மூன்றாவது அலை ஆரம்பமா?

 இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளதா?

. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று வேகம் பெற்ற நிலையில் கடந்த சில நாடகளாக கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்திருந்தது. ஆனால், மீண்டும் கொரோனா எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் பரவத்துவங்குகிறது.கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 1,206 பேர் உயிரழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37 கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 268 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள இந்தியா ஏராளமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------

P(ராடு).M(odi).கேர்.

டந்த ஏப்ரல் மாதம் கோவிட் 19 இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தார்கள்மருத்துவமனைகளில் போதிய இடமில்லைஇடமிருந்தாலும் வெண்டிலேட்டர்கள் இல்லை என மோடி அரசு கைவிரித்து மக்களைக் கொன்றது. கோவிட் தொற்றால் இறந்தவர்களின் பிணங்களால் சுடுகாடுகள் நிரம்பி வழிந்தன. ‘புனித’ நதிக்கரைகள் பிணக்காடுகள் ஆகின..

மோடி அரசின் கையாலாகாத் தனத்தால் ஏற்பட்ட இந்தப் பெருந்தொற்று அவலம் சர்வதேச ஊடகங்களில் வெளியானது. சர்வதேச அளவிலிருந்து இந்தியாவின் மீதான அழுத்தம் அதிகரித்த பின்னர்தான், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட பி.எம்கேர்ஸ் என்ற பெயரிலான நிதியிலிருந்து ரூ. 2000 கோடியை வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக ஒதுக்கியது. அதற்கு முன்னர் வரை அந்தப் பணத்தைப் பற்றி எவ்விதமான தகவலும் வெளியாகாத வண்ணம் பார்த்துக் கொண்டது மோடி அரசு.

ஓராண்டுக்கு முன்பிருந்தே அரசாங்கத்தால் நடத்தப்படும் கோவிட் மருத்துவமனைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்களை வாங்க ரூ .2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மோடி அரசு கூறியது.

அந்த நிதியே போதாது என விமர்சனங்கள் எழுந்தநிலையில்அதையும்கூட முழுமையாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது மோடி அரசுஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் ரூ. 1,532 கோடி மட்டுமே பி.எம்கேர்ஸ் நிதியிலிருந்து வெண்டிலேட்டர்கள் வாங்க விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்குப் பிறகும், தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து வந்த 16,000 வென்டிலேட்டர்கள் இன்னும் மருத்துவமனைகளில் நிறுவப்படவில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, தி இந்து நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

கூடுதலாகசுகாதார அமைச்சகத்தின் பதிலில் 50,000 வென்டிலேட்டர்களின் விலை ரூ2,147 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் பி.எம்கேர்ஸ் நிதி ரூ .2,000 கோடியை ஒதுக்கியுள்ளதால் 2,147 கோடி ரூபாய்க்கான ரசீதுகள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் சுகாதார அமைச்சக அதிகாரி கூறியுள்ளார். ஆனால் அதற்கான கட்டணம் இன்னும் நிலுவையில் உள்ளதுPM CARES நிதி தனிப்பட்ட நிதியாக அரசாங்கம் தக்க வைத்துக் கொண்டாலும்பிரதமர் அலுவலக அதிகாரிகள் இந்த நிதியை “மரியாதையின் அடிப்படையில்” நிர்வகிக்கின்றனர்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் 3 –ம் தேதி58,850 வென்டிலேட்டர்களுக்கு ரூ .2,332.22 கோடிக்கு கொள்முதல் ஆணையை அமைச்சகம் வழங்கியதுதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட தகவலின் படி, அவற்றில்30,000 வென்டிலேட்டர்கள் அரசால் இயக்கப்படும் பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி..எல்)க்கு அளிக்கப்பட்டுள்ளதுமீதமுள்ளவை தனியார் நிறுவனங்களிலிருந்து அமைச்சகத்தின் கொள்முதல் நிறுவனமான இந்துஸ்தான் லைஃப் கேர் லிமிடெட் (எச்.எல்.எல்வழியாக வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மே 13, 2020 அன்றுபி.எம் கேர்ஸ் நிதி 50,000 வென்டிலேட்டர்களுக்கு ரூ .2,000 கோடியை செலுத்துவதாகக் கூறியதுஇதில் அனைத்து பி..எல் வென்டிலேட்டர்களும், எச்.எல்.எல் நிறுவனத்தால் வாங்கப்படும் 20,000 வென்டிலேட்டர்களும் அடங்கும் என ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவித்துள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்சின் கொள்முதல் ஆணை மதிப்பில் 1,513.92 கோடியில் 1,497.34 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுபொதுத்துறை நிறுவன உற்பத்தியாளரான பி.இ.எல்., தனது 30,000 வெண்டிலேட்டர்களில் 29,750-ஐ வழங்கி நிறுவியுள்ளது.

இருப்பினும்முதலில் கொடுக்கப்பட்ட 58,850 வென்டிலேட்டர்களில் 42,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆர்டர் செய்யப்பட்ட 16,000-க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் இன்னும் நிறுவப்படவில்லை.

ஆர்.டி.ஐ தகவலின்படிபி.எம் கேர்ஸ் நிதியால் ரூ .36.36 கோடி எச்.எல்.எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், எச்.எல்.எல் மூலம் வாங்கப்படும் 20,000 வென்டிலேட்டர்களுக்கான தொகை 633.28 கோடி ரூபாய்அதற்கான ரசீது பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுஇருப்பினும்முன்கூட்டியே வழங்கப்பட்ட ரூ .36.36 கோடியைத் தவிர வேறு எந்த கட்டணமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் இந்த கோப்பு பிரதமர் அலுவலகத்தில் உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

கடந்த மாதம்ஜார்க்கண்டிற்கு மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களில் கால் பகுதி வெண்டிலேட்டர்கள் செயல்படவில்லை எனவும்காணாமல் போன பாகங்களை பழுதுபார்ப்பது அல்லது மாற்றுவது அவசியம் எனவும் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது.

அரசு பெற்ற 663 வெண்டிலேட்டர்களில்அவை நிறுவப்பட்ட நேரத்தில்164 வென்டிலேட்டர்கள் அல்லது மொத்தத்தில் 24.73% வெண்டிலேட்டர்களில்சில இயந்திர குறைபாடுகள் அல்லது சில பாகங்கள் காணாமல் போனதால் பயன்படுத்த முடியாது என கண்டறியப்பட்டது.

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளால் பி.எம்கேர்ஸால் நிதியளிக்கப்பட்டு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் பழுதான வென்டிலேட்டர்கள் இருந்ததாகவும் அந்த அரசு கூறியிருந்தது.

எந்தப் பொருளை வாங்கினாலும் அந்தப் பொருள் செயல்பட்டால் மட்டும்தான் அதற்கான பணத்தை ஒப்படைப்பது என்பது அரசு தரப்பு நடைமுறை. பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த வெண்டிலேட்டர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதையும், தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட பொருட்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதையும் வைத்துப் பார்க்கும் போது, தனியார் நிறுவனங்களிடமிருந்து எச்.எல்.எல் நிறுவனம் வாங்கிய வெண்டிலேட்டர்களின் யோக்கியதை என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தனியார் என்றால் தரம், தனியார் என்றால் பரிசுத்தம் என்ற மாயைகளை எல்லாம் சமீபத்திய நிகழ்வுகள் அம்பலப்படுத்தி வருகின்றன. ஐ.சி.எஃப் முன்னாள் அதிகாரி தனியார் முதலாளிகளிடம் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கியது இதற்கான ஒரு உதாரணம். தற்போது அது வெண்டிலேட்டர்களில் வெளிப்பட்டிருக்கிறது 

செய்தி ஆதாரம் :  த வயர்

---------------------------------------------------------------------------------------------------------------------பதில்

பிரித்தாளும் சங்கி வழிகள்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்ற  சொல் அழகிய தமிழில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது. தேசியக் கட்சிகள் பெரிதாக செல்வாக்கு செலுத்த முடியாத அளவு தமிழுணர்வும் மாநில உணர்வும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் நிலையில் சாதி மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜக தமிழகத்தை சிதைக்கப் பார்க்க்கிறது.

UNION GOVERNMENT என்ற சொல்லை தமிழில் ஒன்றிய அரசு என்று திமுக குறிப்பிடுவதில் கடுப்பான பாஜகவினர் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் திணறி வருகிறார்கள். சமீபத்தில் ஒன்றிய இணை அமைச்சராக  பதவியேற்ற பாஜக தலைவர் எல்.முருகன் அமைச்சரவை விண்ணப்பித்தில் மாவட்டம் என்ற பிரிவில் கொங்குநாடு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கொங்குநாடு என்று தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டமும் இல்லாத நிலையில்  கொங்கு நாடு என அவர் குறிப்பிட்டிருப்பது கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாகப் பிரிக்க  மத்திய அரசிடம் திட்டம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கல்வி அறிவும் ஓரளவு அரசியல் விழிப்புணர்வும் அடைந்துள்ள எந்த மாநிலங்களிலும் பாஜக பெருமளவு  வெற்றி பெறுவதில்லை. ஒரு ஆச்சரியமான விஷயம் கர்நாடகம் உட்பட பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை உடைத்து தங்களை வளர்த்துக் கொண்டது போலக் கூட தமிழக காங்கிரஸ் கடசியை பாஜகவால் பெரிய அளவு உடைக்க முடியவில்லை. ஆனால் புதுச்சேரியில் அதைச்  செய்து ஆட்சியைப் பிடித்துள்ளார்கள். விரைவில் ரெங்கசாமியை தூக்கி கடாசி விட்டு ஆட்சியை கைப்பற்றிக் கொள்வார்கள். தமிழகத்தில் அதிமுக தயவில் நான்கு தொகுதிகள். கொங்குநாடு என்ற ஒன்று தமிழகத்தில் இல்லை. அப்படி ஒன்றை சட்டத்திற்கு புறம்பாக பாஜக தலைவர் எல். முருகன் உருவாக்குகிறார். அவர் அமைச்சராக பதவியேற்ற படிவத்தில் மாவட்டம் என்ற இடத்தில் கொங்கு நாடு என்று பதிந்திருப்பது சட்ட ரீதியாக கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சாதி, மதம் உள்ளிட்ட குறுகிய நலன்களுக்காக தமிழ்நாட்டை பிரிப்பதை எவரும் அனுமதிக்கக் கூடாது.  சாதி வெறியர்கள் ஏற்கனவே குண்டு சட்டிக்குள்  குதிரை ஓட்டுகிற முட்டாப் பயல்கள். அவர்களால் அவர்களின் சாதி மக்களையே வெல்ல முடியவில்லை. சாதி கடந்த தமிழக மக்கள் மனங்களை வென்ற அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,  வரிசையில் ஸ்டாலின் அவர்கள்தான் பரந்து பட்ட மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.

அதிமுகவில்  இன்று பொதுவான தலைவர் என  எவரும் இல்லை. திமுக அப்படி பொதுத் தன்மையோடு இருப்பது இவர்களின் கண்களை உறுத்துவதால்தான் கொங்குநாடு என விளையாடிப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு பதில் இருக்கிறது.கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை மாநகாரட்சிகளையும். ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் ஒரே பதில்.

-------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?