது!


சென்னையில் இயங்கும் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராசர் பெயரும் முதல்வர் கலைஞர் அவர்களின் கோரிக்கையை ஏற்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களால் பெயர் சூட்டப்பட்டது. அந்த இரு தலைவர்கள் பெயர்கள் இருக்கிறதா, இல்லையா என்பதையே தெளிவுபடுத்த முடியாத அளவுக்கு திரைமறைவுக் காரியங்கள் அங்கே நடக்கிறது. இப்போது இங்கே பெரியார், காமராசர், அண்ணா ஆகியோர் பெயர்களை மறைக்கும் - இருட்டடிப்புச் செய்யும் காரியங்கள் செய்யப்படுகிறது.

இதன் மூலமாக இன்னமும் என்ன ஆதாயத்தை அடைய நினைக்கிறார் பழனிசாமி? அரசியல் தலைவர்களில் ஒரு சிலர் நீங்கலாக அனைவரும் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட பிறகும் பழனிசாமி பதில் தரவில்லை. எல்லாவற்றுக்கும் வாய் நீளம் காட்டியவர் ஆச்சே அவர்? எதனால் இதற்குப் பதில் தர முடியவில்லை? பெயர் சூட்டுவது என்பது அந்தத் தலைவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல, நாம் நமது நன்றியின் அடையாளத்தைக் காட்டுகிறோம். அவ்வளவுதான். பழனிசாமிகளுக்கு நன்றியறிதல் என்றால் என்னவென்று தெரியாது."எப்போதும் நான் நன்றி பெறுவதில் கவலைப்படுவதே இல்லை. மனித ஜீவனிடம் நன்றி எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மையே ஆகும்" என்றார் தந்தை பெரியார்.

"திராவிடர்களிடையே எனக்குக் கெட்ட பேர் வளர்கிறது என்று கூடச் சிலர் சொன்னார்கள். உணர்ச்சிக்கு இடமில்லாத, மானத்தைப் பற்றிக் கவலைப்படாத திராவிட மக்களிடையே நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற கவலை எனக்குச் சிறிதுமில்லை. அப்படி போலி நல்ல பெயரின் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிட மக்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும், அதில் முதன்மையானதாய் இழிவு நீங்க வேண்டும் என்கிற ஆசையும் கவலையும் தவிர வேறு ஒன்றும் எனக்குக் கவலையாக இல்லை" என்று சொன்னவர் தந்தை பெரியார். பழனிசாமிக்கோ, அவரை கைப்பாவையாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வுக்கோ, சில அதிகாரிகளுக்கோ இது புரியாது.

சாலையின் பெயரில் இருந்து பெரியாரின் பெயரை நீக்குவது பெரியாரை நீக்குவதாக மகிழ்ச்சி அடைந்து விடாதீர்கள்! ‘எங்கள் ஊருக்கு ஒரு பெரியார் இல்லையே' என்று வடமாநிலத்து அறிஞர்கள் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்! "எங்கள் மாநிலத்தில் ஒரு அண்ணாவும், கலைஞரும் இருந்திருந்தால் 1965 ஆம் ஆண்டே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி இருப்போம்" என்று கொல்கத்தா எழுத்தாளர் எழுதினார்! காலம் வழங்கிய கொடைகள் அவர்கள். அதனால்தான் காலங்கள் கடந்தும் பயன்கொடுத்து வருகிறார்கள்!

"இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுகிறேன். தமிழ்நாடு என்று அழைக்கப்படும் காலம் வரையில், இந்த நாட்டை அண்ணாத்துரைதான் ஆள்கிறான் என்று அர்த்தம்" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். இத்தகைய கம்பீரத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தெருவின் பெயரை அழிப்பதால் அவர்கள் புகழ் அழிந்து விடும் என்று நினைப்பவர்கள், கழிவறையில் பெயரை எழுதுவதால் அவமானப்படுத்தி விட்டதாக நினைக்கும் அற்பர்கள். பதர்கள், களைகள், கழிசடைகள்!

பெரியா ர்,அண்ணா,கலைஞர் பெயர்கள் அல்ல, முகவரிகள்! 

அவைகள் சாலைகள் அல்ல; பாதைகள்!

------------------------------------------------------------------------------------

இரண்டாம் தாக்குதல்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வகை மிகவும் வேகமாகப் பரவக்கூடியதா, தடுப்பூசிகளில் இருந்து தப்பிவிடும் ஆற்றல் கொண்டதா என்பது குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

எனினும் இந்தியாவில் பரவும் கொரோனா "கவலைக்குரிய வகை" என்பதற்குப் போதுமான தரவுகள் இல்லை என மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், வெளிநாட்டுப் பயணத்துடன் தொடர்பில்லாத சில தொற்றுகளின் தோற்றுவாய் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக பிரிட்டன் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவிக்கிறார்.

இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் சேர்த்து சுமார் 70 இந்திய வகைக் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவை பயணத் தடைப் பட்டியலில் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து இப்போதே முடிவு செய்ய இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை கணக்குப்படி பிரிட்டனில் புதிதாக 1,882 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 3.28 கோடி பேருக்கு தடுப்பூசி பேர் தங்களது முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். 99 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணை போடப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் தேசிய சுகாதாரத்துறையின் பரிசோதனை மற்றும் தேடல் பிரிவின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஹாப்கின்ஸ், ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சியில் பேசினார்.

"இந்திய வகைக் கொரோனா தொற்று சிலரிடம் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். அவை பயணத்தின் மூலம் வந்தவையல்ல. அவை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதை அறிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார் ஹாப்கின்ஸ்.

"தீவிரமாகப் பரவக்கூடியதா, தடுப்பூசியில் இருந்து தப்பிவிடக்கூடியதா என்பவை எல்லாம் தெரிந்தால்தான் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு அது உறுதியாகத் தெரியாது."

Corona

பட மூலாதாரம்,

இந்திய வகைக் கொரோனா தொற்றுடைய 73 பேர் இங்கிலாந்திலும் 4 பேர் ஸ்காட்லாந்திலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்திய வகை குறித்த விவரங்களை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்று பெருந்தொற்று நிபுணர் மைக் டைல்டெஸ்லே வலியுறுத்துகிறார்.

"இந்திய வகைக் கொரோனாவில் கவலைதரும் அம்சமாகத் தோன்றக்கூடியது, அதன் இரட்டைத் திரிபு. வேகமாகப் பரவக்கூடியதுடன், தடுப்பூசிகளுக்கு போதிய பலனில்லாமல் செய்துவிடும்."

"அப்படி 'இருக்கலாம்' என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான ஆதாரங்களைப் பெற முயற்சித்து வருகிறோம்"

இந்தியாவை பிரிட்டனின் பயணத் தடைப்பட்டியலில் வைக்க வேண்டுமா என்று கேட்டதற்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் எஸ்டிஸ், "இந்தியாவில் இருந்து வருவோர் பயணத்துக்கு முன்னரே சோதனை செய்து கொள்வதன் அடிப்படையிலேயே பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்." என்றார்.

"அதனால் நாட்டுககுள் வருவோருக்கு மிகத் தீவிரமான பரிசோதனைகளும், தடுப்பு முறைகளும் இருக்கின்றன."

இந்த நடைமுறை அவ்வப்போது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது என்னும் அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை அரசு கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் 25-ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் திட்டமிட்டபடி நடக்கும் நம்புவதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு கொரோனா வகைகளை பிரிட்டனுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என லேபர் கட்சியின் உள்துறை நிழல் அமைச்சர் நிக் தாமஸ்-சைமன்ஸ் குற்றம்சாட்டினார்.

"கவலைதரக்கூடிய தென்னாப்பிரிக்க, இந்திய கொரோனா வகைகள் பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன" என்றார்.

"பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். மக்களின் தியாகத்துக்குப் பிறகு வாழ்வுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கையை தடுப்பூசிகள் அளித்திருக்கின்றன" என்றார்.

விடுதிகளில் தனிப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசு மிக மெதுவாக நடந்துகொள்வதாக லேபர் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் விமர்சித்தது. தடைப்பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், அனைத்து நாடுகளில் இருந்து வருவோரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

"தனிமைப்படுத்தும் திட்டம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கானோரை நாட்டுக்குள் அனுமதித்த அரசின் மோசமான கொள்கையின் விளைவுகளைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்றார் தாமஸ்-சைமன்ஸ்.

இந்திய வகையைத் தவிர பிற கொரோனா வகைகள் குறித்தும் பேசிய ஹாப்கின்ஸ், "தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவும் கொரோனா வகையைத் தடுப்பதில் போதிய திறன் இல்லை" என்றார்.

"இருப்பினும் நோய் தீவிரமடைவதையும், இறப்புகளையும் தடுப்பூசிகள் தடுக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்" என்றார் ஹாப்கின்ஸ்..

------------------------------------------------------------------------------------------