அரசக் கொலைகள்

 இந்திய கொரோனா வகை பிரித்தானியாவினுள் நுளைந்ததன் விளைவாக கடந்த வெள்ளி 31.05.20221 அன்று புதிதாக 3383 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். 10 நோயாளிகள் வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்துள்ளனர். இதே வேளை 01.06.2021 முதல் தடவையாக கோவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் மொத்த சனத்தொகையில் 74.3 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியையும் 43.7 வீதமாவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். ஜூன் 21ம் திகதி அனைத்துப் பொது முடக்கக் கட்டுப்பாடுகளையும் நீக்கலாம் என்ற பிரித்தானிய அரசின் திட்டட்த்திற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக அறிஞர் ரிம் கவோஸ் உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்திய வைரசின் பரவும் தன்மையும் இறப்பை ஏற்படுத்தும் விகிதமும் அதிகமாகவிருப்பதால், பொது முடக்க விதிமுறைகளை முற்றாகத் தளர்த்துவது தொடர்பாக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரல்கள் பல தரப்பிலுமிருந்து எழுகின்றன.

பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் பொது முடக்க நீக்கம் மீண்டும் பெருமளவிலான மரணங்களை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.


கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசியர் ரவி குப்தா, பிரித்தானியாவில் மூன்றாவது கொரோனா வைரஸ் அலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று ஸ்கை செய்தி நிறுவனத்திற்குக் குறிப்பிட்டார். தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவான போதிலும், நாளாந்தம் எண்ணிக்கை பெருகும் அளவின் அடிப்படையில் மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன எனக் குறிப்பிடும் அவர் இந்திய வகை கொரோரானா வைரசே இதற்கான காரணம் என்கிறார். தவிர, சூழலியல் ஆய்வாளர் ஜோர்ஜ் யூஸ்டஸ் உட்பட பலரும் தொற்றானது மீண்டும் பரவ ஆரம்பித்த நிலை ஜூன் 21ம் திகதி பொது முடக்கத்தை நீக்குவது தொடர்பாக அரசு மீளாய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

இதனிடையே, பிரித்தானிய பிரதமரின் பிரதான ஆலோசகராஅகவிருந்த டொமினிக் கம்மிங்ஸ் தனது ஆலோசகர் பணியிலிருந்து விடுவித்துக்கொண்டு அரசிற்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகிறார். சீனா போன்ற நாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என வெளிப்படையாக பிரித்தானியா உட்பட்ட அரச அதிகாரங்கள் கூறிவரும் நிலையில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்தே பிரதமரும் அரசும் உண்மைகளை மக்களுக்கு மறைத்து பொய்த் தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கம்மிங்ஸ் குறிப்பிடுகின்றார். தொற்று பரவ ஆரம்பித்த மார்ச் 2020 ஆரம்பத்தில் சமூக நோய் எதிர்ப்பு |herd immunity| ஒன்று உருவாகிவிடும் என்றால் தொற்றைக் கட்டுப்படுத்திவிடலாம் என அரசு நம்பியதாகவும் இதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பல்வேறு உயிர்ழப்புக்களுக்குக் காரணமாக அமைந்தது என்கிறார்.

முதியோர் விடுதியிலிருந்த நூற்றுக்கணக்கனவர்களை நோய் குணமடையாமலேயே மருத்துவ மனைகளிலிருந்து வீடுகளுக்கு அனுப்பியதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கம்மிங்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார். தெரிந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன்னால் சாட்சியமளித்த அவர் பல்வேறு ஆதாரங்களையும் முன்வைத்தார்.

இந்தியா இலங்கை போன்ற பின் தங்கிய சமூக அமைப்பைக் கொண்டுள்ள நாடுகளில் மட்டுமன்றி, தொழில் வளர்சியடைந்த நாடுகளிலும் அரசுகள் சர்வாதிகார அமைப்பாக மாறிவருவது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் முடிவிற்கு முன்னறிவிப்பாகும்.


----------------------------------------------------------------------------

மனக் கவலையே  

உங்கள் எதிரி!

நமது வாழ்நாளில், கொரோனா என்பது, ஒரு புதிய அனுபவம். உள்ளம் பதைபதைத்த நிலையில் பலரும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மரணமடைந்தவர்களை அடக்கம் செய்ய, எரியூட்ட வழியில்லை. இது போன்ற நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.

இது சிலருக்கு மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தவல்லது. அவரே அறியாவண்ணம் மூளையை பாதித்து, பதட்டத்தை உருவாக்கும்.’பயம், கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மை தொற்று நோயைக் காட்டிலும் அபாயமானது’ என்று, பிரபலமான ‘ஹோலிஸ்டிக் லைப்ஸ்டைல்’ பயிற்சியாளர் லுாக் கோடின்ஹோ கூறுகிறார்.

நம்பிக்கையை இழப்பது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். இது போன்ற சமயங்களில் நம்பிக்கை என்பது தாரக மந்திரமாகும்.அதுதான் நம்மை நகர்த்தும் ஆயுதம். பய உணர்ச்சியில் சிக்கி வெளிவர முயற்சிக்காவிட்டால், பயமும், பதட்டமும் மனதில் தங்கி விடும்.ஒருவரின் மனதை திசை திருப்ப வேண்டியது அவசியம். நாம் நன்றாக சாப்பிடுகிறோமா அல்லது துாங்குகிறோமா என்று பகுப்பாய்வு செய்வது முக்கியம்.

ஒரு நாளைக்கு குறைந்தது, 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இவைபின்பற்றப்பட வேண்டும் என்பது அறிவியல். மன அழுத்தமும் பதட்டமும் ஒருநபரை செயல்படத் துாண்டும் இரண்டு உணர்ச்சிகள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சரியான முறையில் செயல்படுவதும் மன அழுத்தங்களை குறைப்பதும் தனிநபரின் கைகளிலே தான் உள்ளது.

பாதி உண்மை முழுப் பொய்யை விட மோசமானது. ஆகையால், தகவல்களைப் பகுப்பாய்வு செய்து உண்மையை அறிய முயற்சிக்கவேண்டும். தேவையற்ற தகவல்களைத் தவிர்க்கலாம். மன நலம் பேண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

சமூக இடைவெளி மட்டுமின்றி, சமூக ஊடக இடைவெளியும் காலத்தின் தேவை. கவலைப்படுவது எதையும் தீர்க்காது. உண்மையில், இது நம் கட்டுப்பாட்டை இழக்கச்செய்யும். இந்த நேரத்தில் நோயாளிகள் எதிர்கொள்ளும் சில அறிகுறிகள் துாக்கக் கலக்கம்,

அமைதியின்மை, பதட்டம், கவனம் செலுத்த இயலாமை, குறைந்த உற்பத்தித்திறன் போன்றவை. பொதுவாக மிதமான, அறிகுறிகள் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கும். கடுமையான மனச்சோர்வு ஏற்படும்போது, தக்க மருத்துவரின் உதவியை நாடுவதே நல்லது,”.

----------------------------------------------------------------

நேர்(மையான) வழி.

ஏழை, எளிய மக்கள் உடனடியாகப் பயன்பெறும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் நிவாரண நிதி அளிப்பது பாராட்டத்தக்க முயற்சி என்று பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட கருத்து வருமாறு :- கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதனால் கட்டுமானம், சிறிய அளவிலான சில்லறை வணிகம் போன்ற சில முக்கியமான துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. கட்டுமானத் துறையானது கடன்களைப் பெறுவதன் மூலமாக தன்னை மீட்டெடுத்துக் கொண்டுமேலே எழுந்திட முடியும். ஆனால், பொது முடக்கத்தால் பேருந்து சேவைகள் முடக்கப்வழங்கப்பட்டது.

இத்தகைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பணத்தை அவர்களது கைகளிலேயே கொண்டு போய்ச் சேர்ப்பதே சிறப்பாக இருக்கும். 

தமிழகத்தில் முழு பொது முடக்கக் காலத்தில் நியாய விலைக் கடை களின் மூலம் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

சிலர் "வங்கி மூலம் கொடுக்கலாமே .கூட்டம் சேராதே "என குறை கூறுகின்றனர்.பல ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை. என்பதே நிலவரம்.கணக்கிருக்கும் பலருக்கு வங்கிக் கணக்கில் போட்டவுடனேயே குறைந்தபட்ச இருப்பது தொகை இல்லையென பணப் பிடித்த அபராதம் போடப்படும் அபாயம் உள்ளது.

வங்கி,ATM களில் மட்டும் கூட்டம் சேராதா என்ன?


இதன்மூலம், அனைத்து குடும்பத்தினருக்கும் நேரடியாக ரொக்கத் தொகை அவர்களது கைகளில் போய்ச் சேரும். உடனடியாக அவர்களும் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அபிஜித் பானர்ஜி தெரிவித் துள்ளார்.

அபிஜித் பானர்ஜி இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளியலாளர் ஆவார். இவர் மாசாச்சூ செட்சு தொழில்நுட்பக் கழகத்தில் போர்டு அறக்கட்டளையின் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கு 2019ம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருடன் இணைந்து வழங்கப்பட்டது.

------------------------------------------------------------------------

கொரோனா முன்னணிப் போராளிகள்

பலி!

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 21 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது மொத்தம் 736 டாக்டர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனஸ் முஜாஹித்

அனஸ் முஜாஹித் 

இந்தியாவில் கடந்த 17ஆம் தேதி டெல்லியை சேர்ந்த 26 வயதான மருத்துவர், கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்த மருத்துவர்களில் மிகவும் குறைந்த வயதில் உயிரிழந்த மருத்துவர் இந்த அனஸ் முஜாஹித் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்தியா முழுவதும் 17ஆம் தேதி ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டது.


தற்போது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த  தடுப்பூசி ஒன்றே தீர்வாக கூறப்படும் நிலையில், இந்தியா முழுவதும் முதற்கட்டமாக  முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் 66 சதவீதம் மட்டுமே சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுவரை இந்த மருத்துவர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், கொரோனா நோயாளிகளுக்கு முழு ஈடுபாடோடு மருத்துவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். ஆனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறைவான அளவிலேயே மருத்துவர்கள் இருப்பதால், ஓய்வின்றி தொடர்ந்து 48 மணி நேரம் வேலை பார்க்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இக்கட்டான சூழலில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை இந்திய மருத்துவ சங்கத்தினர் முன்வைக்கின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களின் உயிரிழப்பு பேரதிர்ச்சியாக உள்ளது.


கொரோனா முதல் அலையில்  736 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிக்கைகள் வெளியான நிலையில், அது இன்னும் அதிகமாகவே இருக்கும் என மருத்துவர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதே போல செவிலியர்,தூய்மைப் பணி மருத்துவ பணியாளர்கள் பலரும் எண்ணற்ற அளவில் உயிரிழந்துள்ளனர். 

---------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?